சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  


நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!

11.020

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.


6.019 6 -ஆம் திருமுறை பாடல் # 8 திருநாவுக்கரசர் தேவாரம்
வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற
கருத்தானை, கருத்து அறிந்து முடிப்பான் தன்னை,
தூயானை, தூ வெள்ளை ஏற்றான் தன்னை,
சுடர்த் திங்கள் சடையானை, தொடர்ந்து நின்ற என்
தாயானை, தவம் ஆய தன்மையானை, தலை ஆய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

விநாயகர் வணக்கம்
10.000 10 -ஆம் திருமுறை பாடல் # 1 திருமூலர் திருமந்திரம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

6.075 6 -ஆம் திருமுறை பாடல் # 10 திருநாவுக்கரசர் தேவாரம்
ஏவி, இடர்க்கடல் இடைப் பட்டு இளைக்கின்றேனை இப் பிறவி அறுத்து ஏற வாங்கி, ஆங்கே
கூவி, அமருலகு அனைத்தும் உருவிப் போக,
குறியில் அறுகுணத்து ஆண்டு கொண்டார் போலும்
தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி, பொற்றாமரைப் புட்கரணி, தெண்நீர்க்
கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.
8.105.10 8 -ஆம் திருமுறை பாடல் # 99 மாணிக்க வாசகர் திருவாசகம்
மன்ன, எம்பிரான், வருக' என் எனை; மாலும், நான்முகத்து ஒருவன், யாரினும்
முன்ன, எம்பிரான், வருக' என் எனை; முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்
பின்ன, எம்பிரான், வருக' என் எனை; பெய்கழற்கண் அன்பாய், என் நாவினால்
பன்ன, எம்பிரான், வருக' என் எனை பாவநாச, நின் சீர்கள் பாடவே.
அர்க்கியம் கொடுக்கும் போது பாடவும்

2.084.5
தோடொரு காதனாகி யொருகா திலங்கு சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடும் எந்தை யிடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுட னாடுசெம்மை யொலிவெள்ள மாரு நனிபள்ளி போலும் நமர்காள்.

1.032 1 -ஆம் திருமுறை பாடல் # 2 திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட,
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ.

4.058 4 -ஆம் திருமுறை பாடல் # 4 திருநாவுக்கரசர் தேவாரம்
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி,
சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி,
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து
பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

6.067 6 -ஆம் திருமுறை பாடல் # 1 திருநாவுக்கரசர் தேவாரம்
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை, ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
தாளானை, தன் ஒப்பார் இல்லாதானை, சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானை, தோளாத முத்து ஒப்பானை, தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
கீளானை, கீழ் வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே

5.030 5 -ஆம் திருமுறை பாடல் # 5 திருநாவுக்கரசர் தேவாரம்
போது தாதொடு கொண்டு, புனைந்து உடன்
தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள்,
வாதை தீர்க்க! என்று ஏத்தி, பராய்த்துறைச்
சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே!

விநாயகர் வணக்கம்

தூபம் காட்டும் போது
4.001.6
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.



உணவு ஊட்டல் (நெய்வேத்தியம்)
7.061.1
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை


12.010 - சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர்

கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

8.122 கோயில் திருப்பதிகம்
மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே
ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்:
தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!


12.210 12 -ஆம் திருமுறை பாடல் # 368 சேக்கிழார் திருநின்ற சருக்கம்
அண்ணலே! எனை ஆண்டுகொண்டு அருளிய அமுதே! 
விண்ணிலே மறைந்தருள் புரி வேத நாயகனே! 
கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம் 
நண்ணி நான் தொழ நயந்தருள் புரி எனப் பணிந்தார்


11.020
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

புண்ணியம் கோடி வரும் மெய் வாழ்க்கை கூடி வரும்
எண்ணியது கை கூடும் ஏற்றத் துணை நன்னிடவே
வாழ்வில் வள ரொளியாம் வள்ளல் கற்பக விநாயகனை
நாளெல்லாம் வணங்கி பணிந்து ஏத்துவாம்

?????

கந்தர் அநுபூதி 51 உருவாய் அருவாய் (குருவாக வந்து அருளினான் கந்தன்)
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே

திருமுருகாற்றுப்படை 5
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தில் வாழ்வே!

அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
'முருகா!' என்று ஓதுவார் முன்

கந்தபுராணம்
ஆறிரு தடந்தோள்‌ வாழ்க ; அறுமுகம்‌ வாழ்க; வெற்பைக்‌
கூறுசெய்‌ தனியவேேல்‌ வாழ்க ; குக்குடம்‌ வாழ்க ; செவ்வேள்‌
ஏறிய மஞ்ஞை வாழ்க ; யானைதன்‌ அரைங்கு வாழ்க ;
மாறிலா வள்ளி வாழ்க ; வாழ்கசீர்‌ அடியார்‌ எல்லாம்‌ '

நின்றத் திருத்தாண்டகம் பதிகம் 6.094.1
இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி, இயமானனாய், எறியும் காற்றும் ஆகி,
அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி ஆகி,
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி,
நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை ஆகி, நிமிர் புன்சடை அடிகள் நின்ற ஆறே!.

12.210 12 -ஆம் திருமுறை பாடல் # 368 சேக்கிழார் திருநின்ற சருக்கம்
அண்ணலே! எனை ஆண்டுகொண்டு அருளிய அமுதே! 
விண்ணிலே மறைந்தருள் புரி வேத நாயகனே! 
கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம் 
நண்ணி நான் தொழ நயந்தருள் புரி எனப் பணிந்தார்

கும்ப பூசை

பகழிக் கூத்தர் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் -5 5 ...... வாராணைப் பருவம் top

பேராதரிக்கும் அடியவர் தம்
பிறப்பை ஒழித்து பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா
சேரா நிருதர் குலகலகா
சேவற் கொடியாய் திருச்செந்தூர்த்
தேவா தேவர் சிறைமீட்ட
செல்வா என்று உன்திரு முகத்தைப்
பாரா மகிழ்ந்து முலைத் தாயர்
பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா
வா வா என்று உன்னைப் போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்
வாரா திருக்க வழக்கு உண்டோ?
வடிவேல் முருகா வருகவே
வளரும் களபக் குரும்பை முலை
வள்ளிக் கணவா வருகவே.

திருமுருகாற்றுப்படை - நேரிசை வெண்பாக்கள்
குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர்தடிந்தாய்!
புன்தலைய பூதப்பொரு படையாய் - என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறுஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்து உறை

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தில் வாழ்வே!

அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
'முருகா!' என்று ஓதுவார் முன்

கந்தர் அநுபூதி 51
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே

2.084.5
தோடொரு காதனாகி யொருகா திலங்கு சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடும் எந்தை யிடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுட னாடுசெம்மை யொலிவெள்ள மாரு நனிபள்ளி போலும் நமர்காள்.


தூபம் காட்டும் போது
4.001.6
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

உணவு ஊட்டல் (நெய்வேத்தியம்)
7.061.1
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை


12.010 - சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர்

கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

திருமுருகன்பூண்டி பதிகம் 7.049
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், விரவலாமை சொல்லி,
திடுகு மொட்டு எனக் குத்தி, கூறை கொண்டு, ஆறு அலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய்,
இடுகு நுண் இடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

வில்லைக் காட்டி வெருட்டி, வேடுவர், விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும், மோதியும், கூறை கொள்ளும் இடம்
முல்லைத்தாது மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய்,
எல்லைக் காப்பது ஒன்று இல்லை ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

நின்றத் திருத்தாண்டகம் பதிகம் 6.094
இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி, இயமானனாய், எறியும் காற்றும் ஆகி,
அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி ஆகி,
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி,
நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை ஆகி, நிமிர் புன்சடை அடிகள் நின்ற ஆறே!.

1.061 1 -ஆம் திருமுறை பாடல் # 5 திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி,
நூலினால் மணமாலை கொணர்ந்து, அடியார் புரிந்து ஏத்த,
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்,
காலினால் கூற்று உதைத்தான்-கணபதீச்சரத்தானே.

6.052 6 -ஆம் திருமுறை பாடல் # 5 திருநாவுக்கரசர் தேவாரம்
நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண்; நித்தமணவாளன் என நிற்கின்றான் காண்;
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண்; காலன் உயிர் காலால் கழிவித்தான் காண்;
செய்ய திருமேனியில் வெண்நீற்றினான் காண்; செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினான் காண்;
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே

திருத்தொண்டர் புராணம்  12.210 12 -ஆம் திருமுறை பாடல் # 368
அண்ணலே! எனை ஆண்டுகொண்டு அருளிய அமுதே! 
விண்ணிலே மறைந்தருள் புரி வேத நாயகனே! 
கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின் கோலம் 
நண்ணி நான் தொழ நயந்தருள் புரி எனப் பணிந்தார்.

