சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

5.084   திருநாவுக்கரசர்   தேவாரம்

மேலைத்திருக்காட்டுப்பள்ளி - திருக்குறுந்தொகை அருள்தரு அகிலாண்டநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆரணியசுந்தரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=Nvcv2kY9x6c  
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது
ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம்,
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!


[ 1]


மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளே
நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்!
கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே,
காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!


[ 2]


தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும்
ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே,
கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி
ஞான நாயகனைச் சென்று நண்ணுமே!


[ 3]


அருத்தமும் மனையாளொடு மக்களும்
பொருத்தம் இல்லை; பொல்லாதது போக்கிடும்
கருத்தன், கண்ணுதல், அண்ணல், காட்டுப்பள்ளி
திருத்தன், சேவடியைச் சென்று சேர்மினே!


[ 4]


சுற்றமும் துணையும், மனைவாழ்க்கையும்,
அற்றபோது அணையார், அவர் என்று என்றே,
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப்
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே!


[ 5]


Go to top
அடும்பும், கொன்றையும், வன்னியும், மத்தமும்,
துடும்பல் செய் சடைத் தூ மணிச்சோதியான்;
கடம்பன் தாதை; கருதும் காட்டுப்பள்ளி
உடம்பினார்க்கு ஓர் உறு துணை ஆகுமே.


[ 6]


மெய்யில் மாசு உடையார், உடல் மூடுவார்,
பொய்யை மெய் என்று புக்கு உடன் வீழன்மின்!
கையில் மான் உடையான், காட்டுப்பள்ளி எம்
ஐயன்தன் அடியே அடைந்து உய்மினே!


[ 7]


வேலை வென்ற கண்ணாரை விரும்பி, நீர்,
சீலம் கெட்டுத் திகையன் மின், பேதைகாள்!
காலையே தொழும் காட்டுப்பள்ளி(ய்) உறை
நீலகண்டனை நித்தல் நினைமினே!


[ 8]


இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள்
ஒன்றும் ஓராது, உழிதரும் ஊமர்காள்!
அன்று வானவர்க்கு ஆக விடம் உண்ட
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே!


[ 9]


எண் இலா அரக்கன் மலை ஏந்திட
எண்ணி நீள் முடிபத்தும் இறுத்தவன்,
கண் உளார் கருதும், காட்டுப்பள்ளியை
நண்ணுவார் அவர்தம் வினை நாசமே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: மேலைத்திருக்காட்டுப்பள்ளி
3.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாரு மன்னும் முலை மங்கை
Tune - கொல்லி   (மேலைத்திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் வார்கொண்டமுலையம்மை)
5.084   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு
Tune - திருக்குறுந்தொகை   (மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியசுந்தரர் அகிலாண்டநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song