சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Easy version Classic version Selected Thirumurai
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.001  
தோடு உடைய செவியன், விடை
பண் - நட்டபாடை (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி
உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து உன் செய்கை இதுவாயின் உடன் வருக எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரம தீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங் களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார். இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத் தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப அம்மே அப்பா என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி னார். பெருமான் உமையம்மையை நோக்கி அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார். அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில் நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவ ராய் வினவினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் அருளிச்செய்தார்.
முன் பிறப்பு நல் வினை கை கூட, இறைவன் அருள் பெற Audio: https://www.youtube.com/watch?v=Yq-NOZQxd64
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி, காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்- ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த, பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! | [1] |
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு, வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த, பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! | [2] |
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி, ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப் பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! | [3] |
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில் உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில் பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! | [4] |
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும் இவன்! என்ன அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது என்னப் பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! | [5] |
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி, இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்- கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப் பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே! | [6] |
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த, உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம் பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! | [7] |
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்- துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! | [8] |
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும், நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்- வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த, பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! | [9] |
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்- மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது! என்ன, பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே! | [10] |
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய, பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை, ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.006  
அங்கமும் வேதமும் ஓதும் நாவர்
பண் - நட்டபாடை (திருத்தலம் திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் ; அருள்தரு வண்டுவார்குழலி திருக்குழல்நாயகி உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணர் கணபதீசுவரர் திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் திருமருகலில் தங்கியிருந்தபோது, சிறுத் தொண்ட நாயனார் அவரை வணங்கி மீண்டும் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். மருகற் பெருமானை வணங்கி விடைபெறச் சென்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் செங்காட்டங்குடிக் காட்சியைக் காட்ட இரு தலங்களையும் இணைத்து அங்கமும் வேதமும் என்ற திருப்பதிகம் பாடிப் போற்றிச் சிறுத் தொண்டருடன் செங்காட்டங்குடி சென்று கணபதீச் சுரத்தை வழிபட்டுக் கொண்டு சிலநாள் அங்குத் தங்கியிருந்தார். Audio: https://www.youtube.com/watch?v=9o9uMkq3Qd4
Audio: https://sivaya.org/audio/1.006_angamum vedhamum.mp3
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ, மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே? | [1] |
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரிநூல் மறையாளர் ஏத்த, மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் செய் தவ நால் மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே? | [2] |
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர், தொகும் மறையோர்கள், வளர்த்த செந்தீ மால்புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கால் புல்கு பைங் கழல் ஆர்க்க ஆடும் கணபதி யீச்சுரம் காமுறவே? | [3] |
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நால் மறையோர் வழிபாடு செய்ய, மா மருவும் மணிக் கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே? | [4] |
பாடல் முழவும் விழவும் ஓவாப் பல் மறையோர் அவர்தாம் பரவ, மாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் சேடகம் மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே? | [5] |
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்தொறும் போற்றி இசைப்ப, மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் சினை கெழு தண் வயல், சோலை, சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே? | [6] |
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடுந்தோள் வரையால் அடர்த்து, மாண் தங்கு நூல் மறையோர் பரவ, மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் சேண் தங்கு மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே? | [7] |
அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவு அணையானும், அறிவு அரிய, மந்திரவேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே? | [8] |
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்குத் தின்னும் நிலை அமண் தேரரை நீங்கி நின்று, நீதர் அல்லார் தொழும் மா மருகல், மலைமகள் தோள் புணர்வாய்! அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே? | [9] |
நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன், நலம் திகழும் மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன்மேல் மொழிந்த, சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் சூலம் வல்லான் கழல் ஏத்து, பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே. | [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.010  
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய
பண் - நட்டபாடை (திருத்தலம் திருவண்ணாமலை ; அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=JseyYCTqhG0
Audio: https://sivaya.org/audio/1.010 unnamulai.mp3
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன், பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ, மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும் அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே. | [1] |
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி, தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற, ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல் பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே. | [2] |
பீலிமயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் சூலி மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல், ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல் காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே. | [3] |
உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகு எல்லாம் எதிரும் பலி உணவு ஆகவும், எருது ஏறுவது அல்லால், முதிரும் சடை இளவெண் பிறை முடிமேல் கொள, அடி மேல் அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே. | [4] |
மரவம், சிலை, தரளம், மிகு மணி, உந்து வெள் அருவி அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல் உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார், குரவம் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே? | [5] |
பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப் பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக் கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே. | [6] |
கரி காலன, குடர் கொள்வன, கழுது ஆடிய காட்டில் நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள, எரி ஆடிய இறைவர்க்கு இடம் இனவண்டு இசை முரல, அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே. | [7] |
ஒளிறூ புலி அதள் ஆடையன், உமை அஞ்சுதல் பொருட்டால், பிளிறூ குரல் மதவாரணம் வதனம் பிடித்து உரித்து, வெளிறூபட விளையாடிய விகிர்தன்; இராவணனை அளறூபட அடர்த்தான்; இடம் அண்ணாமலை அதுவே. | [8] |
விளவு ஆர் கனி பட நூறிய கடல்வண்ணனும், வேதக் கிளர் தாமரை மலர்மேல் உறை கேடு இல் புகழோனும், அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் தளராமுலை, முறுவல், உமை தலைவன் அடி சரணே! | [9] |
வேர் வந்து உற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும், மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும், ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல், கூர் வெண் மழுப்படையான், நல கழல் சேர்வது குணமே! | [10] |
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல், அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை, கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.018  
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,
பண் - நட்டபாடை (திருத்தலம் திருநின்றியூர் ; அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு இலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=vMdjKpqwUzU
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு; பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக் காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும் நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே. | [1] |
அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர்; அடியார், நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில் நச்சம் மிடறு உடையார், நறுங்கொன்றை நயந்து ஆளும் பச்சம் உடை அடிகள், திருப்பாதம் பணிவாரே. | [2] |
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும், ஆர அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை; நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள், நின்றியூரில் உறையும் இறை, அல்லது எனது உள்ளம் உணராதே! | [3] |
பூண்ட வரைமார்பில் புரிநூலன், விரி கொன்றை ஈண்ட அதனோடு ஒரு பால் அம்மதி அதனைத் தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில் ஆண்ட கழல் தொழல் அல்லது, அறியார் அவர் அறிவே! | [4] |
குழலின் இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும் நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில், அழலின் வலன் அங்கையது ஏந்தி, அனல் ஆடும் கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே. | [5] |
மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒரு பாகம், சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த வீரன், மலி அழகு ஆர் பொழில் மிடையும் திரு நின்றி யூரன், கழல் அல்லாது, எனது உள்ளம் உணராதே! | [6] |
பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும் பெற்றி அது ஆகித் திரி தேவர் பெருமானார், சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும் நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே. | [7] |
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான், அல்லர் என, ஆவர் என, நின்றும் அறிவு அரிய நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம் செல்வர் அடி அல்லாது, என சிந்தை உணராதே! | [8] |
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே, நெறி இல்லவர் குறிகள் நினையாதே, நின்றியூரில் மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே! | [9] |
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக நின்று அங்கு ஒருவிரலால் உற வைத்தான் நின்றியூரை நன்று ஆர்தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன் குன்றாத் தமிழ் சொல்லக் குறைவு இன்றி நிறை புகழே. | [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.023  
மடையில் வாளை பாய, மாதரார் குடையும்
பண் - தக்கராகம் (திருத்தலம் திருக்கோலக்கா ; அருள்தரு ஓசைகொடுத்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்தபுரீசர் திருவடிகள் போற்றி )
உமையம்மையார் அளித்த ஞானவாரமுதம் உண்டு திரு நெறிய தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்து மறுநாட் காலையில் துயிலுணர்ந் தெழுந்து நீராடி திருக்கழுமலத்தீசனை வணங்கிப் போற்றி, சீகாழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை உடையவ ராய் அத்தலத்தை அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று மடையில் வாளை எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தைத் தம் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். கோலக்கா இறைவன் பிள்ளையார் கைகள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம் பந்தருக்கு அளித்தருளினார். ஞானசம்பந்தர் அத்தாளத்தைத் தலை மேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தலயாத்திரையாக இது அமைந்தது.
நல்ல தாளம், இசை கை வர Audio: https://www.youtube.com/watch?v=C9dg_z7o0uY
Audio: https://sivaya.org/audio/1.023 Madaiyil Vaalai.mp3
மடையில் வாளை பாய, மாதரார் குடையும் பொய்கைக் கோலக்கா உளான் சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீழ் உடையும், கொண்ட உருவம் என்கொலோ? | [1] |
பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி கொண்டான், கோலக்காவு கோயிலாக் கண்டான், பாதம் கையால் கூப்பவே, உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே. | [2] |
பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை, கோணல் பிறையன், குழகன், கோலக்கா மாணப் பாடி, மறை வல்லானையே பேண, பறையும், பிணிகள் ஆனவே. | [3] |
தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்! மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான், குழுக் கொள் பூதப்படையான், கோலக்கா இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே! | [4] |
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா, எயிலார் சாய எரித்த எந்தை தன் குயில் ஆர் சோலைக் கோலக்காவையே பயிலா நிற்க, பறையும், பாவமே. | [5] |
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்! கடி கொள் கொன்றை கலந்த சென்னியான், கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம் அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே! | [6] |
நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம், குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான் கழலால் மொய்த்த பாதம் கைகளால் தொழலார் பக்கல் துயரம் இல்லையே. | [7] |
எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன் குறி ஆர் பண் செய் கோலக்காவையே நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. | [8] |
நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில் ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா, கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே! | [9] |
பெற்ற மாசு பிறக்கும் சமணரும், உற்ற துவர் தோய் உரு இலாளரும், குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப் பற்றிப் பரவ, பறையும், பாவமே. | [10] |
நலம் கொள் காழி ஞானசம்பந்தன், குலம் கொள் கோலக்கா உளானையே வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார், உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.041  
சீர் அணி திகழ் திருமார்பில்
பண் - தக்கராகம் (திருத்தலம் திருப்பாம்புரம் ; அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை (எ) வண்டார்பூங்குழலி உடனுறை அருள்மிகு பாம்புரேசர் (எ) பாம்புரநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=Eogq2gNyTwQ
சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர், வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர், கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும் பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே. | [1] |
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர், அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள், மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரைமலர் தூவ, பக்கம் பல் பூதம் பாடிட, வருவார் பாம்புர நன் நகராரே. | [2] |
துன்னலின் ஆடை உடுத்து, அதன்மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி, பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி, பித்தர் ஆய்த் திரியும் எம்பெருமான், மன்னு மா மலர்கள் விட, நாளும் மாமலையாட்டியும் தாமும், பன்னும் நால்மறைகள் பாடிட, வருவார் பாம்புர நன்நகராரே. | [3] |
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான், நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர், நள் இருள் நடம் செயும் நம்பர் மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட, மாடமாளிகை தன்மேல் ஏறி, பஞ்சு சேர் மெல் அடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்நகராரே. | [4] |
நதி அதன் அயலே நகுதலை மாலை, நாள்மதி, சடைமிசை அணிந்து, கதி அது ஆக, காளி முன் காண, கான் இடை நடம் செய்த கருத்தர்; விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவாப் பதி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே. | [5] |
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்; ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்; மாதினை இடமா வைத்த எம் வள்ளல்; மான்மறி ஏந்திய மைந்தர்; ஆதி, நீ அருள்! என்று அமரர்கள் பணிய, அலைகடல் கடைய, அன்று எழுந்த பாதி வெண்பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன்நகராரே. | [6] |
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து, மலரவற்கு ஒரு முகம் ஒழித்து, ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி, அனல் அது ஆடும் எம் அடிகள்; காலனைக் காய்ந்து தம் கழல் அடியால், காமனைப் பொடிபட நோக்கி, பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன்நகராரே. | [7] |
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க, மெல்லிய திருவிரல் ஊன்றி, அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள்; அனல் அது ஆடும் எம் அண்ணல் மடக்கொடி அவர்கள் வருபுனல் ஆட, வந்து இழி அரிசிலின் கரைமேல் படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன்நகராரே. | [8] |
கடி படு கமலத்து அயனொடு மாலும், காதலோடு அடிமுடி தேட, செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீவணர்; எம்முடைச் செல்வர்; முடி உடை அமரர் முனிகணத்தவர்கள் முறை முறை அடி பணிந்து ஏத்த, படி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே. | [9] |
குண்டர், சாக்கியரும், குணம் இலாதாரும், குற்றுவிட்டு உடுக்கையர் தாமும், கண்ட ஆறு உரைத்துக் கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார்; வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்; பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்நகராரே. | [10] |
பார் மலிந்து ஓங்கிப் பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரைக் கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாடக் கழுமல முது பதிக் கவுணி நார் மலிந்து ஓங்கும் நால் மறை ஞானசம்பந்தன்-செந்தமிழ் வல்லார் சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி, சிவன் அடி நண்ணுவர் தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.044  
துணி வளர் திங்கள் துளங்கி
பண் - தக்கராகம் (திருத்தலம் திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) ; அருள்தரு பாலசுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாற்றறிவரதர் திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில் புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந் தார். அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் என்பான் முயலகன் என்ற நோயினால் வருந்தி வந்த தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் பாச்சிலாச் சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தியிருந் தான். திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தில் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு அம்மழவனை வினவியறிந்து அப்பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயைப் போக்கி யருளுமாறு இறைவனை வேண்டி, துணிவளர்திங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். அந்நிலையில் அப்பெண், நோய் நீங்கி நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவன் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொண்டான்.
