சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

5.071   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவிசயமங்கை - திருக்குறுந்தொகை அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு விசயநாதேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=SotjI4uHrC4  
குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ்
வசை இல் மங்கல வாசகர் வாழ்த்தவே,
இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான்
விசைய மங்கையுள் வேதியன்; காண்மினே!


[ 1]


ஆதிநாதன்; அடல் விடைமேல் அமர்
பூதநாதன்; புலி அதள் ஆடையன்;
வேதநாதன் விசயமங்கை உளான்;
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை, பாவமே.


[ 2]


கொள்ளிடக் கரைக் கோவந்த புத்தூரில்
வெள்விடைக்கு அருள்செய் விசயமங்கை-
யுள் இடத்து உறைகின்ற உருத்திரன்
கிள்ளிட, தலை அற்றது, அயனுக்கே.


[ 3]


திசையும் எங்கும் குலுங்க, திரிபுரம்
அசைய, அங்கு எய்திட்டு, ஆர் அழல் ஊட்டினான்
விசைய மங்கை விருத்தன்; புறத்து அடி
விசையின் மங்கி விழுந்தனன், காலனே.


[ 4]


பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள்
கள்ளம் ஆக்கிக் கலக்கிய கார் இருள்
விள்ளல் ஆக்கி, விசயமங்கைப் பிரான்,
உள்ளல் நோக்கி, என் உள்ளுள் உறையுமே.


[ 5]


Go to top
கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை-
வில்லை ஏற்று உடையான், விசயமங்கைச்
செல்வ, போற்றி! என்பாருக்குத் தென்திசை-
எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே.


[ 6]


கண் பல் உக்க கபாலம் அங்கைக் கொண்டு
உண் பலிக்கு உழல் உத்தமன், உள் ஒளி
வெண்பிறைக்கண்ணியான், விசயமங்கை
நண்பனை, தொழப்பெற்றது நன்மையே.


[ 7]


பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து,
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை
ஆண்டவன்(ன்) அடியே நினைந்து, ஆசையால்
காண்டலே கருத்து ஆகி இருப்பனே.


[ 8]


வந்து கேண்மின்: மயல் தீர் மனிதர்காள்!
வெந்தநீற்றன், விசயமங்கைப் பிரான்,
சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப்
பந்து ஆக்கி, உயக்கொளும்; காண்மினே!


[ 9]


இலங்கை வேந்தன் இருபதுதோள் இற
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை
வலம் செய்வார்களும், வாழ்த்து இசைப்பார்களும்,
நலம் செய்வார் அவர், நன்நெறி நாடியே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவிசயமங்கை
3.017   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மரு அமர் குழல் உமை
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)
5.071   திருநாவுக்கரசர்   தேவாரம்   குசையும் அங்கையில் கோசமும் கொண்ட
Tune - திருக்குறுந்தொகை   (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song