சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  

ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்

தனந்தரும் வயிரவன் தளிரடி
பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள்
வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை
சிந்தையில் ஏற்றவனே தனக்கிலை யீடு
யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)

வாழ்வினில் வளந்தர வையகம்
நடந்தான் வாரியே வழங்கிடுவான் தாழ்வுகள்
தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென
வந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
காவலாய் வந்திடுவான் தனக்கிலை யீடு
யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)

முழுநில வதனில் முறையொடு
பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச்
செய்திடுவான் முழுமலர்த் தாமரை மாலையை
ஜெபித்து முடியினில் சூடிடுவான் தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (3)

நான்மறை ஓதுவார் நடுவினில்
இருப்பான் நான்முகன் நானென்பான் தேனினில்
பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
நிறைத்திடுவான் வான்மழை எனவே வளங்களைப்பொழிவான்
வாழ்த்திட வாழ்த்திடுவான் தனக்கிலை யீடு
யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)

பூதங்கள் யாவும் தனக்குள்ளே
வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள் ஒலிக்கும்
நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
யாவையும் போக்கிடுவான் தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (5)

பொழில்களில் மணப்பான் பூசைகள்
ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும்
நின்மலன் நானென்பான் தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (6)

சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
செய்யென்றான் பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான் தனக்கிலை யீடு
யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)

ஜெய ஜெய வடுக நாதனே
சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய் தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் (8)


காலபைரவ அஷ்டகம்


தேவ ராஜ சேவ்ய மான பாவனாக்ரி பங்கஜம்.
வ்யால யஞ்க சூத்ர மிந்து சேகரம் கிருபாகரம்.
நாரதாதி யோகி விருந்த வந்திதம் திகம்பரம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

பானு கோட்டி பாஸ்வரம் , பவாப்தி தாரகம் பரம்.
நீலகண்ட மீப்சிதார்த்த தாயக்கம் திரிலோஷனம்.
கால கால மம்புஜாக்ச மக்ஷ சூழ மக்ஷரம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

சூல தண்ட பாச தண்ட பாணி மாதி காரணம்.
ஷ்யாம காய மாதி தேவமக்ஷரம் நிராமயம்.
பீம விக்ரமம் பிரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

புக்தி முக்தி தாயக்கம் பிரசஷ்த சாரு விக்ரகம் ,
பக்த வத்சலம் சிவம். சமஸ்த லோக விக்ரகம்.
விநிக்வணன் மனோக்ன ஹேம கிண்கிணி லசத் கடீம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

தர்ம சேது பாலகம் த்வ தர்ம மார்க்க நாசகம்.
கர்ம பாச மோச்சகம் சுஷர்ம தாயக்கம் விபும்.
சுவர்ண வர்ண சேஷ பாச ஷோபிதாங்க மண்டலம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

ரத்ன பாதுக பிரபபிராம பாதயுக்மகம்.
நித்யமத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்சனம்.
ம்ருத்யு தர்ப்ப நாசனம் கராலடம்ஷ்ற்ற மோக்ஷனம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

அட்டஹாச பின்ன பத்ம சண்ட கோச சந்ததிம்.
திருஷ்டி பாட நஷ்ட பாப ஜால முக்ர சாசனம்.
அஷ்டசித்தி தாயகம் கபால மாளிகந்தரம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

பூத சங்க நாயகம் , விசால கீர்த்தி தாயகம்.
காசி வாச லோக புண்ய பாப ஷோதகம் விபும்.
நீதி மார்க்க கொவிதம் புராதனம் ஜகத்பதிம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

காலபைரவாஷ்டகம் படந்தி யெ மனோகரம்.
ஞான முக்தி சாதகம் விசித்ர புண்ய வர்த்தனம்.
சோக மோக தைன்ய லோப கோப தாப நாசனம்.
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி சந்நிதிம் த்ருவம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
காலபைரவம் பஜே
காலபைரவம் பஜே Back to Top

This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

kalaBhairavarAstakam