சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

1.031   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்குரங்குஅணில்முட்டம் - தக்கராகம் அருள்தரு இறையார்வளையம்மை உடனுறை அருள்மிகு வாலீசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=LagWZEYok0U  
விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளை மலரக் கயல் பாயும்
கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே.


[ 1]


விடை சேர் கொடி அண்ணல் விளங்கு, உயர் மாடக்
கடை சேர், கரு மென் குளத்து ஓங்கிய காட்டில்
குடை ஆர் புனல் மல்கு, குரங்கணில் முட்டம்
உடையான்; எனை ஆள் உடை எந்தை பிரானே.


[ 2]


சூலப்படையான், விடையான், சுடு நீற்றான்,
காலன் தனை ஆர் உயிர் வவ்விய காலன்-
கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து
ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே.


[ 3]


வாடா விரி கொன்றை, வலத்து ஒரு காதில்-
தோடு ஆர் குழையான், நல பாலனம் நோக்கி,
கூடாதன செய்த குரங்கணில் முட்டம்
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே.


[ 4]


இறை ஆர் வளையாளை ஒரு பாகத்து அடக்கி,
கறை ஆர் மிடற்றான்; கரி கீறிய கையான்;
குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து
உறைவான்; எமை ஆள் உடை ஒண் சுடரானே.


[ 5]


Go to top
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம்
கலவம்மயில் காமுறு பேடையொடு ஆடிக்
குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே.


[ 6]


மாடு ஆர் மலர்க்கொன்றை வளர்சடை வைத்து,
தோடு ஆர் குழைதான் ஒரு காதில் இலங்க,
கூடார் மதில் எய்து, குரங்கணில் முட்டத்து,
ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து, அமர்வானே.


[ 7]


மை ஆர் நிற மேனி அரக்கர் தம் கோனை
உய்யா வகையால் அடர்த்து, இன் அருள் செய்த
கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே.


[ 8]


வெறி ஆர் மலர்த் தாமரையானொடு மாலும்
அறியாது அசைந்து ஏத்த, ஓர் ஆர் அழல் ஆகும்
குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம்
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே.


[ 9]


கழுவார், துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும்,
வழுவாச் சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல்!
குழு மின்சடை அண்ணல் குரங்கணில் முட்டத்து
எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே.


[ 10]


Go to top
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன்
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம்
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக
வல்லார்க்கு எளிது ஆம், பிறவா வகை வீடே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்குரங்குஅணில்முட்டம்
1.031   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விழுநீர், மழுவாள் படை, அண்ணல்
Tune - தக்கராகம்   (திருக்குரங்குஅணில்முட்டம் வாலீசுவரர் இறையார்வளையம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song