சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.103   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தோடு உடையான் ஒரு காதில்-தூய
பண் - குறிஞ்சி   (திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=wbEEJYTso-0
6.092   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூ இலை வேல் கையானை,
பண் - திருத்தாண்டகம்   (திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=6JewIhBJ_x0
7.081   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கொன்று செய்த கொடுமையால் பல,
பண் - நட்டபாடை   (திருக்கழுக்குன்றம் வேதகிரியீசுவரர் பெண்ணினல்லாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=JV8082U4b0Q
8.130   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
பண் -   (திருக்கழுக்குன்றம் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/30 Thirukalukundrapathigam Thiruvasagam.mp3

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.103   தோடு உடையான் ஒரு காதில்-தூய  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருக்கழுக்குன்றம் ; (திருத்தலம் அருள்தரு பெண்ணினல்லாளம்மை உடனுறை அருள்மிகு வேதகிரீசுவரர் திருவடிகள் போற்றி )
தோடு உடையான் ஒரு காதில்-தூய குழை தாழ
ஏடு உடையான், தலை கலன் ஆக இரந்து உண்ணும்
நாடு உடையான், நள் இருள் ஏமம் நடம் ஆடும்
காடு உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[1]
கேண வல்லான்; கேழல் வெண் கொம்பு; குறள் ஆமை
பூண வல்லான்; புரிசடைமேல் ஒர் புனல், கொன்றை,
பேண வல்லான்; பெண் மகள் தன்னை ஒருபாகம்
காண வல்லான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[2]
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை-
தான் நக, தார்; தண்மதி சூடி, தலைமேல்; ஓர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும்
கானகத்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[3]
துணையல் செய்தான், தூய வண்டு யாழ் செய் சுடர்க் கொன்றை
பிணையல் செய்தான், பெண்ணின் நல்லாளை ஒருபாகம்
இணையல் செய்யா, இலங்கு எயில் மூன்றும் எரியுண்ணக்
கணையல் செய்தான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[4]
பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய் உடையான், வெண் பிறை சூடி, விரிகொன்றை
மை உடைய மா மிடற்று அண்ணல், மறி சேர்ந்த
கை உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[5]
வெள்ளம் எல்லாம் விரிசடைமேல் ஓர் விரிகொன்றை
கொள்ள வல்லான், குரைகழல் ஏத்தும் சிறு தொண்டர்
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும்
கள்ளம் வல்லான், காதல்செய் கோயில் கழுக்குன்றே.

[6]
ஆதல் செய்தான்; அரக்கர்தம் கோனை அரு வரையின்
நோதல் செய்தான்; நொடிவரையின் கண் விரல் ஊன்றி;
பேர்தல் செய்தான்; பெண்மகள் தன்னோடு ஒரு பாகம்
காதல் செய்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[7]
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும், அனம் ஆயும்,
தொடர்ந்த பெம்மான்; மதி சூடி; வரையார்தம்
மடந்தை பெம்மான்; வார்கழல் ஓச்சிக் காலனைக்
கடந்த பெம்மான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[8]
தேய நின்றான் திரிபுரம், கங்கை சடைமேலே
பாய நின்றான், பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம்
சாய நின்றான், வன் சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[9]
கண் நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை,
நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.092   மூ இலை வேல் கையானை,  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருக்கழுக்குன்றம் ; (திருத்தலம் அருள்தரு பெண்ணினல்லாளம்மை உடனுறை அருள்மிகு வேதகிரீசுவரர் திருவடிகள் போற்றி )
மூ இலை வேல் கையானை, மூர்த்தி தன்னை, முது பிணக்காடு   உடையானை, முதல் ஆனானை,
ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோனை, ஆலாலம் உண்டு உகந்த ஐயன் தன்னை,
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வு அரிய பெருமானை, புனிதன் தன்னை,
காவலனை, கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னை, கற்பகத்தை,   கண் ஆரக் கண்டேன், நானே.

[1]
பல் ஆடுதலை சடை மேல் உடையான் தன்னை, பாய் புலித்தோல் உடையானை, பகவன் தன்னை,
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை, சுடர் உருவில் என்பு அறாக் கோலத்தானை,
அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை,   ஆலின் கீழ் இருந்தானை, அமுது ஆனானை,
கல் ஆடை புனைந்து அருளும் காபாலி(ய்)யை,   கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

[2]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.081   கொன்று செய்த கொடுமையால் பல,  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருக்கழுக்குன்றம் ; (திருத்தலம் அருள்தரு பெண்ணினல்லாளம்மை உடனுறை அருள்மிகு வேதகிரியீசுவரர் திருவடிகள் போற்றி )
கொன்று செய்த கொடுமையால் பல, சொல்லவே
நின்ற பாவவினைகள் தாம், பல, நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர்பிரான் இடம்-
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!

