சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருத்தென்குரங்காடுதுறை - இந்தளம் அருள்தரு அழகுசடைமுடியம்மை உடனுறை அருள்மிகு குலைவணங்குநாதர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=i_rCbmU4gRA  
பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ,
இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி;
அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர்
குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.


[ 1]


விண்டார் புரம்மூன்றும் எரித்த விமலன்,
இண்டு ஆர் புறங்காட்டுஇடை நின்று எரி ஆடி,
வண்டு ஆர் கருமென்குழல் மங்கை ஒர்பாகம்
கொண்டான், நகர்போல் குரங்காடுதுறையே.


[ 2]


நிறைவு இல் புறங்காட்டுஇடை, நேரிழையோடும்
இறைவு இல் எரியான், மழு ஏந்தி நின்று ஆடி;
மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும்
குறைவுஇல்லவன்; ஊர் குரங்காடுதுறையே.


[ 3]


விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடி,
தெழிக்கும் புறங்காட்டுஇடைச் சேர்ந்து எரிஆடி,
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன், ஊர் பொன்
கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே.


[ 4]


நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஓர் கண்ணன்,
ஏறு ஆர் கொடி எம் இறை, ஈண்டு எரிஆடி,
ஆறு ஆர் சடை அந்தணன், ஆயிழையாள் ஓர்
கூறான், நகர்போல் குரங்காடுதுறையே.


[ 5]


Go to top
நளிரும் மலர்க்கொன்றையும் நாறு கரந்தைத்
துளிரும் சுலவி, சுடுகாட்டு எரிஆடி,
மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில்
குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே.


[ 6]


பழகும் வினை தீர்ப்பவன்; பார்ப்பதியோடும்,
முழவம் குழல் மொந்தை முழங்க, எரிஆடும்
அழகன்; அயில்மூஇலைவேல் வலன் ஏந்தும்
குழகன்; நகர்போல் குரங்காடுதுறையே.


[ 7]


வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க,
நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம்
கரை ஆர்ந்து இழி காவிரிக் கோலக் கரைமேல்,
குரை ஆர் பொழில் சூழ், குரங்காடுதுறையே.


[ 8]


நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணாப்
படிஆகிய பண்டங்கன், நின்று எரிஆடி,
செடி ஆர் தலை ஏந்திய செங்கண் வெள் ஏற்றின்
கொடியான், நகர்போல் குரங்காடுதுறையே.


[ 9]


துவர் ஆடையர், வேடம் அலாச் சமண்கையர்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம்
நவை ஆர் மணி, பொன், அகில், சந்தனம், உந்திக்
குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே.


[ 10]


Go to top
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன்,
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறைமேல்
சொல் ஆர் தமிழ்மாலைபத்தும், தொழுது ஏத்த
வல்லார் அவர், வானவரோடு உறைவாரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருத்தென்குரங்காடுதுறை
2.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பரவக் கெடும், வல்வினை பாரிடம்
Tune - இந்தளம்   (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)
5.063   திருநாவுக்கரசர்   தேவாரம்   இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்
Tune - திருக்குறுந்தொகை   (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song