சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

6.050   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவீழிமிழலை - திருத்தாண்டகம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=ZTYW9CUiCFc  
போர் ஆனை ஈர் உரிவைப் போர்வை யானை, புலி அதளே   உடை ஆடை போற்றினானை,
பாரானை, மதியானை, பகல் ஆனானை, பல் உயிர் ஆய் நெடுவெளி ஆய்ப் பரந்து நின்ற
நீரானை, காற்றானை, தீ ஆனானை, நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வத்-
தேரானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.


[ 1]


சவம் தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு தலை ஓடு   மயிர்க்கயிறு தரித்தான் தன்னை,
பவம் தாங்கு பாசு பத வேடத்தானை, பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம்
கவர்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழச்
சிவந்தானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.


[ 2]


அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை, அகத்தியனை உகப்பானை, அயன் மால் தேட
நின்றானை, கிடந்த கடல் நஞ்சு உண்டானை, நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும்
வென்றானை, மீயச்சூர் மேவினானை, மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கல் உற்றுச்
சென்றானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.


[ 3]


தூயானை, சுடர்ப் பவளச்சோதியானை, தோன்றிய எவ் உயிர்க்கும் துணை ஆய் நின்ற
தாயானை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை, சங்கரனை, சந்தோக சாமம் ஓதும்
வாயானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வஞ்சனையால் அஞ்சு எழுத்தும் வழுத்துவார்க்குச்
சேயானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.


[ 4]


நல்-தவத்தின் நல்லானை, தீது ஆய் வந்த நஞ்சு அமுது செய்தானை, அமுதம் உண்ட
மற்ற(அ)அமரர் உலந்தாலும் உலவாதானை, வருகாலம் செல்காலம் வந்தகாலம்
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை, இரு விசும்பின் ஊர்மூன்று ஒன்றச்
செற்றவனை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.


[ 5]


Go to top
மை வானம் மிடற்றானை, அவ் வான் மின் போல் வளர் சடைமேல் மதியானை, மழை ஆய் எங்கும்
பெய்வானை, பிச்சாடல் ஆடுவானை, பிலவாய   பேய்க்கணங்கள் ஆர்க்கச் சூல் அம்பு
ஒய்வானை, பொய் இலா மெய்யன் தன்னை, பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை
செய்வானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.


[ 6]


மிக்கானை, குறைந்து அடைந்தார் மேவலானை, வெவ்வேறு ஆய் இரு மூன்று சமயம் ஆகிப்
புக்கானை, எப்பொருட்கும் பொது ஆனானை, பொன்னுலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம்
தக்கானை, தான் அன்றி வேறு ஒன்று இல்லாத் தத்துவனை, தடவரையை நடுவு செய்த
திக்கானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.


[ 7]


வானவர் கோன் தோள் இறுத்த மைந்தன் தன்னை, வளை குளமும் மறைக்காடும் மன்னினானை,
ஊனவனை, உயிரவனை, ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியல் உற்றுச் சென்ற
கானவனை, கயிலாயம் மேவினானை, கங்கை சேர் சடையானை, கலந்தார்க்கு என்றும்
தேனவனை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.


[ 8]


பரத்தானை; இப் பக்கம் பல ஆனானை; பசுபதியை; பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை; வணங்குவார் மனத்து உளானை; மாருதம், மால், எரி, மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம்
சரத்தானை; சரத்தையும் தன் தாள்கீழ் வைத்த தபோதனனை; சடாமகுடத்து அணிந்த பைங்கண்
சிரத்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.


[ 9]


அறுத்தானை, அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை; அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை; எழு நரம்பின் இசை கேட்டானை; இந்து வினைத் தேய்த்தானை; இரவிதன் பல்
பறித்தானை; பகீரதற்கா வானோர் வேண்டப் பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆகச்
செறித்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவீழிமிழலை
1.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மைம் மரு பூங்குழல் கற்றை
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
1.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடை ஆர் புனல் உடையான்,
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.020   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தட நிலவிய மலை நிறுவி,
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அரை ஆர் விரி கோவண
Tune - தக்கராகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இரும் பொன்மலை வில்லா, எரி
Tune - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.092   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
Tune - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.124   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.132   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சீர் மருவு தேசினொடு தேசம்
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மட்டு ஒளி விரிதரு மலர்
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.098   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெண்மதி தவழ் மதில் மிழலை
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
Tune - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.116   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துன்று கொன்றை நம் சடையதே;
Tune - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
Tune - புறநீர்மை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
Tune - திருநேரிசை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
Tune - திருவிருத்தம்   (திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
5.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
Tune - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
5.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   என் பொனே! இமையோர் தொழு
Tune - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   போர் ஆனை ஈர் உரிவைப்
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.051   திருநாவுக்கரசர்   தேவாரம்   கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண் அவன் காண்; கண்
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   மான் ஏறு கரம் உடைய
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
7.088   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
Tune - சீகாமரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
9.005   சேந்தனார்   திருவிசைப்பா   சேந்தனார் - திருவீழிமிழலை
Tune -   (திருவீழிமிழலை )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song