சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம் முந்தி வண்ணத்தராய், முழுநீறு அணி சந்தி வண்ணத்தராய், தழல் போல்வது ஓர் அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.
|
1
|
மூல வண்ணத்தராய், முதல் ஆகிய கோல வண்ணத்தர் ஆகி, கொழுஞ் சுடர் நீலவண்ணத்தர் ஆகி, நெடும் பளிங்கு ஆல வண்ணத்தர் ஆவர்-ஐயாறரே.
|
2
|
சிந்தை வண்ணமும், தீயது ஓர் வண்ணமும், அந்திப் போது அழகு ஆகிய வண்ணமும், பந்திக் காலனைப் பாய்ந்தது ஓர் வண்ணமும், அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.
|
3
|
இருளின் வண்ணமும், ஏழ் இசை வண்ணமும், சுருளின் வண்ணமும், சோதியின் வண்ணமும், மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும், அருளும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
|
4
|
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல் குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும், மழைக்கண் மா முகில் ஆகிய வண்ணமும், அழைக்கும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
|
5
|
Go to top |
இண்டை வண்ணமும், ஏழ் இசை வண்ணமும், தொண்டர் வண்ணமும், சோதியின் வண்ணமும், கண்ட வண்ணங்கள் ஆய்க் கனல் மா மணி அண்ட வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
|
6
|
விரும்பும் வண்ணமும், வேதத்தின் வண்ணமும், கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும், விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும், அரும்பின் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
|
7
|
ஊழி வண்ணமும், ஒண்சுடர் வண்ணமும், வேழ் ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும், வாழித் தீ உரு ஆகிய வண்ணமும், ஆழி வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
|
8
|
செய் தவன் திருநீறு அணி வண்ணமும், எய்த நோக்க(அ)அரிது ஆகிய வண்ணமும், கைது காட்சி அரியது ஓர் வண்ணமும், ஐது வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
|
9
|
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும், இடர்(க்)கள் போல் பெரிது ஆகிய வண்ணமும், கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும், அடுத்த வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
|
10
|
Go to top |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|