இரத்த அழுத்த, நீரிழிவு நோய்கள் நீங்க, மூர்ச்சையிலிருந்து எழுவதற்கும், போதைப் பொருள்களிருந்து மீள ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=Ieof1SKHvNQ
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து, பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்; அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே? | [1] |
கலை புனை மானுரி-தோல் உடை ஆடை; கனல் சுடரால் இவர் கண்கள்; தலை அணி சென்னியர்; தார் அணி மார்பர்; தம் அடிகள் இவர் என்ன, அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற இலை புனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே? | [2] |
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை வேண்டுவர்; பூண்பது வெண்நூல்; நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடம் ஆக நண்ணுவர், நம்மை நயந்து; மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே? | [3] |
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல் தரு தூமதிக்கண்ணி புன மலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன, வனமலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மனமலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே? | [4] |
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி, வளர்சடை மேல் புனல் வைத்து, மோந்தை, முழா, குழல், தாளம், ஒர் வீணை, முதிர ஓர் வாய் மூரி பாடி, ஆந்தைவிழிச் சிறு பூதத்தார் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே? | [5] |
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி, ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை பால் தரு மேனியர் பூதத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே? | [6] |
பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு, ஆமை, வெண்நூல், புனை கொன்றை, கொங்கு இள மாலை, புனைந்து அழகு ஆய குழகர்கொல் ஆம் இவர் என்ன, அங்கு இளமங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே? | [7] |
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை ஈடு அழித்து, மூவரிலும் முதல் ஆய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்; யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே? | [8] |
மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது சேவடி தன்னை நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை, என இவர் நின்றதும் அல்லால், ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற பால் அது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே? | [9] |
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர் இருபோதும்; ஊணொடு கூடிய உட்கும் நகையால் உரைகள் அவை கொள வேண்டா; ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற பூண் நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே? | [10] |
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன, நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன் தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.049  
போகம் ஆர்த்த பூண் முலையாள்
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருநள்ளாறு ; அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி )
யாழ்ப்பாணர் அப்பதிகஇசை தம் கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார். ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து போகமார்த்த பூண் முலையாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.
பச்சை திருப்பதிகம் - வினை நீக்கம் - சனிக்கிரக தாக்குதல் நீங்க ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=ba-MJnMHA28
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம் பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி, ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே. | [1] |
தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப் பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன், ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த நாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே. | [2] |
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர் பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த, மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை நால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே. | [3] |
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி, பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர, நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. | [4] |
ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம் ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி, நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. | [5] |
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள், எங்கள் உச்சி எம் இறைவன்! என்று அடியே இறைஞ்ச, தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம் நங்கள் உச்சி நம்பெருமான்-மேயது நள்ளாறே. | [6] |
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர, அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய், செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளே நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. | [7] |
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால் சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப் பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி, நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. | [8] |
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி, அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம் எண்ணல் ஆகா, உள் வினை என்று எள்க வலித்து, இருவர் நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே. | [9] |
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள் பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்! மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே. | [10] |
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன், நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார் உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.052  
மறை உடையாய்! தோல் உடையாய்!
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருநெடுங்களம் ; அருள்தரு ஒப்பிலாநாயகியம்மை உடனுறை அருள்மிகு நித்தியசுந்தரர் திருவடிகள் போற்றி )
இடர் களையும் பதிகம்
அவமானங்கள், வீண்பழி காரியத்திலும் தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு ஓத வேண்டிய பதிகம். Audio: https://www.youtube.com/watch?v=u5teN1hhIxI
மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும் பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால், குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [1] |
கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத் தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும் நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [2] |
நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத, என் அடியான் உயிரை வவ்வேல்! என்று அடல் கூற்று உதைத்த பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும் நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [3] |
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்! அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா! தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ் நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [4] |
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி சேர் தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி, தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழல் கீழ் நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [5] |
விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து, கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்! அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும் நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [6] |
கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால் மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல் ஏறு கொண்டாய்! சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [7] |
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை, அன்றி நின்ற, அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்! என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி, இராப்பகலும், நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [8] |
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும், சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்! கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான்! கேடு இலாப் பொன் அடியின் நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [9] |
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும், தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்; துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே! | [10] |
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச் சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால் நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.062  
நாள் ஆய போகாமே, நஞ்சு
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருக்கோளிலி (திருக்குவளை) ; அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு கோளிலியப்பர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=apnzZFYxrWY
நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம் கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக் கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே. | [1] |
ஆடு அரவத்து, அழகு ஆமை, அணி கேழல் கொம்பு, ஆர்த்த தோடு அரவத்து ஒரு காதன், துணை மலர் நல் சேவடிக்கே பாடு அரவத்து இசை பயின்று, பணிந்து எழுவார் தம் மனத்தில் கோடரவம் தீர்க்குமவன்-கோளிலி எம்பெருமானே. | [2] |
நன்று நகு நாள்மலரால், நல் இருக்கு மந்திரம் கொண்டு, ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல் கன்றி வரு காலன் உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்- கொன்றைமலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே. | [3] |
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும் சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அத் தந்தைதனைச் சாடுதலும், சண்டீசன் என்று அருளி, கொந்து அணவும் மலர் கொடுத்தான்-கோளிலி எம்பெருமானே. | [4] |
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும் நல் பூசனையால், நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும் பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான்- கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே. | [5] |
தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை, ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி, அங்கணன் என்று ஆதரிக்கும் நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன்- கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே. | [6] |
கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான், சொல்-நவிலும் மாமறையான், தோத்திரம் செய் வாயின் உளான், மின் நவிலும் செஞ்சடையான்; வெண்பொடியான், அம் கையினில் கொல்-நவிலும் சூலத்தான்-கோளிலி எம்பெருமானே. | [7] |
அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப, சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற, அவன் உடல் நெரிந்து, மந்திரத்த மறை பாட, வாள் அவனுக்கு ஈந்தானும் கொந்து அரத்த மதிச் சென்னிக் கோளிலி எம்பெருமானே. | [8] |
நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணாத் தாணு, எனை ஆள் உடையான், தன் அடியார்க்கு அன்பு உடைமை பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்- கோணல் இளம்பிறைச் சென்னிக் கோளிலி எம்பெருமானே. | [9] |
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல் இடுக்கண் வரும் மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்! நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல் கழல் கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே. | [10] |
நம்பனை, நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும் கொம்பு அனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை, வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண் தமிழ் கொண்டு இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.092  
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருவீழிமிழலை ; அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில்தங்கி யிருந்த காலத்து மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. அடியார்களும் துயருற் றனர். அதனை அறிந்த பிள்ளையார் கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்ப மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று வாசிதீரவே காசு நல்குவீர் எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார். சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வறுமை நீங்கும் Audio: https://www.youtube.com/watch?v=jNtQljtdzhE
Audio: https://sivaya.org/audio/1.092 Vaasi Theerave.mp3
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே. | [1] |
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்! கறை கொள் காசினை முறைமை நல்குமே! | [2] |
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்! பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே! | [3] |
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்! கூறு மிழலையீர்! பேறும் அருளுமே! | [4] |
காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்! நாம மிழலையீர்! சேமம் நல்குமே! | [5] |
பிணி கொள் சடையினீர்! மணி கொள் மிடறினீர்! அணி கொள் மிழலையீர்! பணிகொண்டு அருளுமே! | [6] |
மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்! கங்கை முடியினீர்! சங்கை தவிர்மினே! | [7] |
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்! பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே! | [8] |
அயனும் மாலும் ஆய் முயலும் முடியினீர்! இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே! | [9] |
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்; வெறி கொள் மிழலையீர்! பிறிவு அது அரியதே. | [10] |
காழி மா நகர் வாழி சம்பந்தன் வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.094  
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் ஏறிப் புறப்பட்டு அகத்தியான்பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றம் பணிந்து மதுரையின் எல்லையை அடைந்தார், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து ஊர் எல்லையில் வரவேற்குமாறு குலச்சிறை யாரை அனுப்பியிருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந் தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகை யிலிருந்து இறங்கி அரசியார்க்கும் அமைச்சர்க்கும் திருவருளால் நன்மைகள் விளைக என வாழ்த்தினார். குலச்சிறையார் இன்று தாங்கள் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையோம். இனி எங்கள் நாட்டில் திருநீற்றொளி விளங்குவது உறுதி என முகமனுரை கூறி, மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதைத் தெரிவித்தார். மேலும் மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி அதுவே திருவால வாய் எனக் கூறக்கேட்டு மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறை யாருடன் வலங்கொண்டு பணிந்து நீலமாமிடற்று எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ மதுரையை தரிசித்த பலன் கிடைக்கும் Audio: https://www.youtube.com/watch?v=vCNP3lGfb-E
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே. | [1] |
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார் சீலமே சொலீர், காலன் வீடவே! | [2] |
ஆலநீழலார், ஆலவாயிலார், காலகாலனார் பால் அது ஆமினே! | [3] |
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய் பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்மினே! | [4] |
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் பாடியே, மனம் நாடி, வாழ்மினே! | [5] |
அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை எண்ணியே தொழ, திண்ணம் இன்பமே. | [6] |
அம் பொன்-ஆலவாய் நம்பனார் கழல் நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே. | [7] |
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய் உரைக்கும் உள்ளத்தார்க்கு, இரக்கம் உண்மையே. | [8] |
அருவன், ஆலவாய் மருவினான்தனை இருவர் ஏத்த, நின்று உருவம் ஓங்குமே. | [9] |
ஆரம் நாகம் ஆம் சீரன், ஆலவாய்த் தேர் அமண் செற்ற வீரன் என்பரே. | [10] |
அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன், முடிவு இல் இன்தமிழ் செடிகள் நீக்குமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.098  
நன்று உடையானை, தீயது இலானை,
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருச்சிராப்பள்ளி ; அருள்தரு மட்டுவார்குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானேசுவரர் திருவடிகள் போற்றி )
சுக பிரசவம் அமைவதற்கு ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=bgfBxgqq_lY
Audio: https://sivaya.org/audio/1.098 Nantruudayanai.mp3
Audio: https://sivaya.org/audio/1.098 nandurudaiyanai.mp3
நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை, சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்- குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே. | [1] |
கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான், செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி, வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா! நீ பைம்முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே? | [2] |
மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல் செந் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி, சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடை ஊரும் எம்தம் அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே. | [3] |
துறை மல்கு சாரல், சுனை மல்கு நீலத்து இடை வைகி, சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி, கறை மல்கு கண்டன், கனல் எரி ஆடும் கடவுள், எம் பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே! | [4] |
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும் சிலை வரை ஆகச் செற்றனரேனும், சிராப்பள்ளித் தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்! நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே? | [5] |
வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது செய்யபொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார், தையல் ஒர்பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில் ஐயமும் கொள்வர்; ஆர், இவர் செய்கை அறிவாரே? | [6] |
வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும் சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார், பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக, பெருமானார், தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே! | [7] |
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன் தன் தலை கலன் ஆகப் பலி திரிந்து உண்பர்; பழி ஓரார் சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லுங்கால், சில அலபோலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே! | [8] |
அரப்பள்ளியானும் மலர் உறைவானும், அறியாமைக் கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும் இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே? | [9] |
நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள்காலை ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், உரைக்கும் சொல் பேணாது, உறு சீர் பெறுதும் என்பீர்! எம்பெருமானார் சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே! | [10] |
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்- ஞானசம்பந்தன்-நலம் மிகு பாடல் இவை வல்லார் வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.116  
அவ் வினைக்கு இவ் வினை
பண் - வியாழக்குறிஞ்சி (திருத்தலம் பொது -திருநீலகண்டப்பதிகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பாச்சிலாச் சிராமத்துப் பரமனைப் பணிந்து போற்றிய ஞான சம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான தலங்களை வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டிலுள்ள கொடிமாடச் செங்குன்றூரைச் சென்றடைந்தார். அங்கு விளங்கும் மாதொரு பாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் ஆனதால் அந்நிலத்தின் இயல்புப்படி பனி நோய் என்னும் குளிர் காய்ச்சல் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீல கண்டப் பெருமானைப் போற்றி அவ்வினைக்கு இவ்வினை என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்கட்கே யன்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.
