சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=cziBzD2YS60
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி
பொரும் கை மதகரி உரிவைப் போர்வையானை, பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை,
கரும்பு தரு கட்டியை, இன் அமிர்தை, தேனை, காண்பு அரிய செழுஞ்சுடரை, கனகக் குன்றை,
இருங் கனகமதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை, இமையோர் ஏத்தும்
அருந்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை,
அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[ 1]
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை, காளத்தி கயிலாய மலை உளானை,
வில் பயிலும் மதன் அழிய விழித்தான் தன்னை, விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னை,
பொற்பு அமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை, பொருந்தார் சிந்தை
அற்புதனை, அரநெறியில் அப்பன் தன்னை,
அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[ 2]
பாதி ஒரு பெண், முடிமேல் கங்கை யானை, பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை,
வேதியனை, தன் அடியார்க்கு எளியான் தன்னை, மெய்ஞ் ஞான விளக்கானை, விரையே நாறும்
போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம் கொண்டு இருந்தானை, போற்றுவார்கள்
ஆதியனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடையேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[ 3]
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன் தன்னை, நாகேச்சுரம் இடமா நண்ணினானை,
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை,
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம் கொண்ட பெருமானை, இமையோர் போற்றும்
அந்தணனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த வாறே!.
[ 4]
சுடர்ப் பவளத் திருமேனி வெண் நீற்றானை, சோதிலிங்கத் தூங்கானை மாடத்தானை,
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்தன்னை, மிக்க(அ)அரணம் எரியூட்ட வல்லான் தன்னை,
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை, மதியார் வேள்வி
அடர்த்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[ 5]
Go to top
தாய் அவனை, எவ் உயிர்க்கும்; தன் ஒப்பு இல்லாத் தகு தில்லை நடம் பயிலும் தலைவன் தன்னை;
மாயவனும், மலரவனும், வானோர், ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன் தன்னை;
மேயவனை, பொழில் ஆரூர் மூலட்டானம், விரும்பிய எம்பெருமானை; எல்லாம் முன்னே
ஆயவனை; அரநெறியில் அப்பன் தன்னை; அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[ 6]
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை, புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை,
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து தன்னை, மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை,
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை, இமையோர் ஏத்த
அருளியனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[ 7]
காலனைக் காலால் காய்ந்த கடவுள் தன்னை, காரோணம் கழிப்பாலை மேயான் தன்னை,
பாலனுக்குப் பாற்கடல் அன்று ஈந்தான் தன்னை, பணி உகந்த அடியார்கட்கு இனியான் தன்னை,
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை, பவளம் ஈன்ற
ஆலவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[ 8]
ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன் தன்னை, ஓத்தூரும் உறையூரும் மேவினானை,
வைப்பு அவனை, மாணிக்கச் சோதியானை, மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை,
மெய்ப் பொருள் ஆய் அடியேனது உள்ளே நின்ற வினை இலியை, திரு மூலட்டானம் மேய
அப் பொன்னை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[ 9]
பகலவன் தன் பல் உகுத்த படிறன் தன்னை, பராய்த்துறை பைஞ்ஞீலி இடம் பாவித்தானை,
இகலவனை, இராவணனை இடர் செய்தானை, ஏத்தாதார் மனத்து அகத்துள் இருள் ஆனானை,
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை, போற்றார் சிந்தை
அகலவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவாரூர்
1.091
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப் பத்தி
Tune - குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
1.105
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பாடலன் நால்மறையன்; படி பட்ட
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
2.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பவனம் ஆய், சோடை ஆய்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
2.101
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பருக் கை யானை மத்தகத்து
Tune - நட்டராகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
3.045
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
மெய் எலாம் வெண் நீறு
Tune - காந்தாரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.017
திருநாவுக்கரசர்
தேவாரம்
எத் தீப் புகினும் எமக்கு
Tune - இந்தளம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
சூலப் படை யானை; சூழ்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.020
திருநாவுக்கரசர்
தேவாரம்
காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
Tune - சீகாமரம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.021
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன்
Tune - குறிஞ்சி
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
படு குழிப் பவ்வத்து அன்ன
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
குழல் வலம் கொண்ட சொல்லாள்
Tune - திருநேரிசை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
4.101
திருநாவுக்கரசர்
தேவாரம்
குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.102
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
Tune - திருவிருத்தம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
5.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
உயிரா வணம் இருந்து, உற்று
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாதித் தன் திரு உருவில்
Tune -
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.029
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.030
திருநாவுக்கரசர்
தேவாரம்
எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.031
திருநாவுக்கரசர்
தேவாரம்
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல்,
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொரும் கை மதகரி உரிவைப்
Tune - அரநெறிதிருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
6.034
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற
Tune - திருத்தாண்டகம்
(திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
7.008
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு
Tune - இந்தளம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.012
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த
Tune - இந்தளம்
(திருவாரூர் )
7.033
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
Tune - கொல்லி
(திருவாரூர் )
7.037
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
குருகு பாய, கொழுங் கரும்புகள்
Tune - கொல்லி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.039
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தில்லை வாழ் அந்தணர் தம்
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவாரூர் )
7.047
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் )
7.051
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
Tune - பழம்பஞ்சுரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.059
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
Tune - தக்கேசி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.073
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கரையும், கடலும், மலையும், காலையும்,
Tune - காந்தாரம்
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.083
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
Tune - புறநீர்மை
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
7.095
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மீளா அடிமை உமக்கே ஆள்
Tune - செந்துருத்தி
(திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
8.139
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
Tune - அயிகிரி நந்தினி
(திருவாரூர் )
9.018
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவாரூர் பஞ்சமம்
Tune -
(திருவாரூர் )
11.007
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருவாரூர் மும்மணிக்கோவை
Tune -
(திருவாரூர் )
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400