சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்  
 செங்குவளை      கரும்பல்ல      பல்லி      மாட      படர்ந்த      உள்ளம்      விளக்கம்      ஆர      நிலம      மண்ணில்      பொங்கு      தவமுயன்      அம்புனிற்      மற்றது      வளவநின்      என்மகன்செய்      என்றரசன்      அவ்வுரையில்      தண்ணளிவெண்      பூவார்      அகில      வேண்டு    
12.000   12 st/nd Thirumurai   Song # 55   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 செங்குவளை பறித்தணிவார்
கருங்குழல்மேல் சிறைவண்டை
அங்கைமலர் களைக்கொடுகைத்
தயல்வண்டும் வரவழைப்பார்
திங்கணுதல் வெயர்வரும்பச்
சிறுமுறுவல் தளவரும்பப்
பொங்குமலர்க் கமலத்தின்
புதுமதுவாய் மடுத்தயர்வார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 56   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 கரும்பல்ல நெல்லென்னக்
கமுகல்ல கரும்பென்னச்
சுரும்பல்லி குடைநீலத்
துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன 
அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லா யிரங்கடைசி
மடந்தையர்கள் வயலெல்லாம்.
12.000   12 st/nd Thirumurai   Song # 78   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 பல்லி யங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதிச் செழுமணித் தேரொலி
மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
எல்லை இன்றி யெழுந்துள எங்கணும்.
12.000   12 st/nd Thirumurai   Song # 79   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரந் தெற்றிகள்
நீடு சாளர நீடரங் கெங்கணும்
ஆடன் மாத ரணிசிலம் பார்ப்பன.
12.000   12 st/nd Thirumurai   Song # 81   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய்
நடந்த செந்தா மரையடி நாறுமால்.
12.000   12 st/nd Thirumurai   Song # 83   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 உள்ளம் ஆர்உரு காதவர் ஊர்விடை
வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாந்
தெள்ளும் ஓசைத் திருப்பதி கங்கள்பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.
12.000   12 st/nd Thirumurai   Song # 84   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கில் பேரொலி யால்துன்னு பண்டங்கள்
வளத்தொ டும்பல வாறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள்.
12.000   12 st/nd Thirumurai   Song # 85   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 ஆர ணங்களே அல்ல மறுகிடை
வார ணங்களும் மாறி முழங்குமால்
சீர ணங்கிய தேவர்க ளேயலால்
தோர ணங்களில் தாமமுஞ் சூழுமால்.
12.000   12 st/nd Thirumurai   Song # 87   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 நிலம கட்கழ கார்திரு நீள்நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
மலர்ம கட்குவண் தாமரை போல்மலர்ந்து
அலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்.
12.000   12 st/nd Thirumurai   Song # 89   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாங்
கண்ணும் ஆவியு மாம்பெருங் காவலான்
விண்ணு ளார்மகிழ் வெய்திட வேள்விகள்
எண்ணி லாதன மாண இயற்றினான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 91   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தமா ராய்ந்துளான்
துங்க வாகமஞ் சொன்ன முறைமையால்.
12.000   12 st/nd Thirumurai   Song # 93   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 தவமுயன் றரிதில் பெற்ற
தனிஇளங் குமரன் நாளுஞ்
சிவமுயன் றடையுந் தெய்வக்
கலைபல திருந்த ஓதிக்
கவனவாம் புரவி யானை
தேர்படைத் தொழில்கள் கற்றுப்
பவமுயன் றதுவும் பேறே
எனவரும் பண்பின் மிக்கான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 98   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 அம்புனிற் றாவின் கன்றோர்
அபாயத்தின் ஊடு போகிச்
செம்பொனின் தேர்க்கால் மீது
விசையினாற் செல்லப் பட்டங்
கும்பரி னடையக் கண்டங்
குருகுதா யலமந் தோடி
வெம்பிடும் அலறும் சோரும்
 மெய்ந்நடுக் குற்று வீழும்.
12.000   12 st/nd Thirumurai   Song # 99   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 மற்றது கண்டு மைந்தன்
வந்ததிங் கபாயம் என்று
சொற்றடு மாறி நெஞ்சில்
துயருழந் தறிவ ழிந்து
பெற்றமுங் கன்றும் இன்றென்
உணர்வெனும் பெருமை மாளச்
செற்றஎன் செய்கேன் என்று
தேரினின் றிழிந்து வீழ்ந்தான்
12.000   12 st/nd Thirumurai   Song # 106   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 வளவநின் புதல்வன் ஆங்கோர்
மணிநெடுந் தேர்மே லேறி
அளவில்தேர்த் தானை சூழ
அரசுலாந் தெருவிற் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால்
இடைப்புகுந் திறந்த தாகத்
தளர்வுறும் இத்தாய் வந்து
விளைத்ததித் தன்மை என்றான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 112   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 என்மகன்செய் பாதகத்துக்
கிருந்தவங்கள் செயஇசைந்தே
அன்னியனோர் உயிர்கொன்றால்
அவனைக்கொல் வேனானால்
தொன்மனுநூற் றொடைமனுவால்
துடைப்புண்ட தெனும்வார்த்தை
மன்னுலகில் பெறமொழிந்தீர்
மந்திரிகள் வழக்கென்றான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 113   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 என்றரசன் இகழ்ந்துரைப்ப
எதிர்நின்ற மதியமைச்சர்
நின்றநெறி உலகின்கண்
இதுபோல்முன் நிகழ்ந்ததால்
பொன்றுவித்தன் மரபன்று
மறைமொழிந்த அறம்புரிதல்
தொன்றுதொடு நெறியன்றோ
தொல்நிலங்கா வலஎன்றார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 115   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 அவ்வுரையில் வருநெறிகள்
அவைநிற்க அறநெறியின்
செவ்வியவுண் மைத்திறநீர்
சிந்தைசெயா துரைக்கின்றீர்
எவ்வுலகில் எப்பெற்றம்
இப்பெற்றித் தாமிடரால்
வெவ்வுயிர்த்துக் கதறிமணி
யெறிந்துவிழுந் ததுவிளம்பீர்.
12.000   12 st/nd Thirumurai   Song # 119   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 தண்ணளிவெண் குடைவேந்தன்
செயல்கண்டு தரியாது
மண்ணவர்கண் மழைபொழிந்தார்
வானவர்பூ மழைசொரிந்தார்
அண்ணலவன் கண்ணெதிரே
அணிவீதி மழவிடைமேல்
விண்ணவர்கள் தொழநின்றான்
வீதிவிடங் கப்பெருமான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 126   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 பூவார் திசைமுகன் இந்திரன் பூமிசை
மாவாழ் அகலத்து மால்முத லானவர்
ஓவா தெவரும் நிறைந்துறைந் துள்ளது
தேவா சிரிய னெனுந்திருக் காவணம்.
12.000   12 st/nd Thirumurai   Song # 128   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 அகில காரணர் தாள்பணி வார்கள்தாம்
அகில லோகமும் ஆளற் குரியரென்று
அகில லோகத்து ளார்க ளடைதலின்
அகில லோகமும் போல்வ ததனிடை.
12.000   12 st/nd Thirumurai   Song # 134   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
 வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
தாண்ட வப்பெரு மான்தனித் தொண்டர்கள்
நீண்ட தொல்புக ழார்தந் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந் தேத்துகேன்.

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list