ஓம் விநாயகனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தானே போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி
ஓம் ஆதிமூலமானவனே போற்றி
ஓம் ஆனந்த வடிவினனே போற்றி
ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடரைக் களைபவனே போற்றி
ஓம் ஈசன் தலைமகனே போற்றி
ஓம் ஈகை நெஞ்சினனே போற்றி
ஓம் உண்மைப் பரம்பொருளே போற்றி
ஓம் உலகத்தின் தலைவனே போற்றி
ஓம் ஊர்தோறும் உறைபவனே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
ஓம் எளியோர்க்எளியவனே போற்றி
ஓம் என்னுயிர்த் தந்தையே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் எருக்கம்பூ சூடுபவனே போற்றி
ஓம் ஏழைப் பங்காளனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் ஐங்கரம் படைத்தானே போற்றி
ஓம் ஐந்தெழுத்தான் மகனே போற்றி
ஓம் ஒப்பில்லாத ஒருவனே போற்றி
ஓம் ஒளிமயமானவனே போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் ஔவைக்அருளினாய் போற்றி
ஓம் கருணா மூர்த்தியே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கண நாதனே போற்றி
ஓம் கணேச மூர்த்தியே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கற்பக விநாயகனே போற்றி
ஓம் கந்தனுக்அண்ணனே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் கிருபா சமுத்திரமே போற்றி
ஓம் கீர்த்தி மிக்கவனே போற்றி
ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணத்தில் குன்றே போற்றி
ஓம் குற்றம் பொறுத்தாய் போற்றி
ஓம் கூத்தன் பிள்ளாய் போற்றி
ஓம் கொழுக்கட்டை ஏற்பாய் போற்றி
ஓம் கோவிந்தன் மருகனே போற்றி
ஓம் சடுதியில் அருள்வாய் போற்றி
ஓம் சங்கஷ்ட ஹரனே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சிறிய கண்ணினாய் போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சுருதியின் கருத்தே போற்றி
ஓம் சுந்தர வடிவினனே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
ஓம் தந்தம் ஏந்தியவனே போற்றி
ஓம் தும்பிக்கை முகனே போற்றி
ஓம் துயர் தீர்ப்பவனே போற்றி
ஓம் தெய்வக் குழந்தாய் போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தொப்பையப்பனே போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நம்பினாரைக் காப்பாய் போற்றி
ஓம் நான்மறை காவலனே போற்றி
ஓம் நீதிநெறி மிக்கவனே போற்றி
ஓம் நீர்க்கரை அமர்ந்தாய் போற்றி
ஓம் பழத்தை வென்றாய் போற்றி
ஓம் பக்தரைக் காப்பாய் போற்றி
ஓம் பரிபூரணமானாய் போற்றி
ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் பிரணவப் பொருளாய் போற்றி
ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி
ஓம் பிரம்மச்சாரியே போற்றி
ஓம் பிள்ளையார் அப்பனே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிள்ளை மனத்தானே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் பெரிய கடவுளே போற்றி
ஓம் பேரருள் மிக்கவனே போற்றி
ஓம் பேதம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் மஞ்சளில் வாழ்பவனே போற்றி
ஓம் மகிமை நிறைந்தவனே போற்றி
ஓம் மகா கணபதியே போற்றி
ஓம் முதல்பூஜை ஏற்பவனே போற்றி
ஓம் முழுமுதல் கடவுளே போற்றி
ஓம் முக்கண்ணன் மகனே போற்றி
ஓம் முக்காலம் உணர்ந்தாய் போற்றி
ஓம் மூஞ்சூறு வாகனனே போற்றி
ஓம் மெய்யான தெய்வமே போற்றி
ஓம் மேன்மை மிக்கவனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரசித்தி விநாயகனே போற்றி
ஓம் வாழ்வு தரும் வள்ளலே போற்றி
ஓம் வானவர் தலைவனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் விக்ன விநாயகனே போற்றி
ஓம் வியாசருக்உதவினாய் போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பாய் போற்றி
ஓம் வீதியில் உறைவாய் போற்றி
ஓம் வெள்ளை மனத்தாய் போற்றி
ஓம் வெற்றி அளிப்பாய் போற்றி
ஓம் வேழ முகத்தவனே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி போற்றி!


This page was last modified on Tue, 04 Feb 2025 23:39:23 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai vazhipaadu lang malayalam