[1]
இறங்கிச் சென்று தொழுமின், இன் இசை பாடியே!
பிறங்கு கொன்றைச் சடையன், எங்கள் பிரான், இடம்-
நிறங்கள் செய்த மணிகள், நித்திலம், கொண்டு இழி
கறங்கு வெள்ளை அருவித் தண் கழுக்குன்றமே.

[2]
நீள நின்று தொழுமின், நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட-
தோளும் எட்டும் உடைய மா மணிச்சோதியான்,
காளகண்டன், உறையும் தண் கழுக்குன்றமே.!

[3]
வெளிறு தீரத் தொழுமின், வெண்பொடி ஆடியை!
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவு இடம்-
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம் மதம் மூன்று உடைக்
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!

[4]
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்,
இலை கொள் சூலப்படையன், எந்தைபிரான், இடம்-
முலைகள் உண்டு தழுவிக் குட்டியொடு முசுக்
கலைகள் பாயும் புறவின் தண் கழுக்குன்றமே!

[5]
மடம் உடைய அடியார் தம் மனத்தே உற
விடம் உடைய மிடறன், விண்ணவர்மேலவன்,
படம் உடைய அரவன் தான், பயிலும்(ம்) இடம்-
கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே

[6]
ஊனம் இல்லா அடியார் தம் மனத்தே உற
ஞானமூர்த்தி, நட்டம் ஆடி, நவிலும்(ம்) இடம்-
தேனும் வண்டும் மது உண்டு இன் இசை பாடியே,
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே.

[7]
அந்தம் இல்லா அடியார் தம் மனத்தே உற
வந்து, நாளும் வணங்கி, மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே.

[8]
பிழைகள் தீரத் தொழுமின்பின் சடைப் பிஞ்ஞகன்,
குழை கொள் காதன், குழகன், தான் உறையும்(ம்) இடம்-
மழைகள் சாலக் கலித்து நீடு உயர் வேய் அவை
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே!

[9]
பல் இல் வெள்ளைத் தலையன் தான் பயிலும்(ம்) இடம்,
கல்லில் வெள்ளை அருவித் தண் கழக்குன்றினை,
மல்லின் மல்கு திரள்தோள் ஊர வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.130   திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு  
பண் -   (திருத்தலம் திருக்கழுக்குன்றம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எழுசீர் விருத்தம்
பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,
கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[1]
பிட்டு நேர்பட, மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே!
சட்ட நேர்பட, வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்;
சிட்டனே! சிவலோகனே! சிறு நாயினும் கடை ஆய வெம்
கட்டனேனையும் ஆட்கொள்வான், வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[2]
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி, மலம் கெடுத்த பெருந்துறை
விலங்கினேன்; வினைக்கேடனேன், இனி மேல் விளைவது அறிந்திலேன்;
இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும், வைப்பிடம் இன்றியே
கலங்கினேன்; கலங்காமலே, வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[3]
பூண் ஒணாதது ஓர் அன்பு பூண்டு, பொருந்தி, நாள்தொறும் போற்றவும்,
நாண் ஒணாதது ஒர் நாணம் எய்தி, நடுக் கடலுள் அழுந்தி, நான்
பேண் ஒணாத பெருந்துறைப் பெரும் தோணி பற்றி உகைத்தலும்,
காண் ஒணாத் திருக்கோலம், நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[4]
கோல மேனி வராகமே! குணம் ஆம் பெருந்துறைக் கொண்டலே!
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி!
ஞாலமே கரி ஆக, நான் உனை நச்சி நச்சிட வந்திடும்
காலமே! உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[5]
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே!
ஏதமே பல பேச, நீ எனை ஏதிலார் முனம், என் செய்தாய்?
சாதல் சாதல், பொல்லாமை அற்ற, தனிச் சரண் சரண் ஆம் என,
காதலால் உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[6]
இயக்கிமார் அறுபத்து நால்வரை எண் குணம் செய்த ஈசனே!
மயக்கம் ஆயது ஓர் மும் மலப் பழ வல் வினைக்குள் அழுந்தவும்,
துயக்கு அறுத்து, எனை ஆண்டுகொண்டு, நின் தூ மலர்க் கழல் தந்து, எனைக்
கயக்க வைத்து, அடியார் முனே வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

[7]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list