சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  

பாலகர் திருமுறை Kids Thirumurai



கற்பக விநாயகர் மலரடி ! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே - ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி

குரு வணக்கம்
10 -ஆம் திருமுறை பாடல் # 27 திருமூலர் திருமந்திரம்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

சமய குரவர் துதி

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி


விநாயகர் வணக்கம்
6.019.8
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

10.000.10
வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே!
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப் பண்ணவன்
மலரடி பணிந்து போற்றுவோம்!

அல்லல்போம், வல்வினைபோம் அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!


ஐம்பூத வணக்கம்
8 -ஆம் திருமுறை மாணிக்க வாசகர் திருவாசகம்

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!

எழுந்த பின்
8.120.4 திருப்பள்ளியெழுச்சி
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

குளிக்கும் பொழுது
1.032.2
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்
குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட,
படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்
இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ.

விபூதி தரிக்கும் பொழுது
2.066.1

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.


ஒப்பனை செய்யும் பொழுது/முன்/பின்
4.002.1

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

விளக்கு ஏற்றும் போது
4.011.8
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

விளக்கு ஏற்றிய பின்
8.129.1
சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே! சுரி குழல், பணை முலை மடந்தை
பாதியே! பரனே! பால் கொள் வெள் நீற்றாய்! பங்கயத்து அயனும், மால், அறியா
நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர்
ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே

12.010.2
கற்பனை கடந்த சோதி
கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
பூங்கழல் போற்றி போற்றி

8 -ஆம் திருமுறை பாடல் # 3 மாணிக்க வாசகர் திருவாசகம்
அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?


இனந்தெரியாத நோய்கள் நீங்க; இரத்த அழுத்த, நீரிழிவு நோய்கள் நீங்க, போதைப் பொருள்களிருந்து மீள;
திருமுறை 1.044
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து,
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?
விஷ சுரம் , விஷக்கடி, தொண்டையில் உள்ள கோளாறுகள் நீங்க , செய்வினை , பில்லி , சூனியம் பாதிக்காமல் இருக்க
திருமுறை 1.116
அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

பலவகை உடற்பிணிகள்‌ அகல திருமுறை 2.047
எலும்பு முறிவு குணம் அடைவதற்கும் , இளம்பிள்ளை வாதம் , பக்க வாத நோய்கள் தீர்வதற்கு திருமுறை 3.072
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.

வயிற்று வலி, குடல் தொடர்பான அனைத்துத் தொல்லைகளைப் நீங்க திருமுறை 4.001
கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

உடல் உறுப்புகள் நலம் பெற திருமுறை 4.009 தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்

ஒவ்வாமை, பாம்பு, பூரான் விஷம் மற்றும் விஷக்கடி நீங்க
அரவம் தீண்டி மாண்ட அப்பூதி அடிகளாரின் மகனை மீண்டும் உயிர்ப்பித்தருள வேண்டி அப்பர் பெருமான் பாடிய பதிகம். திருமுறை 4.018
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

இடக்கண் கோளாறு நீங்க ; சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கச்சியேகம்ப பதிகம் திருமுறை 7.061
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை; ஆதியை; அமரர் தொழுது ஏத்தும்
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை; சிந்திப்பார் அவர் சிந்தை உளானை;
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனை; கம்பன் எம்மானை; காணக் கண் அடியேன் பெற்ற ஆறே

வலக்கண் உள்ள கோளாறு நீங்க சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவாரூர் பதிகம் திருமுறை 7.095
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே

திக்குவாய் மாறிச் சீர் பெறுவதற்கு மாணிக்கவாசகர் தில்லையில் நல்கிய திருச்சாழல் திருமுறை 8.112
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ

அவரவருக் குள்ளபடி ஈசனரு ளாலே
அவரவரைக் கொண்டியற்று மானால் – அவரவரை
நல்லார்பொல் லாரென்று நாடுவதென் நெஞ்சமே
எல்லாம் சிவன்செயலென் றெண்.
10.119 - திருமூலர் முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.


17 10.121 - திருமூலர் முதல் தந்திரம் - 21. அன்புடைமை

அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

10.405 - திருமூலர் நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்

ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே

10.610 - திருமூலர் ஆறாம் தந்திரம் - 10. திருநீறு

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே.

10.711 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

10.738 - திருமூலர் ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.

10.908 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.

பெரிய‌ புராண‌ம்
12.000 - சேக்கிழார் பாயிரம்

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

12.010 - சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர்

கற்பனை கடந்த சோதி
கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.

