சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

5.086   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாட்போக்கி (ரத்னகிரி) - திருக்குறுந்தொகை அருள்தரு சுரும்பார்குழலம்மை உடனுறை அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=-AD6BgYTFHM  
காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
பாலகர், விருத்தர், பழையார் எனார்;
ஆலநீழல் அமர்ந்த வாட்போக்கியார்
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.


[ 1]


விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்தபோது பயன் இலை-பாவிகாள்!
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை
எடுத்தும், ஏத்தியும், இன்புறுமின்களே!


[ 2]


வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர்
உந்தி, ஓடி, நரகத்து இடாமுனம்,-
அந்தியின்(ன்) ஒளி தங்கும் வாட்போக்கியார்-
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே.


[ 3]


கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்
தேற்றம் வந்து, தெளிவு உறல் ஆகுமே?
ஆற்றவும் அருள் செய்யும் வாட்போக்கிபால்
ஏற்றுமின், விளக்கை, இருள் நீங்கவே!


[ 4]


மாறு கொண்டு வளைத்து எழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே,
ஆறு செஞ்சடை வைத்த வாட்போக்கியார்க்கு
ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.


[ 5]


Go to top
கானம் ஓடிக் கடிது எழு தூதுவர்
தானமோடு தலை பிடியாமுனம்,
ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார்,
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே.


[ 6]


பார்த்துப் பாசம் பிடித்து எழு தூதுவர்
கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே,
ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார்
கீர்த்திமைகள் கிளர்ந்து உரைமின்களே!


[ 7]


நாடி வந்து, நமன் தமர் நல் இருள்
கூடி வந்து, குமைப்பதன் முன்னமே,
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை
வாடி ஏத்த, நம் வாட்டம் தவிருமே.


[ 8]


கட்டு அறுத்துக் கடிது எழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே,
அட்டமா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு
இட்டம் ஆகி, இணை அடி ஏத்துமே!


[ 9]


இரக்கம் முன் அறியாது எழு தூதுவர்
பரக்கழித்து, அவர் பற்றுதல் முன்னமே,
அரக்கனுக்கு அருள் செய்த வாட்போக்கியார்
கரப்பதும் கரப்பார், அவர் தங்கட்கே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாட்போக்கி (ரத்னகிரி)
5.086   திருநாவுக்கரசர்   தேவாரம்   காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
Tune - திருக்குறுந்தொகை   (திருவாட்போக்கி (ரத்னகிரி) இரத்தினகிரீசுவரர் சுரும்பார்குழலம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song