சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

3.023   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவிற்கோலம் (கூவம்) - காந்தாரபஞ்சமம் அருள்தரு புராந்தரியம்மை உடனுறை அருள்மிகு புராந்தகேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=y6pwZwmsJhI  
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர்
திருவினான்; வளர்சடைத் திங்கள் கங்கையான்;
வெருவி வானவர் தொழ, வெகுண்டு நோக்கிய
செருவினான்; உறைவு இடம் திரு விற்கோலமே.


[ 1]


சிற்றிடை உமை ஒருபங்கன்; அங்கையில்
உற்றது ஓர் எரியினன்; ஒரு சரத்தினால்,
வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அறச்
செற்றவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.


[ 2]


ஐயன்; நல் அதிசயன்; அயன் விண்ணோர் தொழும்
மை அணி கண்டன்; ஆர் வண்ணம், வண்ணவான்;
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும்,
செய்யவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.


[ 3]


விதைத்தவன், முனிவருக்கு அறம்; முன் காலனை
உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தரப்
புதைத்தவன்; நெடு நகர்ப்-புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.


[ 4]


முந்தினான், மூவருள் முதல்வன் ஆயினான்,
கொந்து உலாம் மலர்ப்பொழில் கூகம் மேவினான்,
அந்தி வான்பிறையினான், அடியர் மேல் வினை
சிந்துவான், உறைவு இடம் திரு விற்கோலமே.


[ 5]


Go to top
தொகுத்தவன், அருமறை அங்கம்; ஆகமம்
வகுத்தவன்; வளர் பொழில் கூகம் மேவினான்;
மிகுத்தவன்; மிகுத்தவர் புரங்கள் வெந்து அறச்
செகுத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.


[ 6]


விரித்தவன், அருமறை; விரிசடை வெள்ளம்
தரித்தவன்; தரியலர் புரங்கள் ஆசு அற
எரித்தவன்; இலங்கையர் கோன் இடர் படச்
சிரித்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.


[ 7]


திரி தரு புரம் எரிசெய்த சேவகன்,
வரி அரவொடு மதி சடையில் வைத்தவன்,
அரியொடு பிரமனது ஆற்றலால் உருத்
தெரியலன், உறைவு இடம் திரு விற்கோலமே.


[ 9]


சீர்மை இல் சமணொடு, சீவரக் கையர்
நீர்மை இல் உரைகள் கொள்ளாது, நேசர்க்கு
பார் மலி பெருஞ் செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையினான் இடம் திரு விற்கோலமே.


[ 10]


Go to top
கோடல் வெண்பிறையனை, கூகம் மேவிய
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை,
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் வல்லார்களுக்கு இல்லை, பாவமே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவிற்கோலம் (கூவம்)
3.023   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உருவின் ஆர் உமையொடும் ஒன்றி
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவிற்கோலம் (கூவம்) புராந்தகேசுவரர் புராந்தரியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song