கந்தர் அநுபூதி
யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே

107 பழநி திருப்புகழ் அபகார நிந்தை
தனதான தந்தனத் ...... தனதான
தனதான தந்தனத் ...... தனதான

அபகார நிந்தைபட் ...... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
உபதேச மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
இபமாமு கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.

192 பழநி திருப்புகழ் வசனமிக ஏற்றி
தனதனன தாத்த ...... தனதான
தனதனன தாத்த ...... தனதான
வசனமிக வேற்றி ...... மறவாதே
மனதுதுய ராற்றி ...... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.

212 சுவாமிமலை திருப்புகழ் காமியத் தழுந்தி
தானனத் தனந்த ...... தனதான
தானனத் தனந்த ...... தனதான
காமியத் தழுந்தி ...... யிளையாதே
காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி
ஓவியத் திலந்த ...... மருள்வாயே
தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா
சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா
ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.

330 காஞ்சீபுரம் திருப்புகழ் முட்டுப் பட்டு
தத்தத் தத்தத் ...... தனதான
தத்தத் தத்தத் ...... தனதான
முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
முற்றச் சுற்றிப் ...... பலநாளும்
தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் ...... கருதாதோ
வட்டப் புட்பத் ...... தலமீதே
வைக்கத் தக்கத் ...... திருபாதா
கட்டத் தற்றத் ...... தருள்வோனே
கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.

363 திருவானைக்கா திருப்புகழ் நாடித் தேடி
தானத் தானத் ...... தனதான
தானத் தானத் ...... தனதான
நாடித் தேடித் ...... தொழுவார்பால்
நானத் தாகத் ...... திரிவேனோ
மாடக் கூடற் ...... பதிஞான
வாழ்வைச் சேரத் ...... தருவாயே
பாடற் காதற் ...... புரிவோனே
பாலைத் தேனொத் ...... தருள்வோனே
ஆடற் றோகைக் ...... கினியோனே
ஆனைக் காவிற் ...... பெருமாளே

557 சென்னிமலை திருப்புகழ் பகலிரவினில்
தனதனதனத் ...... தனதான
தனதனதனத் ...... தனதான
பகலிரவினிற் ...... றடுமாறா
பதிகுருவெனத் ...... தெளிபோத
ரகசியமுரைத் ...... தநுபூதி
ரதநிலைதனைத் ...... தருவாயே
இகபரமதற் ...... கிறையோனே
இயலிசையின்முத் ...... தமிழோனே
சகசிரகிரிப் ...... பதிவேளே
சரவணபவப் ...... பெருமாளே.

598 திருச்செங்கோடு திருப்புகழ் காலனிடத்து
தான தனத் ...... தனதான
காலனிடத் ...... தணுகாதே
காசினியிற் ...... பிறவாதே
சீலஅகத் ...... தியஞான
தேனமுதைத் ...... தருவாயே
மாலயனுக் ...... கரியானே
மாதவரைப் ...... பிரியானே
நாலுமறைப் ...... பொருளானே
நாககிரிப் ...... பெருமாளே.

923 கருவூர் திருப்புகழ் மதியால் வித்தகன்
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.


1297 பொதுப்பாடல்கள் திருப்புகழ் பட்டுப் படாத
தத்தத் தனான ...... தனதான
பட்டுப் படாத ...... மதனாலும்
பக்கத்து மாதர் ...... வசையாலும்
சுட்டுச் சுடாத ...... நிலவாலும்
துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான்
தட்டுப் படாத ...... திறல்வீரா
தர்க்கித்த சூரர் ...... குலகாலா
மட்டுப் படாத ...... மயிலோனே
மற்றொப்பி லாத ...... பெருமாளே.

1328 திருவருணை திருப்புகழ் ஏறுமயிலேறி

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்று
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

கந்தர் அலங்காரம் - அருணகிரி நாதர்

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி

அபிராமி அந்தாதி
நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

தனம்தரும்; கல்விதரும்; ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும்; தெய்வ வடிவுந் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக்
காத்தாளை அங்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!

அபிராமியம்மை பதிகம்
கலையாத கல்வியும், குறையாத வயதும்,
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்,
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும்,
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்,
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள் வாமி! அபிராமியே!

பட்டினத்தார் - - பிழைபொறுத்தல் பதிகம்
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்
நினஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்
துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே


This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

kids thirumurai lang itrans