சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திடம் மலி மதில் அணி பண் - சாதாரி (திருச்சிறுகுடி மங்களேசுவரர் மங்களநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Emrl3TJoXQk |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.097  
திடம் மலி மதில் அணி
பண் - சாதாரி (திருத்தலம் திருச்சிறுகுடி ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு மங்களேசுவரர் திருவடிகள் போற்றி )
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய படம் மலி அரவு உடையீரே; படம் மலி அரவு உடையீர்! உமைப் பணிபவர் அடைவதும், அமருலகு அதுவே. | [1] |
சிற்றிடை உடன் மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடைமுடியீரே; சுற்றிய சடைமுடியீர்! உம தொழு கழல் உற்றவர் உறு பிணி இலரே. | [2] |
தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய துள்ளிய மான் உடையீரே; துள்ளிய மான் உடையீர்! உம தொழு கழல் உள்ளுதல் செய, நலம் உறுமே. | [3] |
செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய ஒன்னலர் புரம் எரித்தீரே; ஒன்னலர் புரம் எரித்தீர்! உமை உள்குவார் சொல்-நலம் உடையவர், தொண்டே. | [4] |
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய பெற்றி கொள் பிறை முடியீரே; பெற்றி கொள் பிறை முடியீர்! உமைப் பேணி நஞ்சு அற்றவர் அருவினை இலரே. | [5] |
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய மங்கையை இடம் உடையீரே; மங்கையை இடம் உடையீர்! உமை வாழ்த்துவார் சங்கை அது இலர்; நலர், தவமே. | [6] |
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய வெறி கமழ் சடைமுடியீரே; வெறி கமழ் சடைமுடியீர்! உமை விரும்பி மெய்ந்- நெறி உணர்வோர் உயர்ந்தோரே. | [7] |
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய தசமுகன் உரம் நெரித்தீரே; தசமுகன் உரம் நெரித்தீர்! உமைச் சார்பவர் வசை அறுமது வழிபாடே. | [8] |
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய இருவரை அசைவு செய்தீரே; இருவரை அசைவு செய்தீர்! உமை ஏத்துவார் அருவினையொடு துயர் இலரே. | [9] |
செய்த்தலைப் புனல் அணி சிறுகுடி மேவிய புத்தரொடு அமண் புறத்தீரே; புத்தரொடு அமண் புறத்தீர்! உமைப் போற்றுதல் பத்தர்கள் தம் உடைப் பரிசே. | [10] |
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய மான் அமர் கரம் உடையீரே; மான் அமர் கரம் உடையீர்! உமை வாழ்த்திய ஞானசம்பந்தன தமிழே. | [11] |