சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.022   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்குடவாயில் - இந்தளம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு கோணேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=V5P_0KEoTDE  
திகழும் திருமாலொடு நான்முகனும்
புகழும் பெருமான்; அடியார் புகல,
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே.


[ 1]


ஓடும் நதியும், மதியோடு, உரகம்,
சூடும் சடையன்; விடை தொல்கொடிமேல்
கூடும் குழகன் குடவாயில்தனில்
நீடும் பெருங்கோயில் நிலாயவனே.


[ 2]


கலையான்; மறையான்; கனல் ஏந்து கையான்;
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான்;
கொலை ஆர் சிலையான் குடவாயில்தனில்
நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.


[ 3]


சுலவும் சடையான்; சுடுகாடு இடமா,
நல மென்முலையாள் நகைசெய்ய, நடம்
குலவும் குழகன் குடவாயில் தனில்
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே.


[ 4]


என்தன் உளம் மேவி இருந்த பிரான்;
கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக்
குன்றன்; குழகன் குடவாயில்தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே.


[ 5]


Go to top
அலை சேர் புனலன்; அனலன்; அமலன்;
தலை சேர் பலியன்; சதுரன்; விதிரும்
கொலை சேர் படையன் குடவாயில்தனில்
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே.


[ 6]


அறை ஆர் கழலன்; அழலன்; இயலின்
பறை யாழ் முழவும் மறை பாட, நடம்
குறையா அழகன் குடவாயில்தனில்
நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.


[ 7]


வரை ஆர் திரள்தோள் அரக்கன் மடிய(வ்)
வரை ஆர் ஒர்கால்விரல் வைத்த பிரான்
வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும்
வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.


[ 8]


பொன் ஒப்பவனும், புயல் ஒப்பவனும்,
தன் ஒப்பு அறியாத் தழல் ஆய் நிமிர்ந்தான்;
கொல் நல் படையான் குடவாயில்தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.


[ 9]


வெயிலின் நிலையார், விரி போர்வையினார்,
பயிலும் உரையே பகர் பாவிகள்பால்
குயிலன்; குழகன் குடவாயில்தனில்
உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே.


[ 10]


Go to top
கடுவாய் மலி நீர் குடவாயில்தனில்
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை,
தடம் ஆர் புகலித் தமிழ் ஆர் விரகன்,
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்குடவாயில்
2.022   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான்;
Tune - இந்தளம்   (திருக்குடவாயில் கோணேசுவரர் பெரியநாயகியம்மை)
2.058   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கலை வாழும் அம் கையீர்!
Tune - காந்தாரம்   (திருக்குடவாயில் கோணேசுவரர் பெரியநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song