விஷ சுரம் , விஷக்கடி முதலியன ம்ற்றும் தொண்டையில் உள்ள கோளாறுகள் நீங்குவதற்கும் , செய்வினை , பில்லி , சூனியம் பாதிக்காமல் இருக்கவும் ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=EELVXS3xdRY
அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்! உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே? கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்; செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்! | [1] |
காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி மனத்தால், ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று, இருபொழுதும், பூவினைக் கொய்து, மலர் அடி போற்றுதும், நாம் அடியோம்; தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்! | [2] |
முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம், விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்! இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்! சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்! | [3] |
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும், புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே! கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்; திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்! | [4] |
மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்! கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ? சொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்; செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்! | [5] |
மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்தி, பிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம், பறித்த மலர் கொடுவந்து, உமை ஏத்தும் பணி அடியோம்; சிறப்பு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்! | [6] |
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல் அடிக்கே உருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம் அடியோம்; செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே! திரு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்! | [7] |
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து, தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்! தோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம் அடியோம்; சீற்றம் அது ஆம் வினை தீண்டப் பெறா; திரு நீலகண்டம்! | [8] |
சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை ஒழிந்தும், பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்; பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்; தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்! | [9] |
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான், இறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண் திறம் பயில் ஞானசம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார் நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே. | [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.126  
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
பண் - வியாழக்குறிஞ்சி (திருத்தலம் சீர்காழி ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
திருஜால ஜதியில் அமைந்த இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ நல்ல இசை ஞானம் வளரும் Audio: https://www.youtube.com/watch?v=k79jeHXwR6w
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப் பாலே சேர்வு ஆய் ஏனோர், கான்பயில் கணமுனிவர்களும், சிந்தித்தே வந்திப்ப, சிலம்பின் மங்கை தன்னொடும் சேர்வார், நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசு அது எலாம் சந்தித்தே, இந்தப் பார்சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அத் தகவு செய்தவனது இடம் கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக் காடு ஆர், பூவார், சீர் மேவும் கழுமல வள நகரே. | [1] |
பிச்சைக்கே இச்சித்து, பிசைந்து அணிந்த வெண்பொடிப் பீடு ஆர் நீடு ஆர் மாடுஆரும்பிறைநுதல் அரிவையொடும், உச்சத்தான் நச்சிப் போல் தொடர்ந்து அடர்ந்த வெங் கண் ஏறு ஊராஊரா, நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய் இசை வச்சத்தால் நச்சுச் சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா, நேரே மால் ஆகும் வசி வல அவனது இடம் கச்சத்தான் மெச்சிப் பூக் கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலைக் கழுமல வள நகரே. | [2] |
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து-இலங்கு மத்தையின் சேரேசேரே, நீர் ஆகச் செறிதரு சுர நதியோடு, அங்கைச் சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண்தலைப் பாலே மேலே மால் ஏயப் படர்வு உறும் அவன் இறகும், பொங்கப் பேர் நஞ்சைச் சேர் புயங்கமங்கள், கொன்றையின் போது ஆர் தாரேதாம், மேவிப் புரிதரு சடையன் இடம் கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே. | [3] |
அண்டத்தால் எண்திக்கும் அமைந்து அடங்கும் மண்தலத்து ஆறே, வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் மண்டிப் போய் வென்றிப் போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய, முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் கண்டிட்டே செஞ்சொல் சேர் கவின் சிறந்த மந்திரக் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே. | [4] |
திக்கில்-தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டலச் சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே புக்கிட்டே வெட்டிட்டே, புகைந்து எழுந்த சண்டத்தீப் போலே, பூ,நீர், தீ, கால், மீ, , புணர்தரும் உயிர்கள் திறம் சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத் தோடு ஏயாமே, மா லோகத் துயர் களைபவனது இடம் கைக்கப் போய் உக்கத்தே கனன்று மிண்டு தண்டலைக் காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே. | [5] |
செற்றிட்டே வெற்றிச் சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா, நீள் கோதைத் தெரியிழை பிடி அது ஆய், ஒற்றைச் சேர் முற்றல்கொம்பு உடைத் தடக்கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர்முக இறையைப் பெற்றிட்டே, மற்று இப் பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமைப் பிரிவு செய்தவனது இடம் கற்றிட்டே எட்டு-எட்டுக்கலைத்துறைக் கரைச் செலக் காணாதாரே சேரா மெய்க் கழுமல வள நகரே. | [6] |
பத்திப் பேர் வித்திட்டே, பரந்த ஐம்புலன்கள்வாய்ப் பாலே போகாமே காவா, பகை அறும் வகை நினையா, முத்திக்கு ஏவி, கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா, ஊடா, நால் அந்தக்கரணமும் ஒரு நெறி ஆய், சித்திக்கே உய்த்திட்டு, திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையும் இடம் கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல்பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே. | [7] |
செம்பைச் சேர் இஞ்சிச் சூழ் செறிந்து இலங்கு பைம்பொழில் சேரே வாரா வாரீசத்திரை எறி நகர் இறைவன், இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து, அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர், நேர் ஓர்பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு அம் பொன் பூண் வென்றித் தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் கம்பத்து ஆர் தும்பித் திண் கவுள் சொரிந்த மும்மதக் கார் ஆர், சேறு ஆர், மா வீதிக் கழுமல வள நகரே. | [8] |
பன்றிக்கோலம் கொண்டு இப் படித்தடம் பயின்று இடப் பான் ஆம் ஆறு ஆனாமே, அப் பறவையின் உருவு கொள ஒன்றிட்டே அம்புச் சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான், அஃது உணராது, உருவினது அடிமுடியும் சென்றிட்டே வந்திப்ப, திருக்களம் கொள் பைங்கணின் தேசால், வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும், காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே. | [9] |
தட்டு இட்டே முட்டிக்கைத் தடுக்கு இடுக்கி, நின்று உணா, தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும்; இட்டத்தால், அத்தம்தான் இது அன்று; அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏதுச்சொல், இலை மலி மருதம்பூப் புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க் கொள் புத்தரும்; போல்வார்தாம் ஓராமே போய்ப் புணர்வு செய்தவனது இடம் கட்டிக் கால் வெட்டித் தீம்கரும்பு தந்த பைம்புனல் காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே. | [10] |
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்து வண்டு, சண்பகக் கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையைத் தஞ்சைச் சார் சண்பைக் கோன் சமைத்த நல் கலைத் துறை, தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள், எஞ்சத் தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு, ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா, வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொளப் பயிற்றுவோர் மார்பே சேர்வாள், வானோர் சீர் மதிநுதல் மடவரலே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.128  
ஓர் உரு ஆயினை; மான்
பண் - வியாழக்குறிஞ்சி (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கல்வியில் சிறந்து விளங்க Audio: https://www.youtube.com/watch?v=rfRTjyK3Eck
Audio: https://sivaya.org/audio/1.128 Oor Uru Aayinai.mp3
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை; இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை; ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை; இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை; ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம், நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம், ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை; ஒரு தனு இருகால் வளைய வாங்கி, முப்புரத்தோடு நானிலம் அஞ்ச, கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை; ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம், முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு, இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து, நால்மறை ஓதி, ஐவகை வேள்வி அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி, வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை; அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை; இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை; பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை; பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை; வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை; ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன் விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை; முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப் பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை; ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும் ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை; எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை; ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும், மறை முதல் நான்கும், மூன்று காலமும், தோன்ற நின்றனை; இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும், மறு இலா மறையோர் கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்; அனைய தன்மையை ஆதலின், நின்னை நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.130  
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
பண் - மேகராகக்குறிஞ்சி (திருத்தலம் திருவையாறு ; அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=rZnYYLAHzqE
புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி, அலமந்த போது ஆக, அஞ்சேல்! என்று அருள் செய்வான் அமரும் கோயில் வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி, சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே. | [1] |
விடல் ஏறு படநாகம் அரைக்கு அசைத்து, வெற்பு அரையன் பாவையோடும் அடல் ஏறு ஒன்று அது ஏறி, அம் சொலீர், பலி! என்னும் அடிகள் கோயில் கடல் ஏறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி, திடல் ஏறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே. | [2] |
கங்காளர், கயிலாயமலையாளர், கானப்பேராளர், மங்கை- பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும் கோயில் கொங்கு ஆள் அப் பொழில் நுழைந்து, கூர்வாயால் இறகு உலர்த்தி, கூதல் நீங்கி, செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே. | [3] |
ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரின் பலிக்கு உழல்வார், உமையாள்பங்கர், தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல் உருவர், தங்கும் கோயில் மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள் தோறும் தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே. | [4] |
நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும், நிறைந்த கொன்றைத் தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித் தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே. | [5] |
வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி, பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி, தேம்தாம் என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே. | [6] |
நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும் கோயில் குன்று எலாம் குயில் கூவ, கொழும் பிரசமலர் பாய்ந்து வாசம் மல்கு தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே. | [7] |
அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும், மஞ்சு ஆடு தோள், நெரிய அடர்த்து, அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு ஓடி, செஞ்சாலிக்கதிர் உழக்கி, செழுங் கமல வயல் படியும் திரு ஐயாறே. | [8] |
மேல் ஓடி விசும்பு அணவி, வியன் நிலத்தை மிக அகழ்ந்து, மிக்கு நாடும் மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில் கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில் நின்று சேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே. | [9] |
குண்டாடு குற்று உடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே, ஆள் ஆமின், மேவித் தொண்டீர்! எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும் கோயில் செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே. | [10] |
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை, அம் தண் காழி மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல் இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள் தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.136  
மாதர் மடப்பிடியும் மட அன்னமும்
பண் - யாழ்முரி (திருத்தலம் தருமபுரம் ; அருள்தரு பண் - யாழ்மூரி உடனுறை அருள்மிகு திருதருமபுரம் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தர் திருக்கோழம்பம் வைகல் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருத்தருமபுரம் சென்றடைந்தார். தருமபுரம் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர், ஆதலின் அங்கு வாழும் அவரது சுற்றத்தார் ஞானசம்பந்தரையும், யாழ்ப்பாண ரையும் அன்புடன் வரவேற்றுப் போற்றினர். பாணர், தம் உறவினர் களோடு உரையாடுகையில், அவர்கள் ஞானசம்பந்தரின் திருப்பதிக இசையைப் பாணர் உடனிருந்து யாழில் வாசித்து வருதலினாலேயே திருப்பதிக இசை சிறப்படைகிறது என முகமன் உரை கூறினர். அதைக் கேட்டு மனம் பொறாது ஞானசம்பந்தரை வணங்கித் திருப்பதிக இசை யாழில் அடங்காதது என்பதனை உறவினர்கள் உணருமாறு செய்தருள வேண்டுமெனப் பணிந்தார். ஞானசம்பந்தர் கண்டத்திலும் கருவி யிலும் அடங்காத இசைக் கூறுடைய மாதர் மடப்பிடி என்ற திருப் பதிகத்தை அருளிச் செய்தார். Audio: https://www.youtube.com/watch?v=AjrbP2xSNMw
Audio: https://www.youtube.com/watch?v=cppKI-Gvd4g
மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர், த இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர், அவர் படர் சடை நெடுமுடியது ஒர் புனலர், வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை இரை நுரை கரை பொருது, விம்மி நின்று, அயலே தாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே. | [1] |
பொங்கும் நடைப் புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி, வெண்பொடி அணி தடம் கொள் மார்பு ணநூல் புரள, மங்குல் இடைத் தவழும் மதி சூடுவர், ஆடுவர், வளம் கிளர்புனல் அரவம் வைகிய சடையர் சங்கு கடல்-திரையால் உதையுண்டு, சரிந்து இரிந்து, ஒசிந்து அசைந்து, இசைந்து சேரும் வெண்மணல் குவைமேல் தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று, இலங்கு ஒளி நலங்கு எழில்-தருமபுரம் பதியே. | [2] |
விண் உறு மால்வரை போல் விடை ஏறுவர், ஆறு சூடுவர், விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்கக் கண் உற நின்று ஒளிரும் கதிர் வெண்மதிக்கண்ணியர், கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனாப் பெண் உற நின்றவர், தம் உருவம் அயன் மால் தொழ அரிவையைப் பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார் தண் இதழ் முல்லையொடு, எண் இதழ் மௌவல், மருங்கு அலர் கருங்கழி நெருங்கு நல்-தருமபுரம்பதியே. | [3] |
வார் உறு மென்முலை நன்நுதல் ஏழையொடு ஆடுவர், வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர், கார் உற நின்று அலரும் மலர்க்கொன்றை அம் கண்ணியர், கடு விடை கொடி, வெடிகொள் காடு உறை பதியர், பார் உற விண்ணுலகம் பரவபடுவோர், அவர் படுதலைப் பலி கொளல் பரிபவம் நினையார் தார் உறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம்பதியே. | [4] |
நேரும் அவர்க்கு உணரப் புகில் இல்லை; நெடுஞ்சடைக் கடும்புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர்; பேரும் அவர்க்கு எனை ஆயிரம்! முன்னைப் பிறப்பு, இறப்பு, இலாதவர்; உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார்? ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம்; அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல்; தாரம் அவர்க்கு இமவான்மகள்; ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில்-தருமபுரம் பதியே. | [5] |
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க, மல்கு மென்முலை,பொறி கொள் பொன்-கொடி இடை, துவர்வாய், மாழை ஒண்கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர்; வலம் மலி படை, விடை கொடி, கொடு மழுவாள் யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று, இனம் துவன்றி, மென்சிறகு அறை உற நற விரியும் நல்- தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம்பதியே. | [6] |
தே மரு வார்குழல் அன்னநடைப் பெடைமான் விழித் திருந்திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய, தூ மரு செஞ்சடையில்-துதை வெண்மதி, துன்று கொன்றை, தொல்புனல், சிரம், கரந்து, உரித்த தோல் உடையர் கா மரு தண்கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய, முண்டகத்து அயலே, தாமரை சேர் குவளைப் படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல்- தருமபுரம்பதியே. | [7] |
தூ வணநீறு அகலம் பொலிய, விரை புல்க மல்கு மென்மலர் வரை புரை திரள்புயம் அணிவர்; கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர்; கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர்; பா வணமா அலறத் தலைபத்து உடை அவ் அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர்; தாவண ஏறு உடை எம் அடிகட்கு இடம்வன் தடங் கடல் இடும் தடங்கரைத் தருமபுரம்பதியே. | [8] |
வார் மலி மென்முலை மாது ஒருபாகம் அது ஆகுவர்; வளம் கிளர் மதி, அரவம், வைகிய சடையர்; கூர் மலி சூலமும், வெண்மழுவும், அவர் வெல் படை; குனிசிலை தனி மலை அது ஏந்திய குழகர்; ஆர் மலி ஆழி கொள் செல்வனும், அல்லி கொள் தாமரை மிசை அவன், அடி முடி அளவு தாம் அறியார்; தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர்; தங்கு இடம் தடங்கல் இடும் திரைத் தருமபுரம் பதியே. | [9] |
புத்தர், கடத் துவர் மொய்த்து உறி புல்கிய கையர், பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல்-தவர், புலவோர், பத்தர்கள், அத் தவம் மெய்ப் பயன் ஆக உகந்தவர்; நிகழ்ந்தவர்; சிவந்தவர்; சுடலைப் பொடி அணிவர்; முத்து அன வெண்நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் தத்து அருவித்திரள் உந்திய மால்கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில்-தருமபுரம்பதியே. | [10] |
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில் தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ்த் தடங்கல்-தருமபுரம்பதியைப் பின் நெடுவார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணைதுணை கழல்கள் பேணுதல் உரியார், இன் நெடுநன் உலகு எய்துவர்; எய்திய போகமும் உறுவர்கள்; இடர், பிணி, துயர், அணைவு இலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.016  
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று
பண் - இந்தளம் (திருத்தலம் எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) ; அருள்தரு யாழ்மொழியம்மை உடனுறை அருள்மிகு மணவாளநாயகர் திருவடிகள் போற்றி )
திருமணம் கைகூட ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=3iP3choR434
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி, மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே. | [1] |
விதியானை, விண்ணவர்தாம் தொழுது ஏத்திய நெதியானை, நீள்சடைமேல் நிகழ்வித்த வான் மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் பதியானை, பாட வல்லார் வினை பாறுமே. | [2] |
எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை, வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே. | [3] |
விடையானை, மேல் உலகுஏழும் இப் பார் எலாம் உடையானை, ஊழிதோறுஊழி உளதுஆய படையானை, பண் இசை பாடு மணஞ்சேரி அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே. | [4] |
எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம் வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை, மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச் செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே. | [5] |
மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம் பழியாமைப் பண் இசைஆன பகர்வானை; வழியானை; வானவர் ஏத்தும் மணஞ்சேரி இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே. | [6] |
எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக் கண்ணானை, கண் ஒருமூன்றும் உடையானை, மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே. | [7] |
எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை, மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே | [8] |
சொல்லானை; தோற்றம் கண்டானும், நெடுமாலும், கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க வல்லார், நல் மா தவர், ஏத்தும் மணஞ்சேரி எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே! | [9] |
சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர் சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை, வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாஆக வாழ்பவர்மேல் வினை பற்றாவே. | [10] |
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை, மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி, பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.018  
சடையாய்! எனுமால்; சரண் நீ!
