சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

3.027   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) - கொல்லி அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு ஆலந்துறைஈசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=Qdw7TRf0eKk  
படையினார், வெண்மழு; பாய் புலித்தோல் அரை
உடையினார்; உமை ஒரு கூறனார்; ஊர்வது ஓர்
விடையினார்; வெண்பொடிப் பூசியார்; விரிபுனல்
சடையினார்; உறைவு இடம் சக்கரப்பள்ளியே.


[ 1]


பாடினார், அருமறை; பனிமதி சடைமிசைச்
சூடினார், படுதலை துன் எருக்கு அதனொடும்;
நாடினார், இடு பலி; நண்ணி ஓர் காலனைச்
சாடினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.


[ 2]


மின்னின் ஆர் சடைமிசை விரி கதிர் மதியமும்,
பொன்னின் ஆர் கொன்றையும், பொறி கிளர் அரவமும்,
துன்னினார்; உலகு எலாம் தொழுது எழ நால்மறை
தன்னினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.


[ 3]


நலம் மலி கொள்கையார், நால்மறை பாடலார்
வலம் மலி மழுவினார், மகிழும் ஊர் வண்டு அறை
மலர் மலி சலமொடு வந்து இழி காவிா
சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே.


[ 4]


வெந்த வெண் பொடி அணி வேதியர், விரிபுனல்,
அந்தம் இல் அணி மலைமங்கையோடு, அமரும் ஊர்
கந்தம் ஆர் மலரொடு, கார் அகில், பல்மணி,
சந்தினோடு, அணை புனல் சக்கரப்பள்ளியே.


[ 5]


Go to top
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார், வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார், உமை ஒரு கூறொடும் ஒலி புனல்
தாங்கினார், உறைவு இடம் சக்கரப்பள்ளியே.


[ 6]


பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம்-
பேரினார்; பெண் ஒரு கூறனார்; பேர் ஒலி-
நீரினார், சடைமுடி; நிரை மலர்க்கொன்றை அம்-
தாரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.


[ 7]


முதிர் இலா வெண்பிறை சூடினார்; முன்ன நாள
எதிர் இலா முப்புரம் எரிசெய்தார், வரைதனால்;
அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய
சதிரினார்; வள நகர் சக்கரப்பள்ளியே.


[ 8]


துணி படு கோவணம், சுண்ண வெண் பொடியினர்
பணி படு மார்பினர், பனிமதிச் சடையினர்,
மணிவணன் அவனொடு மலர் மிசையானையும்
தணிவினர், வள நகர் சக்கரப்பள்ளியே.


[ 9]


உடம்பு போர் சீவரர், ஊண்தொழில் சமணர்கள்
விடம் படும் உரை அவை மெய் அல; விரிபுனல்
வடம் படு மலர்கொடு வணங்குமின், வைகலும்,
தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே!


[ 10]


Go to top
தண்வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம்
கண் நுதலவன் அடி, கழுமல வள நகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவை சொல, பறையும், மெய்ப் பாவமே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை)
3.027   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   படையினார், வெண்மழு; பாய் புலித்தோல்
Tune - கொல்லி   (திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) ஆலந்துறைஈசுவரர் அல்லியங்கோதையம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song