சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

திருமுறை

1 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு உடைய செவியன், விடை  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
2 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அங்கமும் வேதமும் ஓதும் நாவர்  (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்)  
3 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய  (திருவண்ணாமலை)  
4 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு  (திருவீழிமிழலை)  
5 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நன்று உடையானை, தீயது இலானை,  (திருச்சிராப்பள்ளி)  
6 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அவ் வினைக்கு இவ் வினை  (பொது -திருநீலகண்டப்பதிகம்)  
7 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புலன் ஐந்தும் பொறி கலங்கி,  (திருவையாறு)  
8 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுற்றமொடு பற்று அவை துயக்குஅற  (கருப்பறியலூர் (தலைஞாயிறு))  
9 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மந்திரம் ஆவது நீறு; வானவர்  (திருஆலவாய் (மதுரை))  
10 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேய் உறு தோளி பங்கன்,  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
11 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!  (திருவலஞ்சுழி)  
12 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இடரினும், தளரினும், எனது உறு  (திருவாவடுதுறை)  
13 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு  (சீர்காழி)  
14 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்ணின் நல்ல வண்ணம் வாழல்  (திருக்கழுமலம் (சீர்காழி))  
15 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்  (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம்)  
16 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாழ்க அந்தணர், வானவர், ஆன்  (திருஆலவாய் (மதுரை))  
17 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -யாமாமா நீ யாமாமா யாழீகாமா  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
18 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,  (திருஆலவாய் (மதுரை))  
19 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல் ஊர்ப் பெரு மணம்  (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்))  
20 திருநாவுக்கரசர் - தேவாரம் -கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல  (திருவதிகை வீரட்டானம்)  
21 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்  (திருவையாறு)  
22 திருநாவுக்கரசர் - தேவாரம் -தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு  (பொது - திருஅங்கமாலை)  
23 திருநாவுக்கரசர் - தேவாரம் -சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்  (பொது - நமசிவாயத் திருப்பதிகம்)  
24 திருநாவுக்கரசர் - தேவாரம் -பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!  (கோயில் (சிதம்பரம்))  
25 திருநாவுக்கரசர் - தேவாரம் -அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்  (கோயில் (சிதம்பரம்))  
26 திருநாவுக்கரசர் - தேவாரம் -மாசு இல் வீணையும், மாலை  (பொது -தனித் திருக்குறுந்தொகை)  
27 திருநாவுக்கரசர் - தேவாரம் -கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!  (திருவாரூர்)  
28 திருநாவுக்கரசர் - தேவாரம் -அப்பன் நீ, அம்மை நீ,  (பொது -தனித் திருத்தாண்டகம்)  
29 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்  (திருவெண்ணெய்நல்லூர்)  
30 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன் ஆர் மேனியனே! புலித்தோலை  (திருமழபாடி)  
31 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்  (திருப்புகலூர்)  
32 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தில்லை வாழ் அந்தணர் தம்  (திருவாரூர்)  
33 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,  (திருப்புன்கூர்)  
34 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்  (திருவாரூர்)  
35 சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாட்டு -தான் எனை முன் படைத்தான்;  (திருக்கயிலாயம்)  
36 திருமாளிகைத் தேவர் - திருவிசைப்பா -திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே  (கோயில் (சிதம்பரம்))  
37 சேந்தனார் - திருப்பல்லாண்டு -சேந்தனார் - கோயில்  (கோயில் (சிதம்பரம்))  
38 திருமூலர் - திருமந்திரம் -பாயிரம்  ()  
39 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்  ()  
40 திருமூலர் - திருமந்திரம் -முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு  ()  
41 திருமூலர் - திருமந்திரம் -ஆறாம் தந்திரம் - 10. திருநீறு  ()  
42 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்  ()  
43 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்  ()  
44 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை  ()  
45 திருமூலர் - திருமந்திரம் -ஏழாம் தந்திரம் - 31. போதன்  ()  
46 காரைக்கால் அம்மையார்  - திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1 -திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்  (திருவாலங்காடு (பழையனூர்))  


Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.001   தோடு உடைய செவியன், விடை  
பண் - நட்டபாடை   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி )
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.006   அங்கமும் வேதமும் ஓதும் நாவர்  
பண் - நட்டபாடை   (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் மாணிக்கவண்ணர் கணபதீசுவரர் வண்டுவார்குழலி திருக்குழல்நாயகி)
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,
மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.010   உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய  
பண் - நட்டபாடை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.092   வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு  
பண் - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
வாசி தீரவே, காசு நல்குவீர்!
மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.098   நன்று உடையானை, தீயது இலானை,  
பண் - குறிஞ்சி   (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)
நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு
ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.116   அவ் வினைக்கு இவ் வினை  
பண் - வியாழக்குறிஞ்சி   (பொது -திருநீலகண்டப்பதிகம் )
அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.130   புலன் ஐந்தும் பொறி கலங்கி,  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி,
அலமந்த போது ஆக, அஞ்சேல்! என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.031   சுற்றமொடு பற்று அவை துயக்குஅற  
பண் - இந்தளம்   (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தநாதர் கோல்வளையம்மை)
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.066   மந்திரம் ஆவது நீறு; வானவர்  
பண் - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.085   வேய் உறு தோளி பங்கன்,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) )
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.106   என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!  
பண் - நட்டராகம்   (திருவலஞ்சுழி சித்தீசநாதர் பெரியநாயகியம்மை)
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயன் இடை,முழுமணித்தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை, வாய் ஆரப்
பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும் அதனாலே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.004   இடரினும், தளரினும், எனது உறு  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
இடரினும், தளரினும், எனது உறு நோய்
தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.022   துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு  
பண் - காந்தாரபஞ்சமம்   (சீர்காழி )
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும்,
வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.024   மண்ணின் நல்ல வண்ணம் வாழல்  
பண் - கொல்லி   (திருக்கழுமலம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.049   காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்  
பண் - கௌசிகம்   (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் )
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.054   வாழ்க அந்தணர், வானவர், ஆன்  
பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) )
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.117   யாமாமா நீ யாமாமா யாழீகாமா  
பண் - கௌசிகம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மாயாழீ! காமா! காண் நாகா!
காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.120   மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,  
பண் - புறநீர்மை   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.125   கல் ஊர்ப் பெரு மணம்  
பண் - அந்தாளிக்குறிஞ்சி   (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) சிவலோகத்தியாகேசர் நங்கையுமைநாயகியம்மை)
கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா கழுமலம்
பல் ஊர்ப் பெரு மணம் பாட்டு மெய் ஆய்த்தில?
சொல் ஊர்ப் பெரு மணம் சூடலரே! தொண்டர்
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.001   கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல  
பண் - கொல்லி   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.003   மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்  
பண் - காந்தாரம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.009   தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு  
பண் - சாதாரி   (பொது - திருஅங்கமாலை )
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து,
தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.011   சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்  
பண் - காந்தாரம்   (பொது - நமசிவாயத் திருப்பதிகம் )
சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,
நல்-துணை ஆவது நமச்சிவாயவே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.023   பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே!  
பண் - கொல்லி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே! பரம யோகீ!
எத்தினால் பத்தி செய்கேன்? என்னை நீ இகழவேண்டா;
முத்தனே! முதல்வா! தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே!

