சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
கழற்றி அறிவார் நாயனார்  

12 -ஆம் திருமுறை   12.370  
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
 
திருமகள் வீற்றிருக்கும் பெருஞ்சிறப்பும், நிலையான பழமையுமுடைய மலைநாட்டில், பழந்தமிழ்ப் பாட்டுக்களில் விளங் கிய பல வகையான புகழையுடைய சேர மரபினரும், குடிகளும், தொன்று தொட்டுப் பயின்று வருகின்ற தன்மையுடைய பழைய பதியா வது, விடையூர்தியில் எழுந்தருளும் சிவபெருமானின் திருவஞ்சைக் களத்தில், நிலவப் பெற்றுச், சேர மரபின் மன்னர்கள் அரசு கட்டில் ஏறி, வழி வழி ஆட்சி செய்து வரும் பெரிய தலைநகரமானது கொடுங் கோளூர் ஆகும். *** சீலமும் கொடையும் மிக்கிருத்தலின், 'மாவீற்றிருந்த . . . . . . மலைநாடு' என்றார். 'அகனமர்ந்து செய்யாள் உறையும்' (குறள், 84) என்னும் திருவாக்கினையும் நினைவு கூர்க. 'உரையும் பாட்டும் உடையோர் சிலரே' (புறம். 27) என்புழிப்போல, உரையும் பாட்டும் உடைய நாடுகளும் சிலவே. அவற்றுள் சேரநாடு ஒன்றாகும். பதிற்றுப் பத்தும், புறநானூறும், சிலம்பும் காண்க. கொடுங்கோளூர் - சேர மன் னர்களின் தலைநகரம். இதனொடு அஞ்சைக்களத்தையும் சேர்த்துக் கொடுங்கோளூர் அஞ்சைக்களம் என்று அழைப்பர். இது மகோதை என்றும் அழைக்கப்பெறும். தேவார வைப்புப் பதியாகும். சிவன் கோயிலும், கண்ணகி கோயிலும், பகவதி கோயிலும் உள்ளன.
அந்நகரமானது, காலையில் ஓதப்படும் மறை முதலான கலைகளின் ஒலியும், யானைக் கன்றுகளின் பிளிற்றொலி யும், பூஞ்சோலைகளினின்று எழும் வண்டுகள் பண்பாடும் ஒலியும், குதிரைகளின் செருக்கினால் மிகும் ஒலியும், பாலை, விபஞ்சி, யாழ் முதலியவற்றான் வரும் ஒலியும், பாடல் ஆடல்களுக்கு ஏற்ப இசைக் கப்படும் முழவு ஒலியும் ஆகிய ஒலிகள், அங்குக் கடலில் எழும் ஒலியையும் கீழ்ப்படுத்தி மேல் எழுந்து விளங்கும் வியப்பினது. *** காலை எழும் பல கலையினொலி என்றார், அக்காலமே அவ்வக் கலைகளையும் பயிலுதற்குரிய காலமாதலின். துரகம் - குதிரை. சுலவும் ஒலி - சுழலும் ஒலி. பாலை, விபஞ்சி என்பன இசைக் கருவிகள்.
அந்நகரத்தில், செல்வம் மிக்க வீடுகள் தோறும் விரும்பும் இல்லற இன்பங்கள் பொருந்தி விளங்குவன, அவற்றின் அருகில் விளங்கும் அறச்சாலைகள் தோறும் செய்யப்படும் நல்ல அறங்கள் பெருகுவன, தக்க அணிகளால் அழகூட்டிய திருமடங்கள் தோறும் சைவ சமயத்தின் மேன்மைப் பொருள்கள் எடுத்துக் கூறப்படுவன, தொகுதியாக சேர்ந்த வளங்களைத் தம்மிடம் கொண்ட இடங்கள் தோறும் நிறைந்த செல்வங்கள் விளங்குவன. *** அறத்தால் பொருளாக்கி, அப்பொருளால் இன்பம் பெறுதல் இல்லற மாண்பதாதலின் 'விழையும் இன்பம் விளங்குவன' என்றார். எல்லா உயிர்களும் இன்பம் விழைதல் இயல்பாதலின் 'விழையும் இன்பம்' என்றார். சாலை - அறச்சாலைகள். சைவ மெய்ம்மை - இறை, உயிர், தளை பற்றிய சிந்தனைகளும், தளையை நீக்கி உயிர் இறையை அடையத் தகும் செயற்பாடுகள் பற்றிய சிந் தனைகளும் ஆம். 'ஆய்வார் பதிபசுபாசங்களின் உண்மை . . . . . கமலை யில் ஞானப் பிரகாசன் மெய்த் தொண்டர்களே' (சிவபோகசாரம்) எனவரும் குருஞானசம்பந்தர் திருவாக்கும் காண்க.
மறைகளில் விதித்துச் சொல்லப்பட்ட நெறிமுறை களினின்றும் வழுவாத மிக்க நல்லொழுக்கத்தில் சிறந்த நால்வகை மரபினரும், தத்தம் நிலைகளில் தழைத்துச் செழித்து விளங்கும் தன்மையுடையதாய், பெரிய மதில் சூழ்ந்ததாய், மாமரம், மகிழமரம், சரளமரம் முதலியவற்றின் வரிசை நெருங்கிய சோலைகள் சூழ்ந்த வளமையுடைதாய் விளங்கும் அந்நகரானது, உலகத்தில் 'கோதை' என்று அழைக்கப்படுகின்ற, சேர மன்னர் ஆளும் தலைநகரான 'மகோதை' என்ற பெயருடையது. *** நாட்டின் நலம் கருதி, தாம் தாமும் செயத்தகும் கடமை களை வகுத்துக் கொண்ட நிலையில் வந்தனவே நால்வகை மரபுக ளும். அவைபற்றித் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல்கள் பலவும் சொல்லுகின்றன. இவற்றால் உயர்வு தாழ்வு கருதி உருக் குலைந்தமை நம்மனோரின் போகூழே. சரளம் - நீண்ட இலைகளை யுடையது; தேவதாரு வகையுட்பட்டது. கோதை அரசர் - சேரமரபினர்.
மணம் கமழும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த பழமையான அந்நகரத்தில், அருகி அழிவு செய்யும் கலியை மரபு வழி வரும் ஒழுக்கத்தினால் நீக்கி, அறத்தை நாட்டும் சைவத் திறம் தழைத்து ஓங்குமாறு, மாறுபட்ட சினம் மிக்க யானைப் படையை யுடைய சேரர் குலமும் உலகமும் செய்த பெரிய தவத்தால், சிவனரு ளால் பெருமாக்கோதையார் என்பவர் தோன்றியருளினார். *** அருகுதல் - குறைதல். அழிதல் - இல்லையாதல்.
செல்வம் நிறைந்த அப்பெரிய நகரத்தில் உள்ளவர் கள், பெருமாக் கோதையார் தோன்றலால் கொள்ளும் விழாவின் சிறப்பினால் வரும் பெருமகிழ்ச்சி மிக்கு, நெய்யாடல் விழாவைக் கொண்டாட, கற்பக மலர்கள் மழை எனப் பொழியும் வானத்தில், மிக நெருங்க ஒலிக்கும் மங்கல ஒலிகள் ஓங்கி முழங்கப் பெரிய இவ்வுகில் உள்ள உயிர்கள் எல்லாம் மேன்மேலும் பெருகும் மகிழ்ச்சி மீதூர்ந்து விளங்கின.
குறிப்புரை:

இம் மண்ணுலகத்தில் சைவநெறி வாழ வளர்ந்து, முன் செய்த தவத்தின் வழியே தொடர்ந்து வந்த அன்பினால், நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானின் திருவடிகளையே பேணும் கருத்தை உடையவராகி, உள்ளத்தில் பொருந்திய அன்பு கொண்டவ ராய்த், தம் உரிமையான அரசாட்சியை மேற்கொள்ளாது, தெளிந்த கங்கை நீரைத் தரித்த சடையையுடைய இறைவரின் திருவஞ்சைக் களத்தில் திருத்தொண்டைச் செய்து வருவாராய்,
குறிப்புரை:

'உலகியல் வாழ்வும் அரசியல் வாழ்வும் நிலையில் லாதவை' என்று உணர்ந்து, வைகறையில் எழுந்து நீராடித் தூய்மை தரும் வெண்ணீற்றிலும் ஆடி, நிலைபெற்ற நந்தனவனத்திலே நீடும் திருப் பணிகள் பலவற்றையும் ஆற்றி, மலர்களையும் அரும்புகளையும் கொணர்ந்து மாலைகளைச் சாத்துவதற்கு மகிழ்ச்சியுடனே தொடுத்து, *** புலரி - விடியற்காலம். மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியராய் விளங்குதல் பற்றிப் 'புனித வெண்ணீற்றினும் மூழ்கி' என்றார்.
திருமுழுக்கிற்குரிய நீரும் கொண்டு வந்து, திரு வலகும் இட்டுத் திருமெழுக்கும் பொருந்தவரும் அன்புடன் இன்பம் பொருந்த மெழுகி, மேலும் உள்ள திருப்பணிகளையும் பெருமை விளங்கச் செய்து அமைத்துப் போற்றும் விருப்பத்தினால் ஒருமையுற வரும் ஒழுக்கத்தின் உணர்வு வரத் திருப்பாடல்களையும் பாடிப், பணிந்து, இவ்வாறு ஒழுகி வருகின்ற நாள்களில், *** இவ்விரு பாடல்களால் புறவழிபாடாற்றி வரும் பாங்கு விளங்கும்.
நீரால் நிறைந்த கடலைப்போன்ற அகழியும், நீண்ட பெரிய மலையைப் போன்ற கொடியையுடைய மதிலும் சூழ்ந்த சிறப்பு மிக்க அந்நகரத்தில், மேகத்தைவிட மிக்க கொடை நிழல் மேலும், வெண்கொற்றக் குடை நிழல் அதன் கீழுமாய் நிழற்றச் செங்கோல் பொறையன் என்ற பெயரையுடைய மாலை யணிந்த தோள்களை யுடைய சேர மன்னன், இவ்வுலகத்தை ஆள்கின்ற செயலை விடுத்துத் தவ ஒழுக்கத்தை மேற்கொண்டான். *** கடலும் மலையும் முறையே அகழிக்கும், மதிலுக்கும் உவமையாயின. சேர நாடு கடல்சூழ்ந்தும் மலைசூழ்ந்தும் விளங்க லின், அவையே அகழியும் மதிலுமாக விளங்கின என்றலும் ஒன்று. கொடைநிழல் மேலும், வெண்கொற்றக் குடையின் நிழல் கீழுமாய் நிழற்ற என்றது, கொடைத்திறனையும் ஆட்சித்திறனையும் விளக்கவாம். தரணி நீத்துத் தவம் சார்ந்தது, உலக ஆட்சியினும் உயிர் ஆட்சி சிறப்புடைமை பற்றியாம். உயிர்ஆட்சி பெறுதலாவது கட்டுநீங்கி வீடுபேறடைதலாம். இவ்வகையில் ஆட்பட்ட ஐயடிகள் காடவர் கோன் வரலாறும் ஈண்டு எண்ணத்தகும். 'மன்னுயிர்க் குறுவதே செய்து வைகினேன் இனி என்னுயிர்க்குறுவதும் செய்ய எண்ணினேன்' (கம்ப - அயோத். மந்திரம் 14) என்ற தசரதன் கூற்றும் காண்க. செங்கோல் பொறையன் - நம் சேர மன்னருக்கு முன் ஆட்சி புரிந்த அரசன். பெருஞ்சேரலிரும்பொறை இளஞ்சேரலிரும்பொறை என அம்மரபினர் பெயர் விளங்குதலும் காண்க. இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
வழிவழியாகத் தொடர்ந்து வந்த மன்னர் மரபில் ஆட்சி செய்பவனான மன்னன், முன் சொன்ன வண்ணம் தவ வனத்தில் சாரும் தவநெறியை அடைந்த பின்னர், சிந்தை செய்யும் கூர்த்த அறிவுடையவராய்த் தாய உரிமை அறிவதற்கு உரிய நூல் களை ஆராய்ந்த அமைச்சர்கள், சில நாள்கள் ஆராய்ந்து தெளிந்த நிலையில், முந்தை மரபினால் சிவபெருமானுக்குத் தொண்டு செய்பவரான பெருமாக்கோதையாரிடம் அம்முதன்மை நின்றதாகப் பிறைசூடிய முடியையுடைய இறைவரின் திருவஞ்சைக்களத்தில் பணிசெய்துவரும் அவரிடம் சென்று அடைந்தனர். *** மதிநூல் தேர் அமைச்சர் - மதிநுட்பம் நூலோடுடைய அமைச்சர்கள். சோழ பாண்டியர்களின் ஆட்சி வழி, மகன் அவன் மகன் என வரும் முறைமையதாம். சேரரின் ஆட்சி வழி, ஆளும் அரசன், அவன் தங்கை மகன் என்ற முறையில் (மருமக்கள் தாயம்) வருவதாம். இந்நிலையில் இதுகாறும் ஆண்டு வந்த செங்கோற் பொறையனாரின் நேரிடையான தங்கையின் திருமகனாராக இவர் இருந்திருப்பின், அந்நாட்டு மரபுவழி அமைச்சர்கள் இத்துணை ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டுவதில்லை. நம் மாக்கோதை யாரின் தாயார் செங்கோற் பொறையனாருக்கு ஒன்றுவிட்ட தங்கை போன்ற சிறிது சேய்மைப் பட்ட நிலையிலிருக்க, இவ்வாய்வு தேவைப் பட்டது போலும். இது மேலும் எண்ணத்தக்கதாம்.
பொய்மை தவிர்ந்த மெய்ம்மையுடைய அவ் வமைச்சர்கள் திருவஞ்சைக்களத்தைச் சேர்ந்து, பெருமாக்கோதை யார் திருமுன்பு வணங்கிப், 'பெரிய குளிர்ந்த சாரலையுடைய மலை நாட்டின் மன்னர் மரபு, வழிவழிவரும் முறைமையினால், உரிமைச் செங்கோல் அரசு செலுத்துதற்குக் குற்றம் இல்லாத தூய மரபால் தங்களிடம் வந்தது!' என்று கூறிய அளவில், *** புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனில், 'பொய்ம்மையும் வாய்மை யிடத்த' (குறள், 292) என்பர். அவ்வகையான் அமைந்த தன்றி, இவர் கூறும் வாய்மை, வாய்மையாகவே அமைந்தது என்பார் 'பொய்தீர் வாய்மை' என்றார்.
'மேன்மேலும் இன்பம் பெருகுவதற்கு ஏதுவாகச் செய்துவரும் திருத்தொண்டிற்கு இடையூறாக இவ்வமைச்சர்கள் உரைத்தனர்; சிவபெருமானிடத்துச் செலுத்திவரும் அன்பினின்றும் வழுவாத நிலைமையினால் அரசு செய்வதற்குத் திருவருள் கிட்டு மாயின், எலும்பும் பாம்பும் அணிந்த இறைவரைக் காலம் பார்த்து அவரின் திருவுள்ளத்தை அறிவேன்!' என்று எண்ணிக் கோயிலுள் புகுந்து, திருமுன்பு வணங்கி, விண்ணப்பித்துக் கொண்டார். அது பொழுது இறைவரின் திருவருளினால், *** இடைபெற்று - காலம் அறிந்து : 'இடைதெரிந்து நன் குணர்ந்து சொல்லுக' (குறள்,712) எனவரும் திருக்குறளும் காண்க. 'இடைதெரிந்து அருளல் வேண்டும்' என ஆசிரியர் முன்மொழிந்துள் ளமையும் நினைவு கூரத்தகும். இறைவன் திருவுள்ளம் அறிந்து, ஏற்பன் என்றது, அவர்தம் பத்திமை மீதூர்வையும், கடன் இது என அறிந்த கடமையுணர்வையும் காட்டுகின்றன.
பொருந்தும் உரிமையுடைய ஆட்சியை மேற்கொண்டவாறே, தாம் விரும்பியவாறு அன்பு மீதூரும் சிவபெருமானின் வழிபாடும், அஃறிணை, உயர்திணை என்ற இரு வகையுயிர்களும் கூறுவனவற்றையெல்லாம் அறியும் உணர்வும், அளவில்லாத வெற்றி யும் ஒப்பில்லாத தடையற்ற ஈகையும், படை ஊர்தி முதலான நாடு காவல் செய்யும் மன்னர்க்கு உரிய சூழல்களும் ஆகிய இவையெல்லாம் தம்மைச் சேர்ந்து பொருந்தும்படி அருள்பெற்றார். *** அரசனாவான் எவ்வுயிர்களையும் புரந்து வரும் கடப்பாடுடையன். ஆதலின் அவனுக்கு உயர்திணை அஃறிணை என்ற பாகுபாடின்றி அனைத்துயிர்களையும் காத்தற்கு அவ்வவற்றின் கருத் தறிதல் இன்றியமையாதாதலின், இறைவன் அக்கருத்தறியும் உணர் வையும் தந்தருளினான். இதனால் கழறிற்றறிவார் எனும் பெயரும் பெற்றார்.
இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

இத்தகையவற்றைப் பெறலான இறையருளைக் கைக்கொண்டு, கும்பிட்டு வணங்கி, கோயிலினின்றும் புறப்பட்டு வெளியே வந்து, ஆட்சி செய்தல் சிவத்தொண்டுக்கு இடையூறு செய் வதே ஆயினும், இறைவரின் திருவருள் பெற்றதால் மேன்மையுடைய அரச முடியைத் தாங்குதற்கு விண்ணப்பித்து நின்ற அமைச்சர்களுக்குத் தம் இசைவைக் கூறலும், பெருமையுடைய அந்த அமைச்சர்கள், நாயனாரின் திருவடியில் வணங்கி, அதற்கு வேண்டிய செயல்களை மேற்கொள்ள மகிழ்வுடன் சென்றனர்.
குறிப்புரை:

முடிசூட்டுதற்குரிய நாளில் ஓரையின் நலமும் பொருந்த, உரிய துணைப் பொருள்களையெல்லாம் சிறப்புடன் அமையுமாறு, அதற்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் விளங்க அமைத்து, உரிய நன்மை மிகுந்த செயற்பாடுகளைச் (சடங்குகளை) செய்து, உயர்திணை அஃறிணை ஆகிய எல்லா உயிர்களும் மகிழ் வதற்குக் காரணமான அறத்தின் தன்மையை அறிந்து, உலகை ஆளும் கழறிற்றறிவார், இம்மை வீடுபேறு எனும் ஈருலகிற்கும் பொருந்திய ஒரே முடியை அணிந்து கொண்டார். *** ஒருமைமுடி - உலகியலுணர்வோடு அருளியல் உணர் வும் ஒருங்கு கொண்டு ஆட்சிசெய்யும்.
இறைவரின் திருக்கோயிலை வலம் வந்து நிலமுற வணங்கி எழுந்து, மத்தகத்தையுடைய யானைமேல், வெண் கொற்றக் குடையையும் சாமரையையும் விரும்புதற்குரிய உரிமையுடைய ஏவலர்கள் தாங்கி ஏற்றவாறு ஏவல் செய்துவரத், தம் நகரத்தை வலம் வருபவரான நாயனார், தோளில் உவர்மண் மூட்டையைச் சுமந்து கொண்டு, ஒரு வண்ணான் வருவதைப் பார்த்தார். *** நம்பும் - விரும்புதற்குரிய; 'நம்பும் மேவும் நசையா கும்மே'(தொல். உரி. 31) என்பது தொல்காப்பியம்.
மழையால் உவர்மண் கரைந்து ஊறியதால் அவன் மேனி வெளுத்து இருந்த வடிவத்தால் 'மானைக் கையில் உடைய சிவபெருமானின் அடியவர் திருக்கோலம் இது' என்னும் உணர்ச்சி பெற்று, அணிகளில் சிறந்த பட்டத்தை அணிந்த யானையின் கழுத்தி னின்றும் இறங்கி, ஆசை மீதூர்ந்த காதலுடன் விரைவாய்ச் சென்று, அவ்வண்ணானைக் கைகூப்பி வணங்கினார்.
குறிப்புரை:

சேரர் பெருமான் கைதொழக் கண்டு, அவ்வண் ணான் உள்ளம் கலங்கி, அவர் முன் தானும் வணங்கித் 'தாங்கள் என்னை யாவர் என்று எண்ணி இவ்வாறு செய்தருளியது? அடியேன் தங்களின் அடிமைத்தொண்டு செய்யும் பணியாளனான வண்ணான் ஆவேன்!' என்று சொல்ல, சேரர் பெருமானாகிய நாயனாரும், 'அடியேன் அடிச் சேரன்' என்று சொல்லித் திருநீற்றின் பொலிவுடைய இனிய அன்பிற்கிடமான திருவேடத்தினை அடியேனுக்கு நினைவூட் டினீர், ஆதலால் வருந்தாது செல்வீராக, என்று மொழிந்தருளினார்.
குறிப்புரை:

மன்னரின் திருத்தொண்டைப் பார்த்து அறிவுடைய அமைச்சர் எல்லாரும் தலைமீது கைகூப்பி வணங்கிப் போற்ற, சினம் கொள்ளக்கூடிய பெரிய யானையின் மேல் ஏறி, ஒளிவீசும் மணிக ளால் ஆன கொடிகள் கட்டிய மாளிகைகள் நிறைந்த தெருக்களை யுடைய பழைய நகரத்தை வலமாக வந்து, புனையப்பட்ட மங்கலம் விளங்க, பொன் பூண்ட மணிகளையுடைய மாளிகையின் வாயிலில் புகுந்தார். *** மூதூர் - கொடுங்கோளூர்.
தாம் யானையின் மேலிருந்து இறங்கி, விளங்கும் மணிகளையுடைய மண்டபத்தில், மேன்மை மிகுந்த அரியணையின் மீது அமர்ந்தருளி, விளங்கும் வெண்கொற்றக் குடை நிழல் செய்ய, குவளை போன்ற விழிகளையுடைய நங்கையர் சாமரை வீச, மலர்கள் பலவும் தூவிப் பெருமையுடைய மன்னர்கள் போற்ற, மன்னர்க்கு மன்னரான நாயனார் வீற்றிருந்தார்.
குறிப்புரை:

உலகைக் காக்கின்ற கொடையையுடைய சோழ மன்னரும், உரிமையுடைய பாண்டிய மன்னரும் என்ற இவருடனே கூட நிலவும் மூவேந்தர்களாகி, நீதியை மனுநூல் வழியே நடை பெறுமாறு செய்து, அளவில்லாத மன்னர்கள் திறை கொணர்ந்து செலுத்த, உள்ளும் புறமும் பகையை அறுத்து நீக்கி, விளங்கும் திரு நீற்று நெறி வளரவும், மறைகள் வளரவும் மண்ணுலகத்தைக் காப்பவ ரானார். *** முக்கோக்கள் - மூவேந்தர்: 'வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு' (தொல். செய். 78) என்பர் தொல்காப்பியரும். அகப்பகை - உட்பகை: தம்மால் தம் பரிசனங்களால், கள்வரால், உயிர்கள் தம்மால் வருவது. புறப்பகை - எதிர்ந்த மன்னர்களால் வருவது. இனி அகப்பகை காமம், வெகுளி, மயக்கம் முதலியன என் றும், புறப்பகை அறிவுக் கருவிகளானும், தொழிற் கருவிகளானும் வரு வன என்றும் கூறுவாரும் உளர். இவற்றுள், முன்னையவை தம்மளவி லும், பின்னையவை நாட்டளவிலுமாகக் காக்கத் தக்கனவேயாம்.
முக்கோக்கள் - மூவேந்தர்: 'வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு' (தொல். செய். 78) என்பர் தொல்காப்பியரும். அகப்பகை - உட்பகை: தம்மால் தம் பரிசனங்களால், கள்வரால், உயிர்கள் தம்மால் வருவது. புறப்பகை - எதிர்ந்த மன்னர்களால் வருவது. இனி அகப்பகை காமம், வெகுளி, மயக்கம் முதலியன என் றும், புறப்பகை அறிவுக் கருவிகளானும், தொழிற் கருவிகளானும் வரு வன என்றும் கூறுவாரும் உளர். இவற்றுள், முன்னையவை தம்மளவி லும், பின்னையவை நாட்டளவிலுமாகக் காக்கத் தக்கனவேயாம். *** தமிழக மூவேந்தர்தம் ஆட்சி மிகத் தொன்மையானது. இதனை 'வழங்குவதுஉள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று' (குறள், 955) எனவரும் குறட் பாவிற்குப் பரிமேலழகர், தொன்று தொட்டு வருதல், சேர சோழ பாண்டியர் என் றாற் போலப் படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வருதல் என உரைக்கும் உரையாலும் அறியலாம்.
நறுமணம் மிக்க திருமுழுக்கிற்கான நீரும், திருப்பள்ளித் தாமமும், சாந்தமும், அழகிய நறும் புகையும், ஒளி விளக்குகளும் முதலான பொருள்களும், திருவமுதும் அமைத்து, இறைவருக்கு வழிபாடாற்றும் வகைமையில் குன்றாது பூசனையாற்றி வர, நாளும் அவ்வழிபாட்டை விரும்பி எழுந்தருளி ஏற்றுவரும் பெருங் கூத்தரான இறைவரும், அழகான தம் திருவடிச் சிலம்பின் ஒலியை, அந்நாயனார் கேட்குமாறு அளித்தருளினார். *** சிவயோகிகளுக்குத் திருவருளுணர்வோடு ஒன்றி இருக்கும் நிலையில் திருச்சிலம்போசை கேட்டல் இயல்பேயாகும்.
'திருச்சிலம் போசை ஒலிவழியே சென்று
நிருத்தனைக் கும்பிடென்று உந்தீபற
நேர்பட அங்கே நின்று உந்தீபற'

இறைவரின் திருவடிக்கண் செய்யும் வழிபாட்டால் நாள்தோறும் இன்பம் அடைந்து எழுந்தருளி இருப்பவரான நாய னார், இவ்வுலகத்தில் தம்மிடம் வந்து இரந்தவர்களுக்கும், வறியவர் களுக்கும், எல்லோருக்கும் வேண்டியவாறே கொடுக்கின்ற தன்மை யினால் செம்பொன்னை மழைபோல் பொழிந்து, திருந்தும் வெற்றியு டன் கூடித் தேவர் போற்றத் தம் இறைவர்க்குரிய வேள்விகள் பலவற் றையும் ஆற்றி வந்தார். *** 'கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவார்' என வரும் தொகைநூற் கூற்றை நினைவு கூர்ந்தவாறு அருளிய பாங்கு இதுவாம் 'இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்' (தி. 4 ப. 38 பா. 10), 'வேள்வி நற்பயன் வீழ்புனலாவது' (தி. 12 பு. 28 பா. 822) எனவரும் திருமுறைக் கூற்றுக்களை நினைவு கூருமாறு, இவர்தம் ஆட்சியமைந்திருப்பதைக் காணலாம். இவ்வாற்றான் கழறிற்றறிவார் தாமும் பிற உயிர்களும் பயன்பட வாழ்ந்தமை புலனாகும்.
இவ்வாறு இவர் ஒழுகிவரும் நாள்களில், அழகு வாய்ந்த பாண்டிய நாட்டில் நிலைபெற்ற மதுரையில் திருவாலவாய்த் கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவரான சிவபெருமான், மேன் மேலும் மிகுகின்ற அன்போடு இசைக்கின்ற இசைப் பாட்டுகளால் போற்றிவரும் பாணரான பத்திரனாருக்கு, நன்மை பொருந்திய பெருஞ்செல்வம் வழங்கத் திருவுள்ளம் பற்றுவார்,
குறிப்புரை:

இரவில் அப் பாணபத்திரனாரின் கனவில் எழுந்த ருளி, 'நம்மை எப்பொழுதும் போற்றிவரும் சேர மானுக்கு, பசுமை யான பொன்னும் காசும் பட்டாடையும் ஒளிக்கதிரையுடைய மணிகள் பதித்த அணிகளும் இன்னும் வேண்டிய எல்லாவற்றையும், குறைவில் லாமல் உனக்குத் தருமாறு, நாம் ஓலையைக் கொடுக் கின்றோம், காலம் தாழ்க்காமல் சென்று வருக!' என்று,
குறிப்புரை:

ஒலிக்கும் கழலை அணிந்த சேரமானுக்கு, அருள் செய்த பெருமையால், 'ஒப்பில்லாத செல்வத்துக்கு ஏற்றவாறு பெருஞ் செல்வத்தைக் கொடுக்க!' என்று அவன் காணும்படி, 'மதிமலி புரிைu2970?' எனத் தொடங்கும் வாய்மை பொருந்திய திருப்பாடலை ஒளி விரிந்த ஏட்டில் எழுதி அவ்வோலையை இறைவர் தந்தருளினார். *** இத்தொடக்கமுடைய திருப்பாடல் திருமுகப் பாசுரம் என அழைக்கப் பெறும். பதினொன்றாம் திருமுறையில் முதற் பதிகமாக வைத்துப் போற்றப் பெறுவதாகும்.
மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்

சங்கப் புலவரின் தலைவரான சோமசுந்தரக் கடவுள் அளித்த திருமுகத்தைத் தலைமீது தாங்கிக் கொண்டு, பாணபத்திரர், அங்கிருந்து அப்பொழுதே புறப்பட்டுச் சென்று, மலை நாட்டை அடைந்து, உயர்ந்த மதிலையுடைய கொடுங்கோளூரில் புகுந்து, நெருங்கிய கொடிகள் மேகங்களைத் தொடுமாறு உயர்ந்துள்ள அரண்மனை முன்வந்து, மன்னருக்கு அங்கிருந்த ஏவலர்வழி தமது வருகையை அறிவித்துக் கொண்டார்.
குறிப்புரை:

அவரின் வருகையைக் கேட்ட அளவில், கைகளைத் தலைமேல் கூப்பி, மீதூர்ந்த அன்பினால், கண்களினின்றும் நீர் வழிந்து பெருக, எழுந்து நடுங்கி, உருக்கி ஓடவிட்ட பொன்மாளிகையின் புறத்தே போந்து, உருகும் உள்ளத்துடன், பாட்டின் தவைரான பாண பத்திரரின் திருவடிகளைப் பலமுறையும் வணங்குபவர்,
குறிப்புரை:

'அடியேனையும் ஒரு பொருளாகக் கொண்டு திருமுகத்தைக் கொண்டு இங்கு அணைந்தது என்னே' என்று சொல்ல, அப் பாணபத்திரரும் விடைக் கொடியையுடைய சிவபெருமானின் 'திருமுகத்தை' அவரது கையில் தந்து வணங்கவும், மன்னரும் அத் திருமுகத்தைப் பெற்றுத், தம் முடிமீது கொண்டு, ஆனந்தக் கூத்தாடிச் சொல் தடுமாறிக், கண்களினின்றும் பொழியும் ஆனந்தக் கண்ணீர் பெருகித் திருநீறு பூசிய மார்பில் வார்ந்து பரவி விழ, நிலத்தில் பல முறையும் வீழ்ந்து எழுந்து வணங்கினார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
அன்பினால் போற்றி, திருமுகத்தைப் பலமுறையும் வணங்கி, அதன் சுருளை நீக்கி எடுப்பதற்குரிய வகையினால் எடுத்து, விரித்துப் படித்து, இறைவரின் திருவருளை வழுத்தி, ஒளிவீசும் பொன் மாளிகையுள் புகுந்து, தம் உரிமைச் சுற்றத்தார் எல்லோரையும் விரை வில் கொண்டு சார்ந்து நாடு காக்கும் அமைச்சருக்கு அருளிச் செய் வாராய்,
குறிப்புரை:

'நம் மாளிகையினுள் நன்மை யுடைய செல்வக் குவியல்களாய் மேன்மேல் வளர்ந்து நிறைந்த பலவேறு வகைகளில் விளங்கிய களஞ்சியத்துள் ஒன்றும் எஞ்சாதவாறு எடுத்துத் தக்கவாறு அமைத்துக் கட்டி, தக்க பணியாட்களின் வழி எடுத்துக் கொண்டு வாருங்கள்!' என்று,
குறிப்புரை:

சேரர் பெருமானார் ஆணையிட, திருந்திய அறிவும் நூலறிவும் கொண்ட அமைச்சர்கள், அழகிய மாளிகையில் உள்ள செல்வங்கள் எல்லாவற்றாலும் நிறைந்த பெருஞ்சிறப்புடைய அள வில்லாத நிதியங்களை எல்லாம் பாதுகாப்பாகக் கட்டி, தக்க ஆள்கள்வழி, நிலம் நெருங்க ஏற்றிக்கொண்டு தம் மன்னரிடம் வந்து வணங்கினர். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
வெவ்வேறு வகையாய்ப் பெருகிய செல்வப் பரப்பையெல்லாம் பாணபத்திரருக்கு நிரல்படக் காட்டி, 'இவற்றையும், மற்றும் வன்மை பொருந்திய கொடிய யானைகள் குதிரைகள் முதலான உயிர்ச் செல்வங்களையும், அடியேன் காவல் செய்யும் ஆட்சியினை யும் கொள்ளுங்கள்!' என்று சேரர் பெருமானார் உரைத்தார்.
குறிப்புரை:

பாணபத்திரரும், பசுமையான பொன்முடி சூடிய சேரமானார் முன் சொன்னவாறு தாம் காணும்படி காட்டித் தந்த நிதிகள் எல்லாவற்றையும் பார்த்து மகிழ்ந்து, வியந்து, 'எனக்குப் பேணுதற்கு வேண்டியவற்றை மட்டும் யான் கைக்கொள்ள, அரசாட்சியும் அதற்குரிய அரசுறுப்புக்களையும் நீங்களே கைக்கொள்ளுங்கள், இஃது இறைவரின் ஆணை!' எனக் கூறி வணங்க,
குறிப்புரை:

வலிமைமிக்க மன்னரான சேரர், இறைவரின் ஆணையை மறுப்பதற்கு அஞ்சி, அதற்கு இசைந்தனர், நிறைவான செல்வப் பெருக்கங்களையெல்லாம் நிலம் நெளியும்படி உடனே கொண்டு, துளிக்கின்ற மும்மதங்களையுடைய யானை, குதிரை உள்ளிட்டவற்றுள்ளும் வேண்டுவனவற்றைக் கைக்கொண்டு, பாணபத்திரர் தாம் ஒரு வெண்மையான பிறை போன்ற கொம்பை யுடைய யானையின் மீது ஏறிச் சென்றார். *** இகல் - வலிமை : படை, குடி முதலிய அறுவகை யானும், அருள் வயத்தானும் பெற்ற வலிமை. நிலம் நெளிய - பொருள் மிகுதியைத் தாங்கற் கருமையின் நிலமும் நெளிய: (சிலம்பு - புகார்க் மங்கல. 36 -39) மண் தேய்த்த புகழினான் என்புழிப்போல. சேரர் தம் மளவில் அனைத்துப் பொருள்களைக் கொடுப்பினும், பாணபத்திரர் தம்மளவிற்கு வேண்டுவனவற்றையே கொண்டது, இருவர்தம் உள்ளப் பண்பை காட்டுகின்றது.
அடிமைத் திறத்தின் பண்புமீதூர ஒழுகும் சேரமான் பெருமாளும், பாணபத்திரர் பின்னே மார்பாரப் பொழிகண்ணீர் மழை வாரும் திருவடிவுடன் கைகளைக் கூப்பித் தொழுத வண்ணமே வர, நட்பில் சிறந்த அவரும், நகரின் புறம் போதர விடை பெற்றுக் கொண்டு, திருந்தும் இசையுடைய பாணபத்திரர், திண்மையான பொன்மதில் சூழ்ந்த மதுரை நகரத்தின் உள்ளே புகுந்தார்.
குறிப்புரை:

சேரர் குலத்தை விளங்கச் செய்யும் மன்னரான நாயனாரும் திரும்பச் சென்று, வளைந்த இளைய பிறையான கண் ணியை முடித்த சிவபெருமான், அடியவர்களை ஆட்கொண்டு அரு ளும் திறத்தின் அருட்பெருமையை நினைந்து நினைந்து பன்முறையும் வணங்கிப், போற்றி, மேன்மையுடன் விளங்கும் தம் மாளிகையின் அரசவையில் வீற்றிருந்தார்.
குறிப்புரை:

அளவற்ற பெருமையையுடைய பிறப்பு வகைகள் அனைத்திலும் தோன்றிய உயிர்கள் யாவும் பேசுவனவற்றையெல் லாம் அறிந்து, அவற்றின் உள்ளத்தில் உள்ள துன்பங்களை முழுமை யாக நீக்கிக், களவு கொலை முதலான தீமைகளை விலக்கி கழறிற்றறி வாரான இப்பேரரசர், சோழ மன்னருடன் பாண்டிய மன்னரும் கூடி மகிழ்கின்ற வகையில் மனமியைந்து மகிழ்ந்து வாழும் நாள்களில், *** பிறப்பு வகைகள் அனைத்தின் கருத்தையும் அறியும் அரிய வாய்ப்பு இவருக்குத் திருவருளால் கிடைத்ததாகும். ஆதலின் ஓரறிவுயிர்களும் உவப்ப ஆட்சி செய்யும் பேறு இவருக்கு அமைவ தாயிற்று. மன்னுயிர் ஓம்பி அருளாளும் ஆட்சியே ஆட்சியாம். மூவேந்தர்களும் தம்முள் பகைமையின்றி வாழ்ந்து வருமாற்றையும் கூறினார், அந்நிலை அரிதாதல் நோக்கி. 'இன்றே போல்க நும் புணர்ச்சி' என்றதும் இது பற்றியேயாம்.
இவ்வருளாட்சியோ, வானின்றிழிந்த கங்கையாற் றைத் தாங்கிய சடையையுடைய இறைவரின் வழிபாடான தூய நல்ல சிறந்த பூசனையான திருத்தொண்டையும் நாளும் செய்து வருபவரான அந்நாயனாருக்கு ஒருநாள், தேன் சிந்துமாறு மலர்ந்த கொன்றை மாலையைச் சூடிய சிவபெருமானின் ஆடற் சிலம்பின் ஒலியானது, பெருமையுடைய பூசையின் முடிவில் முன்போன்று கேளாது ஒழிய, மனம் கலங்கி,
குறிப்புரை:

: பூசையை விரைந்து முடித்து, 'அடியேன் என்ன பிழை செய்தேனோ?' என்று அழுது, விருப்புற்றுத் தாங்கும் இவ் வுடம்பினால் இனி அடையும் இன்பம் வேறு யாதுளது எனத் துணிந்து, ஒளியுடன் விளங்கும் உடைவாளை எடுத்துத் தம் மார்பிலே பாய்ச்ச முனைந்த போது இறைவர் விரைவுடன் திருச்சிலம்பின் ஒலியை மிகுதியாக ஒலிக்குமாறு செய்தார். *** ஊன் அடைந்த உடம்பின் பிறவியே, தான் அடைந்த உறுதியைச் சார்தல் வேண்டும். அந்நிலைவாயாதாயின் உடம்பின் பயன் தான் யாது? ஒன்றுமில்லை. இக்கருத்தால் தம் உடலைத் துறக்கத் துணிந்தார் இவ்வரிய பேரரசர். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
திருக்கூத்தின் சிலம்பு ஒலியைக் கேட்டு, உடைவாளை அகற்றி, அழகிய கைம்மலர்களைச் சேரத் தலைமீது குவித்து நிலத்தில் விழுந்து, தொழுது, எழுந்து, பரவிப் போற்றி, 'நெடிய திருமாலும் நான்முகனும் அரிய மறைகளும் முன்பு தேடுதற்கு அரிய பெருமானே! முன்னமேயே அடியேற்குத் திருவருள் செய்யாது ஒழிந்த காரணம் யாது?' என வினவினார். *** காரணம் வினவியது, தம்பிழையறிந்து அதனை நீக்கிக் கொள்ளவாம்.
இங்ஙனம் சேரமான் பெருமாள் வினவ, இறைவர் தாம் நேரே தம் வடிவைக் காணக் காட்டியருளாது, வானொலி வழியே, 'தில்லையில், நம் ஆனந்தக் கூத்தை வன்றொண்டனாய சுந்தரன் வணங்கி, நம்மிடம் ஒன்றிய உணர்வால், நம்மைப் போற்றி செய்து வணங்கி, உரை சேரும் பதிகத்தைப் பாடிட, அதனை நின்று கேட்டதால், இங்கு வருதற்குக் காலம் தாழ்த்தினோம்!' என்று, இவ் வருள் வழி அவரை இவருக்கு நினைவூட்டுவராய்க் கூறி அருள் செய்தார். *** உயிர்கள் தாம் தாமும் உள்ளவிடத்தேயுள்ள நிகழ்ச்சிக ளையே அறியத்தக்கன. இறைவனோ அன்ன தன்மையினல்லன். யாண்டும் நீக்கமற நிற்பவன். எனவே ஒரு காலத்திலேயே அவ்வவ் விடத்தும் உள்ள உயிர்களை உய்யக் கொள்வன். அன்னோனுக்கு ஆரூரர்தம் பாடலைக் கேட்டு மகிழும் பொழுதே, கழறிற்றறிவாருக்கும் கழற்சிலம்பொலியைக் கேட்பிக்க இயலும். அங்ஙனமாகவும் அப் பாடலைக் கேட்டு மகிழ்ந்த வண்ணம் இருந்தமையின், கழற்சிலம் பொலி கேட்பிக்கக் காலம் தாழ்த்தது என்றது, கழறிற்றறிவாருக்கு ஆரூரரை நினைவுகூரச் செய்து, அதன்வழி அவ்விருவர்தம் நட்பும் சால்பும் பெருகவாம் எனத் திருவருள் திறத்திற்குக் காரணம் கூறியது, ஆசிரியர் சேக்கிழார் தாம்பெற்ற அருள் நலத்தாலேயேயாம்.
'இறைவர் அடியார்க்கு அருளும் திறம் இருந்தவா றென்னே!' என்று போற்றிப், 'பொன் போன்ற சடையையுடைய பெரு மான் கூத்தியற்றுகின்ற பெரும்பற்றப் புலியூருக்குச் சென்று பொன்னம் பலத்தை வணங்கித், தமக்கு எவரும் ஒப்பில்லாதவரான ஆரூரரையும் கண்டு வணங்குவேன்!' என்ற விருப்பம் கொண்டு, நல்ல நீர்நாடு எனப்படும் சோழ நாட்டிற்கு எழுந்தருளப் பெருமையுடைய சேர அரசர் திருவுளம் கொண்டார்.
குறிப்புரை:

பொன்முடியைச் சூடிய சேரமான்பெருமாள் நாயனார், தத்தம் கடமையைப் பெரிதும் போற்றிச் செய்துவரும் அமைச்சர்களுக்குத் தம் விருப்பத்தைச் சொல்லி, நன்னாளில் செலவு மேற்கொள்ள வேண்டும் என, ஒளியுடைய கூர்மையான வேலை ஏந்திய வீரர்களும், வெற்றியுடைய வில் வீரர்களும், மற்றும் அந்நாட் டில் உள்ளவர்களும் நெருங்க வஞ்சியின் அகநகரத்திலே கூடினர். *** வஞ்சி - கொடுங்கோளூர். வஞ்சியை இந்நகராக ஆசிரி யர் கருதுகிறார். கருவூராகக் கொண்டு ஆய்வு செய்வாருமுளர்.
நாளும் ஓரையும் தமக்கு ஏற்பக் கொண்டு செல்லும் நன்னாளில், திருவஞ்சைக் களத்தில் வீற்றிருக்கின்ற மணங் கமழும் கொன்றை மலர்களைச் சூடிய பெருமானாரை வலம் கொண்டு போற்றி, நெற்றிப் பட்டத்தை அணிந்த யானையின் பிடரியில் ஏறி, குளிர்ந்த சந்திரனைத் தீண்டும் கொடிகளையுடைய மாளிகைகள் நிறைந்த பழம்பெரும் நகரான கொடுங்கோளூரைக் சேரமான் கடந்து சென்றார்.
குறிப்புரை:

யானைகளின் அணிகள் பரவி வழியெங்கும் செல் வன, பெரிய மலைநாட்டில் மலிந்த பொருளாகிய மலைகள் தம் மன்னருடனே செல்வனபோல் விளங்கின. படைவீரர்கள் இரு மருங் கும் பரந்து செல்லும் நிலை, அந்நாட்டில் அம்மலைகளைச் சூழ்ந்த காடுகள் எல்லாம் உடன் செல்வன போன்ற காட்சியை அளித்தது. *** யானைகள் மலை எனக் காட்சியளித்தது. படைவீரர்கள் காடெனக் காட்சியளித்தனர். உயர்வும் அகலமும் குறித்தவாறு. அடைய - முழுமையாக. ஆல் - அசை.
குதிரையணிகள் கரையில் சேரும் அலை என அசைவுடன் செல்பவை, ஒலிக்கும் படையான கடலின் அலைகள் மேன் மேல் உயர்ந்து தாக்குவனபோல் பொருந்திப் பரந்து சென்றன. வானளாவிய மேடும் பள்ளமும் ஒன்றாய் அங்ஙனம் நிரல்படப் பரவிய பெரும்படை பூமி நெளியுமாறு சென்றது. *** அலைகள் அசைவுடனும் மேன்மேலும் பெருகியும் வரும் இயல்பின. குதிரைத் திரள்களின் செலவும் அன்னதாகலின் அவற்றின் செலவிற்கு உவமையாயின. மிசை - மேடு; அவல் - பள்ளம். 'அவலா கொன்றோ மிசையா கொன்றோ'(புறம் -187) என வருவதும் காண்க. இக்குதிரைச் செலவு, அடர்ந்தும் தொடர்ந்தும் இருத்தலின் மண்ணகம் நெளிவதாயிற்று. மேடு பள்ளமும் தெரியா வாயின. 'அவல என்னாள் அவலித்து இழிதலின், மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின்' எனவரும் சிலம்பும் காண்க. ஆயோகம் - கரை. நேமி - உலகு.
அம்மலை நாட்டின் எல்லையைக் கடந்த அளவில், தம் அமைச்சர்களுக் கெல்லாம் விடை தந்தருளி, ஒளியுடைய மணி களை அணிந்த சேரர்பெருமான் தம் வழிச்செலவிற்கு உதவும் பணி யாளர்களை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு, அச்சமூட்டும் கூர்மையான வேல் ஏந்திய மறவர்கள் வாழும் கொங்கு நாட்டைக் கடந்து சென்று, விண்ணவரும் வந்து படிந்து ஆடும் காவிரியின் வளத்தையுடைய சோழநாட்டிடைச் செல்வாராய், *** கொங்கு நாடு - இக்காலத்தே கோயம்புத்தூர் மாவட்டம், சேலம், ஈரோடு மாவட்டங்களில் சிற்சில பகுதிகளும் சேர்ந்து விளங்கும் பகுதி. கொங்கர் என அழைக்கப்பெறும் சிற்றரசர்களின் மரபினர் ஆண்டுவந்தமையின் இப்பகுதி கொங்கு நாடு எனப் பெயர் பெறுவதாயிற்று. இவர்கள் சோழ, பாண்டிய, சேரப் பேரரசர்களுக்கு ஓரொருகால் அடங்கியும் ஆட்சிபுரிந்தனர்; தனித்தும் ஆட்சி புரிந் தனர். இந்நாட்டில் வாழ்வோர் வலிமை மிகுதியால் வன்கண்மை புரியும் இயல்பினராயிருந்தனர். வழிச் செல்வோரைத் துன்புறுத்திப் பொருள் கொண்டனர். 'கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவ லாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம் ' (தி. 7 ப. 49 பா. 1), 'கொங்கே புகினும் கூறை கொண்டு அலைப்பார் இலை' (தி. 7 ப. 92-3) எனவரும் நம்பிகள் திருவாக்காலும் இவ்வுண்மை அறியப்படும். ஆனால் இந்நிலை இது பொழுது யாண்டும் நீக்கமற நிற்பதும், கொங்குப் பகுதியில் உள்ளார் பலரும் அன்பும் பண்பும் உடையராய்த் திருவருள் நாட்டம் உடையராய்த் திகழ்வதும் இக்கால உண்மையாகும்.
தாம் செல்லும் இடத்திலெல்லாம் சிவனடியார்கள் எதிர்கொண்டு வரவேற்க, குன்றுகளையும் காடுகளையும் தத்தம் இடமாகக் கொண்டு ஆளுகின்ற குறுநில மன்னர்கள் தத்தம் இடங் களில் அவருக்கு வேண்டும் பொருள்களைத் தந்துதவப் பருக்கைகள் நெருங்கிய பாலை நிலங்களும் காட்டாறுகளும் துன்பம் தரும் கற்கள் பொருந்திய வழிகளும் என்னும் இவை பலவற்றையும் கடந்து சென்று, வெற்றி பொருந்திய விடையையுடைய இறைவர் வெளிப்பட எழுந்த ருளிய இடங்கள் பலவற்றையும் சென்று வணங்கிச் செல்வாராய், *** துன்று முரம்பு - செறிந்த பாலை. துறுகல் சுரம் பரற்கற்கள் செறிந்த பாலை நிலம்.
ஒப்பில்லாத காவிரி ஆற்றின் தென்கரையில் வந்து, வடகரையில் ஏறித், தூய நீர் பொருந்திய அந்நீரில் நீராடி மகிழ்ந்து, நீங்காத அன்பின் வழிவந்த அந்நாயனார், பெரும்பற்றப் புலியூரில் பொன்னம்பலத்தில் ஆடும் திருக்கூத்தைப் போற்றும் பொருட்டு, உருகும் உள்ளத்துடன் சென்றார். கு-ரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
குறிப்புரை:

வந்து தில்லைமூதூரின் எல்லையைச் சேர்ந்து, வணங்கி, மகிழ்ச்சிமிக எதிர்கொள்ளும் பொருட்டுத் தில்லைவாழ் அந்தணர்களும் திருத்தொண்டர் கூட்டங்களும் வந்து சேர, அவர்க ளைத் தாம் எதிர் வணங்கி, நகரத்துள் புகுந்து, அழகிய மணமுடைய மலர்களால் அழகுபடுத்தப்பட்ட திருவீதியை வணங்கித், தலையின் மீது கைகள் குவிய, மனம் மகிழ, எழுநிலைக் கோபுரத்தைச் சென் றடைந்தார்.
குறிப்புரை:

பொருந்திய பெருமையுடைய எழுநிலைக் கோபு ரத்தை முன்னர் நிலத்தில் விழுந்து வணங்கி, மலர்கின்ற கண்களில் நீர்த்துளிகள் பெருக, உட்புகுந்து, மாளிகையை வலமாகச் சுற்றிவந்து, உலகத்தை விளக்கம் செய்கின்ற பேரம்பலத்தை வணங்கி, அளவில் லாத அண்டங்களை எல்லாம் அளித்த கூத்தப்பிரான் நின்று அற்புதக் கூத்தாடுகின்ற சிற்றம்பலத்தின் முன், சேரமான் உள்ளே அணைந்தார். *** பொருந்திய பெருமையுடைய எழுநிலைக் கோபு ரத்தை முன்னர் நிலத்தில் விழுந்து வணங்கி, மலர்கின்ற கண்களில் நீர்த்துளிகள் பெருக, உட்புகுந்து, மாளிகையை வலமாகச் சுற்றிவந்து, உலகத்தை விளக்கம் செய்கின்ற பேரம்பலத்தை வணங்கி, அளவில் லாத அண்டங்களை எல்லாம் அளித்த கூத்தப்பிரான் நின்று அற்புதக் கூத்தாடுகின்ற சிற்றம்பலத்தின் முன், சேரமான் உள்ளே அணைந்தார்.
அளவில்லாத இன்பத்தை வழங்குகின்ற பெருங் கூத்தர் ஆடுதற்குத் தூக்கிய திருவடியைக் காட்டியருள, உள்ளமும் புலன்களும் ஒருங்கு உருகப் போற்றி, உய்தி பெறுகின்றவராய்க், கழுத்தில் நஞ்சை வைத்துத் தேவர்களுக்கு அளித்துக் காத்த அமுதமே அன்றித், திருவம்பலத்தில் ஒரு திருவடியை ஊன்ற வைத்து, எடுத்த தொரு திருவடியில் திருக்கூத்தான அமுதத்தை அளித்தருளும் கருணையைப் போற்றினார். *** நஞ்சு கருமையானது; பெருமானின் திருக்கழுத்தின் நிறத்தை மறைத்து நிற்கின்றது. அங்ஙனம் அது மறைத்து நிற்பவே தேவர்களுக்கு அமுதத்தை வழங்கியருளினன் இறைவன். அது போன்றே, மறைப்பினை ஊன்று மலர்ப்பதத்தால் வைத்தே, எடுத்த திருப்பாதத்தால் அமுதத்தை வழங்குகின்றான் என்பதை உணர வைக்கின்றார் ஆசிரியர். 'முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு' (திருவருட்பயன்,) என்பதால் அது அமுதமாயிற்று.
: நிறைவு பெறாத ஆசை மிகுதியால், ஆனந்தமான கடலுள் முழுகி அதில் விரும்பியிருந்து, இறைவர் திருவருளால் பருவம் தவறாது, வேண்டும் மழையைப் பொழியும் மேகமும் ஒப்பா காத கைகளையுடைய கழறிற்றறிவார், சிறப்பு நிறைந்த வண்ணத்தை யுடைய பொன்வண்ணத்தந்தாதியினைத் திருப்படியின் கீழ், உலகம் அன்புடன் ஏத்தி இன்பம் அடையுமாறு பாடிப் போற்றிப் பரவினார் (தி. 11 ப. 6). *** வண்ணம் - யாப்புறுப்பு. 'பொன் வண்ணம்' என இவ்வந்தாதி தொடங்குதலின் பொன்வண்ணத்தந்தாதி எனப் பெயர் பெறுவதாயிற்று. முதற்குறிப்பால் பெற்ற பெயர். 'பருவ மழை பொழி யும், காரால் நிகர்க்க அரிய கொடைக் கையார்' என்பது 'பருவக் கொண் மூப்படி எனப் பாவலர்க்கு, உரிமையின் உரிமையின் உதவி' என வரும் அரிய திருமுகப்பாசுரப் பகுதியை முகந்தெடுத்து நிற்ப தாகும்.
தம் இறைவரான கூத்தப் பெருமானுக்கு முன் நின்று செந்தமிழின் சொல்மாலையான அந்தாதியைச் சேரமான் பெருமான் நாயனார் விண்ணப்பிக்க, வானவரும் வாழும்படி கூத்தாடுகின்ற இறைவர், அப்பாட்டிற்கு ஏற்ற பரிசிலாகச் செம்பொன்னால் ஆன அழகிய அம்பலத்துள் எடுத்தருளிய செம்மை தருவதான திருவடிச் சிலம்பினின்றும், இவ்வுலகத்தவர் வாழ எழுந்த ஒலியைத் தாமும் அவருக்கு எதிரே கேட்குமாறு செய்தார். *** சேரர் பெருமான் பாமாலை கேட்பிக்கக் கூத்தப் பெரு மான் அவருக்குத் திருச்சிலம்போசையைக் கேட்பித்தார். பண் சுமந்த பாடற்குப் பரிசு படைத்தருளும் திறம் இது.
: இவ்வாறு இறைவரின் ஆடும் சிலம்பின் ஒலியைக் கேட்ட சேரர் பெருமான், அளவில்லாத இன்பம் மிக்க ஆனந்தம் சேரப் பெற்ற பெரும்பேற்றின் கொள்கை வாய்ப்ப, வணங்குவாராகி, நெடிது பணியும் காலங்களில் எல்லாம் நின்று தொழுது, பின்பு வெளியே வந்து, மாடங்களையுடைய மாளிகை வீதியை வணங்கிச் சென்று அதன் வெளியே தங்கினார். *** பணியும் காலமெல்லாம் - பூசனைக்குரிய காலங்களில் எல்லாம்.
போற்றற்குரிய தில்லையின் எல்லையுள் தங்குபவ ரான சேரர் பெருமான், பசுமையான பொன்னால் ஆன அம்பலத்துள், பாம்பையும் கங்கையையும் சடையுள் ஏற்று ஆடும் இறைவரின் திருக் கூத்தை, ஆராமையால் பொருந்தும் பெருவிருப்பம் மேன்மேலும் எழ, நான்மறைகளும் போற்றிப் பணியும் திருக்களிற்றுப்படியின் கீழே, இரவும் பகலும் பணிந்து போற்றி அதனால் மிக்க இன்பம் பெருகப் பெற்ற அந்நாள்களில்,
குறிப்புரை:

ஆடுகின்ற கூத்தப் பெருமான், பாட்டைக் கேட்ட வண்ணம் இருந்தமையால் சிலம்பொலியைக் கேட்பிக்கத் தாழ்த் தோம்! என்று தமக்கு அவரது நட்புக் கூடும் இயல்பினால் முன்நாளில் அருளிச் செய்து, நினைவூட்டிய நாவலூர் மன்னரான சுந்தரரை, நீண்ட விருப்போடு காணவேண்டும் என்று உள்ளத்துள் எழுந்த நினைவின் மிகுதியால், சேரமானார், திருமால் தேடும் திருவடியையுடைய இறை வரின் திருவருள் பெற்றுத் திருவாரூரை நோக்கிச் செல்வதற்குப் புறப்பட்டார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
ஞானத்தின் நிறைவாக விளங்கும் தில்லையின் எல்லையை, விரும்பி வணங்கி, என்றும் பிரியாத மேன்மேலும் பெருகும் அன்பே உள்ளத்தில் நிரம்ப, நிறைந்த ஞானமுடைய ஆளு டைய பிள்ளையாரான ஞானசம்பந்தர் தோன்றியருளிய சீகாழிப் பதியைச் சென்று வணங்கி, மானைக் கையிலுடைய சிவபெருமானின் கோயில்கள் பலவற்றையும் வணங்கி மகிழ்ந்து வழிச் செல்பவர், *** கோயில்கள் பல என்பன புள்ளிருக்கு வேளூர், திரு நின்றியூர் முதலாயினவாகலாம்.
வழியிலும், குழியிலும், செழுமையான வயல்களி லும், மலர்கள் நிறைந்த நீர்நிலைகளிலும், மடுக்களின் சுழியிலும் முத்து களை ஒதுக்குகின்ற துறைகளையுடைய நீர் நிரம்பிய காவிரியாற்றைக் கடந்து, தென்கரையில் ஏறி, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கின்ற திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று, ஊழி முடிவில் வரும் பெரிய வெள்ளத்தாலும் கொள்ளப் படாத நிலைபெற்ற திருவாரூரைக் கண்டார். *** விழியில் திகழும் திருநுதலார் விரும்பும் இடங்கள் என்பன, சீகாழிக்கும் திருவாரூருக்கும் இடைப்பட்ட திருப்பதிகள் பலவுமாம். அவை திருவழுவூர், வீரட்டம், திருமீயச்சூர், திருஅம்பர் மாகாளம், திருவிற்கரை முதலாயினவாம். ஊழிப்பெரு வெள்ளத் தாலும் அழியாத திருவாரூர் என்றது, பரவையுள்மண்டளி எனும் திருக்கோயில் இருத்தல் பற்றியாம்.
நம்பியாரூரரும் அந்நாளில் திருநாகைக்காரோணத் திற்குச் சென்று திருப்பதிகம் பாடி, அழகிய பொன்னாலும் மணிகளா லும் ஆன அணிவகைகளையும், நவமணிகளையும், ஆடை, சாந்து, வலிய குதிரைகள், பசும் பொன்னால் ஆன வாள் முதலானவற்றையும் இறைவர் தரத் தாம் பெற்று, மேலும் இடைப்பட்ட பல பதிகளிலும் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, மீண்டும் திருவாரூரைச் சேர்ந்து அங்குத் தங்கியிருந்தார். *** இப்பாடல் சில படிகளில் இல்லை. கழறிற்றறிவாருடன் நம்பியாரூர் திருநாகைக்காரோணம் சென்றார் எனப் பின்னர் இவ்வரலாற்றுள் (பா. 85) வருகின்றது. அதுபற்றியே இப்பாடல் சில படிகளில் இல்லை போலும்! எனினும் அடியவர்கள் ஒருமுறையே யன்றிக், காலமும் இடனும் வாய்த்துழியெல்லாம் மீளவும் சென்றிருப் பது ஆங்காங்கும் அறிய வருதலின், ஆரூரர் இதுபொழுதும் சென்று வழிபாடாற்றியிருக்கலாம். ஆதலின் இப்பாடல் இருத்தலில் இழுக்கில் லையாம்.
சேரமான், நிலைபெற்ற திருவாரூரைச் சேர, அந்தணரின் தலைவரான நம்பியாரூரரும் மன்னவர் தலைவரான சேரமான் வரப்பெற்ற நிலையில், உள்ளம் மகிழ எதிர்கொண்டு, அவரை அணுகினார்; சேரமானும் அழகிய மணமுடைய மாலை சூடிய சுந்தரர் முன்பு, விருப்புடனே தாழ்ந்து வணங்கினார்.
குறிப்புரை:

தமக்கு முன்னர்த் தம்மை வணங்கிய சேரமான் பெருமாள் நாயனாரை நம்பியாரூரர் தாமும் வணங்கி, அவரை அணைத்து எடுத்து, அன்பு பெருகத் தழுவிக்கொள்ள, இன்பமான வெள்ளத்துள் முழுகிக் கரையேற மாட்டாது அலைபவரைப் போல், எலும்பும் உருக உயிர்களும் ஒன்றாக உள்ளே கலக்க, அதுபோலப் புறத்தும் இரு உடல்களும் ஒன்றாயின எனக்கூறும்படி பொருந்தினர். *** உயிரும் உடம்பும் ஒன்றாகப் பொருந்தினர் என்பதாம்.
இங்ஙனமாக அவ்விருவரின் தன்மையைக் கண்ட திருத்தொண்டர்கள், அளவற்ற மகிழ்ச்சி அடையப் பெருமையுடைய தோழர் பெருமானான சேரமானும், வன்றொண்டரான நம்பியாரூர ரும் ஒருவருள் ஒருவர் கலந்த பான்மையால் போந்த நட்பின் காரணமாய்ச் 'சேரமான் தோழர்' எனும் உலகு புகழும் மேன்மை பொருந்திய திருப்பெயர், முனைப்பாடி நாட்டின் மன்னரான நம்பியாரூரருக்கு உலகத்தில் வழங்கலாயிற்று.
குறிப்புரை:

ஒருவரில் ஒருவர் கலந்த உணர்ச்சியால் இன்பம் தரும் மகிழ்வான சொற்களைக் கூறியவாறு, பொருந்திப் பயிலுந் தோறும் இனிமை தருவாராகி, இருவரையும் கூட்டி வைத்த இறைவர் பால், மேல் நாம் செய்யக் கூடிய கைம்மாறு என்னே? என்று உள்ளத் தில் உண்டான மகிழ்ச்சியால் நம்பியாரூரர் சேரமானின் பருவகால மழை போன்ற கொடைத் தன்மை கொண்ட செங்கையைப் பற்றிக் கொண்டு, இறைவரின் திருவடிகளைப் பணிவதற்கு நினைந்து, திரு வீதியைக் கடந்து கோயிலுக்குள் சென்றனர்.
குறிப்புரை:

அங்ஙனம் சென்றவர்கள், முதற்கண் தேவாசிரிய மண்டபத்தைத் தொழுது, பின் இறைவரின் திருமாளிகையை வலம் கொண்டு, ஒன்றுபட்ட மனத்துடனும் உள்ளே புகுந்து, ஆரூரர் முன்னே நின்று வழிபடச் சேரர்தாமும் அவர் பின்னே நின்று வணங்கிக் கண்ணீர் அருவி என விழ, நிலத்தில் விழுந்து வணங்கி, என்றும் இனிய தம் பெருமானாரான புற்றிடம் கொண்ட இறைவரின் திருவடி களைத் தொழுது போற்றினார்.
குறிப்புரை:

தேவரும் முனிவரும் வந்து வணங்குகின்ற தெய்வப் பெருமானாரான தியாகேசரின் திருவடிகளை வணங்கிக் கெடுதல் இல்லாத சேரமான் பெருமானார், மூவர்க்கும் முதல்வரான அப்பெரு மானை, நாவலூர் நம்பியின் திருமுன்பு நின்று, 'மும்மணிக்கோவை' (தி. 11 ப. 7) பாடி, நன்மை விளங்குமாறு கேட்பித்தார். அதை இறைவரும் ஏற்று அருள் செய்தார். *** இக்கோவை, திருவாரூர் மும்மணிக்கோவை என அழைக்கப்பெறுவது. பதினொன்றாம் திருமுறையில் காணப்பெறுவது. ஆசிரியம், வெண்பா, கலித்துறை ஆகிய மூவகைப்பா மணிகளால் இயன்றது ஆதலின் 'மும்மணிக்கோவை' என வழங்கலாயிற்று.
சுந்தரர், அங்கு இறைவரின் திருவருளைப் பெற்று எழுந்த கழறிற்றறிவாரை உடன் அழைத்துக் கொண்டு வெளியே வந்து, பரவையாரின் மாளிகையைச் சேர்ந்திட, ஒளிமிகும் விளக்கு களையும், நிறை குடங்களையும், பூமாலைகளையும் எங்கும் மங்கை யர் ஏந்தி வர, அப்பரவையார் மாளிகையின் வாயிலில் வந்து தாமும் எதிர்கொண்டு வரவேற்றார்.
குறிப்புரை:

ஒளிரும் மணிகள் பொருந்திய மாளிகையுள் புகுந்து, விளங்கும் பசும்பொன்னால் ஆன கால்களையுடைய இருக்கை மீது சேரமானை அமரச் செய்து, நம்பிகளும் உடன் இருக்கக் குற்றம் இல்லாத குணத்தையுடைய பரவையார், தம் கணவரான நம்பியாரூரருக்கும் அவருடைய நண்பரான சேரமானுக்கும், நூல் முறைப்படி நீதியினின்றும் வழுவாத ஒழுக்கத்தில் நின்று பூசையை முறைப்படி செய்தார்.
குறிப்புரை:

தாவிச் செல்லும் குதிரைப் படையையுடைய சேரமான் பெருமாளுக்குத் தூண்டு சோதி விளக்கைப் போன்ற பரவையாரைத் திருவமுது அமைக்கும்படி, துணைவரான நம்பியா ரூரர் கூறவும், அவர் விரும்பும் தன்மையினால், வெவ்வேறான பல கறிகளும் உணவும் விரைவாகச் சமைக்கச் செய்து, அவருடன் வந்தவர்க்கெல்லாம் விருந்தினை அமைத்தனர்.
குறிப்புரை:

மன்னர் என்ற தன்மைக்குத் தக்கவாறு அமைத்ததை விடச் சிறப்புமிக்க அடியார் என்ற தன்மைக்கு ஏற்குமாறு பொருந்திப் பெருகும் அன்புடன் விரும்புகின்ற அமுதைச் சமைத்த பின்னர்க் கழுத்துக் கயிற்றை அணிந்த யானைகளையுடைய சேரமானார் தம்முடன் வந்தவருடன் உணவு உண்ணப் பாற்கடலில் தோன்றிய திரு மகளைப் போன்ற பரவையார் வந்து நம்பியாரூரர்க்கு அறிவித்தார். *** சேரமானார் அரசருமாவர், அடியவருமாவர். பரவை யார் அவரை அரசர் என்ற முறைமையைவிட அடியவர் என்ற முறையிலேயே பெரிதும் உபசரித்தார். அரசரின் நிலை துன்பம் அல்லது தொழுதகவு இன்று. அடியவர் நிலையோ இத்தகைய வெற்றரசை விடுத்து வீட்டரசை எய்தும் நிலையாகும். ஆதலின் பரவையார் உபசரிப்பு அன்னதாயிற்று.
'மலர்மாலை சூடிய குழலையுடைய பரவையே! முன் செய்த தவப்பயனாய்ச் சேரமான் இங்கு எழுந்தருளித் திருவமுது செய்யுமாறு திருவருள் கூட்டியதால், காலம் தாழ்த்தாது உணவு செய்விப்பாயாக!' என்று உலகில் நிறைந்த சிறப்புடைய சுந்தரர் கூறியருள, பரவையாரும் அழகுடன் விளங்கும் தம் திருக்கரத்தால் *** அரசரும் சிவவேதியருமாய மரபினால், இரு வேறிடங் களில் உண்கலங்களை அமைத்தனர் அம்மையார். மரபு கருதிய காலம் அதுவாதலின் அவ்வண்ணம் அமைத்தார். இரண்டுபடியா - இருவேறிடங்களில் அமைவதாக.
சுந்தரர் சேரமானைத் தம்முடன் அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்று சொல்ல, அங்கு அவரும் விரைவாகப் பணிந்து அஞ்சித் திடுக்கிடவும், நீண்ட பெரிய கைகளைப் பிடித்துக் கொண்டு நம்பியாரூரர் மீண்டும் வேண்டிக் கொள்ளவும், அவருடன் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணச் சேரமான் இசைந்தார். *** சுந்தரர் சேரமானைத் தம்முடன் அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்று சொல்ல, அங்கு அவரும் விரைவாகப் பணிந்து அஞ்சித் திடுக்கிடவும், நீண்ட பெரிய கைகளைப் பிடித்துக் கொண்டு நம்பியாரூரர் மீண்டும் வேண்டிக் கொள்ளவும், அவருடன் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணச் சேரமான் இசைந்தார்.
நம்பியாரூரரும் சேரமானும் ஒக்க உடன் இருந்து உணவு உண்ண, உயர்வான தவத்தையுடைய பரவையார் மிக்க விருப்பத்தினால் உண்ணச்செய்து, பொருந்திய பணியாளர்கள் தக்க வகையினால் அறுவகைப்பட்ட உணவைத் தாம் தாம் வேண்டியவாறே இனிதாக உண்ணவும், கூடிய மிக்க மகிழ்ச்சி சிறக்கத், தூய்மையான விருந்து அளிக்கும் கடமையை இனிது ஆற்றி நிறைவு செய்தார்.
குறிப்புரை:

பனி நீருடன் கலந்த சந்தனத்துடன் பச்சைக் கற்பூரம் சேர்ந்த மணக்கலவைக் குழம்பை, உரிய பெண்கள் அரைத்துச் சேர்த் துத் தர, அதைக் கொடுத்து, மகிழ்வு தரும் கத்தூரிச் சாந்தையும் தூய்மை யான மலர்களையும் தந்து, பொன்கொடி போன்ற பரவையார் இனிய ஐவகை நறுமணப் பொருள்களுடன் வெற்றிலை, பாக்கையும் ஏந்தினார். *** ஐவகை நறுமணப் பொருள்கள், 'தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் கற்பூரம் சாதியோ டைந்து' என்பதால் அறியப்படும். அடை - வெற்றிலை. காய் - பாக்கு.
அத்தகைய சிறப்பால் செய்யப்பட்ட பூசனைகளை எல்லாம் விரும்பி ஏற்றுக்கொண்டு, தூய்மை செய்யும் திருநீற்றை வாங்கி வணங்கித் தம் திருமுடியில் அணிந்து, பொருந்திய விருப்பத்தி னோடு உடன் இருக்கப் பெற்றமையால், கழறிற்றறிவார், உண்மை யான திருத்தொண்டின் செம்மை தரும் தன்மையை உள்ளபடியே பெற்றவராய்ச் சுந்தரரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
குறிப்புரை:

மலைநாட்டு மன்னர் பெருமானான சேரமான் வணங்கத் தாமும் எதிர் வணங்கித் தழுவிக்கொண்டு, கலைகள் நிறையப் பெற்ற முழுமதி போன்ற முகத்தையுடைய பரவையாரின் கணவரான நம்பியாரூரர், விற்குறியைப் பொறித்த வெற்றியுடைய சேரமானைச் சேருமாறு தந்தார் என்று, கங்கையாறு அலையும் புதுப்பூங்கொன்றை மலர் சூடிய சடையையுடைய இறைவரின் திருவருளைப் போற்றி உடனமர்ந்தருளினார். *** சேரமானை நம்பியாரூரர் காணும்தொறும், அவரைத் தோழமையாகப் பெறும்படி கருணை செய்த பெருமானையும் நினைவு கூர்வாராயினர். கங்கைஅலை - கங்கையாறு. நாட்கொன்றை - அன்ற லர்ந்த கொன்றை.
செல்வம் நிறைந்த திருவாரூரில் உள்ள செம்பொன் புற்றை இடம் கொண்டு இனிது விரும்பி வீற்றிருக்கும் வில்லாய மேருமலையையுடைய பெருமானின் திருவடிகளை வணங்கியும், வீதி விடங்கப் பெருமானான தியாகேசரைச் செழுமையான திரு விழாக் காலங்களில் வழிபட்டும், பெருவாழ்வு பெற்றவராய், நாள் தோறும் மனம் மகிழ்ந்து யாவரும் எடுத்துச் சொல்லும் பேரறிவாளர் களான இரு பெரு மக்களும் தொடர்ந்து வந்த பெரு விருப்பத்துடன் வீற்றிருந்தனர். *** பவனி - வீதிகண் தோறும் பெருமான் எழுந்தருளிவரல். மல்லல் - வளம். இவ்வளப்பத்தை அப்பர் பெருமான் அருளிய 'முத்து விதானம்' (தி. 4 ப. 21 பா. 1) எனத் தொடங்கும் அரிய பதிகத்தால் அறியலாம். இருவரும் சொல்வித்த கருத்துகளை அவரவரும் அருளிய திருவாக்குக்களால் அறியலாம்.
இங்ஙனம் இன்பம் பெருக இருவரும் மகிழ்ந்து வரும் நாளில், விளங்கும் மணிப் பூண்களை அணிந்த வன்றொண்டர், நஞ்சுபொருந்தும் கழுத்தையுடைய வேதியரான இறைவர் வீற்றிருக் கும் இடங்கள் பலவற்றையும் வணங்கிச் சென்று, வயல்கள் நிறைந்த 'கன்னி நாடு' எனவும் 'தமிழ் நாடு' எனவும் கூறப்படும் பாண்டிய நாட்டில் மாமதுரை முதலாக நீண்ட நெருங்கிய சடையையுடைய இறைவரின் பல பதிகளையும் வணங்குவதற்குத் திருவருள் கூட்ட நினைந்தார்.
குறிப்புரை:

சேரமானும், சுந்தரரைப் பிரியாது உடன் உறைய விரும்பிய சிறப்புடைய எண்ணத்தாலும், அன்பு பெருகுமாறு அன்று தமக்கு மதுரைத் திருவாலவாயில் விரும்பி எழுந்தருளிய வீரரான சோமசுந்தரப் பெருமான் அளித்த திருமுகத்தை நினைவு கூர்ந்து, விரும்பிய அன்பால் சென்று அவரை வணங்குவதற்கு உள்ளத்தில் எழுந்த குறிப்பினாலும், தாமும் அவருடன் செல்வதற்குத் துணிந்தார்.
குறிப்புரை:

இருவர்தம் உள்ளமும் இசைந்தபோது, மாளிகை யினின்றும் புறப்பட்டு எழுந்து, திருவாரூரில் புற்றிடம் கொண்ட இறைவரின் மலர்போன்ற அழகிய திருவடிகளைப் பூங்கோயிலுள் புகுந்து வணங்கி, அவரது திருவருளைப் பெற்றுப் புறம் போந்து, உடன்வரப் பெறும் உரிமையுடைய பெருஞ் சுற்றங்களும், எல்லை யில்லாத அணிகளையும் ஊர்திகளையும் ஒப்பில்லாத சேம நிதிகளை யும் கொண்டு செல்பவர்களும் தம்முடன் வர,
குறிப்புரை:

தம்மை வழிபட்டு வரும் ஏவலர்கள் சூழ, அத்திரு வாரூரை வணங்கிச் சோலைகள் மிக்க புறம்பணையைக் கடந்து போய்த், 'திருக்கீழ்வேளூரைச்' சேர்ந்து, அங்கு இறைவரின் திருவடி களை வணங்கி, மேற்சென்று, கடல்கழிக் கானல் சூழ்ந்து மலர்கள் நிறைந்து விளங்கும் சோலைகளையுடைய நாகப்பட்டினத்திற்குச் சென்று திருக்காரோணத்தை வணங்கினர். *** தம்மை வழிபட்டு வரும் ஏவலர்கள் சூழ, அத்திரு வாரூரை வணங்கிச் சோலைகள் மிக்க புறம்பணையைக் கடந்து போய்த், 'திருக்கீழ்வேளூரைச்' சேர்ந்து, அங்கு இறைவரின் திருவடி களை வணங்கி, மேற்சென்று, கடல்கழிக் கானல் சூழ்ந்து மலர்கள் நிறைந்து விளங்கும் சோலைகளையுடைய நாகப்பட்டினத்திற்குச் சென்று திருக்காரோணத்தை வணங்கினர்.
திருநாகைக்காரோணத்தில் வீற்றிருக்கும் சிவக்கொழுந்தாய இறைவரைப் பணிந்து, சிந்தையை உருக்குகின்ற ஆர்வத்தினால், பரந்த செந்தமிழ் மாலையான திருப்பதிககத்தை அருளிச் செய்து சாத்தி, சில நாள்கள் அங்குத் தங்கியிருந்து, மேற் சென்று, பெருகும் கங்கை பொருந்துவதற்கு இடமான சடையை யுடைய பெருமானார் வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சென்று, அருளுடைய மூல முதல்வரான இறைவரின் திரு மறைக்காட்டைச் சேரமானும் சுந்தரரும் அடைந்தனர். *** திருநாகைக் காரோணத்தில் அருளிய பதிகம் 'பத்தூர்புக் கிரந்துண்டு' (தி. 7 ப. 46) எனத்தொடங்கும் கொல்லிக்கௌவாணப் பதிகமாகும். இடங்கள் பலவும் என்பன பொய்கைநல்லூர், திருவரிஞ் சையூர், திருக்கள்ளிக்குடி, திருக்கோளிலி, திருவாய்மூர், திருமுகத் தலை முதலாயினவாகலாம். பதிகங்கள் கிடைத்தில.
கடலானது சூழ்ந்து வலம்கொளும் திருமறைக் காட்டில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலை அடைந்து, திருநின்ற செம் மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரசரும், சீகாழிப்பதியில் தோன்றிய சிவக்கன்றான திருஞானசம்பந்தரும் நேர்முகமாய்த் திறக்கவும் அடைக்கவுமாகப் பாடப் பெற்ற வாயிலை அடைந்து, அருள்கண்ணீர் வழியும் விழிகளையுடையவர்களாகி அப்பெருமக் களையும் மனத்தகத்து எண்ணி வணங்கி,
குறிப்புரை:

எங்கும் நிறைந்த ஒளிவடிவான மறைகள் வழிபாடு செய்த திருமறைக்காட்டில் வீற்றிருக்கின்ற அருமணி போன்றவரான இறைவரைப் பணிந்து, நிலம் பொருந்த விழுந்து வணங்கி, எழுந்து, போற்றி, 'யாழைப் பழித்து' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை நம்பியாரூர் பாடிச் சாத்த, அருள் பொருந்திய சேரர் பெருமான் தாம் தில்லையில் பாடிய சிறப்புடைய பொன்வண்ணத்தந்தாயில் இறைவரைச் சிறப்பித்துப் பாடியவற்றையே மீளவும் ஓதி இன்புற்றனர். *** 'யாழைப் பழித்தன்ன' (தி. 7 ப. 71) என்னும் முதற் குறிப்புடைய பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். சேரர் பெருமான் அருளிய பொன்வண்ணத்தந்தாதியில் (தி. 11 ப. 6) திரு மறைக்காட்டிறைவரைப் போற்றும் நிலையில் அமைந்தன இரு பாடல் களாகும். அவை: 'துயரும் தொழும்', 'கொட்டும்' எனத் தொடங்கு வன. எனவே முன்னர் அருளிய பாடல்களை மீண்டும் ஓதி வணங்க லும் மரபு எனத் தெரிகிறது. 'சொல்லியனவே சொல்லி ஏத்துகப் பானை' (தி. ? ப. ? பா. ?) எனவரும் சுந்தரரின் திருவாக்கையும் நினைவு கூர்க. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
மேற்கூறியவாறு, திருமுன்பில் நின்று திளைத்தெ ழுந்து வணங்கி வெளியில் வந்து, இருவரும் சில நாள்கள் செழுமை யான குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த அத்திருப்பதியில் விரும்பி வீற்றிருந் தருளி, அங்கு இருந்தவாறே, அதன் தெற்கில் உள்ள அலை பொருந் திய கடல் நஞ்சை உட்கொண்ட கழுத்தினையுடைய இறைவரின் திரு அகத்தியான்பள்ளிக்குச் சென்று வணங்கி கலைகள் வளரும் திருக் கோடிக்குழகர் கோயிலைச் சேர்ந்தனர். *** திருஅகத்தியான்பள்ளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.
கோடிக்குழகர் கோயிலின் அயலிலும் அதன் புறத்திலும் எங்கும் தேடியும் ஒரு குடியும் காணாத நிலையில், கோயி லுள் புகுந்து இறைவரின் திருவடியைத் தொழுது உள்ளம் வருந்தி மலர் போன்ற கண்களில் நீர் வரக் 'கடிதாய்க் காற்று' எனத் தொடங்கும் பதிகம் பாடிக், கொற்றவையுடன் இறைவர் வீற்றிருக்கின்ற தன்மையை யும் அப்பதிகத்துள் வைத்துப் போற்றினர். *** 'கடிதாய்க் காற்று' (தி. 7 ப. 32) எனும் முதற் குறிப்புடைய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும். இப்பதிகத்தில் 'குடிதான் அயலே இருந்தாற் குற்றம் ஆமோ' என முதற்பாடலிலும், தனியே யிருந்தாய் என 2, 3, 6, 7, 8 ஆகிய பாடல்களிலும், 'அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே', 'இரவே துணையாயிருந்தாய் எம் பிரானே' என முறையே 1, 6 ஆகிய பாடல்களிலும் நம்பிகள் அருளும் திருவாக்குகளின் பிழிவாகவே, 'கோடிக்குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்தெங்கும் நாடிக் காணாது உள்புக்கு' என ஆசிரியர் அருளுவாராயினார். காடுகாள் - கொற்றவை. காடுகிழாள் என்பதன் மரூஉ. வனதுர்க்கை என இக்காலத்து அழைப்பர். இப்பதி கத்து வரும் ஐந்தாவது பாடலில் 'கையார்வளைக் காடுகாளோடும் உடனாய்' எனவரும் பொருளுண்மை கொண்டே, 'காடுகாள் புணர்ந்தவராய்' என ஆசிரியர் அருளுவாராயினர்.
திருக்கோடிக்குழகர் உறையும் காட்டில் தங்கி, வணங்கி, விடைபெற்றுச் செல்வாராய்ச் சோழநாட்டில் சிவபெருமான் விளங்க வீற்றிருக்கும் திருப்பதிகளையும் வணங்கிச் சென்று, பாண் டிய நாட்டைச் சேர்ந்து, பிறைச் சந்திரனைச் சூடிய முடியையுடைய இறைவரின் திருப்புத்தூரினை வணங்கிச் சென்று, வானில் விளங்கும் முகில்கள் தவழ்கின்ற அழகான மாடங்கள் நிறைந்த மதுரை மூதூரை வந்தடைந்தார். *** சோழநாட்டில் வணங்கிச் சென்ற பதிகள் திருக்கடிக் குளம், திருஇடும்பாவனம், திருவுசாத்தானம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இப்பதிகளுக்கும் பாண்டிநாட்டுத் திருப்புத்தூருக்கும் நம்பிகள் அருளிய பதிகங்கள் கிடைத்தில.
சேரமான் தோழரான நம்பியாரூரரும் சேரர் பெருமானும், பாம்பை அணியாய் அணிந்த மார்பினரான சிவ பெரு மானை மதுரைத் திருவாலவாயில் வணங்கும் பொருட்டு அன்புடன் வந்து சேர, பாண்டிய மன்னர் மன விருப்பம் மிக மாநகரத்தை அணி செய்து, எதிர்கொண்டு வரவேற்க, நகரின் உள் புகுந்தனர். *** வாரமா - மிகுந்த அன்போடு. கோடித்து - அணிசெய்து.
பாண்டியனின் மகளாரை மணந்து முன்னமே பழமையுடைய மதுரை நகரத்தில் வந்து இனிதாக இருந்த சோழ மன்னரும், அவர்களுடன் கூடச் சேர, மூவேந்தர்களும் ஒருங்கு சேர்ந்து, சுந்தரருடன் நிலைபெற்ற திருவாலவாய் என்ற அழகான கோயிலை வந்து அடைந்தனர்.
குறிப்புரை:

நம்பியாரூரர் திருவாலவாயில் அமர்ந்த இறைவனின் திருக்கோயிலை வலமாய் வருவாராய், முன்பு விழுந்து வணங்கி, வழிவழியாய்த் தொண்டு செய்யும் பேற்றைத் தந்தருளுபவரான இறைவரைப் போற்றி, நிலம் உற விழுந்து தொழுது, வாழ்வடைந்த பெருவாய்மையுடைய தமிழ்ப்பாமாலை பாடிப் பெருமகிழ்ச்சியில் விளங்கினார். *** நம்பிகள் ஈண்டுஅருளிய பாமாலை கிடைத்திலது.
உலகம் ஏற்றம் அடைதற்கேதுவான புகழையுடைய சேரமானும், திருமுன்பு நிலத்தில் விழுந்து, 'அடியேனையும் ஒரு பொருளாகக்கொண்டு திருமுகத்தைத் தந்தருளிய அருட் பெருக்கின் எல்லையை அளவிட அறியேன்!' என்று கூறிப் போற்றிச் சொற்கள் எழமாட்டாமல் நாத்தழுதழுக்க, மணம் விரிந்த கொன்றை மாலையை அணிந்த சிவபெருமானின் திருமுன்பு பணிந்து மகிழ்ந்தார்.
குறிப்புரை:

சோழருடன் பாண்டியரும் இறைவரை வணங்கச் சேரருடன் சுந்தரரும் கோயில் வெளிப்பக்கத்தை அடைய, பொருந்திய மிக்க களிப்பால், தேவ தேவரின் கோயிலினின்றும் அவர்களை அழைத்துக் கொண்டு சென்ற, பாண்டியர், இருபெரு மக்களுக்கும் தம் அழகிய பொன்னாலாய மாளிகையில் குறைவில்லாது வேண்டிய முகமனைச்செய்தார்.
குறிப்புரை:

உள்ளம் மகிழச் சிவபெருமானை வணங்கி, அத்திருப்பதியில் தங்கிய நாள்களில், சேரமானுடன் சுந்தரர் தாம் தங்கி யிருந்த இடத்தை அடைந்து, சோழரும் பாண்டியரும் வளம் பெருகும் படிச் சார்ந்து, அவர்களுடன் உரையாடிக் கலந்த விருப்பத்தால் அமர்ந்து கூடி இனிதாய் இருந்தனர். *** உதியர் - சேரர்.
அந்த நாள்களில் மதுரைப்பதியின் அருகில் இறைவர் விளங்க எழுந்தருளியிருக்கும் திருப்பதிகளைப் பொன் மாலைகளையும் மணிகளையும் பூண்ட மார்பையுடைய முடி மன்னர் கள் மூவரும் உடன்வர, செம்மை விளங்கும் நாவையுடைய திரு முனைப்பாடித் திருநாட்டின் தலைவரான நம்பிகள், சென்று வணங் கித், திருப்பதிகங்களைப் பாடி, மேலும் வணங்குவதற்கு எழுந்து, திருப்பூவணத்தை அடைந்தார். *** மூவருடனும் மதுரை நகரில் நம்பிகள் வணங்கிய பதிகள் எவையெனத் தெரிந்தில.
நிலைத்த திருப்பூவணம் என்ற திருப்பதிக்கு அண்மையில் நேரே செல்லும்பொழுது, பக்கத்தே வரும் தொண்டர் கள், நிலைபெற்ற அப்பதியைக் காட்டத் தேடும் மறைகளுக்கும் எட்டுதற்கு அரிய இறைவரைத் 'திருவுடையார்' எனத் தொடங்கிப், பாடும் இசை பொருந்திய திருப்பதிகத்தில் 'பூவணம் ஈதோ!' என்று போற்றி வணங்கிச் சேர்வாராகி, *** 'திருவுடையார்' எனத் தொடங்கும் பதிகம் இந்தளப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 11). இப்பதிகப் பாடல்தொறும் 'பூவணம் ஈதோ!' என வருதலின், அத்தொடர் வழி இவ்வரலாற் றமைப்பை அருளுவாராயினர்.
சென்று, திருப்பூவணத்தில் வானவர் தலைவரான இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் கோயிலின் திருமுற்றத்தை வலமாக வந்து, இறைவரின் திருமுன்பு நிலமுற விழுந்து வணங்கி, எழுந்து நின்று, போற்றிப் பாடி, அங்கிருந்து நீங்கி, தம்முடன் வந்த வெற்றியுடைய முடி மன்னர் மூவருடனே கூடிச்சென்று சுந்தரர் அத்திருப்பதியில் தங்கியருளினர். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. இறைவரின் திருமுன்பு அருளிய பதிகம் கிடைத்திலது
'திருப்பூவணம்' என்ற அத்திருப்பதியில் விரும்பித் தங்கியிருந்து இறைவரை வணங்கியிருந்து, பின் சில நாள்களில், நம்பியாரூரர் பெருவேந்தர் மூவருடனே முதன்மையுடைய மதுரை யைச் சேர்ந்து, உண்மை கூர்ந்த பேரன்பால் ஆலவாயுடைய இறைவ னின் மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை எப்போதும் வணங் கிப் போற்றி இன்பம் எய்தி, அங்கு விரும்பி எழுந்தருளியிருந்தார்.
குறிப்புரை:

பின்பு சிவந்த சடையையுடைய இறைவரின் 'திரு ஆப்பனூர்', 'திருவேடகம்' முதலான நஞ்சை உண்ட கழுத்தையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் பதிகளுக்குச் சென்று குறைவற்ற பெருவிருப்புடன் இனிதாக வணங்கி, மீண்டும் முகில் தோயும் மதிலையுடைய மதுரை நகரில் சேர்ந்து மகிழ்ந்திருந்தார். *** இப்பதிகளில் அருளிய பதிகங்கள் கிடைத்தில. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
மூவேந்தர்களுடன் சிவபெருமானின் திருப்பரங்குன்றத்தை அடைந்து, திரிபுரம் எரித்த பெருமானின் கோயிலை வலமாக வந்து, உள்ளே புகுந்து, வணங்கி, வெண்தலைகள் மலிந்த மாலையினை அணிந்த சடையையுடையவரின் திருவடியின் கீழே ஆட்செய்யும் அவருடைய அருமையை எண்ணி 'அஞ்சுதும்' என்ற கருத்துடன் ஆரூரர் பாடுவாராய்,
குறிப்புரை:

'கோத்திட்டையும்' எனத் தொடங்கிக் குற்றம் இல்லாத திருப்பதிக இசையினால் இறைவரை வணங்கி, மூவேந்தரின் முன்பு, வளப்பம் மிக்க தமிழ் மாலையை இனிய இசையால் பாடிப் போற்றிச் சங்கரர் தங்கியிருக்கும் திருப்பரங்குன்றத்தின் இறைவருக்கு ஆரூரர் சாத்தினார். *** இம்முதற் குறிப்புடைய பதிகம் இந்தளப்பண்ணில் அமைந்ததாகும்(தி. 7 ப. 2). இப்பதிகப் பாடல்தொறும் பெருமானின் சீலமும், கோலமும் சுட்டி, 'அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும்' என நிறைவு படுத்துகின்றார். அதனை உளங்கொண்டே ஆசிரியர் இதற்கு முன்னைய பாட்டில், 'திருவடிக்கீழ் ஆட்செய்யும் அருளை நினைந்து அஞ்சுதும் என்றார்' என்றருளுவாராயினர். இப்பதிகத் திருக்கடைக்காப்பில் மூவேந்தர் முன்னே மொழிந்தமையை கூறியிருத் தலின், அதனையும் இப்பாடற் கண், சேக்கிழார் குறிப்பாராயினர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
சிவபெருமானிடத்துத் திருத்தொண்டு செய்யும் அருமைப்பாட்டை, இப்பேருலகை ஆளும் முதன்மைவாய்ந்த முடி மன்னரான மன்னர் மூவரும் கேட்டுத் தாமும் அஞ்சி, மறைகளில் விதித்த முந்நூல் அணிந்த அழகிய மார்பையுடைய சுந்தரரை வணங் கினர். நிறைந்த தவத்தையுடைய சுந்தரர் அப்பாலும் இருக்கின்ற இறைவரின் பதிகளுக்கும் சென்று வணங்குதற்கு எண்ணினார்.
குறிப்புரை:

அந்நாட்டின் அருகில் உள்ள பதிகள் பலவற்றை யும் சென்று வணங்க நன்மையுடைய மலைநாட்டு மன்னரான சேரமானுடனே சுந்தரர் எழுந்தருள, ஒளி விளங்கும் பல மணிகள் இழைத்த அணிகளை அணிந்த சோழ பாண்டியராகிய இருபெருவேந் தரும், மதுரைக்கு மீள்வார், தென்நாட்டில் அவர்களுக்கு வேண்டு வனவற்றைச் செய்தமைத்தற்குரிய பணியாளர்களை உடன் செல்ல அனுப்பினர். *** வேந்தர் இருவர் - சோழரும், பாண்டியரும். தாம் மீளினும், ஆரூரருக்கும் சேரர் பெருமானுக்கும் செல்லும் இடங்களில் எல்லாம் வேண்டுவனவற்றை அமைத்தற்கெனப் பணியாளர்களை அவர்களுடன் அனுப்பி வைத்தமை, அவ்விருவர் தம் பத்திமை யையும், கடமையுணர்வையும் வெளிப்படுத்துகின்றன.
முன் சொன்ன வண்ணம், சோழ பாண்டியரான இரு பெரு மன்னர்களும் மீண்டு சென்றபின்பு, எழுந்தருளிச் செல்கின்ற சுந்தரர், புகழையுடைய சேரமானுடனே, இறைவர் வெளிப்பட எழுந் தருளியிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று, மலை யின் சாரலில், நிறமுடைய மணிகள் கதிரவன் ஒளி என விளங்கும் திருக்குற்றாலத்தைச் சென்று சேர்ந்தார். *** தானம் பலவாவன, பாண்டி நாட்டின் தென்பகுதியில் உளவாய திருப்பதிகளாம்.
திருக்குற்றாலத்தில் இனிதாய் எழுந்தருளியுள்ள கூத்தரின் ஒலிக்கும் கழலை அணிந்த திருவடிகளை வணங்கிச் சொல் மாலை புனைந்து போற்றி, திருக்குறும்பலா என்னும் கோயிலின் இறைவரை வணங்கி, மேலும் இப்பகுதியிலுள்ள முதிராத வெண்மை யான பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் திருப்பதிகளையும் வணங்கிச் சென்று, முப்புரங்களையும் அழித்த பெருமான் நிலைபெற எழுந்தருளிய செல்வத் திருநெல்வேலியைச் சென்றடைந்தார். *** கூத்தர் கோயிலும், குறும்பலாக் கோயிலும் வெவ் வேறானவை. இவ்விரண்டிலும் ஆரூரர் அருளிய பதிகங்கள் கிடைத் தில. 'குற்றாலத்தினிதமர்ந்த கூத்தர்' எனும் தொடர், 'குற்றாலத்தமர்ந்து உறையும் கூத்தா' எனவரும் திருவாசகத் தொடரை நினைவு கூரச் செய்யும்.
திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் திருநீற்று அழகரான இறைவரை வணங்கிப் பாடி, அப்பகுதிகளில் உள்ள பல் வேறு பதிகளையும், ஆங்காங்குள்ள திருக்கோயில்களையும் அன்பால் பணிந்து சென்று, வில்லை ஏந்திய வேடர் உருவுடன் வெற்றியினை யுடைய அருச்சுனனுக்கு முன், பன்றியின் பின் சென்ற மறை முதல்வ ரான இறைவர் விரும்பி வீற்றிருக்கின்ற இராமேச்சுரத்திற்கு வந்து சேர்ந்தார். *** பதிபிறவும் என்பன திருச்செந்தூர், திருஉத்தர கோசமங்கை முதலாய திருப்பதிகளாகும். திருச்சுழியல், கானப்பேர் முதலாய பதிகளைப் பின்னர் வழிபட்டார் என வருதலின், திருநெல் வேலியிலிருந்து இராமேச்சுரத்திற்கு வந்தது கடற்கரை வழிவந்த பதிகளாகவே கருதத் தக்கனவாம்.
நிலைபெற்ற இராமேச்சரத்தில் எழுந்தருளியிருக் கும் பெரிய சிந்தாமணி போன்ற இறைவரை முன் வணங்கிப் போற்றி, தமிழ்மாலையான திருப்பதிகத்தைப் பாடிச் சாத்தி, பாம்புகளை அணிந்த முடியையுடைய இறைவர் வீற்றிருந்தருளும் ஈழநாட்டில் உள்ள மாதோட்டத்துத் திருக்கேதீச்சுரத்தைச் சிந்தித்து, அழகிய சொல்மாலைகளான திருப்பதிகத்தைப் பாடிச் சாத்திக், கடல் இடையில் உள்ளதால், தொலைவில் நின்றபடியே தொழுது, அங்குத் தங்கி இருந்தார். *** திருக்கேதீச்சரப் பதிக்குரிய திருப்பதிகமே கிடைத்துள் ளது. அது, 'நத்தார் படை' (தி. 7 ப. 80) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணில் அமைந்ததாம். மாதோட்டம் - ஊர்ப் பெயர். கேதீச்சரம் - கோயிலின் பெயர்.
திருஇராமேச்சரத்தில் சிவந்த பவளம் போன்ற சுடர்க்கொழுந்தாகவுள்ள இறைவரை வணங்கித் தொழுது, அங்கி ருந்து இறைவரின் பதிகள் பலவற்றையும் பணிந்து சென்று, வன் றொண்டர் மலைநாட்டு மன்னரான சேரமானுடனாகப் பெரிய வானூர்திகளில் வந்து தேவரும் வணங்கிவரும் பெரிய 'திருச்சுழி யலை' வந்து அடைந்தார். *** பரமர் பதிபிற என்பன இளையான்குடி, தஞ்சாக்கை முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.
திருச்சுழியலை இடனாகக் கொண்டு வீற்றிருக் கின்றவரை, செம்பொன் மலையையே வில்லாய் ஏந்தியவரை, கருப்பமான சுழியில் விழாமல் காப்பவரை, கடலில் எழுந்த நஞ்சின் கருமைதங்கிய கழுத்தினையுடையவரை, திருமுன்பு விழுந்து வணங் கிக் கொன்றை மலர்மாலையால் ஆன பருத்த சுழியத்துடன் கூட, 'ஊனாய் உயிர்' எனத் தொடங்கும் சொல்மாலையைச் சூட்டினார். *** சுழியம் - திருச்சடையின்கண் அணியத்தகும் பருத்த மாலை. இம்மாலையுடன் சொல்மாலையையும் சூட்டினார். இச் சொல்மாலை 'ஊனாய் உயிராய்' (தி. 7 ப. 82) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். நட்டபாடைப் பண் எனக் குறிக்கத்தக்கது, நட்டராகம் என இதுபொழுதுள்ள பதிப்புகளில் தவறிக் குறித்தனர் போலும் என ஐயுறுவர் சிவக்கவிமணியார். அவர்தம் ஆய்வையும் காண்க. கருச்சுழி - கருப்பமாகிய மடு. இருட்சுழியும் - இருள்தங்கும் கழுத்து.
இறைவரைத் தொழுது அங்குத் தங்கியிருந்த நம்பியாரூரருக்கு இரவில், கனவில் வெளிப்பட்டுக் காளை வடிவத் துடன் தோன்றிச், சிவந்த கையில் பொற்செண்டும், முடியில் சுழியமும் கொண்டு, எங்கும் காணமுடியாத இத்திருக்கோலத்தை எலும்பும் உருகுமாறு காட்டி, *** பொற்செண்டு - வளைவுகளுடன் பிளந்து, நீண்ட நுனி யையுடைய பிரம்பு. சுழியம் - ஆண்மக்களுள் சிறந்தார்க்குரிய தலைய ணிகளுள் ஒன்று.
'யாம் இருப்பது கானப்பேர்' என்று கூறி, வானின்றிழிந்துவரும் கங்கைப் பேராறு தங்குதற்கு இடமான பெரு முடியையுடைய பெருமான் மறைந்தருள, ஞானத்தின் பேராட்சியை யுடைய நம்பியாரூரர் விழித்து உணர்ந்து, அதிசயம் கொண்டு, பாம்புடன் பன்றியின் கொம்பையும் அணிந்த இறைவரின் திருவருள் என்னிடம் இருந்தவாறுதான் என்னே! என்பாராய்,
குறிப்புரை:

தாம் கண்ட தன்மையையும் சிவபெருமானின் அருள் தன்மையையும் சேரமானாருக்கு எடுத்துக் கூறித், தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிலைகளையுடைய திருச்சுழியலில் இறைவரை வணங்கி, விடை பெற்றுச் சென்று, தேவர் தலைவரான இறைவரின் திருக்கானப்பேர் என்ற பதியை அடைபவரான நம்பியாரூரர், 'தொண்ட ரடித் தொழலும்' எனத் தொடங்கும் திருப்பதிகத் தமிழ்மாலையைச் சாத்துவாராய், *** 'தொண்டரடித் தொழலும்' எனத் தொடங்கும் திருப்பதி கம் புறநீர்மைப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 84). இப் பதிகப் பாடல்தொறும் 'கானப்பேர் உறை காளை' என்றும் அப்பெரு மானைக் 'கைதொழப் பெறுவது என்று கொலோ' என்றும் அருளப் பெறுகின்றன. அவையே ஆசிரியரின் இவ்வரலாற்றிற்கு அரணாயின.
காளையாரான இறைவரைக் கண்டு வணங்குவது என்றோ? எனப் பாடி, மனிதரைத் தொலைவில் காண அஞ்சிய நீர் நாயின் பக்கத்தில், வாளை மீன்கள் பாயும் இளகிய சேற்றையுடைய வயல் சூழ்ந்த திருமுனைப்பாடி நாட்டின் தலைவரான நம்பியாரூரர், தம் திருவடிகளை நாளும் பரவுமாறு அருளும் பரமரிடத்துச் சேர்வாராய்,
குறிப்புரை:

நிலைபெற்ற 'கானப்பேர்' என்னும் வளம் பொருந் திய பதியினை வந்து அடைந்து, திருச்சடையில் வளருகின்ற பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் கோயிலை வலமாக வந்து, அதன் முன்பு வணங்கி, உள்ளே புகுந்து அணைந்து, முதல்வனாரின் சேவடி களில் விழுந்து வணங்கிப் பலவாறாகப் போற்றி மகிழத்தக்க செழுந் தமிழ் மாலையைப் பாடி வணங்கினார். *** இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது. இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.
நிறைதல் இல்லாத (எல்லையற்ற) பத்திமையுடன் அப்பதியில் வணங்கிப் போற்றிச், சிறந்த தொண்டர்களான நம்பியா ரூரரும் சேரமானும் அங்குச் சிலநாள்கள் விரும்பித் தங்கியிருந்து, மேகங்கள் தங்குதற்கு இடனான மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருக் கானப்பேர் என்ற பதியைக் கடந்து சென்று, போரில் வல்ல விடையை யுடையவரும், கயிலை மலையை யுடையவருமான இறைவரின் திருப்புனவாயிலைச் சென்று அடைந்தார்கள்.
குறிப்புரை:

திருப்புனவாயில் என்ற பதியில் விரும்பி வீற்றி ருக்கும் இறைவரின் திருக்கோயிலுள் புகுந்து, உள்ளத்துள் பெரு விருப்பம் கொள்ளச், 'சித்த நீ நினை என்னொடு' எனத் தொடங்கும் வினாவுதல் அமைந்த செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடி, நிலமுற விழுந்து வணங்கி, மதயானையை உரித்து அணிந்து கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி, அப்பதியில் தங்கியிருந்தனர். *** 'சித்த நீ நினை என்னொடு' எனத் தொடங்கும் பதிகம், பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 50). 'சித்தம் நீ நினை என்னொடு சூள் அறு - மனமே! இத்திருவருட் சார்பால் என்ன கிட்டும்? என எண்ணுவதை ஒழிவாயாக' என்பது பொருளாம். இப்பதிகப் பாடல்தொறும் வரும் 'சூள் அறு' என்னும் தொடருக்குப் பொருள் இதுவாகவே அமைதலின், 'வினாவான தமிழ்' எனக் குறித்தார் ஆசிரியர். வினவும் மனத்திற்கு விடைகூறும் தமிழ்ப்பதிகம்.
திருப்புனவாயிலில் அமர்ந்திருக்கும் சிவபெரு மான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் விருப்புடைய கோயில்கள் பலவற்றையும் வணங்கி, அருள் விடைபெற்றுக், குன்றுகளும் காடு களும் கடந்து நீங்கி, நீர்வளம் சிறந்த காவிரி நாட்டை அடைந்து, மலையான நீண்ட வில்லையுடைய இறைவரின் திருப்பாம்பணி என்று வழங்கும் நகரத்தில் சேரமானுடன் நம்பியாரூரரும் சென்று சேர்ந்தார். *** பருப்பதம் - மலை. விருப்புடைய கோயில் பல என்பன ஓரியூர், திருமணமேற்குடி, திருப்பெருந்துறை முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருப்புனவாயிலில் விரும்பி எழுந்தருளி யிருக்கும் இறைவரின் கோயில்கள் எனக் குறிப்பது, கோயில்கள் பலவாயினும் அங்கங்கும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே என்பது தெளியவாம்.
திருப்பாதாளீச்சரத்தில் இறைவரை வணங்கிச் சென்று, அதன் அருகில் உள்ள பல திருப்பதிகளிலும் மறை முதல்வ ராய சிவபெருமானின் திருவடியை வணங்கிச் சென்று, மாங்கனி போன்ற இரு மார்பகங்களையுடைய மங்கையரின் அழகிய வாயினுக் குத் தோற்றதால் பகலில் வாய் திறக்க ஆற்றாது இரவு நேரத்தில் வாய் திறக்கும் செவ்வாம்பல் மலர்கள் நிறைந்த திருவாரூருக்கு மிக விரை வாக வந்து அடைந்தார். *** பாம்பணி - நகரின் பெயர். பாதாளீச்சரம் - கோயிற் பெயர். பாதாளத்திருக்கும் ஆதிசேடன் வழிபடப்பெற்றதால் இப் பெயர் பெற்றது. பலபதியும் என்பன பாம்பணிக்கும் திருவாரூருக்கும் இடைப்பட்ட பதிகள் பலவுமாம். அவை திருப்பூவனூர், திருவிடை வாய், திருப்பேரெயில், திருநாட்டியத்தான்குடி, திருவிளமர் முதலா யினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். செவ்வாம்பல் இரவிலேயே மலர்வது. தற்குறிப்பேற்ற அணிநலம் தவழ ஆசிரியர் இங்ஙனம் கூறினார். சூது - மாங்கனி; சூதாடு கருவியுமாம்.
திருநாவலூர்த் தலைவரான நம்பியாரூரர், சேரர் குல மன்னருடன் வர, திருவாரூரில் வாழ்பவர்கள் எதிர்கொள்ள, மிக்க விருப்பத்துடனே வணங்கி, தம் இறைவரின் திருக் கோயிலுக் குள் பெருகும் விருப்புடனே வணங்கப் பெறும் பேற்றைப் பெறச் சென்றார்.
குறிப்புரை:

மணம் பொருந்திய கொன்றை மலரைச் சூடிய இறைவர் மகிழ்ந்திருக்கும் கோயிலை வலமாக வந்து, அன்பு பொருந் தத் திருமுன்பு வணங்கி, நெடிதுநேரமாக நின்று, போற்றி, நீண்டகாலம் பிரிந்திருந்த வருத்தத்தால் திருப்பதிகத்தைப் பாடி வணங்கி, அருள் விடைபெற்று, வெளியே வந்து, பாசவினைப்பற்றை அறுப்பவரான இறைவர் வீற்றிருக்கின்ற கோயிலைப் பணிந்து வருவார், *** நெடும்பொழுதெலாம் - நீண்ட வழிபாட்டுக் காலங்களில் எல்லாம் என உரைகாண்பர் சிவக்கவிமணியார். இதுபோது அருளிய பதிகம் 'இறைகளோடிசைந்த இன்பம்' (தி. 7 ப. 8) என்னும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாம்.
பரவையாரின் மாளிகையில் ஏவலர்கள் முன்சென்று சேர்ந்தனராகப், பொருந்தும் பெரிய அணிவகைகளான தூய மங்கலங்களை மிகுதியும் செய்து, பரவையார் எதிரேற்று வணங்க, நம்பியாரூரர் மலைநாட்டரசரான சேரமானையும் உடன் அழைத்துக்கொண்டு, பொன் அணிந்த அழகிய மாளிகையுள் புகுந்தார். *** பேரலங்கார விழுச்செல்வம் - அரசர் என்ற நிலையில் செய்யப்பெற்ற அணிவகைகளான மங்கலங்கள் : தோரணம், நிறை குடம் விளக்கு நிரைத்தல், நுழைவாயில் அழகுபெற அமைத்தல் முதலாயின. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
அவர்கள் உள்ளே வந்தவுடன் பரவையார் முகமனுரை கூறிப் பரவி, அன்புடன் பணிந்து போற்றி, பொருந்திய திருவமுதும் கறிகளும் பற்பலவாய் சமைக்கச் செய்து, திருந்திய தேன் போன்ற சொல்லையுடையவராகி, உண்ணும் பரிகலமும் அதன் கீழ் இடும் திருப்பாவாடையும் பகல் விளக்கும் உடனே ஒழுங்குபட அமைத்து, அவ்விருவருக்கும் ஏவலர்களுக்கும் திருவமுது செய் வித்தார்.
குறிப்புரை:

இவ்வாறு நாளும் மாகேசுவர வழிபாடாகிய மங்கலமாகிய பூசனைகளைப் பரவையார் செய்துவரக் கண்டு, மகிழ்ந்து, அங்கு வீற்றிருக்கின்ற நம்பியாரூரரும் சேரர் பெருமானும் தமது பெருமான் அமர்ந்தருளும் திருக்கோயிலுக்குச் சென்று, ஆறு காலங்களிலும் இறை வழிபாடாற்றித் தம் இல்லத்து இருப்பார், பெருமானின் திருவருளை மறவாத நிலையில் நல்ல பல விளையாட்டு களையும் காண விரும்பினர்.
குறிப்புரை:

இவ்வாறு நாளும் மாகேசுவர வழிபாடாகிய மங்கலமாகிய பூசனைகளைப் பரவையார் செய்துவரக் கண்டு, மகிழ்ந்து, அங்கு வீற்றிருக்கின்ற நம்பியாரூரரும் சேரர் பெருமானும் தமது பெருமான் அமர்ந்தருளும் திருக்கோயிலுக்குச் சென்று, ஆறு காலங்களிலும் இறை வழிபாடாற்றித் தம் இல்லத்து இருப்பார், பெருமானின் திருவருளை மறவாத நிலையில் நல்ல பல விளையாட்டு களையும் காண விரும்பினர். *** செண்டு - பந்து போல்வதோர் விளையாட்டுக் கருவி. அதனை நின்றவாறு இருந்து வீசி ஆடுவது நிலைச்செண்டு ஆடுவ தாம். குதிரைமீது இவர்ந்து இடம் வலமாகச் சுழன்று அக்கருவியை வீசி ஆடுவது பரிச்செண்டு ஆடுவதாகும். தகர் - ஆட்டுக் கடாக்கள். இவை தம்முன்பொரக் காண்பது பண்டிருந்த விளையாட்டு இன்பங்களுள் ஒன்றாகும். 'பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து' (குறள், 486) எனவரும் திருக்குறளும் நினைவு கூரலாம். வாரணம் - கோழி. கோழிகள் தம்முள் பொரக் காண்பது.
'வருசெரு ஒன்றின்மையினால் மற்போரும்
சொற்புலவர் வாதப் போரும்
இருசிறை வாரணப் போரும் இகல்மதவா