பண் - இந்தளம் (திருத்தலம் திருமருகல் ; அருள்தரு வண்டுவார்குழலி உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணர் திருவடிகள் போற்றி )
வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொரு ளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய நான் என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு போந்து மணம் முடித்து வாழ எண்ணினேன். வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞான சம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட் கடலாகிய உனக்கு அழகோ என முறையிடும் நிலையில் சடையாயெனுமால் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞான சம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
திருமணம் விரைவில் நிறைவேற ஓத வேண்டிய பதிகம். Audio: https://www.youtube.com/watch?v=f_ZJk-kJhbA
Audio: https://sivaya.org/audio/2.018 sadaiyai enumaal.mp3
சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்; விடையாய்! எனுமால்; வெருவா விழுமால்; மடை ஆர் குவளை மலரும் மருகல் உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே? | [1] |
சிந்தாய்! எனுமால்; சிவனே! எனுமால்; முந்தாய்! எனுமால்; முதல்வா! எனுமால்; கொந்து ஆர் குவளை குலவும் மருகல் எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே? | [2] |
அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும், பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே? | [3] |
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம் பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்! மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே? | [4] |
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்! கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன் அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே? | [5] |
பலரும் பரவப்படுவாய்! சடைமேல் மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்! புலரும்தனையும் துயிலாள், புடை போந்து அலரும் படுமோ, அடியாள் இவளே | [6] |
வழுவாள்; பெருமான்கழல் வாழ்க! எனா எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்; மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்! தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே? | [7] |
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப, துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்; வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்! அலங்கல் இவளை அலர் ஆக்கினையே? | [8] |
எரி ஆர் சடையும், அடியும், இருவர் தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே! மரியார் பிரியா மருகல் பெருமான்! அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே? | [9] |
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும் நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்; மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்! நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே? | [10] |
வயஞானம் வல்லார் மருகல் பெருமான் உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால், இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார், வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.031  
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற
பண் - இந்தளம் (திருத்தலம் கருப்பறியலூர் (தலைஞாயிறு) ; அருள்தரு கோல்வளையம்மை உடனுறை அருள்மிகு குற்றம்பொறுத்தநாதர் திருவடிகள் போற்றி )
கல்வியில் திறம்பெற்று உயர்வதற்கு ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=oBVEIdDfMwg
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள் மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக் கற்றவன் இருப்பது கருப்பறியலூரே. | [1] |
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலே கொண்டு; அணைசெய் கோலம் அது, கோள் அரவினோடும்; விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர, ஒர் அம்பால்; கண்டவன் இருப்பது கருப்பறியலூரே. | [2] |
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆகப் போதினொடு போது, மலர், கொண்டு புனைகின்ற நாதன் என, நள் இருள் முன் ஆடு, குழை தாழும் காதவன் இருப்பது கருப்பறியலூரே. | [3] |
மடம் படு மலைக்குஇறைவன்மங்கை ஒருபங்கன், உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத் தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒருகாலால் கடந்தவன், இருப்பது கருப்பறியலூரே. | [4] |
ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும் கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே. | [5] |
விண்ணவர்கள்வெற்புஅரசு பெற்ற மகள், மெய்த் தேன் பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான் எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும் கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே. | [6] |
ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர் சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத் தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக் காதினன் இருப்பது கருப்பறியலூரே. | [7] |
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கைநகர் வேந்தற்கு ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள் காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே. | [8] |
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை கரந்து, ஒர் சடைமேல் மிசை உகந்து அவளை வைத்து, நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே. | [9] |
அற்றம் மறையா அமணர், ஆதம் இலி புத்தர், சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு, குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில் கற்றென இருப்பது கருப்பறியலூரே. | [10] |
நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன், கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப் பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று, வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.033  
ஏடு மலி கொன்றை, அரவு,
பண் - இந்தளம் (திருத்தலம் திருநள்ளாறு ; அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=cwZC0zEYn14
ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி, மாடு அவல செஞ்சடை எம் மைந்தன் இடம் என்பர் கோடு மலி ஞாழல், குரவு, ஏறு சுரபுன்னை, நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே. | [1] |
விண் இயல் பிறைப்பிளவு, அறைப்புனல், முடித்த புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவிதன்மேல் பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள் நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே. | [2] |
விளங்கு இழை மடந்தைமலைமங்கை ஒருபாகத்து உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர் வளம் கெழுவு தீபமொடு, தூபம், மலர் தூவி, நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே. | [3] |
கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச் செக்கர் அவர், சேரும் இடம் என்பர் தடம் மூழ்கிப் புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி, நக்கர் அவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே. | [4] |
நெஞ்சம் இது கண்டுகொள், உனக்கு! என நினைந்தார் வஞ்சம் அது அறுத்துஅருளும் மற்றவனை; வானோர் அஞ்ச, முதுகுஆகியவர் கைதொழ, எழுந்த நஞ்சு அமுதுசெய்தவன்; இருப்பு இடம் நள்ளாறே. | [5] |
பாலன் அடி பேண, அவன் ஆர் உயிர் குறைக்கும் காலன் உடன்மாள முன் உதைத்த அரன் ஊர் ஆம் கோல மலர், நீர்க் குடம், எடுத்து மறையாளர் நாலின்வழி நின்று, தொழில் பேணிய நள்ளாறே. | [6] |
நீதியர், நெடுந்தகையர், நீள்மலையர், பாவை பாதியர், பராபரர், பரம்பரர், இருக்கை வேதியர்கள், வேள்வி ஒழியாது, மறை நாளும் ஓதி, அரன்நாமமும் உணர்த்திடும் நள்ளாறே. | [7] |
கடுத்து, வல் அரக்கன், முன் நெருக்கி வரைதன்னை எடுத்தவன், முடித் தலைகள்பத்தும் மிகு தோளும் அடர்த்தவர்தமக்கு இடம் அது என்பர் அளி பாட, நடத்த கலவத்திரள்கள் வைகிய நள்ளாறே. | [8] |
உயர்ந்தவன், உருக்கொடு திரிந்து, உலகம் எல்லாம் பயந்தவன், நினைப்பரிய பண்பன் இடம் என்பர் வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும் நயம் தரும் அ வேதஒலி ஆர் திரு நள்ளாறே. | [9] |
சிந்தை திருகல் சமணர், தேரர், தவம் என்னும் பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர் மந்த முழவம் தரு விழாஒலியும், வேதச் சந்தம் விரவி, பொழில் முழங்கிய நள்ளாறே. | [10] |
ஆடல் அரவு ஆர் சடையன் ஆயிழைதனோடும் நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை, மாடம் மலி காழி வளர் பந்தனது செஞ்சொல் பாடல் உடையாரை அடையா, பழிகள் நோயே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.037  
சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்
பண் - இந்தளம் (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழி மிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு போற்றத் திருமறைக் காடு அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகினார் கள். வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக் கதவுகள் திறக்கப்படாதிருத்தலையும் மக்கள் வேறோர் பக்கத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருதலையும் கண்ட ஞான சம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டுமெனத் திருவுளத்தெண்ணி அப்பரைப் பார்த்து இக்கதவுகள் திறக்கத் தாங்கள் திருப்பதிகம் பாடியருளுக என வேண்டினார். அப்பர் பண்ணினேர் மொழியாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாட அப்பதிகப் பொருட் சுவையில் ஈடுபட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் ஆலயம் சென்று மறைக்காட்டுறையும் மணாளனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமென வேண்டினார். ஞானசம்பந்தர் சதுரம் மறை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார். முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொண்டது. ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைந்தனர். Audio: https://www.youtube.com/watch?v=_NNuFxcpUok
Audio: https://sivaya.org/audio/2.037 chathuram maraithaan.mp3
சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா! இது நன்கு இறை வைத்து அருள்செய்க, எனக்கு உன் கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே! | [1] |
சங்கம், தரளம் அவை, தான் கரைக்கு எற்றும் வங்கக் கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா! மங்கைஉமை பாகமும் ஆக, இது என்கொல், கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே? | [2] |
குரவம், குருக்கத்திகள், புன்னைகள், ஞாழல் மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா! சிரமும் மலரும் திகழ் செஞ்சடைதன்மேல் அரவம் மதியோடு அடைவித்தல் அழகே? | [3] |
படர் செம்பவளத்தொடு, பல்மலர், முத்தம், மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா! உடலம்(ம்) உமை பங்கம் அது ஆகியும், என்கொல், கடல் நஞ்சு அமுதாஅது உண்ட கருத்தே? | [4] |
வானோர், மறை மா தவத்தோர், வழிபட்ட தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா! ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ, என்கொல், கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே? | [5] |
பலகாலங்கள், வேதங்கள் பாதங்கள் போற்றி, மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா! உலகுஏழ் உடையாய்! கடைதோறும் முன், என்கொல், தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே? | [6] |
வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும் சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா! மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன், என்கொல், கால் ஆர் சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே? | [7] |
கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரைமேல் வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா! இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த, அலங்கல் விரல் ஊன்றி, அருள்செய்தஆறே? | [8] |
கோன் என்று பல்கோடிஉருத்திரர் போற்றும் தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா! ஏனம் கழுகு ஆனவர், உன்னை முன், என்கொல், வானம் தலம் மண்டியும் கண்டிலாஆறே? | [9] |
வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற, ஓதம் உலவும், மறைக்காட்டில் உறைவாய்! ஏதில் சமண்சாக்கியர் வாக்குஇவை, என்கொல், ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே? | [10] |
காழி நகரான் கலை ஞானசம்பந்தன் வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த ஏழ் இன் இசைமாலை ஈர் ஐந்துஇவை வல்லார், வாழி உலகோர் தொழ, வான் அடைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.039  
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
பண் - இந்தளம் (திருத்தலம் சீர்காழி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருக்ஷேத்திரக் கோவை Audio: https://www.youtube.com/watch?v=5rJFwc-Bt_0
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம், வடகச்சியும்,அச்சிறுபாக்கம், நல்ல கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி, கடல் சூழ் கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர் நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும், குருகாவையூர், நாரையூர், நீடு கானப் பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும், பிதற்றாய், பிறைசூடிதன் பேர் இடமே! | [1] |
அண்ணாமலை, ஈங்கோயும், அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம், கொடுங்குன்றமும் கண் ஆர் கழுக்குன்றம், கயிலை, கோணம் பயில் கற்குடி, காளத்தி, வாட்போக்கியும், பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம், பருப்பதம், பேணி நின்றே, எண்ணாய், இரவும் பகலும்! இடும்பைக் கடல் நீந்தல் ஆம், காரணமே. | [2] |
அட்டானம் என்று ஓதிய நால் இரண்டும், அழகன் உறை கா அனைத்தும், துறைகள் எட்டு ஆம், திருமூர்த்தியின் காடு ஒன்பதும், குளம் மூன்றும், களம் அஞ்சும், பாடி நான்கும், மட்டு ஆர் குழலாள் மலைமங்கை பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழிமூன்றும், சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய், அரும்பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே! | [3] |
