சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

4.056   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாவடுதுறை - திருநேரிசை:காந்தாரம் அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=61iq2NzFuUI  
மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்;
பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்;
காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்-
ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே.


[ 1]


மடந்தை பாகத்தர் போலும்; மான்மறிக் கையர் போலும்;
குடந்தையில் குழகர் போலும்; கொல் புலித் தோலர் போலும்;
கடைந்த நஞ்சு உண்பர் போலும்; காலனைக் காய்வர் போலும்;
அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.


[ 2]


உற்ற நோய் தீர்ப்பர் போலும்; உறு துணை ஆவர் போலும்;
செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழச் செறுவர் போலும்;
கற்றவர் பரவி ஏத்தக் கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.


[ 3]


மழு அமர் கையர் போலும்; மாது அவள் பாகர் போலும்;
எழு நுனை வேலர் போலும்; என்பு கொண்டு அணிவர் போலும்;
தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரம்பலவும் சொல்லி
அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.


[ 4]


பொடி அணி மெய்யர் போலும்; பொங்கு வெண் நூலர் போலும்;
கடியது ஓர் விடையர் போலும்; காமனைக் காய்வர் போலும்;
வெடி படுதலையர் போலும்; வேட்கையால் பரவும் தொண்டர்
அடிமையை அளப்பர்போலும் ஆவடுதுறையனாரே.


[ 5]


Go to top
வக்கரன் உயிரை வவ்வக் கண் மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்; தானவர் தலைவர் போலும்;
துக்க மா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்;
அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.


[ 6]


விடை தரு கொடியர் போலும்; வெண் புரி நூலர் போலும்;
படை தரு மழுவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்;
உடை தரு கீளர் போலும்; உலகமும் ஆவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.


[ 7]


முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த;
நந்தி, மாகாளர் என்பார், நடு உடையார்கள் நிற்ப;
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே.


[ 8]


பான் அமர் ஏனம் ஆகிப் பார் இடந்திட்ட மாலும்,
தேன் அமர்ந்து ஏறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும்,
தீனரைத் தியக்கு அறுத்த திரு உரு உடையர் போலும்;
ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே.


[ 9]


பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர் சடை முடியர் போலும்;
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்;
கூத்தராய்ப் பாடி, ஆடி, கொடு வலி அரக்கன் தன்னை
ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாவடுதுறை
3.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இடரினும், தளரினும், எனது உறு
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா-இரு ஞாலம் எல்லாம் மலர்
Tune - திருநேரிசை:காந்தாரம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்
Tune - கொல்லி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
5.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   நிறைக்க வாலியள் அல்லள், இந்
Tune - திருக்குறுந்தொகை   (திருவாவடுதுறை )
6.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,
Tune - திருத்தாண்டகம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
6.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருவே, என் செல்வமே, தேனே,
Tune - திருத்தாண்டகம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.066   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மறையவன்(ன்) ஒரு மாணி வந்து
Tune - தக்கேசி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.070   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!
Tune - தக்கேசி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
9.006   சேந்தனார்   திருவிசைப்பா   சேந்தனார் - திருவாவடுதுறை
Tune -   (திருவாவடுதுறை )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song