மிக்க பெருவிருப்பம் மீதூர, இவ்வாறு தங்கும் நாள்கள் பல கழியக், கரத்தல் இல்லாத கொடைத் தன்மையுடைய சேரமான், கடல் சூழ்ந்த தங்கள் மலைநாட்டில், பரவையாரின் கணவ ரான நம்பியாரூரரை வணங்கி, உடன் அழைத்துக் கொண்டு செல்லுதற் பொருட்டு, இரவும் பகலும் வேண்ட, அவரும் அதற்கு உடன்பட்டார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
பரவையாரின் உளம்நிறைந்த இசைவைப் பெற்று நம்பியாரூரர் புறப்பட்டாராகப், பிறைச் சந்திரனை அணிந்த இறைவ ரின் திருவருளை இவ்வாறு பெற்றதன் பொருட்டுப் போற்றிச் சேரமான் பெருமாள் நாயனார் அத்திருப்பதியில் உள்ள அனைத்துச் சிவன் அடியார்களுக்கும் தக்கவாறு பூசைகள் செய்து, மேல் எழுகின்ற முயற்சியினால் இருபெருமக்களும் இறைவரின் பூங்கோயிலுக்குள் சென்றனர்.
குறிப்புரை:

தம் இறைவரைத் தொழுது அருள் விடை பெற்று, வெளியே வந்து, தொண்டர்கள் உடன் போதர, நம்பியாரூரரும் சேர நன்னாட்டின் மன்னரான பசும்பொன் முடி சூடிய கழறிற்றறிவார் நாயனாரும் புறப்பட்டுச் சென்று, செம்பொன் அணிந்த நீடிய மதில் சூழ்ந்த திருவாரூரினை வணங்கி, மேற்றிசையாகச் செல்கின்றவர்கள்,
குறிப்புரை:

பொன்னைக் கொழித்துப் பரப்பியும், மணிகளை வாரிக் கொழித்தும் நீர் பரவிச் செல்லும் காவேரி ஆற்றின் தென்கரை வழியே சென்று, சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் கோயில்கள் பலவற்றையும் வணங்கி, மின் போன்ற ஒளி வீசுகின்ற சடையையுடைய இறைவர் விருப்புடன் வீற்றிருக்கின்ற 'திருக் கண்டியூரை' அன்பால் உருகப் பெறும் மனத்துடன் சென்று பணிந்து வெளியே வந்தனர். *** இப்பதியில் அருளிய பதிகம் கிடைத்திலது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
காவிரிக்கு வடகரையில் திருவையாறானது எதிரே தோன்றவும், உடலும் உள்ளமும் உருக, மலர் போன்ற கைகளைத் தலைமீது குவித்துக், கடல் பெருகி வந்தது என்னுமாறு பெருகி வரும் காவேரி ஆற்றைக் கடந்து, வட கரையில் ஏறிச் சென்று, இடையறாத தொடர்பு பூண்ட இறைவரின் திருவடியை வணங்குதற்குத் திருவுளம் கொண்டனர்.
குறிப்புரை:

திருமகள் என்றும் பிரியாது உறைகின்ற சேரமான் பெருமாள் நாயனார், திருவையாற்றை நினைந்து நின்றவாறே வணங்கி, திருவருட்பெருக்குடைய நம்பியாரூரரைப் பார்த்து, அருள் செய்பவராய், 'நஞ்சுண்ட கழுத்தினை உடைய இறைவர் வீற்றிருக் கின்ற திருவையாற்றிற்குச் சென்று பணிய உள்ளம் உருகிடலாயிற்று, நாம் இவ்வாற்றைக் கடந்து செல்வோம்!' எனக் கூற, *** செய்யாள் - திருமகள் அரசர்கள் திருமாலின் தோற்ற முடையர். ஆதலின் 'செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள்' என்றார். 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே' என்னும் திருவாக்கும் காண்க.
காவிரி ஆறு பெருக்கெடுத்து இரு கரைகளையும் அலைத்து வானத்தில் எழுவதைப் போல், வேறு மரக் கலங்களாவது ஓடங்களாவது மேல் செல்லாதபடி மிகுத்துச் செல்லத், திருநீறு விளங்கும் மேனியையுடைய இறைவரின் திருவடிகளைப் பணிந்து, பெருமான் மீது கொண்டிருக்கும் அன்பின் வழிச் செல்லும் உரிமை கொண்ட நம்பியாரூரர், ஆறுதடுத்து நிற்பதைப் பொறுக்க இயலாது, இறைவரை விளித்துப் பாடத் தொடங்கி, *** ஆறு - வழி. பெருமான் மீது கொண்டிருக்கும் அன்பின் பெருக்காய ஆற்றின் வழிச் செல்லும் தகுதி உடையராய ஆரூரருக்கு, இவ்வாறு தடையாகுமோ எனும் குறிப்புப்பட நின்றது. அவர் கொண் டிருக்கும் ஆறு அன்பாகிய ஆறு. அது அடைக்கும் தாழ் ஏதும் இல்லா தது. நீரையுடைய இவ்வாறோ, ஆங்காங்கும் அடைக்கப்பட்டுத் தடுக்கப் பட்டுச் செல்லும் இயல்பினது. இவ்வியப்பினதாய ஆறு, அன்பாகிய அவ்ஆற்றைத் தடுக்கவல்லதன்று என்பது பட நின்றது.
: 'பரவும் பரிசு' எனத் தொடங்கிப் பாடும் பாடல்கள் ஒவ்வொன்றின் நிறைவிலும் பாம்பை அணியும் இறைவரை, 'ஐயாறுடைய அடிகேளோ' என்று நிரம்பிய விருப்புடன் அழைத்து, விளக்கம் கொண்ட பெருமையுடைய திருப்பதிகத்தை நிரவும் பண்ணிசையமைய வன்தொண்டப் பெருந்தகையார் நின்று தொழுது பாடவும், *** 'பரவும் பரிசு' எனத் தொடங்கும் பதிகம் காந்தார பஞ்சமப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 77). பாடல்கள் தொறும், 'திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகேளோ' எனும் தொடர் அமைந்து, ஆரூரர் தம் ஆர்வ மிகுதியைக் காட்டி நிற்கின்றது. காவிரிக் கோட்டம் - காவிரிக்கரை. அடிகள் என்பது, ஓலப் பொருண் மையும் விளிப் பொருண்மையும் அமைய 'அடிகேளோ' என நின்றது.
பேரவையுள் நிறைந்து திருக்கூத்து இயற்றுதலில் வல்ல இறைவர், தன் கன்று தடைப்பட்டு எதிர் அழைக்கக் கேட்டுத் தான் கதறிக் கனைக்கும் இளைய பசுவைப் போல், ஒன்றுபட்ட உணர் வால் இயங்கியற் பொருள்கள், நிலையியற் பொருள்கள் ஆகிய அனைத்தும் கேட்கும்படி 'ஓலம்' என்று மொழிந்தார். அந்நிலையில் அக்காவிரியாறும் தொடர்ச்சி நீங்கி வழி காட்ட,
குறிப்புரை:

வானத்தை முட்டுமாறு பெருக்கெடுத்துச் செல்லும் காவிரியாறு மேற் பக்கத்தில் பளிங்கு மலை போல் தாங்கி நிற்க, கீழ்ப் பக்கத்தில் நீர் வடிந்த இடையில், நல்ல வழியினை உண்டாக்கிக் குளிர்ந்த மணல் பரப்பக் கண்ட தொண்டர்கள், மிக்க மழைபோல் கண்ணீர் பொழிந்து திருமேனியில் மயிர்க்கூச்சம் கொள்ளக், கைக ளைத் தலைமீது குவித்து வணங்கினர். *** தண்ணீர் வெண்மை நிறத்தது ஆதலின், அது தடைப்பட்டு நின்றது பளிங்குமலை போல் இருந்தது என்றார். இவ்வைந்து பாடல் களும் ஒருமுடிபின.
நம்பியாரூரரின் திருவடிகளைச் சேரமான் பெருமாள் வணங்க, நாவலூரில் வந்தருளிய செம்பொன் போன்ற முந்நூல் அணிந்த அழகிய மார்பையுடைய நம்பியாரூரரும் சேரமான் பெருமாளை எதிர் வணங்கி, 'இது தேவர்க்குத் தலைவராய இறைவர் உமக்கு அளித்த திருவருள் அன்றோ?' எனக் கூற, இருவரும் கூடி மகிழ்ந்து இறைவரைப் போற்றிப் பரவிப் பெரிய காவிரியின் நடுவே சென்றனர். *** இருவரும் தாழ்வெனும் தன்மை கொண்டு, தம் பெருமை தாமறியாத் தன்மையராய் வாழ்ந்த தகைமை எண்ணற்குரியது.
திருவமைந்த செம்மையான சொற்களை வழங்கி யருளும் தமிழ் நாவலர் பெருமானும், சேரமானும் தம் இறைவர் குறைவில்லாமல் நிறையப் பெருகிய ஆற்றின் நடுவில் அளித்தருளிய மணல் வழியில், தம்மைச்சார்ந்துள்ள ஏவலாளர்களும் தாமுமாக ஏறிச் சென்று, திருவையாற்று இறைவரைப் பணிந்து நிலத்தில் விழுந் தனர்; எழுந்தனர்; போற்றினர். *** தஞ்சம் உடைய - தம்மைச் சார்ந்துள்ள.
அருள் நோக்கமுடைய இறைவரின் திருக்கருணை யில் திளைத்து நிறைவு பெறாத வகையில் அமைதிப் படுத்திக் கொண்டு, அதில் முழுகி வணங்கித் தம் பெருமானின் திரு முன்பு சென்று வணங்கி, அங்கு நின்றும் மீண்டு வந்து, பெரிய காவியாற்றின் நடுவில் முன் வந்த வழியே சென்று கரையேறப் பெரிய மலை போன்ற நின்ற ஆற்று நீரும் விரைந்து தொடர்ந்து முன் போல் பெருகி ஓடியது. *** ஆல் - அசை.
இத்தகைய அருட் செயலின் பெருநிலையைக் கண்டு, அக்கரையில் நின்று, திருவையாற்றில் வீற்றிருக்கும் இறைவ ரின் திருவருளைப் போற்றி நிலமுற விழுந்து வணங்கி, எழுந்து, மேற்றிசை வழியே சென்று, தூய பிறைச் சந்திரன் வாழ்தற்கு இடனான சடையையுடைய இறைவரின் பிற பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சென்று, செம்மையுடைய கொங்கர்களின் நாட்டை, நம்பியாரூரர் சேரமானுடன் சென்று சேர்ந்தார். *** பிற பதிகளாவன, திருஎறும்பியூர், திருநெடுங்களம், திருச் சிராப்பள்ளி, திருமூக்கீச்சரம், திருக்கடம்பந்துறை முதலியவாகலாம்.
கொங்கர் நாட்டைக் கடந்து சென்று, விளங்கும் மலை நாட்டின் எல்லையை அடைய, 'நம் சேரர் பெருமானின் தோழ ரான, தம்பிரான் தோழர், அங்கு ஒருசேர அணைவதற்குப் புறப்பட்டு வருகின்றார்' என்ற விருப்பத்தினால், அந்நாட்டில் உள்ளவர்கள் எல்லாரும், அவர்களை வரவேற்று எதிர்கொண்டு இன்பம் அடைவார் களாகி,
குறிப்புரை:

அந்நகரம் எங்கணும் தோரணங்களும், அதன் பக்கங்களில் எங்கும் மலர்ச் சோலைகளும், வழிகளில் எங்கும் குளிர்ந்த பந்தல்களும், வீடுகளில் எங்கும் மேகம் போல் எழும் அகில் புகையும், ஆறுகளில் எங்கும் மலர்க் குவியல்களும், அவற்றின் பக்கங்கள் எங்கும் அவற்றால் ஒதுக்கப்படும் மணி பொன் முதலியன வாய் ஓங்குவனவான நிதியங்களும், எங்கும் முழவின் ஒலிகளும், நிலம் எங்கும் ஒளி கொண்ட பொற் பூவாம் மழையும் என இவ்வாறு அந்நகரை அணிசெய்ய, *** வதிகள் - வழிகள். பொலம் - பொன்.
இவ்வாறு எல்லாத் திசைகளிலும் இருந்து வரும் பெருமைகளையும், அமைச்சர்களும் படைகளும் கூடிய பெரு வெள்ளத்தையும், பிடரி மயிரையுடைய குதிரை அணி வகுத்த வெள் ளத்தையும், மத்தகத்தையுடைய யானைப் படையின் வெள்ளத்தை யும், இவர்ந்து வருதற்கான அணிகலம் கொண்ட பெண் யானை களின் வெள்ளத்தையும், விரும்பும் சோற்றுப் பெருக்கங்களான வெள் ளத்தையும் பார்த்துக் கெடாத இன்பமாகிய வெள்ளத்தில் முழுகி, நம்பி யாரூரரும் சேரமான் பெருமாளும் கொடுங்கோளூரை அடைந்தனர். *** ஆண் யானைகள் ஓரொருகால் மதம் கொள்ளும் இயல்பினவாதலின் பெண் யானைகளே இவர்ந்து வருதற்குரியன. ஆதலின் 'மிசைகொள் பண்ணும் பிடிவெள்ளம்' என்றார். மிசை கொள் - மேல் அமர்ந்து வருதற்கான. பண்ணும் - ஒப்பனை செய்யப் பெற்ற. குசைகொள் வாசி - பிடரிமயிரையுடைய குதிரைகள். குசை - கடிவாளம் எனினுமாம். இம் மூன்று பாடல்களும் ஒரு முடிபின.
ஆண் யானைகள் ஓரொருகால் மதம் கொள்ளும் இயல்பினவாதலின் பெண் யானைகளே இவர்ந்து வருதற்குரியன. ஆதலின் 'மிசைகொள் பண்ணும் பிடிவெள்ளம்' என்றார். மிசை கொள் - மேல் அமர்ந்து வருதற்கான. பண்ணும் - ஒப்பனை செய்யப் பெற்ற. குசைகொள் வாசி - பிடரிமயிரையுடைய குதிரைகள். குசை - கடிவாளம் எனினுமாம். இம் மூன்று பாடல்களும் ஒரு முடிபின. *** கோடித்து - ஒப்பனை செய்து. சூளி - நிலா முற்றம். கோ நகர்கள் - அரசர் தங்குதற்குரிய தனியிடங்கள். (உடு - விண் மீன்கள்).
இவ்வாறு அந்நகரமக்கள் எதிர்கொள்ள வந்து, அளவற்ற ஆடரங்குகள் தோறும் மகரக் குழையணிந்த பெண்கள் பாடி, ஆட, அழகான வீதியில் சேர்வாராய்ச், சிகரங்களையுடைய தம் பெரிய மாளிகையில் சேராது, மேற்சென்று திருவஞ்சைக்களத்தில் ஒப்பில்லாத திருத்தொண்டரான நம்பியாரூரரை உடன் அழைத்துக் கொண்டு சேரமான் பெருமாள் புகுந்தார். *** தம் தலைநகராய கொடுங்கோளூர்க்கு நம்பியாரூரரை அழைத்து வந்த சேரர் பெருமகனார் தம் அரண்மனைக்கு நேரே அழைத்துச் செல்லாது திருவஞ்சைக்களத்து இறைவரை வணங்கு தற்கே முற்பட்டார் காரணம் தம் ஊரை விடுத்துச் செல்லும் பொழுதோ அன்றி வெளியூரிலிருந்து வரும் பொழுதோ இறைவரை முதற்கண் வழிபட்ட பின்னரே எதனையும் செய்துவரும் மரபில் நின்றமை பற்றியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிவின.
தம் தலைநகராய கொடுங்கோளூர்க்கு நம்பியாரூரரை அழைத்து வந்த சேரர் பெருமகனார் தம் அரண்மனைக்கு நேரே அழைத்துச் செல்லாது திருவஞ்சைக்களத்து இறைவரை வணங்கு தற்கே முற்பட்டார் காரணம் தம் ஊரை விடுத்துச் செல்லும் பொழுதோ அன்றி வெளியூரிலிருந்து வரும் பொழுதோ இறைவரை முதற்கண் வழிபட்ட பின்னரே எதனையும் செய்துவரும் மரபில் நின்றமை பற்றியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிவின. *** தம் தலைநகராய கொடுங்கோளூர்க்கு நம்பியாரூரரை அழைத்து வந்த சேரர் பெருமகனார் தம் அரண்மனைக்கு நேரே அழைத்துச் செல்லாது திருவஞ்சைக்களத்து இறைவரை வணங்கு தற்கே முற்பட்டார் காரணம் தம் ஊரை விடுத்துச் செல்லும் பொழுதோ அன்றி வெளியூரிலிருந்து வரும் பொழுதோ இறைவரை முதற்கண் வழிபட்ட பின்னரே எதனையும் செய்துவரும் மரபில் நின்றமை பற்றியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிவின.
தம் தலைநகராய கொடுங்கோளூர்க்கு நம்பியாரூரரை அழைத்து வந்த சேரர் பெருமகனார் தம் அரண்மனைக்கு நேரே அழைத்துச் செல்லாது திருவஞ்சைக்களத்து இறைவரை வணங்கு தற்கே முற்பட்டார் காரணம் தம் ஊரை விடுத்துச் செல்லும் பொழுதோ அன்றி வெளியூரிலிருந்து வரும் பொழுதோ இறைவரை முதற்கண் வழிபட்ட பின்னரே எதனையும் செய்துவரும் மரபில் நின்றமை பற்றியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிவின.
குறிப்புரை:

சிலர், நம் மன்னராய பெருமானாருக்கு இவர் நல்ல தோழர்! என்பர். சிலர், இவரைக் கண்டு தொழுவதற்கு நாம் அள வற்ற தவம் முன்பு என்ன செய்தோம்! என்பர். சிலர், நம் மலை நாட் டுக்கு இனிப்பெற வேண்டிய வேறு செல்வம் என்ன உள்ளது? என்பர். சிலர், சொல்லும் அளவில் அடங்குமோ நம் பெருமாள் செய்யும் தொழில்! அதனைப் பாரீர்! என்பர்.
குறிப்புரை:

பூவையும் பொரியையும் பொன் துகளையும் கலந்து வீசி வணங்குவர் சிலர். தங்கட்கு ஒப்பில்லாத இவர் தோன்றிய காவிரித் திருநாடே உலகுக்குத் திலகம் போன்று விளங்குவதாகும் என்று வியந்து உரைப்பர். இங்ஙனம் போற்றி மகிழும் புகழுரைகள் எம்மருங்கும் மிக, வந்து சேர்ந்து திருமாளிகையின் முன், குதிரை களும் யானைகளும் நெருங்கும் மணி வாயிலுள் புகுந்து, சுந்தரரும் சேரமானும் யானையினின்றும் இறங்கினர். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
கழறிற்றறிவாராய அடிகளும், கலைகளில் வல்ல நாவலர் பெருமானாம், முழவைப் போன்று விளங்கும் பெருந் தோள் களையுடைய நம்பி ஆரூரரை அழைத்துச் சென்று, விழாப் பொலிவு கொண்டிருக்கும் மாளிகையுள் விளங்கும் அரியணையின் மீது, எண் திசையாலும் ஒளி வீசும் அணிகளை அணிந்த ஆரூரரை அமர்ந் திருக்கச் செய்து, தாமும் அவர் முன்னே நின்று, *** திருவடி - அடிகள் எனும் பொருள்பட நின்றது. 'வாகீசத் திருவடி யாம்' என்பர் முன்னும் (தி. 12 பு. 21 பா. 109). மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க நிற்பவர் ஆதலின், 'நிழல் திக்கு ஒளிரும் பூணார்' என்றார்.
செம்பொன் கரகத்தில் மணமுடைய நல்ல நீரைத் தம் தேவிமார்கள் எடுத்து ஏந்தி வார்க்க, அழகிய அவர்தம் திருவடி களைத் தாமே விளக்கத் தொடங்கிய போது, நம்பியாரூரர் தம் திருவடி களை உள் வாங்கிக் கொண்டு 'இது செய்தல் தகாது' என்று அருளிச் செய்ய, நிலத்தில் விழுந்து வணங்கி, 'எம் அன்பின் தகுதிக்கு ஏற்ற வாறு செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று வேண்டி விண்ணப்பித்துக் கொள்ள,
குறிப்புரை:

செம்பொன் கரகத்தில் மணமுடைய நல்ல நீரைத் தம் தேவிமார்கள் எடுத்து ஏந்தி வார்க்க, அழகிய அவர்தம் திருவடி களைத் தாமே விளக்கத் தொடங்கிய போது, நம்பியாரூரர் தம் திருவடி களை உள் வாங்கிக் கொண்டு 'இது செய்தல் தகாது' என்று அருளிச் செய்ய, நிலத்தில் விழுந்து வணங்கி, 'எம் அன்பின் தகுதிக்கு ஏற்ற வாறு செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று வேண்டி விண்ணப்பித்துக் கொள்ள, *** மானம் - பெருமை. சந்தனக் கலவை சாத்தல், மலர் வழிபாடு, நறும்புகை காட்டல், ஒளிவிளக்குக் காட்டல் முதலிய பலவும் அடங்க 'அரு மானங் கொள் பூசனைகள்' என்றார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
சேர மன்னருடன், உடன் அமர்ந்து உணவு உண்ட பின்பு, மணமுடைய சந்தனமும், அது கலந்த கத்தூரிச் சாந்தும், ஆடை யும், அணியும், மணிப் பூண்களும் குளிர்ந்த மணம் நிறைந்த மலர் மாலைகளும் என்ற இவை முதலான அணியத்தகும் பொருள் வகைக ளைத் தம் கைகளை வளைத்துச் சாரும்படி எடுத்து வன்தொண்ட ருக்குச் சாத்தியும், எஞ்சியவற்றைத் தமக்குப் பயன் படுத்தியும், *** கை கோட்டிச் சாத்தி எனக் கூட்டுக. கைகோட்டி - கலவைச் சாந்து அணிவித்தல், ஆடை முதலான வற்றை அணிவித்தல் போன்ற செயல்களுக்கெல்லாம் தம் கைகளை வளைத்துச் செயத்தக்க முறையில் செய்து. கை கோட்டி - உணவருந்திய பின்பு முறைப்படிக் கைகளைத் தூய்மை செய்து என்றுரைப்பாருமுளர். எனினும் முன்னைய பொருளே சிறக்கும். ஆரம் - சந்தனம். வருக்கம் - அணியத்தக்க பொருள் வகை.
பாடலும், ஆடலும், இனிய இசைக் கருவிகள் இசைத்தல் முதலான மகளிர் விளையாட்டில் நீடும் இனிய மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகளும் ஆகக் காலங்கள் தோறும் நிகழ்த்தியும், அருகி லுள்ள மணமுடைய மலர்களால் மணம் வீசும் சோலைகளில் அமர் வித்தும், தம்முடன் திருமுனைப்பாடி நாட்டின் தலைவர் பெருமா னான நம்பியாரூரரை மகிழ்வித்திருந்தார் கோதையர் பெருமான். *** பண்ணையினில் - விளையாட்டு வகைகளில். விநோதங் கள் - மகிழ்ச்சி தரத்தக்க வியத்தகு செயல்கள். ஆராமங்கள் - சோலை கள். திருமாளிகையின் அகத்தும் புறத்தும் அழகுபெற உருவாக்கிய சோலைகள். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.
பந்தாடுகின்ற தொழிலின் நிகழ்ச்சியும், சிறு சோறு உண்ணும் பெருஞ்சிறப்பும், வண்டுகள் தங்குவதற்கு இடமான பூக்கள் நிறைந்த பொய்கைகளில் பொருந்திய நீரில் விளையாடுதலும், குறைவற்ற மும்மதங்களையும் மத்தகத்தையும் உடைய பெரிய மலை போன்ற யானைகளின் போரும், சினத்துடன் செய்யும் வீரர்களின் போரும் என்னும் இவற்றைக் காணுமாறு செய்து, நிறைவுறாத பெரும் விருப்பம் பொருந்தச் சேரமான் பெருமாள் நாயனார் நம்பியாரூரர்க்கு மகிழ்வை ஏற்படுத்திவரும் நாளில், *** சிறு சோறு - பொதிச் சோற்றின் வகைகளாகவுள்ளவை. சர்க்கரைப் பொங்கல், புளிச்சோறு, தேங்காய்ச் சோறு, எலுமிச்சப் பழச் சோறு, தயிர்ச்சோறு முதலியனவாம். தண்டா - குறையாத. சலமற் போர் - சினத்துடன் வீரர்கள் செய்யும் போர்.
நாவலர் பெருமானான நம்பி ஆரூரரும் திருவா ரூரை ஆட்சி கொண்டிருக்கும் வானவர் தலைவரான இறைவரின் திருவடிகளை, ஒரு நாள் மிகவும் நினைவிற் கொண்ட உள்ளத்த வராய், என் உயிர் போன்றவரைத் திருவாரூர் இறைவரை 'மறக்கலும் ஆமே' என்ற கருத்து நிறைவு கொண்ட திருப் பதிகத்தைப் பாடி, அச்சம் கொண்டார். *** இக்கருத்தும் நிறைவுமுடைய திருப்பதிகம் 'பொன்னும் மெய்பொருளும்' எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த பதிகமாகும் (தி. 7 ப. 59). 'மறக்கலுமாமே' எனும் தொடர் பாடல் தொறும் அமைந்துள்ளது. மறக்கலும் ஆமே? ஆகாது என்றும் பொருள்பட நின்றது. ஏகாரம் எதிர்மறைக்கண் வந்தது. எனவே ஆரூருக்குச் செல்லவேண்டும் எனத் திருவுளம் பற்றினர்.
திருவாரூரை நினைந்தவாறு, 'அங்குச் சென்று தொழுவேன்!' என்று மனத்தில் எண்ணி, மேற்கொண்டு, பேரன்பு டைய தொண்டர்களுடன் புறப்பட்டுச் செல்ல எழுந்தபோது, பெரிய சேரமான்பெருமாள் நாயனார், நீங்காத நட்பினால் உள்ளம் உள் உருக அவருடன் எழுந்து கை கூப்பி வணங்கிப் பிரிவாற்றாமல் அவர் பின் செல்வாராகி,
குறிப்புரை:

வன்தொண்டரின் முன் சென்று, உள்ளம் அழிந்த உணர்ச்சியினை உடையவராய், 'இன்று உம் பிரிவைத் தாங்க இயலாதவன் ஆனேன்! நான் என் செய்வேன்?' எனக் கூற, 'நீர் ஒரு சிறிதும் வருந்தாமல் உம் நகரத்தில் இருந்தருளிப் பகைவரைப் புறங்கண்டு ஆட்சி செலுத்துவீராக!' என்று சுந்தரர் உரைத்தருளினார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
நம்பியாரூரர் இவ்வாறருள, அது கேட்ட அருளையுடைய சேரமானார், 'எனக்கு இவ்வுலகத்தோடு விண்ணுல கத்தின் அரசாட்சியுமாவது தங்களின் திருவடி மலர்களே ஆகும்; ஆயினும், தேர் ஓடும் நீண்ட பெரு வீதிகளையுடைய திருவாரூருக்குத் தாங்கள் எழுந்தருளுவதற்குக் கொண்டெழுந்த பேரார்வத்தை விலக்கவும் யான் அஞ்சுவேன்!' என்றார்.
குறிப்புரை:

சேரர் பெருமான் இவ்வாறருளக் கேட்ட நம்பி யாரூரர் மறுமொழி கூறுவாராய், 'என் உயிரினும் இனிய அழகிய திருவாரூர் இறைவரை, வன்மையான நெஞ்சுடைய நான் மறந்தி ரேன்; பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் இன்னருள் துணையால் அரசை ஆள்வீர்! நீவிர் இங்கே இருப்பீராக!' என்று வணங்க,
குறிப்புரை:

அதைக் கேட்ட சேரமானாரும் வணங்கி, இசைந்து, தம் அமைச்சரை அழைத்து, அழகு நிறைந்த பழைமையான இந்நகரின் பண்டாரத்தே இன்று வரை சேர்ந்திருக்கும் நல்ல பெரும் பொருள்களின் வகைகளாக உள்ளவற்றையெல்லாம், எடுத்துச் செல்லத்தகும் ஆள்களின் மீது ஏற்றி வருமாறு செய்யுங்கள் என்று ஆணையிட,
குறிப்புரை:

அவ்வமைச்சர்களும் அவ்வாணையின் வண்ணம், அன்றுவரை இறைப்பொருளாகச் சேர்ந்துள்ள பொருள்களையும், விலையுயர்ந்த பொன், நவமணிகள், ஒளி வீசும் மணிகளைக் கொண்ட அணிவகைகள், ஆடை வகைகள், அவற்றின் அருகிருந்த மணப் பொருள்களின் வகைகள் ஆகிய இவற்றையும் நன்மையால் சிறந்து விளங்கும்படி தாங்கும் பொதிகளாய் அமைத்து அதற்குரிய ஆட்களின் மீது ஏற்றி, நிலம் நிறையக் கொண்டு வந்து சேர்த்தார்கள். *** ஆயம் - இறைப்பொருள். ஞாங்கர் - அவ்விடத்தின் அருகே. விரையுறுப்பு வருக்கம் - நறுமனப்பொருள்களாகக் கூட்டி யுரைப்பன; கத்தூரி, பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ முதலாயின. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
அச்செல்வங்களில் பரவிய பொதிகள் எல்லா வற்றையும் வன்தொண்டர் தம் ஏவலர்களின் வழி முன்னே செல்லு மாறு விடுத்துத், தம் பொன்னடிகளை வணங்கிய சேரமான் பெருமானைத் திருமுனைப் பாடி நாட்டவரான வன்தொண்டர் தாமும் எதிர் வணங்கி, பணிந்த அவரை முகந்தெடுத்து, அணிந்த மாலையை யுடைய மலைபோல் உயர்ந்த தோள்கள் பொருந்தத் தழுவிக் கொண்டு, பின்பு விடையளித்தார்.
குறிப்புரை:

நம்பி ஆரூரர், சேரமான் பெருமானாருக்கு விடை தந்தருளி, அந்நகரத்தினின்றும் நீங்கிச் சென்று, மேகங்கள் தவழும் மலைகளையுடைய அந்நாட்டைக் கடந்து, கற்சுரங்களும் நீர் பெருகும் காட்டாறுகளும் நீண்ட காடுகளும் பல பிற்படச் செல்ல, சிறப்புடைய திருமுருகன்பூண்டி வழியாகச் செல்கின்றவர்,
குறிப்புரை:

திருமுருகன் பூண்டியின் அருகே செல்லும் பொழுதில், போர் முகத்ததாய விடையையுடைய சிவபெருமான், நம்பி ஆரூரருக்குத் தாமே பொன் தந்தருளுவதல்லாது வேறு எவரும் கொடுப்ப அதனைக் கொள்ளலாகாது, என்ற தன்மையைக் காட்டுதற்கு, அதைத் தாம் வாங்கிக் கொண்டு பெருகும் திருவருளினால், தாமே கொடுப்பதற்கும் அவர் பெறுவதற்குமாக வரும் நிலை கூடுவதற்காகவோ என்னவோ? அதை அறியோம்?
குறிப்புரை:

வெற்றி மிக்க பூதகணங்கள் வேடர் வடிவாய்ச் சென்று, சுந்தரர் கொணரும் நிதியங்களைக் கவர்ந்து கொள்ளும்படித் திருவருள் வைத்தருளவே, பகைத்தவரின் முப்புரங்களையும் எரித்த இறைவரின் திருவருளால், அப்பூதகணங்கள் அவ்வாணைவழி வேடர் உருக்கொண்டு சென்று, அந்நாவலூரர் வரும் வழியின் இருமருங்குமாகச் சினந்து எழுந்து,
குறிப்புரை:

வில்லை வளைத்து, கூரிய அம்புகளை விரைவாய்ச் செலுத்தும் நாணில் பூட்டி, 'இப்பொதிகளை இங்கு இட்டுச் செல்லுங்கள்! இல்லையெனில் உங்களைக் கொல்வோம்!' என்று சினத்தால் நிலத்திற் குத்தி, அளவற்ற செல்வங்களையெல்லாம் கவர்ந்து கொள்ளப், பறிக்கப்பட்டவர்களாகிய சுமை ஆட்கள் பதறி ஓடி நம்பியாரூரரின் அருகே வந்தனர். *** விசை - விரைவுபடுத்தற்குரிய நாண். சந்தித்து - தொகுத்து. அலகு - அம்புகளின் ஈர்க்காய பகுதி. கூரியபகுதி. குத்தி - நிலத்திற் குத்தி. இந்நான்கு பாடல்களும் ஒரு முடிபின.
அவ்வேடர்கள் சுந்தரரிடம் செல்லாது, கங்கையைத் தரித்த சிவந்த சடையையுடைய சிவபெருமானின் திருவருளால் நீங்கிச் செல்ல, அவர்கள் சேர்ந்த ஊரான திருமுருகன்பூண்டிக்குச் சென்று, போரில் வல்ல இளமையான விடையை உடையவரான இறைவரின் கோயிலை நாடி ஆரூரர் அடைந்தார்.
குறிப்புரை:

அழகிய அருள் நிறைந்தவராய சிவபெருமானின் திருக்கோயிலைக் கைகளை அஞ்சலியாய்க் குவித்து வணங்கி, மேகங் களைப் பொருந்தும்படி உயர்ந்த வாயிலைப் பணிந்து, பெருகும் விருப்பத்துடன் புகுந்து, வலம் வந்து, தூய்மையான கங்கையாற்றை யும் பிறைச்சந்திரனையும் முடியில் அணிந்த இறைவரின் திருமுன்பு சென்று சேர்ந்தார்.
குறிப்புரை:

உள்ளம் உருகிய அன்புடன் கைகளைத் தலைமீது குவித்து, நிலத்தில் விழுந்து வணங்கி, உமையம்மையாரை ஒருகூற்றில் கொண்ட தம் இறைவரின் முன்பு, 'அச்சம் பொருந்திய வேடர்கள் வழிப்பறி செய்யும் கொடிய காட்டில் எதற்கு இருந்தீர்?' என்னும் கருத்துடைய, 'கொடுகு வெஞ்சிலை' எனத் தொடங்கும் அழகிய சொற்களை உடைய திருப்பதிகத்தைச் சுந்தரர் பாடியருளினார். *** இத்தொடக்கமுடைய திருப்பதிகம் பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 49).
இப்பதிகத்து வரும் முதற்பாடல்

'கொடுகுவெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறை கொண்டு ஆறு அலைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கிருந்தீர்

நம்பியாரூரர் இவ்வாறு பாடி வணங்கவும், மேலாய பொருளான அவ்விறைவரின் அருளால், வேடுவர் பறித்துச் சென்ற பொருள்களை எல்லாம், வான் அளாவ நீடும் வாயிலின் முன் குவித்திடவும், அதைப் பார்த்து, நேர் வணங்கி, அருட்கூத்தாடும் இறைவரின் திருவருளால், பறிக்கப்பட்ட பொருள்களில் சிறிதும் குறைவின்றி முழுமையாகக் கைவரப்பெற்றார்.
குறிப்புரை:

எடுத்துச் செல்கின்ற அச்சுமையாட்களைச் செல்லச் செய்து, நஞ்சையுண்டு விளங்கும் திருக்கழுத்தையுடைய இறைவரை வணங்கி, விடை பெற்றுக் கொங்கு நாட்டை நீங்கிச் சென்று, மெய்ம் மையாகப் பொருந்திய பெருவிருப்பத்துடன் விரைவாகச் சென்று, மென் கரும்பும் வயல்களில் நெருங்கிய செந்நெல்லும் சூழ்ந்து விளங்கும் திருவாரூரைச் சென்று அடைந்தார்.
குறிப்புரை:

நாவலர் தலைவரான நம்பியாரூரரின் திருவரு ளால் விடைபெற்றுக் கொண்ட மன்னரான சேரமான் பெருமாள் நாயனாரும், உயிரோடு ஒன்றிய நட்பையுடைய நம்பியாரூரரை இடைவிடாது எண்ணிய வண்ணமே, வண்டுகள் ஒலிப்பதற்கு இட மான மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த மகோதை நகரில் வீற்றிருந்து, மலை நாட்டின் அரசினை மற்றவர்க்கு உரியதாக அன்றித் தமக்கே உரிமையாகக் கொண்டு ஆண்டு வந்தார்.
குறிப்புரை:

இந்நிலையில் ஆட்சி புரிந்தருளும் சேரமான் பெருமானார், எம் தலைவரான வன்றொண்டப் பெருந்தகையார் சோழவளநாட்டை நீங்கி மகோதை நகரிற்கு, மேல் வருங்காலத்து வந்து புகுந்து நிலையான திருக்கயிலைக்கு யானையின் மேல் ஏறி எழுந்தருள, அப்போது, அவர் முன் தம் கொற்றக் குதிரையைச் செலுத்தி அவருடனே தாமும் திருக்கயிலை சேரும் திருச்செயலைப் பின்னர்ச் சொல்வாம்.
குறிப்புரை:

மலைகள் மிக்க செல்வமுடைய மலை நாட்டு மன்னவரான, பெரிய கடல் போன்ற வில் எழுதிய கொடியைக் கொண்ட படைகளையுடைய, சேரமானாரின் திருவடிகளைப் போற்றி, நிலையினால் உயர்ந்த அழகிய மாடங்களையுடைய நீண்ட வீதிகள் தோறும், பெரிய மறைகளும் அவற்றை உட்கொண்ட கலைகளும் பயின்றொழுகும் திறம் மிக்க புகழையுடைய சீகாழியில் வாழ்ந்த கணநாத நாயனாரின் இயல்பை இனிக் கூறுவாம். ***

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history