சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

6.065   திருநாவுக்கரசர்   தேவாரம்

கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) - திருத்தாண்டகம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=4sksPIUARVw  
உரித்தவன் காண், உரக் களிற்றை உமையாள் ஒல்க; ஓங்காரத்து ஒருவன் காண்; உணர் மெய்ஞ்ஞானம்
விரித்தவன் காண்; விரித்த நால் வேதத்தான் காண்; வியன் உலகில் பல் உயிரை விதியினாலே
தெரித்தவன் காண்; சில் உரு ஆய்த் தோன்றி எங்கும் திரண்டவன் காண்; திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.


[ 1]


நேசன் காண், நேசர்க்கு; நேசம் தன்பால் இல்லாத   நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன் காண்; கூசாதார் நெஞ்சு தஞ்சே
குடிகொண்ட குழகன் காண்; அழகு ஆர் கொன்றை-
வாசன் காண்; மலை மங்கை பங்கன் தான் காண்; வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும்
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.


[ 2]


பொறையவன் காண்; பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண்; நண்ணிய புண்டரீகப் போதில்
மறையவன் காண்; மறையவனைப் பயந்தோன் தான்
காண்; வார்சடை மாசுணம் அணிந்து, வளரும் பிள்ளைப்-
பிறையவன் காண்; பிறை திகழும் எயிற்றுப் பேழ்வாய்ப் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும்
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.


[ 3]


பார் அவன் காண், விசும்பு அவன் காண், பவ்வம் தான் காண், பனி வரைகள் இரவினொடு பகல் ஆய் நின்ற
சீரவன் காண், திசையவன் காண், திசைகள் எட்டும் செறிந்தவன் காண், சிறந்த(அ)டியார் சிந்தை செய்யும்
பேரவன் காண், பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண், அரியவன் காண், பெற்றம் ஊர்ந்த
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே.


[ 4]


பெருந் தவத்து எம் பிஞ்ஞகன் காண், பிறை சூடீ
காண், பேதையேன் வாதை உறு பிணியைத் தீர்க்கும்
மருந்து அவன் காண், மந்திரங்கள் ஆயினான் காண், வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண்,
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன் காண், அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.


[ 5]


Go to top
ஆய்ந்தவன் காண், அருமறையோடு அங்கம் ஆறும்;
அணிந்தவன் காண், ஆடு அரவோடு என்பும் ஆமை;
காய்ந்தவன் காண், கண் அழலால் காமன் ஆகம்; கனன்று எழுந்த காலன் உடல் பொடி ஆய் வீழப்
பாய்ந்தவன் காண்; பண்டு பலசருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்குப் பார் ஆள் செல்வம்
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.


[ 6]


உமையவளை ஒரு பாகம் சேர்த்தினான் காண், உகந்து ஒலி நீர்க் கங்கை சடை ஒழுக்கினான் காண்,
இமய வட கயிலைச் செல்வன் தான் காண், இல் பலிக்குச் சென்று உழலும் நல் கூர்ந்தான் காண்,
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன் தான்
காண், தத்துவன் காண், உத்தமன் காண், தானே ஆய
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.


[ 7]


தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான் தான்
காண், தூ மலர்ச்சேவடி இணை எம் சோதியான் காண்,
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண், ஒலிகடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண்,
வண்டு படு மலர்க் கொன்றை மாலையான் காண், வாள்மதி ஆய் நாள் மீனும் ஆயினான் காண்
எண்திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.


[ 8]


முந்தை காண், மூவரினும் முதல் ஆனான் காண், மூ இலை வேல் மூர்த்தி காண், முருக வேட்குத்
தந்தை காண், தண் கட மா முகத்தினாற்குத் தாதை காண், தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச்
சிந்தைகாண், சிந்தாத சித்தத்தார்க்குச் சிவன் அவன் காண், செங்கண் மால் விடை ஒன்று ஏறும்
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.


[ 9]


பொன் இசையும் புரிசடை எம் புனிதன் தான் காண், பூதகண நாதன் காண், புலித்தோல் ஆடை
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண், சங்க வெண்குழைக் காதின் சதுரன் தான் காண்
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க, அடி அடர்ப்ப, மீண்டு அவன் தன் வாயில்
இன் இசை கேட்டு, இலங்கு ஒளி வாள் ஈந்தோன், கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
1.133   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்
Tune - மேகராகக்குறிஞ்சி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
2.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மறையானை, மாசு இலாப் புன்சடை
Tune - இந்தளம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
3.041   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரு ஆர் கச்சித் திரு
Tune - கொல்லி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
3.114   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;
Tune - பழம்பஞ்சுரம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
4.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;
Tune - காந்தாரம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
4.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனை, நகரம் மூன்றும் எரியுண
Tune - திருநேரிசை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
4.099   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதுவித்தாய், முன் அற உரை;
Tune - திருவிருத்தம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
5.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண்டு செய்த பழவினையின் பயன்
Tune - திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
5.048   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே
Tune - திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
6.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த
Tune - திருத்தாண்டகம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
6.065   திருநாவுக்கரசர்   தேவாரம்   உரித்தவன் காண், உரக் களிற்றை
Tune - திருத்தாண்டகம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
7.061   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   ஆலம் தான் உகந்து அமுது
Tune - தக்கேசி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
11.029   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி   திருஏகம்பமுடையார் திருவந்தாதி
Tune -   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song