அறப்பள்ளி, அகத்தியான்பள்ளி, வெள்ளைப் பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, திரு நனிபள்ளி, சீர் மகேந்திரத்துப் பிறப்பு இல்லவன் பள்ளி, வெள்ளச் சடையான் விரும்பும் இடைப்பள்ளி, வண் சக்கரம் மால் உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி, உணராய், மட நெஞ்சமே, உன்னி நின்றே! | [4] |
ஆறை, வடமாகறல், அம்பர், ஐயாறு, அணி ஆர் பெருவேளூர், விளமர், தெங்கூர், சேறை, துலை புகலூர், அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே. | [5] |
மன வஞ்சர் மற்று ஓட, முன் மாதர் ஆரும் மதி கூர் திருக்கூடலில் ஆலவாயும், இன வஞ்சொல் இலா இடைமாமருதும், இரும்பைப்பதிமாகாளம், வெற்றியூரும், கனம் அம் சின மால்விடையான் விரும்பும் கருகாவூர், நல்லூர், பெரும்புலியூர், தன மென்சொலில் தஞ்சம் என்றே நினைமின்! தவம் ஆம்; மலம் ஆயினதான் அறுமே. | [6] |
மாட்டூர், மடப் பாச்சிலாச்சிரமம், முண்டீச்சரம், வாதவூர், வாரணாசி, காட்டூர், கடம்பூர், படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர், மற்று உறையூர் அவையும், கோட்டூர், திரு ஆமாத்தூர், கோழம்பமும், கொதுங்கோவலூர், திருக்குணவாயில், | [7] |
குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம், போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியாத் தென் புறம்பயம், பூவணம், பூழியூரும், காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடிதோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே! | [8] |
நெற்குன்றம், ஓத்தூர், நிறை நீர் மருகல், நெடுவாயில், குறும்பலா, நீடு திரு நற்குன்றம், வலம்புரம், நாகேச்சுரம், நளிர்சோலை உஞ்சேனைமாகாளம், வாய்மூர், கல்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்வண்ணனும் மாமலரோனும் காணாச் சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு, என்று சொல்லிக் குலாவுமினே! | [9] |
குத்தங்குடி, வேதிகுடி, புனல் சூழ் குருந்தங்குடி, தேவன்குடி, மருவும் அத்தங்குடி, தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த நித்தன், நிமலன், உமையோடும் கூட நெடுங் காலம் உறைவு இடம் என்று சொல்லாப் புத்தர், புறம்கூறிய புன் சமணர், நெடும் பொய்களை விட்டு, நினைந்து உய்ம்மினே! | [10] |
அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற அமரர்பெருமான், பதி ஆன உன்னி, கொய்ம் மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன இம் மாலை ஈர் ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று, விம்மா, வெருவா, விரும்பும்(ம்) அடியார், விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.040  
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
பண் - சீகாமரம் (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=70vp6cYffLI
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார் தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும், கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன் வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே. | [1] |
தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய், உலகத்துக் காம்! என்று சரண் புகுந்தார் தமைக் காக்கும் கருணையினான் ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற காமன் தன்(ன்) உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே. | [2] |
நன் நெஞ்சே! உனை இரந்தேன்; நம்பெருமான் திருவடியே உன்னம் செய்து இரு கண்டாய்! உய்வதனை வேண்டுதியேல், அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை, எப்போதும் பன், அம் சீர் வாய் அதுவே! பார், கண்ணே, பரிந்திடவே! | [3] |
சாம் நாள் இன்றி(ம்), மனமே! சங்கைதனைத் தவிர்ப்பிக்கும் கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு! எத்தனையும் தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீவணனை, நா, நாளும் நன்நியமம் செய்து, சீர் நவின்று ஏத்தே! | [4] |
கண் நுதலான், வெண் நீற்றான், கமழ் சடையான், விடை >ஏறி, பெண் இதம் ஆம் உருவத்தான், பிஞ்ஞகன், பேர்பல >உடையான், விண் நுதலாத் தோன்றிய சீர்ப் பிரமபுரம் தொழ விரும்பி எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே. | [5] |
எங்கேனும் யாது ஆகிப் பிறந்திடினும், தன் அடியார்க்கு இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான், எருது ஏறி, கொங்கு ஏயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும் சங்கே ஒத்து ஒளிர் மேனிச் சங்கரன், தன் தன்மைகளே | [6] |
சிலை அதுவே சிலை ஆகத் திரி புரம் மூன்று எரிசெய்த இலை நுனை வேல் தடக்கையன், ஏந்திழையாள் ஒருகூறன், அலை புனல் சூழ் பிரமபுரத்து அருமணியை அடி பணிந்தால், நிலை உடைய பெருஞ்செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே. | [7] |
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க, தோளொடு >தாள நெரித்து அருளும் சிவமூர்த்தி, நீறு அணிந்த மேனியினான், உரித்த வரித்தோல் உடையான், உறை பிரமபுரம் தன்னைத் தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே. | [8] |
கரியானும் நான்முகனும் காணாமைக் கனல் உரு ஆய் அரியான் ஆம் பரமேட்டி, அரவம் சேர் அகலத்தான், தெரியாதான், இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர உரியார்தாம் ஏழ் உலகும் உடன் ஆள உரியாரே. | [9] |
உடை இலார், சீவரத்தார், தன் பெருமை உணர்வு அரியான்; முடையில் ஆர் வெண்தலைக் கை மூர்த்தி ஆம் திரு உருவன்; பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் உறையும் சடையில் ஆர் வெண்பிறையான்; தாள் பணிவார் தக்காரே. | [10] |
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை, தத்துவனை, கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை, முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார் பொன் அடைந்தார்; போகங்கள் பல அடைந்தார்; புண்ணியரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.047  
மட்டு இட்ட புன்னை அம்கானல்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருமயிலை (மயிலாப்பூர்) ; அருள்தரு கற்பகவல்லியம்மை உடனுறை அருள்மிகு கபாலீசுவரர் திருவடிகள் போற்றி )
மயிலாப்பூரில் வணிகர் குலத்தில் எல்லையில் செல்வம் உடையவராய் செம்மையே புரிமனத்தினராய் வணிகர் குலத்தில் சிவநேசன் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், அறிந்த பெரியவர். அவர் ஞானசம்பந்தரது பெருமைகளைக் கேள்வியுற்று அவர்பால் எல்லை யில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு ஒரு பெண் மகவு இருந் தாள். அழகிற் சிறந்த அப்பெண்ணுக்குப் பூம்பாவை எனப் பெய ரிட்டார். அப்பெண்ணும் மணப்பருவம் எய்திய நிலையில் இருந்தாள். ஞானசம்பந்தர் மதுரை சென்று பரசமயம் நிராகரித்துப் பாண்டி நாட்டில் சைவ சமயத்தை நிலைநிறுத்தி வந்த செய்தி கேட்டு என்னையும், என்மகளையும் என் செல்வத்தையும் அவருக்கே உடமையாக்கினேன்? என மொழிந்தார். இந்நிலையில் ஞானசம்பந் தருக்கு உரியள் என, சிவநேசர் மொழிந்திருந்த பூம்பாவை பூஞ்சோலை யில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி இறந்தாள். சிவநேசர் மிகவும் வருந்தியவராய் அப்பெண்ணை உயிருடன் ஒப்புவிக்கும் புண்ணியம் அமையவில்லை. ஆயினும் அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதை யேனும் ஒப்புவிப்போம் என்று பேணிவந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூர் வழிபாடு முடித்து மயிலாப் பூருக்கு எழுந்தருளும் செய்தி கேட்டு வரவேற்க எதிரே வந்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார் கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியை யும் அவரிடம் கூறினர். ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி வழிபாடாற்றிப் புறத்தே போந்தவர் சிவநேசரை அழைத்து அவர் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன்னே வைக்கச் செய்து மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப் பதிகமாகிய மட்டிட்ட புன்னை எனத் திருப்பதிகம் தொடங்கிப் பத்தாவது பாடல் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உலகவர் வியக்க உயிர் பெற்றுக் குடம் உடைய வெளிப்பட்டு ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமென வேண்டினார்.
பலவகை உடற்பிணிகள் அகல ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=TW2gdkaWAzQ
Audio: https://sivaya.org/audio/2.047 matitita punnai.mp3
மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக் கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான், ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [1] |
மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மா மயிலைக் கைப் பயந்த நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான், ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [2] |
வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் துளக்கு இல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள் தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்! | [3] |
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக் கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில், கார் தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [4] |
மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மா மயிலைக் கைப் பூசு நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான் நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [5] |
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடல் ஆட்டுக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான், அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள், அடி பரவி, நடம் ஆடல் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [6] |
மலி விழா வீதி மடநல்லார் மா மயிலைக் கலி விழாக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான் பலி விழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள் ஒலி விழாக் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [7] |
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான், கண் ஆர் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான், பண் ஆர் பதினெண்கணங்கள் தம்(ம்) அட்டமி நாள் கண் ஆரக் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [8] |
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக் கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் அமர்ந்தான், பொன் தாப்புக் காணாதே போதியோ? பூம்பாவாய்! | [9] |
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும் இருஞ் சாக்கியர்கள், எடுத்து உரைப்ப, நாட்டில் கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான் பெருஞ் சாந்தி காணாதே போதியோ? பூம்பாவாய்! | [10] |
கான் அமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான் ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார், வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.048  
கண் காட்டும் நுதலானும், கனல்
பண் - சீகாமரம் (திருத்தலம் திருவெண்காடு ; அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
மக்கட் செல்வம் வாய்க்க, வாதத்திறமை, எழுத்தாற்றல், தத்துவஞானத் தெளிவைப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=BIiW3xaWvB0
கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும், பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும், பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும், வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே. | [1] |
பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்; வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர் தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம், தீவினையே. | [2] |
மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி, எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும், பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம் பேராளன் விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே. | [3] |
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில், மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று, தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய, கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே. | [4] |
வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ் மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன் மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர், ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே. | [5] |
தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்; ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில் பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்ளை வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே. | [6] |
சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்; அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம் பணிய, மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை துரக்கும் முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே. | [7] |
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான் உறை கோயில் கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க, விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே. | [8] |
கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள் ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும், உணர்வு அரியான் வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே. | [9] |
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும் பேதையர்கள் அவர்; பிறிமின்! அறிவு உடையீர்! இது கேண்மின்; வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான் என்று ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே! | [10] |
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன் விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப் பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார், மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.066  
மந்திரம் ஆவது நீறு; வானவர்
பண் - காந்தாரம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள் எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம் என்றார். சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப் பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து யான் உய்ந்தேன் என்று போற்றினான்.
