சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

1.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) - தக்கராகம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு சித்தநாதேசர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=3yI2qwKTMms  
ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த,
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்,
சீர் உலாவும் மறையோர் நறையூரில்,
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!


[ 1]


காடும் நாடும் கலக்கப் பலி நண்ணி,
ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ,
வீடும் ஆக மறையோர் நறையூரில்,
நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!


[ 2]


கல்வியாளர், கனகம் அழல் மேனி
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர்,
மல்கு திங்கள் பொழில் சூழ், நறையூரில்
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!


[ 3]


நீட வல்ல நிமிர் புன்சடை தாழ
ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்,
பாடல் வண்டு பயிலும், நறையூரில்
சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!


[ 4]


உம்பராலும் உலகின் அவராலும்
தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்,
நண்பு உலாவும் மறையோர், நறையூரில்
செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!


[ 5]


Go to top
கூர் உலாவு படையான், விடை ஏறி,
போர் உலாவு மழுவான், அனல் ஆடி,
பேர் உலாவு பெருமான், நறையூரில்
சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே.


[ 6]


அன்றி நின்ற அவுணர் புரம் எய்த
வென்றி வில்லி விமலன்-விரும்பும் ஊர்,
மன்றில் வாச மணம் ஆர், நறையூரில்
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!


[ 7]


அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்,
பரக்கும் கீர்த்தி உடையார், நறையூரில்
திருக்கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!


[ 8]


ஆழியானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்து, மேல்
சூழும் நேட, எரி ஆம் ஒருவன் சீர்
நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!


[ 9]


மெய்யின் மாசர், விரி நுண் துகில் இலார்,
கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்!
உய்ய வேண்டில், இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே.


[ 10]


Go to top
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்
பத்தும் பாட, பறையும், பாவமே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்)
1.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஊர் உலாவு பலி கொண்டு,
Tune - தக்கராகம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
1.071   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிறை கொள் சடையர்; புலியின்
Tune - தக்கேசி   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
2.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
7.093   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நீரும் மலரும் நிலவும் சடைமேல்
Tune - குறிஞ்சி   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song