சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.016   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) - இந்தளம் அருள்தரு யாழ்மொழியம்மை உடனுறை அருள்மிகு மணவாளநாயகர் திருவடிகள் போற்றி

திருமணம்‌ கைகூட ஓத வேண்டிய பதிகம்‌
Audio: https://www.youtube.com/watch?v=3iP3choR434  
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி,
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.


[ 1]


விதியானை, விண்ணவர்தாம் தொழுது ஏத்திய
நெதியானை, நீள்சடைமேல் நிகழ்வித்த வான்
மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானை, பாட வல்லார் வினை பாறுமே.


[ 2]


எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய
இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை,
வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே.


[ 3]


விடையானை, மேல் உலகுஏழும் இப் பார் எலாம்
உடையானை, ஊழிதோறுஊழி உளதுஆய
படையானை, பண் இசை பாடு மணஞ்சேரி
அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.


[ 4]


எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம்
வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை,
மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச்
செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.


[ 5]


Go to top
மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம்
பழியாமைப் பண் இசைஆன பகர்வானை;
வழியானை; வானவர் ஏத்தும் மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே.


[ 6]


எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக்
கண்ணானை, கண் ஒருமூன்றும் உடையானை,
மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே.

[ 7]


எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள
கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை,
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி
பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே


[ 8]


சொல்லானை; தோற்றம் கண்டானும், நெடுமாலும்,
கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க
வல்லார், நல் மா தவர், ஏத்தும் மணஞ்சேரி
எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே!


[ 9]


சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர்
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை,
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாஆக வாழ்பவர்மேல் வினை பற்றாவே.


[ 10]


Go to top
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி,
பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி)
2.016   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று
Tune - இந்தளம்   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
5.087   திருநாவுக்கரசர்   தேவாரம்   பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
Tune - திருக்குறுந்தொகை   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
7.007   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மத்தயானை ஏறி, மன்னர் சூழ
Tune - இந்தளம்   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) அயிராவதேசுவரர் வாசமலர்க்குழன்மாதம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song