வெப்பம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், உடல் சூடு நீங்க ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=n2Uf5Es4A10
Audio: https://sivaya.org/audio/2.066 மந்திரம் ஆவது நீறு.mp3
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு; சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு; தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு; செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே. | [1] |
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு; போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு; ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு; சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே. | [2] |
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு; சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு; பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு; சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே. | [3] |
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு; பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு; மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு; சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே. | [4] |
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு; பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம் ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு; தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே. | [5] |
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு; வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு; பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு; திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே. | [6] |
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு; பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு; துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு; அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே. | [7] |
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு; பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு; தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு; அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே. | [8] |
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு; மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு; ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு; ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே. | [9] |
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட, கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு; எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு; அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே. | [10] |
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன், தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.083  
நீல நல் மாமிடற்றன்; இறைவன்;
பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தலம் திருக்கொச்சைவயம் (சீர்காழி) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=4-qqCFEZS0E
Audio: https://sivaya.org/audio/2.083 NeelaMaaMidatran.mp3
நீல நல் மாமிடற்றன்; இறைவன்; சினத்த நெடுமா உரித்த, நிகர் இல் சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக் கொள், திகழ் தேவன்; மேவு பதிதான் வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை, விழவு ஓசை, வேத ஒலியின், சால நல் வேலை ஓசை, தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே. | [1] |
விடை உடை அப்பன்; ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உருக் கொள் விமலன்; சடை இடை வெள் எருக்கமலர், கங்கை, திங்கள், தக வைத்த சோதி; பதிதான் மடை இடை அன்னம் எங்கும் நிறையப் பரந்து கமலத்து வைகும், வயல்சூழ், கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற, கொச்சைவயமே. | [2] |
பட அரவு ஆடு முன் கை உடையான், இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன், இடம் உடை வெண் தலைக் கை பலி கொள்ளும் இன்பன், இடம் ஆய ஏர் கொள் பதிதான் நடம் இட மஞ்ஞை, வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை, கோலு கனகக் குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது, கொச்சைவயமே. | [3] |
எண் திசை பாலர் எங்கும் இயலிப் புகுந்து, முயல்வு உற்ற சிந்தை முடுகி, பண்டு, ஒளி தீப மாலை, இடு தூபமோடு பணிவு உற்ற பாதர் பதிதான் மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய, வாளை குழுமிக் குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே. | [4] |
பனி வளர் மாமலைக்கு மருகன், குபேரனொடு தோழமைக் கொள் பகவன், இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன்(ன்), இடம்கொள் பதிதான் முனிவர்கள் தொக்கு, மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி, குனிமதி மூடி, நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே. | [5] |
புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான், நினைக்கும் அளவில் நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன், நலமா இருந்த நகர்தான் கலி கெட அந்தணாளர், கலை மேவு சிந்தை உடையார், நிறைந்து வளர, பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீஈடு வரை மேவு கொச்சைவயமே. | [6] |
மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய, பிழை கெட, மா மலர்ப்பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட, இடும் ஊசல் அன்ன கமுகின் குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள் தங்கள் அடி தேடு கொச்சைவயமே. | [8] |
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும், வையம் முழுது உண்ட மாலும், இகலி, கண்டிட ஒண்ணும் என்று கிளறி, பறந்தும், அறியாத சோதி பதிதான் நண்டு உண, நாரை செந்நெல் நடுவே இருந்து; விரை தேரை போதும் மடுவில் புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே. | [9] |
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர், இடு சீவரத்தின் உடையார், மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உருக் கொள் விமலன் பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர, செய்யினில் நீலம் மொட்டு விரியக் கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே. | [10] |
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள் ஏழும் உடனே மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை, குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர், போய், அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா இருப்பது அறிவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.085  
வேய் உறு தோளி பங்கன்,
பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது. சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார்.
சனி, இராகு, கேது பெயர்ச்சி, கோள்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய பதிகம். Audio: https://www.youtube.com/watch?v=oF4wlCt8je0
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,
மிகநல்ல வீணை தடவி, மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும், உடனே ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே. | [1] |
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க,
எருது ஏறி, ஏழை உடனே, பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும், உடன் ஆய நாள்கள் அவைதாம், அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே. | [2] |
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து,
உமையோடும், வெள்ளை விடை மேல், முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால் திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி, திசை தெய்வம் ஆன பலவும், அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே. | [3] |
மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன், நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால் கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர், கொடு நோய்கள் ஆனபலவும், அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே. | [4] |
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன், துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும், மிகை ஆன பூதம் அவையும், அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே. | [5] |
வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள் தனோடும் உடன் ஆய், நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால் கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல், கொடு நாகமோடு, கரடி, ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே. | [6] |
செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன், அடைவு ஆர் ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால் வெப்பொடு, குளிரும், வாதம், மிகை ஆன பித்தும், வினை ஆன, வந்து நலியா; அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே. | [7] |
வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து, மடவாள் தனோடும் உடன் ஆய், வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடர் ஆன வந்து நலியா; ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே. | [8] |
பல பல வேடம் ஆகும் பரன், நாரிபாகன், பசு ஏறும் எங்கள் பரமன், சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால் மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலம் ஆன பலவும், அலைகடல், மேரு, நல்ல; அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. | [9] |
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன், மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால் புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே; அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல, அடியார் அவர்க்கு மிகவே. | [10] |
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி, வளர் செம்பொன் எங்கும் நிகழ, நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறைஞான ஞானமுனிவன், தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில் அரசு ஆள்வர்; ஆணை நமதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.090  
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு
பண் - பியந்தைக்காந்தாரம் (திருத்தலம் திருநெல்வாயில் அரத்துறை ; அருள்தரு ஆனந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு அரத்துறைநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=uu81f7lC1h8
Audio: https://sivaya.org/audio/2.090 EnthaiIsan EmPerumaan.mp3
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச் சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால் கந்த மா மலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல், அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [1] |
ஈர வார் சடை தன் மேல் இளம்பிறை அணிந்த எம்பெருமான் சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால் வாரி மா மலர் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல், ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [2] |
பிணி கலந்த புன்சடைமேல் பிறை அணி சிவன் எனப் பேணிப் பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது அன்றால் மணி கலந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரைமேல், அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [3] |
துன்ன ஆடை ஒன்று உடுத்து, தூய வெண் நீற்றினர் ஆகி, உன்னி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால் பொன்னும் மா மணி உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல், அன்னம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே | [4] |
வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி உருகி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால் முருகு உரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்து இழி நிவா வந்து அருகு உரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [5] |
உரவு நீர் சடைக் கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்திப் பரவி நைபவர்க்கு அல்லால், பரிந்து கைகூடுவது அன்றால் குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல் அரவம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [6] |
நீல மா மணி மிடற்று, நீறு அணி சிவன்! எனப் பேணும் சீல மாந்தர்கட்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால் கோல மா மலர் உந்தி, குளிர் புனல் நிவா மல்கு கரைமேல், ஆலும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)அருளே | [7] |
செழுந் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற, அழுந்த ஊன்றிய விரலான்; போற்றி! என்பார்க்கு அல்லது அருளான் கொழுங் கனி சுமந்து உந்தி, குளிர்புனல் நிவா மல்கு கரைமேல், அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [8] |
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க(அ)ரியானை வணங்கி நைபவர்க்கு அல்லால், வந்து கைகூடுவது அன்றால் மணம் கமழ்ந்து பொன் உந்தி, வருபுனல் நிவா மல்கு கரை மேல், அணங்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [9] |
சாக்கியப் படுவாரும் சமண் படுவார்களும் மற்றும் பாக்கியப் படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால் பூக் கமழ்ந்து பொன் உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல், ஆக்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே | [10] |
கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன், அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள் தம்(ம்)அருளை முறைமையால் சொன்ன பாடல், மொழியும் மாந்தர் தம் வினை போய்ப் பறையும், ஐயுறவு இல்லை, பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.098  
வரைத்தலைப் பசும் பொனோடு அருங்
பண் - நட்டராகம் (திருத்தலம் திருத்துருத்தி ; அருள்தரு முகிழாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வேதேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=wC9RryMFjDE
வரைத்தலைப் பசும் பொனோடு அருங் கலங்கள் உந்தி வந்து இரைத்து, அலைச் சுமந்து கொண்டு எறிந்து, இலங்கு காவிரிக் கரைத்தலைத் துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்! உரைத்தலைப் பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே?? | [1] |
அடுத்து அடுத்து அகத்தியோடு, வன்னி, கொன்றை,
கூவிளம், தொடுத்து உடன் சடைப் பெய்தாய்! துருத்தியாய்! ஓர் காலனைக் கடுத்து, அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம் எடுத்து எடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில், நல்லமே. | [2] |
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செஞ்சடைச் சங்கு இலங்கு வெண்குழை சரிந்து இலங்கு காதினாய்! பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா! துருத்தி புக்கு, எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்கொ | [3] |
கருத்தினால் ஒர் காணி இல்; விருத்தி இல்லை; தொண்டர்
தம் அருத்தியால், தம்(ம்) அல்லல் சொல்லி, ஐயம் ஏற்பது அன்றியும், ஒருத்திபால் பொருத்தி வைத்து, உடம்பு விட்டு யோகியாய் இருத்தி நீ, துருத்தி புக்கு; இது என்ன மாயம் என்பதே! | [4] |
துறக்குமா சொலப்படாய்! துருத்தியாய்! திருந்து அடி மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து, இம் மண்ணின்மேல் பிறக்கும் ஆறு காட்டினாய்! பிணிப்படும் உடம்பு விட்டு இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே? | [5] |
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம்
பொழில் துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய்! மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூ எயிற்கு எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே? | [6] |
கணிச்சி அம்படைச் செல்வா! கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் துணிச் சிரக் கிரந்தையாய்! கரந்தையாய்! துருத்தியாய்! அணிப்படும் தனிப் பிறைப் பனிக் கதிர்க்கு அவாவும் நல் மணிப் படும் பைநாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே? | [7] |
சுடப் பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன் இடர்ப்படக் கடந்து, இடம் துருத்தி ஆக எண்ணினாய்! கடல் படை உடைய அக் கடல் இலங்கை மன்னனை, அடல் பட, அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே? | [8] |
