சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

3.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருமழபாடி - கௌசிகம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=DNcF10ZwiTY  
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக்
கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய
மங்கையான், உறையும் மழபாடியைத்
தம் கையால்-தொழுவார் தகவாளரே.


[ 1]


விதியும் ஆம்; விளைவு ஆம்; ஒளி ஆர்ந்தது ஓர்
கதியும் ஆம்; கசிவு ஆம்; வசி ஆற்றம் ஆம்;
மதியும் ஆம்; வலி ஆம் மழபாடி
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே.


[ 2]


முழவினான், முதுகாடு உறை பேய்க்கணக்-
குழுவினான், குலவும் கையில் ஏந்திய
மழுவினான், உறையும் மழபாடியைத்
தொழுமின், நும் துயர் ஆனவை தீரவே!


[ 3]


கலையினான், மறையான், கதி ஆகிய
மலையினான், மருவார் புரம் மூன்று எய்த
சிலையினான், சேர் திரு மழபாடியைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.


[ 4]


நல்வினைப் பயன், நால்மறையின் பொரு
கல்வி ஆய கருத்தன், உருத்திரன்,
செல்வன், மேய திரு மழபாடியைப்
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே.


[ 5]


Go to top
நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்;
ஆடினான், எரிகான் இடை மாநடம்;
பாடினார் இசை மா மழபாடியை
நாடினார்க்கு இல்லை, நல்குரவு ஆனவே.


[ 6]


மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகம் ஆய்
மன்னினான் உறை மா மழபாடியைப்
பன்னினார், இசையால் வழிபாடு செய்து
உன்னினார், வினை ஆயின ஓயுமே.


[ 7]


தென் இலங்கையர் மன்னன் செழு வரை-
தன்னில் அங்க அடர்த்து அருள் செய்தவன்
மன் இலங்கிய மா மழபாடியை
உன்னில், அங்க உறுபிணி இல்லையே.


[ 8]


திருவின் நாயகனும், செழுந்தாமரை
மருவினானும், தொழ, தழல் மாண்பு அமர்
உருவினான் உறையும் மழபாடியைப்
பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே


[ 9]


நலியும், நன்று அறியா, சமண்சாக்கியர்
வலிய சொல்லினும், மா மழபாடியு
ஒலிசெய் வார்கழலான் திறம் உள்கவே,
மெலியும், நம் உடல் மேல் வினை ஆனவே.


[ 10]


Go to top
மந்தம் உந்து பொழில் மழபாடி
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்,
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்-
பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை, பாவமே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமழபாடி
2.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!
Tune - இந்தளம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
3.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காலை ஆர் வண்டு இனம்
Tune - கொல்லி   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
3.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அங்கை ஆர் அழலன்(ன்), அழகு
Tune - கௌசிகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
6.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீறு ஏறு திருமேனி உடையான்
Tune - திருத்தாண்டகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
6.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு
Tune - திருத்தாண்டகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
7.024   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன் ஆர் மேனியனே! புலித்தோலை
Tune - நட்டராகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பநாதர் அழகம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song