சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

3.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) - கொல்லி அருள்தரு அலங்காரநாயகியம்மை உடனுறை அருள்மிகு பரதேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=4-ivX5pJI7A  
பைத்த பாம்போடு, அரைக் கோவணம், பாய் புலி,
மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டு இடை,
நித்தம் ஆக(ந்) நடம் ஆடி, வெண் நீறு அணி
பித்தர் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.


[ 1]


கயல சேல கருங்கண்ணியர் நாள்தொறும்
பயலை கொள்ள, பலி தேர்ந்து உழல் பான்மையார்
இயலை, வானோர் நினைந்தோர்களுக்கு, எண்ண(அ)ரும்
பெயரர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.


[ 2]


கோடல் சால(வ்) உடையார், கொலை யானையின்
மூடல் சால(வ்) உடையார், முளி கான் இடை
ஆடல் சால(வ்) உடையார், அழகு ஆகிய
பீடர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.


[ 3]


மண்ணர், நீரார், அழலார், மலி காலினார்
விண்ணர், வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள
பண்ணர், பாடல் உடையார், ஒருபாகமும்
பெண்ணர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.


[ 4]


மறையர், வாயின் மொழி; மானொடு, வெண்மழு,
கறைகொள் சூலம்(ம்), உடைக் கையர்; கார் ஆர்தரும்
நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னிமேல்
பிறையர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.


[ 5]


Go to top
புற்று அரவம், புலித்தோல், அரைக் கோவணம்,
தற்று, இரவில் நடம் ஆடுவர்; தாழ்தரு
சுற்று அமர் பாரிடம், தொல்கொடியின்மிசைப்
பெற்றர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.


[ 6]


துணை இல் துத்தம், சுரிசங்கு, அமர் வெண்பொடி
இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும்(ம்), எரி-
கணையினால் முப்புரம் செற்றவர், கையினில்
பிணையர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.


[ 7]


சரிவு இலா வல் அரக்கன் தடந்தோள் தலை
நெரிவில் ஆர(வ்) அடர்த்தார், நெறி மென்குழல்
அரிவை பாகம் அமர்ந்தார், அடியாரொடும்
பிரிவு இல் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.


[ 8]


வரி அரா என்பு அணி மார்பினர், நீர் மல்கும்
எரி அராவும் சடைமேல் பிறை ஏற்றவர்,
கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய
பெரியர், கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.


[ 9]


நாண் இலாத சமண் சாக்கியர் நாள்தொறும்
ஏண் இலாத(ம்) மொழிய(வ்), எழில் ஆயவர்;
சேண் உலாம் மும்மதில் தீ எழச் செற்றவர்
பேணு கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.


[ 10]


Go to top
நீரின் ஆர் புன்சடை நிமலனுக்கு இடம் என,
பாரினார் பரவு அரதைப் பெரும்பாழியை,
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய்
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)
3.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பைத்த பாம்போடு, அரைக் கோவணம்,
Tune - கொல்லி   (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) பரதேசுவரர் அலங்காரநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song