சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

6.052   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவீழிமிழலை - திருத்தாண்டகம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=CkYRX-JSV7w  
கண் அவன் காண்; கண் ஒளி சேர் காட்சியான் காண்; கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற
பண் அவன் காண்; பண் அவற்றின் திறம் ஆனான் காண்; பழம் ஆகிச் சுவை ஆகிப் பயக்கின்றான் காண்;
மண் அவன் காண்; தீ அவன் காண்; நீர் ஆனான் காண்; வந்து அலைக்கும் மாருதன் காண்; மழை மேகம் சேர்
விண் அவன் காண்; விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.


[ 1]


ஆலைப் படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சு   எழுத்தின் நாமத்தான் காண்;
சீலம் உடை அடியார் சிந்தையான் காண்; திரி புரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண்;
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண்; பண்டரங்க   வேடன் காண்; பலி தேர்வான் காண்;
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.


[ 2]


தண்மையொடு வெம்மை தான் ஆயினான் காண்; சக்கரம் புள்பாகற்கு அருள்செய்தான் காண்;
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண்; காமன்   உடல் வேவித்த கண்ணினான் காண்;
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண்; இருவர்க்கு எரி ஆய் அருளினான் காண்;
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.


[ 3]


காது இசைந்த சங்கக் குழையினான் காண்; கனகமலை அனைய காட்சியான் காண்;
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண்; வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண்;
ஆதியன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்; ஐந்தலை மாநாகம் நாண் ஆக்கினான் காண்;
வேதியன் காண்; வேதவிதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.


[ 4]


நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண்; நித்தமணவாளன் என நிற்கின்றான் காண்;
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண்; காலன் உயிர் காலால் கழிவித்தான் காண்;
செய்ய திருமேனியில் வெண்நீற்றினான் காண்; செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினான் காண்;
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.


[ 5]


Go to top
கண் துஞ்சும் கரு நெடுமால் ஆழி வேண்டி, கண் இடந்து, சூட்ட, கண்டு அருளுவான் காண்;
வண்டு உண்ணும் மதுக் கொன்றை, வன்னி, மத்தம், வான்கங்கை, சடைக் கரந்த மாதேவன் காண்;
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண்; பரமன்   காண்; பரமேட்டி ஆயினான் காண்;
வெண்திங்கள் அரவொடு செஞ்சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலை யானே.


[ 6]


கல்பொலி தோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக்கு அருள்செய்த கருணையான் காண்;
வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண்; வேடுவனாய்ப் போர் பொருது காட்டினான் காண்;
தற்பரம் ஆய் நற்பரம் ஆய் நிற்கின்றான் காண்; சதாசிவன் காண்; தன் ஒப்பார் இல்லாதான் காண்;
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.


[ 7]


மெய்த்தவன் காண், மெய்த்தவத்தில் நிற்பார்க்கு எல்லாம்; விருப்பு இலா இருப்புமன வினையர்க்கு என்றும்
பொய்த்தவன் காண்; புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புதுமலர்கள் ஆக்கினான் காண்;
உய்த்தவன் காண், உயர் கதிக்கே உள்கினாரை; உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்யச் செய்யும்
வித்தகன் காண் வித்தகர் தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே.


[ 8]


சந்திரனைத் திருவடியால்-தளர்வித்தான் காண்; தக்கனையும முனிந்து எச்சன் தலை கொண்டான் காண்;
இந்திரனைத் தோள் முறிவித்து அருள் செய்தான் காண்; ஈசன் காண்; நேசன் காண், நினைவோர்க்கு எல்லாம்,
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண்; மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரி சுடர் ஆய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.


[ 9]


ஈங்கைப் பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண்; எம்மான்காண்; கைம்மாவின் உரி போர்த்தான் காண்;
ஓங்கு மலைக்கு அரையன் தன் பாவையோடும் ஓர் உரு ஆய் நின்றான் காண்; ஓங்காரன் காண்;
கோங்கு மலர்க்கொன்றை அம்தார்க் கண்ணியான் காண்; கொல் ஏறு வெல் கொடிமேல் கூட்டினான் காண்;
வேங்கை வரிப் புலித்தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவீழிமிழலை
1.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மைம் மரு பூங்குழல் கற்றை
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
1.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சடை ஆர் புனல் உடையான்,
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.020   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தட நிலவிய மலை நிறுவி,
Tune - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.035   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அரை ஆர் விரி கோவண
Tune - தக்கராகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இரும் பொன்மலை வில்லா, எரி
Tune - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.092   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
Tune - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.124   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.132   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சீர் மருவு தேசினொடு தேசம்
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மட்டு ஒளி விரிதரு மலர்
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.098   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெண்மதி தவழ் மதில் மிழலை
Tune - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
Tune - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.116   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துன்று கொன்றை நம் சடையதே;
Tune - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
Tune - புறநீர்மை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
Tune - திருநேரிசை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
Tune - திருவிருத்தம்   (திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
5.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
Tune - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
5.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   என் பொனே! இமையோர் தொழு
Tune - திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   போர் ஆனை ஈர் உரிவைப்
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.051   திருநாவுக்கரசர்   தேவாரம்   கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண் அவன் காண்; கண்
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   மான் ஏறு கரம் உடைய
Tune - திருத்தாண்டகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
7.088   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
Tune - சீகாமரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
9.005   சேந்தனார்   திருவிசைப்பா   சேந்தனார் - திருவீழிமிழலை
Tune -   (திருவீழிமிழலை )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song