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும், மாலும் ஆய், வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார்; துளங்கு இளம்பிறைச் செனித் துருத்தியாய்! திருந்து அடி, உளம் குளிர்ந்த போது எலாம், உகந்து உகந்து உரைப்பனே. | [9] |
புத்தர், தத்துவம் இலாச் சமண், உரைத்த பொய்தனை உத்தமம் எனக் கொளாது, உகந்து எழுந்து, வண்டு இனம் துத்தம் நின்று பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம் பித்தர் பித்தனைத் தொழ, பிறப்பு அறுத்தல் பெற்றியே. | [10] |
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அருந்தமிழ் சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால், பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெருந் துருத்தி பேணவே, குற்றம் முற்றும் இன்மையின், குணங்கள் வந்து கூடுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.099  
இன்று நன்று, நாளை நன்று
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=CrD_aLf3ntE
இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்! மின் தயங்கு சோதியான் வெண்மதி, விரிபுனல், கொன்றை, துன்று சென்னியான் கோடி காவு சேர்மினே! | [1] |
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர், நல்லது ஓர் நெறியினை நாடுதும், நட(ம்)மினோ! வில்லை அன்ன வாள் நுதல் வெள்வளை ஒர் பாகம் ஆம் கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடி காவு சேர்மினே! | [2] |
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர், தக்கது ஓர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்! அக்கு அணிந்து, அரைமிசை, ஆறு அணிந்த சென்னி மேல் கொக்கு இறகு அணிந்தவன் கோடி காவு சேர்மினே! | [3] |
பண்டு செய்த வல்வினை பற்று அறக் கெடும் வகை உண்டு; உமக்கு உரைப்பன், நான்; ஒல்லை நீர் எழுமினோ! மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாது ஒர்பாகமாக் கொண்டு உகந்த மார்பினான் கோடி காவு சேர்மினே! | [4] |
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர், எழு(ம்)மினோ! பொன்னை வென்ற கொன்றையான், பூதம் பாட ஆடலான், கொல் நவிலும் வேலினான், கோடி காவு சேர்மினே! | [5] |
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் எனப் பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை; காவல் மிக்க மா நகர் காய்ந்து வெங்கனல் படக் கோவம் மிக்க நெற்றியான் கோடி காவு சேர்மினே! | [6] |
ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர், மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்மினோ! பூணல் வெள் எலும்பினான், பொன்திகழ் சடை முடிக் கோணல் வெண்பிறையினான், கோடிகாவு சேர்மினே! | [7] |
மற்று இ(வ்) வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத் தவிர்ந்து
நீர், பற்றி வாழ்மின், சேவடி! பணிந்து வந்து எழுமினோ! வெற்றி கொள் தசமுகன், விறல் கெட இருந்தது ஓர் குற்றம் இல் வரையினான் கோடி காவு சேர்மினே! | [8] |
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்; செங்கண் மால், திசைமுகன், சென்று அளந்தும் காண்கிலா வெங் கண் மால்விடை உடை வேதியன் விரும்பும் ஊர், கொங்கு உலாம் வளம் பொழில், கோடி காவு சேர்மினே! | [9] |
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும், பட்டு உடை விரி துகிலினார்கள், சொல் பயன் இலை; விட்ட புன் சடையினான், மேதகும் முழவொடும் கொட்டு அமைந்த ஆடலான், கோடிகாவு சேர்மினே! | [10] |
கொந்து அணி குளிர்பொழில் கோடி காவு மேவிய செந்தழல் உருவனை, சீர்மிகு திறல் உடை அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம் பந்தன தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.106  
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
பண் - நட்டராகம் (திருத்தலம் திருவலஞ்சுழி ; அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சித்தீசநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=cMWzX_dVUv0
Audio: https://sivaya.org/audio/2.106 Enna Punniyam.mp3
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல் வையத்து முன்னம் நீ புரி நல்வினைப் பயன் இடை,முழுமணித்தரளங்கள் மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை, வாய் ஆரப் பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும் அதனாலே. | [1] |
விண்டு ஒழிந்தன, நம்முடை வல்வினை விரிகடல் வரு நஞ்சம் உண்டு இறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை,உலகத்தில் வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை, வலஞ்சுழி இடம் ஆகக் கொண்ட நாதன், மெய்த்தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே. | [2] |
திருந்தலார் புரம் தீ எழச் செறுவன; இறலின் கண் அடியாரைப் பரிந்து காப்பன; பத்தியில் வருவன; மத்தம் ஆம் பிணிநோய்க்கு மருந்தும் ஆவன; மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக இருந்த நாயகன், இமையவர் ஏத்திய, இணை அடித்தலம் தானே. | [3] |
கறை கொள் கண்டத்தர்; காய்கதிர் நிறத்தினர்; அறத்திறம் முனிவர்க்கு அன்று இறைவர் ஆல் இடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார்; மறைகள் ஓதுவர்; வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து, அருங்கானத்து, அறை கழல் சிலம்பு ஆர்க்க, நின்று ஆடிய அற்புதம் அறியோமே! | [4] |
மண்ணர்; நீரர்; விண்; காற்றினர்; ஆற்றல் ஆம் எரி உரு; ஒருபாகம் பெண்ணர்; ஆண் எனத் தெரிவு அரு வடிவினர்; பெருங்கடல் பவளம் போல் வண்ணர்; ஆகிலும், வலஞ்சுழி பிரிகிலார்; பரிபவர் மனம் புக்க எண்ணர்; ஆகிலும், எனைப் பல இயம்புவர், இணை அடி தொழுவாரே. | [5] |
ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர்; மடமாதர் இருவர் ஆதரிப்பார்; பலபூதமும் பேய்களும் அடையாளம்; அருவராதது ஒர் வெண்தலை கைப் பிடித்து, அகம்தொறும் பலிக்கு என்று வருவரேல், அவர் வலஞ்சுழி அடிகளே; வரி வளை கவர்ந்தாரே! | [6] |
குன்றியூர், குடமூக்கு இடம், வலம்புரம், குலவிய நெய்த்தானம், என்று இவ் ஊர்கள் இ(ல்)லோம் என்றும் இயம்புவர்; இமையவர் பணி கேட்பார்; அன்றி, ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம்; வலஞ்சுழி அரனார்பால் சென்று, அ(வ்) ஊர்தனில் தலைப்படல் ஆம் என்று சேயிழை தளர்வு ஆமே. | [7] |
குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெரு உற, குல வரைப் பரப்பு ஆய கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி, மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன், வலஞ்சுழி எம்மானைப் பயில வல்லவர் பரகதி காண்பவர்; அல்லவர் காணாரே. | [8] |
அழல் அது ஓம்பிய அலர்மிசை அண்ணலும், அரவு அணைத் துயின்றானும், கழலும் சென்னியும் காண்பு அரிது ஆயவர்; மாண்பு அமர் தடக்கையில் மழலை வீணையர்; மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே. | [9] |
அறிவு இலாத வன்சமணர்கள், சாக்கியர், தவம் புரிந்து அவம் செய்வார் நெறி அலாதன கூறுவர்; மற்று அவை தேறன் மின்! மாறா நீர் மறி உலாம் திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப் பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில், அளவு அறுப்பு ஒண்ணாதே. | [10] |
மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயல் காழி நாதன் வேதியன், ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ்மாலை ஆதரித்து, இசை கற்று வல்லார், சொலக் கேட்டு உகந்தவர் தம்மை வாதியா வினை; மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.112  
மாது ஓர் கூறு உகந்து,
பண் - நட்டராகம் (திருத்தலம் திருவாடானை ; அருள்தரு அம்பாயிரவல்லியம்மை உடனுறை அருள்மிகு ஆதிரத்தினேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=_VfzpCKqXOY
Audio: https://sivaya.org/audio/2.112 Maathor kooruganthu.mp3
மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய ஆதியான் உறை ஆடானை போதினால் புனைந்து, ஏத்துவார் தமை வாதியா வினை மாயுமே. | [1] |
வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று ஆடலான் உறை ஆடானை தோடு உலாம் மலர் தூவிக் கைதொழ, வீடும், நுங்கள் வினைகளே | [2] |
மங்கை கூறினன், மான்மறி உடை அம் கையான், உறை ஆடானை தம் கையால் தொழுது, ஏத்த வல்லார் மங்கு நோய் பிணி மாயுமே. | [3] |
சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை அண்ணலான் உறை ஆடானை வண்ண மா மலர் தூவிக் கைதொழ எண்ணுவார் இடர் ஏகுமே. | [4] |
கொய் அணி(ம்) மலர்க்கொன்றை சூடிய ஐயன் மேவிய ஆடானை கை அணி(ம்) மலரால் வணங்கிட, வெய்ய வல்வினை வீடுமே. | [5] |
வான் இள(ம்) மதி மல்கு வார்சடை ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை தேன் அணி(ம்) மலர் சேர்த்த, முன் செய்த ஊனம் உள்ள ஒழியுமே. | [6] |
துலங்கு வெண்மழு ஏந்தி, சூழ் சடை அலங்கலான், உறை ஆடானை நலம் கொள் மா மலர் தூவி, நாள்தொறும் வலம் கொள்வார் வினை மாயுமே. | [7] |
வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை அந்தம் இல்லவன் ஆடானை கந்த மாமலர் தூவிக் கைதொழும் சிந்தையார் வினை தேயுமே. | [8] |
மறைவலாரொடு வானவர் தொழு அறையும் தண்புனல் ஆடானை உறையும் ஈசனை ஏத்த, தீவினை பறையும்; நல்வினை பற்றுமே. | [9] |
மாயனும் மலரானும் கைதொழ ஆய அந்தணன் ஆடானை தூய மா மலர் தூவிக் கைதொழ, தீய வல்வினை தீருமே. | [10] |
வீடினார் மலி வெங்கடத்து நின்று ஆடலான் உறை ஆடானை நாடி, ஞானசம்பந்தன் செந்தமிழ் பாட, நோய் பிணி பாறுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.114  
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு
பண் - செவ்வழி (திருத்தலம் திருக்கேதாரம் ; அருள்தரு கௌரியம்மை உடனுறை அருள்மிகு கேதாரேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=FNR8RErV8cE
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு ஆர் மலர் இண்டை கட்டி, வழிபாடு செய்யும் இடம் என்பரால் வண்டு பாட, மயில் ஆல, மான் கன்று துள்ள(வ்), வரிக் கெண்டை பாய, சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே. | [1] |
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்து ஏத்தவே, வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம் தாது விண்ட(ம்), மது உண்டு மிண்டி(வ்) வரு வண்டு இனம் கீதம் பாட(ம்), மடமந்தி கேட்டு உகளும் கேதாரமே. | [2] |
முந்தி வந்து புரோதயம் மூழ்கி(ம்) முனிகள் பலர், எந்தைபெம்மான்! என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் மந்தி பாய, சரேலச் சொரிந்து(ம்) முரிந்து உக்க பூக் கெந்தம் நாற, கிளரும் சடை எந்தை கேதாரமே. | [3] |
உள்ளம் மிக்கார், குதிரை(ம்) முகத்தார், ஒரு காலர்கள் எள்கல் இல்லா இமையோர்கள், சேரும்(ம்) இடம் என்பரால் பிள்ளை துள்ளிக் கிளை பயில்வ கேட்டு, பிரியாது போய், கிள்ளை, ஏனல் கதிர் கொணர்ந்து வாய்ப் பெய்யும் கேதாரமே. | [4] |
ஊழி ஊழி உணர்வார்கள், வேதத்தின் ஒண் பொருள்களால், வாழி, எந்தை! என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் மேழித் தாங்கி உழுவார்கள் போல(வ்), விரை தேரிய, கேழல் பூழ்தி, கிளைக்க, மணி சிந்தும் கேதாரமே. | [5] |
நீறு பூசி, நிலத்து உண்டு, நீர் மூழ்கி, நீள் வரைதன் மேல் தேறு சிந்தை உடையார்கள் சேரும்(ம்) இடம் என்பரால் ஏறி மாவின் கனியும் பலாவின்(ன்) இருஞ் சுளைகளும் கீறி, நாளும் முசுக் கிளையொடு உண்டு உகளும் கேதாரமே. | [6] |
மடந்தை பாகத்து அடக்கி(ம்), மறை ஓதி வானோர் தொழ, தொடர்ந்த நம்மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர, கல் அறைகள் மேல் கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே. | [7] |
அரவ முந்நீர் அணி இலங்கைக் கோனை, அருவரைதனால் வெருவ ஊன்றி, விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால் குரவம், கோங்கம், குளிர் பிண்டி, ஞாழல், சுரபுன்னை, மேல் கிரமம் ஆக வரிவண்டு பண் செய்யும் கேதாரமே. | [8] |
ஆழ்ந்து காணார், உயர்ந்து எய்தகில்லார், அலமந்தவர் தாழ்ந்து, தம் தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால் வீழ்ந்து செற்று(ந்) நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினைக் கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண, முத்து உதிரும் கேதாரமே. | [9] |
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள், மாசு உடம்பினர், இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால் அடுக்க நின்ற(வ்) அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளைக் கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே. | [10] |
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான், ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்கள் பத்தும் இசை வல்லவர், வேந்தர் ஆகி உலகு ஆண்டு, வீடுகதி பெறுவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.117  
மண்டு கங்கை சடையில் கரந்தும்,
பண் - செவ்வழி (திருத்தலம் திருஇரும்பைமாகாளம் ; அருள்தரு குயிலம்மை உடனுறை அருள்மிகு மாகாளேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=TJPLRSQLiNc
Audio: https://sivaya.org/audio/2.117 Mandu Gangai.mp3
மண்டு கங்கை சடையில் கரந்தும், மதி சூடி, மான் கொண்ட கையான், புரம் மூன்று எரித்த குழகன்(ன்), இடம் எண்திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள், வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே. | [1] |
வேதவித்தாய், வெள்ளை நீறு பூசி, வினை ஆயின கோது வித்தா, நீறு எழக் கொடி மா மதில் ஆயின, ஏத வித்து ஆயின தீர்க்கும்(ம்) இடம்(ம்) இரும்பைதனுள், மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே. | [2] |
வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான், எந்தைபெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பைதனுள் கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில் மந்தி ஏறிக் கொணர்ந்து உண்டு உகள்கின்ற மாகாளமே. | [3] |
நஞ்சு கண்டத்து அடக்கி(ந்), நடுங்கும் மலையான்மகள் அஞ்ச, வேழம் உரித்த பெருமான் அமரும்(ம்) இடம் எஞ்சல் இல்லாப் புகழ் போய் விளங்கும்(ம்) இரும்பைதனுள், மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே. | [4] |
பூசும் மாசு இல் பொடியான், விடையான், பொருப்பன்மகள் கூச ஆனை உரித்த பெருமான், குறைவெண்மதி ஈசன், எங்கள்(ள்) இறைவன், இடம்போல் இரும்பைதனுள், மாசு இலோர் கள்மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே. | [5] |
குறைவது ஆய குளிர்திங்கள் சூடிக் குனித்தான், வினை பறைவது ஆக்கும் பரமன், பகவன், பரந்த சடை இறைவன், எங்கள் பெருமான், இடம்போல் இரும்பைதனுள், மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே. | [6] |
பொங்கு செங்கண்(ண்) அரவும் மதியும் புரிபுன்சடைத் தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்வு இடம் எங்கும் இச்சை அமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள், மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே. | [7] |
நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான், அட்டமூர்த்தி, அழல் போல் உருவன்(ன்), அழகு ஆகவே இட்டம் ஆக இருக்கும்(ம்) இடம்போல் இரும்பைதனுள், வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே. | [8] |
அட்ட காலன் தனை வவ்வினான், அவ் அரக்கன் முடி எட்டும் மற்றும் இருபத்திரண்டும்(ம்) இற ஊன்றினான், இட்டம் ஆக இருப்பான் அவன்போல் இரும்பைதனுள், மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே. | [9] |
அரவம் ஆர்த்து, அன்று, அனல் அங்கை ஏந்தி, அடியும் முடி பிரமன் மாலும்(ம்) அறியாமை நின்ற பெரியோன் இடம் குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும்(ம்) இரும்பைதனுள், மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே. | [10] |
எந்தை பெம்மான் இடம், எழில் கொள் சோலை இரும்பைதனுள் மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில், அந்தம் இல்லா அனல் ஆடுவானை, அணி ஞானசம் பந்தன் சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.004  
இடரினும், தளரினும், எனது உறு
பண் - காந்தாரபஞ்சமம் (திருத்தலம் திருவாவடுதுறை ; அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தர் பட்டீச்சுரத்திலிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கியவராய்த் திருவாவடுதுறை வந்தடைந்தார். அதுபோது சிவபாத இருதயர், தான் வேள்வி செய்தற்கு ஏற்ற காலம் இதுவாகும். அதற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் இடரினும் தளரினும் என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார். சிவபூதம் ஒன்று ஆயிரம் பொன்னடங்கிய பொற்கிழி ஒன்றை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து இப்பொற்கிழி எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி, இறைவர் இக்கிழியை உமக்கு வழங்குமாறு அளித்துள்ளார் எனக் கூறி மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழி யனுப்பி வைத்தார்.
