கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய் மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
|
[917.0] |
திருமலையாண்டான் அருளியது தமேவமத்வாபரவாஸுதேவம் ரங்கேசயம்ராஜவதர்ஹணீயம் ப்ராபோதகீம்யோக்ருதஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும்பகவந்தமீடே.
|
[917.1] |
திருவரங்கப்பெருமாளறையர் அருளியது மண்டங்குடியென்பர் மாமரையோர் மன்னியசீர் தொண்டரடிப்பொடிதொன்னகரம் | - வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானைப் | பள்ளி யுணர்த்தும்பிரானுதித்தவூர்.
|
[917.2] |
கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக் கூர்ந்தது குண-திசை மாருதம் இதுவோ எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம் ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய் வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
|
[918.0] |
சுடர்-ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப் படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின் மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ அடல்-ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
|
[919.0] |
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும் ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் ஏறே மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
|
[920.0] |
Back to Top |
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய் போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
|
[921.0] |
இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
|
[922.0] |
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல் சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
|
[923.0] |
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர் தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
|
[924.0] |
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் ஆதலில் அவர்க்கு நாள்-ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
|
[925.0] |
Back to Top |
கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித் துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே
|
[926.0] |