சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

2.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவான்மியூர் - இந்தளம் அருள்தரு சுந்தரமாது (அ) சொக்கநாயகி உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=os6HVe6Y7So  
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்;
உரை எலாம் பொருள் ஆய் உலகு ஆள் உடையீர்! சொலீர்
வரை உலாம் மடமாது உடன் ஆகிய மாண்புஅதே?


[ 1]


சந்து உயர்ந்து எழு கார் அகில் தண்புனல் கொண்டு, தம்
சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர்,
சுந்தரக்கழல்மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர்! சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே?


[ 2]


கான் அயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம்
தேன் அயங்கிய பைம்பொழில் சூழ் திரு வான்மியூர்,
தோல் நயங்கு அமர் ஆடையினீர்! அடிகேள்! சொலீர்
ஆனைஅங்க உரி போர்த்து, அனல் ஆட உகந்ததே?


[ 3]


மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகைச்
செஞ்சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர்,
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர்! சொலீர்
வஞ்ச நஞ்சு உண்டு, வானவர்க்கு இன் அருள் வைத்ததே?


[ 4]


மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்
திண்ணெனப் புரிசைத் தொழில் ஆர் திரு வான்மியூர்,
துண்ணெனத் திரியும் சரிதைத் தொழிலீர்! சொலீர்
விண்ணினில் பிறை செஞ்சடை வைத்த வியப்புஅதே?


[ 5]


Go to top
போது உலாவிய தண்பொழில் சூழ் புரிசைப் புறம்
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியாத் திரு வான்மியூர்,
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர்! சொலீர்
மூதெயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்புஅதே?


[ 6]


வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்வாய்த்
தெண்திரைக் கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர்,
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல்கழலீர்! சொலீர்
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே?


[ 7]


தக்கில் வந்த தசக்கிரிவன் தலைபத்து இறத்
திக்கில் வந்து அலற அடர்த்தீர்! திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர்! அருள் என்? சொலீர்
பக்கமே பலபாரிடம் பேய்கள் பயின்றதே?


[ 8]


பொருது வார்கடல் எண்திசையும் தரு வாரியால்
திரிதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர்,
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியீர்! சொலீர்
எருதுமேற்கொடு உழன்று, உகந்து இல் பலி ஏற்றதே?


[ 9]


மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டுஇனம்
செய் தவத்தொழிலார் இசை சேர் திரு வான்மியூர்
மெய் தவப் பொடி பூசிய மேனியினீர்! சொலீர்
கைதவச் சமண்சாக்கியர் கட்டுரைக்கின்றதே?


[ 10]


Go to top
மாது ஓர் கூறுஉடை நல் தவனைத் திரு வான்மியூர்
ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை
ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவான்மியூர்
2.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரை உலாம் கடலில் பொலி
Tune - இந்தளம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
3.055   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விரை ஆர் கொன்றையினாய்! விடம்
Tune - கௌசிகம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
5.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   விண்ட மா மலர் கொண்டு
Tune - திருக்குறுந்தொகை   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song