சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

5.100   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை - திருக்குறுந்தொகை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=lk4SHPhE4ng  
வேத நாயகன்; வேதியர் நாயகன்;
மாதின் நாயகன்; மாதவர் நாயகன்;
ஆதிநாயகன்; ஆதிரைநாயகன்;
பூதநாயகன் புண்ணியமூர்த்தியே.


[ 1]


செத்துச் செத்துப் பிறப்பதே தேவு என்று
பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ,
அத்தன் என்று அரியோடு பிரமனும்
துத்தியம் செய நின்ற நல்சோதியே?


[ 2]


நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறுகோடி நாராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்;
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே.


[ 3]


வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர் ஆகிலும், ஏழைகாள்!
யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம்
மாதேவன்(ன்) அலால் தேவர் மற்று இல்லையே.


[ 4]


கூவல் ஆமை குரைகடல் ஆமையை,
கூவலோடு ஒக்குமோ, கடல்? என்றல் போல்,
பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்,
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே.


[ 5]


Go to top
பேய்வனத்து அமர்வானை, பிரார்த்தித்தார்க்கு
ஈவனை, இமையோர் முடி தன் அடிச்
சாய்வனை,-சலவார்கள்-தமக்கு உடல்
சீவனை, சிவனை, சிந்தியார்களே.


[ 6]


எரி பெருக்குவர்; அவ் எரி ஈசனது
உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்;
அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய்
நரிவிருத்தம் அது ஆகுவர், நாடரே.


[ 7]


அருக்கன் பாதம் வணங்குவர், அந்தியில்;
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ?
இருக்கு நால்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார், கல்மனவரே.


[ 8]


தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்-
ஆய உள்ளத்து அமுது அருந்தப் பெறார்-
பேயர், பேய்முலை உண்டு உயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.


[ 9]


அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை
அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்-
கருத்து இலாக் கயக்கவணத்தோர்களே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை
5.100   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்
Tune - திருக்குறுந்தொகை   (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song