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.001   அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்  
பண் - பழந்தக்கராகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.090   மாசு இல் வீணையும், மாலை  
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
மாசு இல் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே-
ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 -ஆம் திருமுறை   பதிகம் 6.032   கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!  
பண் - போற்றித்திருத்தாண்டகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
கழல் அடைந்தார் செல்லும் கதியே, போற்றி!
அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி!
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி!
வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி!
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே,
போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

[1]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6 -ஆம் திருமுறை   பதிகம் 6.095   அப்பன் நீ, அம்மை நீ,  
பண் - திருத்தாண்டகம்   (பொது -தனித் திருத்தாண்டகம் )
அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,| அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,| ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,| துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,| இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.

[1]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.001   பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்  
பண் - இந்தளம்   (திருவெண்ணெய்நல்லூர் தடுத்தாட்கொண்டவீசுவரர் வேற்கண்மங்கையம்மை)
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

[1]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.024   பொன் ஆர் மேனியனே! புலித்தோலை  
பண் - நட்டராகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பநாதர் அழகம்மை)
பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து,
மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

[1]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.034   தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்  
பண் - கொல்லி   (திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[1]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.039   தில்லை வாழ் அந்தணர் தம்  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருவாரூர் )
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;
திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;
இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்;
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்;
விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;
அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[1]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.055   அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,  
பண் - தக்கேசி   (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணம் ஆக,
வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு    அடியேன்,
எந்தை! நீ எனை நமன் தமர் நலியின், இவன் மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .

[1]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.059   பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்  
பண் - தக்கேசி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை,
பின்னை என் பிழையைப் பொறுப்பானை, பிழை எலாம் தவிரப் பணிப்பானை,
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை,
அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

[1]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.100   தான் எனை முன் படைத்தான்;  
பண் - பஞ்சமம்   (திருக்கயிலாயம் )
தான் எனை முன் படைத்தான்; அது அறிந்து தன் பொன் அடிக்கே
நான் என பாடல்? அந்தோ! நாயினேனைப் பொருட்படுத்து,
வான் எனை வந்து எதிர்கொள்ள, மத்தயானை அருள்புரிந்து(வ்)
ஊன் உயிர் வேறு செய்தான்-நொடித்தான்மலை உத்தமனே.


[1]

Back to Top
திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
9 -ஆம் திருமுறை   பதிகம் 9.001   திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !
   உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
   சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
   அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
   தொண்டனேன் விளம்புமா விளம்பே.
[1]

Back to Top
சேந்தனார்   திருப்பல்லாண்டு  
9 -ஆம் திருமுறை   பதிகம் 9.029   சேந்தனார் - கோயில்  
பண் -   (கோயில் (சிதம்பரம்) )
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
   வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
   புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
   யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
   பல்லாண்டு கூறுதுமே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.100   பாயிரம்  
பண் -   ( )
கடவுள் வாழ்த்து

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.101   முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்  
பண் -   ( )
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.102   முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு  
பண் -   ( )
வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. 

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.610   ஆறாம் தந்திரம் - 10. திருநீறு  
பண் -   ( )
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.705   ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்  
பண் -   ( )
அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம தாமே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.706   ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்  
பண் -   ( )
உருவும் அருவும் உருவோ டருவும்
மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்கும்
குருவும் எனநிற்கும் கொள்கைய னாகும்
தருவென நல்கும் சதாசிவன் தானே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.711   ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை  
பண் -   ( )
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

[1]

Back to Top
திருமூலர்   திருமந்திரம்  
10 -ஆம் திருமுறை   பதிகம் 10.731   ஏழாம் தந்திரம் - 31. போதன்  
பண் -   ( )
சீவன் எனச்சிவன் என்னவெவ் வேறில்லை
சீவ னார்சிவ னாரை யறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே.

[1]

Back to Top
காரைக்கால் அம்மையார்    திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1  
11 -ஆம் திருமுறை   பதிகம் 11.002   திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்  
பண் -   (திருவாலங்காடு (பழையனூர்) )
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.

[1]

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai selected first song lang cyrillic