சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

3.015   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவெண்காடு - காந்தாரபஞ்சமம் அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=caxzZfneYag  
மந்திர மறையவர், வானவரொடும்,
இந்திரன், வழிபட நின்ற எம் இறை;
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய,
அந்தமும் முதல் உடை, அடிகள் அல்லரே!


[ 1]


படை உடை மழுவினர், பாய் புலித்தோலின்
உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்,
விடை உடைக் கொடியர் வெண்காடு மேவிய,
சடை இடைப் புனல் வைத்த, சதுரர் அல்லரே!


[ 2]


பாலொடு, நெய், தயிர், பலவும் ஆடுவர்
தோலொடு நூல்-இழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய,
ஆலம் அது அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!


[ 3]


ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப்புன்னையும்
தாழை வெண்குருகு அயல் தயங்கு கானலில்,
வேழம் அது உரித்த, வெண்காடு மேவிய,
யாழினது இசை உடை, இறைவர் அல்லரே!


[ 4]


பூதங்கள் பல உடைப் புனிதர், புண்ணியர்
ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை,
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய,
பாதங்கள் தொழ நின்ற, பரமர் அல்லரே!


[ 5]


Go to top
மண்ணவர் விண்ணவர் வணங்க, வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை
விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடி தொழ, அல்லல் இல்லையே.


[ 6]


நயந்தவர்க்கு அருள் பல நல்கி, இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய,
பயம் தரு மழு உடை, பரமர் அல்லரே!


[ 7]


மலை உடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி
தலை உடன் நெரித்து, அருள் செய்த சங்கரர்;
விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய,
அலை உடைப் புனல் வைத்த, அடிகள் அல்லரே!


[ 8]


ஏடு அவிழ் நறுமலர் அயனும் மாலும் ஆய்த்
தேடவும், தெரிந்து அவர் தேரகிற்கிலார்
வேதம் அது உடைய வெண்காடு மேவிய,
ஆடலை அமர்ந்த, எம் அடிகள் அல்லரே!


[ 9]


போதியர், பிண்டியர், பொருத்தம் இ(ல்)லிகள்
நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்
வேதியர் பரவ வெண்காடு மேவிய
ஆதியை அடி தொழ, அல்லல் இல்லையே.


[ 10]


Go to top
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்,
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்,
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவெண்காடு
2.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் காட்டும் நுதலானும், கனல்
Tune - சீகாமரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
2.061   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!
Tune - காந்தாரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
3.015   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
5.049   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண் காட்டிப் படிஆய தன்
Tune - திருக்குறுந்தொகை   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
6.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   தூண்டு சுடர் மேனித் தூநீறு
Tune - திருத்தாண்டகம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
7.006   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   படம் கொள் நாகம் சென்னி
Tune - இந்தளம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song