பொருளாதார நிலை சீர் பெருவதற்க்கும் , வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=HR13vYitroI
Audio: https://sivaya.org/audio/3.004 idarinum thalarinum.mp3
இடரினும், தளரினும், எனது உறு நோய் தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்; கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! | [1] |
வாழினும், சாவினும், வருந்தினும், போய் வீழினும், உன கழல் விடுவேன் அல்லேன்; தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப் போழ் இளமதி வைத்த புண்ணியனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! | [2] |
நனவினும், கனவினும், நம்பா! உன்னை, மனவினும், வழிபடல் மறவேன்; அம்மான்! புனல் விரி நறுங்கொன்றைப்போது அணிந்த, கனல் எரி-அனல் புல்கு கையவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! | [3] |
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும், அம் மலர் அடி அலால் அரற்றாது, என் நா; கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால் மும்மதில் எரி எழ முனிந்தவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! | [4] |
கையது வீழினும், கழிவு உறினும், செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன்;- கொய் அணி நறுமலர் குலாய சென்னி மை அணி மிடறு உடை மறையவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! | [5] |
வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும், எந்தாய்! உன் அடி அலால் ஏத்தாது, என் நா; ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த சந்த வெண்பொடி அணி சங்கரனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! | [6] |
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும், அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா; ஒப்பு உடை ஒருவனை உரு அழிய அப்படி அழல் எழ விழித்தவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! | [7] |
பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும், சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்; ஏர் உடை மணி முடி இராவணனை ஆர் இடர் பட வரை அடர்த்தவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! | [8] |
உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின் ஒண் மலர் அடி அலால் உரையாது, என் நா; கண்ணனும், கடி கமழ் தாமரை மேல் அண்ணலும், அளப்பு அரிது ஆயவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! | [9] |
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும், அத்தா! உன் அடிஅலால் அரற்றாது, என் நா; புத்தரும் சமணரும் புறன் உரைக்க, பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! | [10] |
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த இலை நுனை வேல்படை எம் இறையை, நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார், வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம் நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.005  
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க
பண் - காந்தாரபஞ்சமம் (திருத்தலம் திருப்பூந்தராய் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க செம்மை விமலன், வியன் கழல் சென்று சிந்தையில் வைக்க, மெய்க்கதி நன்று அது ஆகிய நம்பன்தானே. | [1] |
புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய் வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ, ஞாலத்தில் உயர்வார், உள்கும் நன்நெறி மூலம் ஆய முதலவன் தானே. | [2] |
வேந்தராய் உலகு ஆள விருப்பு உறின், பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல் நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட, சாதியா, வினை ஆனதானே. | [3] |
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய் ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட, சிந்தை நோய் அவை தீர நல்கிடும் இந்து வார்சடை எம் இறையே. | [4] |
பொலிந்த என்பு அணி மேனியன்-பூந்தராய் மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட, நும்தம் மேல்வினை ஓட, வீடுசெய் எந்தை ஆய எம் ஈசன்தானே. | [5] |
பூதம் சூழப் பொலிந்தவன், பூந்தராய் நாதன், சேவடி நாளும் நவின்றிட, நல்கும், நாள்தொறும் இன்பம் நளிர்புனல் பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே. | [6] |
புற்றின் நாகம் அணிந்தவன், பூந்தராய் பற்றி வாழும் பரமனைப் பாடிட, பாவம் ஆயின தீரப் பணித்திடும் சே அது ஏறிய செல்வன் தானே. | [7] |
போதகத்து உரி போர்த்தவன், பூந்தராய் காதலித்தான்-கழல் விரல் ஒன்றினால், அரக்கன் ஆற்றல் அழித்து, அவனுக்கு அருள் பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே. | [8] |
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய், ஆள் அது ஆக, அடைந்து உய்ம்மின்! நும் வினை மாளும் ஆறு அருள்செய்யும், தானே. | [9] |
பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய் கடிந்து, இருத்தல் செய்த பிரான்-இமையோர் தொழ, பூந்தராய் நகர் கோயில் கொண்டு, கை ஏந்தும் மான்மறி எம் இறையே. | [10] |
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய் அந்தம் இல் எம் அடிகளை, ஞானசம் பந்தன் மாலை கொண்டு ஏத்தி வாழும்! நும் பந்தம் ஆர் வினை பாறிடுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.022  
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
பண் - காந்தாரபஞ்சமம் (திருத்தலம் சீர்காழி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கியது. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி இருபிறப்பாளர் நிலையை விளக்கி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து மறை நான்கும் தந்தோம் என்றனர். பிள்ளையார் இறையருளால் எல்லாக் கலையுணர்வுகளையும் ஓதாது உணந்தவர். ஆதலின் வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்கட்கிருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, துஞ்சலும் துஞ்சல் என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி யருளினார்.
ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம். பஞ்சாக்கரத் திருப்பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=Pi5cJXxeoVQ
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும், வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே. | [1] |
மந்திர நால்மறை ஆகி, வானவர் சிந்தையுள் நின்றவர், அவர் தம்மை ஆள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே. | [2] |
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர் ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர் ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே. | [3] |
நல்லவர் தீயவர் எனாது, நச்சினர் செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ; கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே. | [4] |
கொங்கு அலர் வன்மதன் வாளி ஐந்து; அகத்து அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்; தங்கு அரவின் படம் அஞ்சு; தம் உடை அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே. | [5] |
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும், வெம்மை நரகம் விளைந்த போழ்தினும், இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும், அம்மையினும், துணை அஞ்சு எழுத்துமே. | [6] |
வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர் பீடை கெடுப்பன; பின்னை, நாள்தொறும் மாடு கொடுப்பன; மன்னு மா நடம் ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே. | [7] |
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின; பண்டை இராவணன் பாடி உய்ந்தன; தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே. | [8] |
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச் சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும், பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே. | [9] |
புத்தர், சமண் கழுக் கையர், பொய் கொளாச் சித்தத்தவர்கள் தெளிந்து தேறின; வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே. | [10] |
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.024  
மண்ணின் நல்ல வண்ணம் வாழல்
பண் - கொல்லி (திருத்தலம் திருக்கழுமலம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கும் நாளில் அவரைக் காண விரும்பிய சிவபாத இருதயர் மதுரை வந்தார். அப்பொழுது ஞானசம்பந்தர் அவரைப் பார்த்து அருந்தவத்தீர் குழந்தைப் பருவத்தில் எனக்குப் பொற்கிண்ணத்தில் பாலளித்து அருள் புரிந்த தோணிபுரப்பெருந்தகை எம்பெருமாட்டியோடு இனிதாக இருந்ததே? என நலம் உசாவும் முறையில் மண்ணில் நல்ல வண்ணம் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
திருமணம் மற்றும் சுப நிகழ்வுகலில் வாழ்த்துவதற்கான பாடல். அமைதியுடனும் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=EFcH79qtezA
Audio: https://www.youtube.com/watch?v=zpZCGZOpaeY
Audio: https://sivaya.org/audio/3.024 Mannanil Nalla Vannam.mp3
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்; எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே! | [1] |
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்; காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே! | [2] |
தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல் ஆம் வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி; கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர் பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே! | [3] |
அயர்வு உளோம்! என்று நீ அசைவு ஒழி, நெஞ்சமே! நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும், கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே! | [4] |
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே! விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும், கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே! | [5] |
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல கற்ற நல் வேதியர் கழுமல வள நகர், சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும் பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே! | [6] |
குறைவளை வதுமொழி குறைவு ஒழி, நெஞ்சமே! நிறைவளை முன்கையாள் நேரிழை அவளொடும், கறைவளர் பொழில்அணி கழுமல வளநகர்ப் பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே! | [7] |
அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட, நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே, கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர் பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே! | [8] |
நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர் அடியொடு முடி அறியா அழல் உருவினன்; கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே! | [9] |
தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம் ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்! கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர் பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே! | [10] |
கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப் பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.033  
நீர் இடைத் துயின்றவன், தம்பி,
பண் - கொல்லி (திருத்தலம் திருவுசாத்தானம் (கோவிலூர்) ; அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=nUrPk4HHz-Y
நீர்இடைத் துயின்றவன், தம்பி,நீள் சாம்புவான், போர்உடைச் சுக்கிரீவன்,அனு மான்தொழ; கார்உடை நஞ்சுஉண்டு, காத்து;அருள் செய்தஎம் சீர்உடைச் சேடர்வாழ் திருஉசாத் தானமே. | [1] |
கொல்லைஏறு உடையவன், கோவண ஆடையன், பல்லைஆர் படுதலைப் பலிகொளும் பரமனார் முல்லைஆர் புறவுஅணி முதுபதி நறைகமழ் தில்லையான் உறைவுஇடம் திருஉசாத் தானமே. | [2] |
தாம்அலார் போலவே தக்கனார் வேள்வியை ஊமனார் தம்கனா ஆக்கினான், ஒருநொடி; காமனார் உடல்கெடக் காய்ந்தஎம் கண்ணுதல்; சேமமா உறைவுஇடம் திருஉசாத் தானமே. | [3] |
மறிதரு கரத்தினான், மால்விடை ஏறியான், குறிதரு கோலநல் குணத்தினார் அடிதொழ, நெறிதரு வேதியர் நித்தலும் நியமம்செய் செறிதரு பொழில்அணி திருஉசாத் தானமே. | [4] |
பண்டு,இரைத்து அயனும்மா லும்,பல பத்தர்கள் தொண்டுஇரைத் தும்,மலர் தூவித்தோத் திரம்சொல, கொண்டுஇரைக் கொடியொடும் குருகினின் நல்இனம் தெண்திரைக் கழனிசூழ் திருஉசாத் தானமே. | [7] |
மடவரல் பங்கினன்; மலைதனை மதியாது சடசட எடுத்தவன் தலைபத்தும் நெரிதர, அடர்தர ஊன்றி,அங் கேஅவற்கு அருள்செய்தான்; திடம்என உறைவுஇடம் திருஉசாத் தானமே. | [8] |
ஆண்அலார், பெண்அலார், அயனொடு மாலுக்கும் காணஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்துஉளான், பேணுவார் பிணியொடும் பிறப்புஅறுப் பான்இடம் சேண்உலாம் மாளிகைத் திருஉசாத் தானமே. | [9] |
கானம்ஆர் வாழ்க்கையான், கார்அமண் தேரர்சொல் ஊனமாக் கொண்டு,நீர் உரைமின்உய் யஎனில் வானம்ஆர் மதில்,அணி மாளிகை, வளர்பொழில், தேனமா மதியம்தோய் திருஉசாத் தானமே! | [10] |
வரைதிரிந்து இழியும்நீர் வளவயல் புகலிமன், திரைதிரிந்து எறிகடல்- திருஉசாத் தானரை உரைதெரிந்து உணரும்சம் பந்தன்,ஒண் தமிழ்வல்லார் நரைதிரை இன்றியே நன்நெறி சேர்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.046  
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை
பண் - கௌசிகம் (திருத்தலம் திருக்கருகாவூர் ; அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
குழத்தைப் பேறு- கருக் கலையாமல் பாதுகாக்க ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=uSnIymbkLcs
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே, மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக் கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம் அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [1] |
விமுதல் வல்ல சடையான்-வினை உள்குவார்க்கு அமுதநீழல் அகலாததோர் செல்வம் ஆம், கமுதம் முல்லை கமழ்கின்ற, கருகாவூர் அமுதர்; வண்ணம் அழலும் அழல்வண்ணமே. | [2] |
பழக வல்ல சிறுத்தொண்டர், பா இன் இசைக் குழகர்! என்று குழையா, அழையா, வரும், கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம் அழகர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [3] |
பொடி மெய் பூசி, மலர் கொய்து, புணர்ந்து உடன், செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர் கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம் அடிகள்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [4] |
மையல் இன்றி, மலர் கொய்து வணங்கிட, செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர் கைதல், முல்லை, கமழும் கருகாவூர் எம் ஐயர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [5] |
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட, ஆசை ஆர, அருள் நல்கிய செல்வத்தர்; காய் சினத்த விடையார் கருகாவூர் எம் ஈசர்; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே. | [6] |
வெந்த நீறு மெய் பூசிய வேதியன், சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன்- கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் எந்தை; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே. | [7] |
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார் மண்ணு கோலம்(ம்) உடைய அம்மலரானொடும் கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம் அண்ணல்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [9] |
போர்த்த மெய்யினர், போது உழல்வார்கள், சொல் தீர்த்தம் என்று தெளிவீர்! தெளியேன்மின்! கார்த் தண்முல்லை கமழும் கருகாவூர் எம் ஆத்தர் வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [10] |
கலவமஞ்ஞை உலவும் கருகாவூ நிலவு பாடல் உடையான் தன நீள்கழல் குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ் சொல வலார் அவர் தொல்வினை தீருமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.049  
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்
பண் - கௌசிகம் (திருத்தலம் நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில் ( வைகாசி மூலம் ) ஒரே இடத்தில் முக்தி அடைந்தனர்
நம் தீவினைகள் அகல, நாம் செய்த பாவங்கள் நீங்க, மற்றும் இறைவன் அடி கிடைக்க Audio: https://www.youtube.com/watch?v=RYMXxRvZB8I
Audio: https://www.youtube.com/watch?v=5dzknic0_uA
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது; வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே. | [1] |
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால், வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது; செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எல்லாம்; நம்பன் நாமம் நமச்சிவாயவே. | [2] |
நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்து அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தகுவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே. | [3] |
இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால் நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்; நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி நயனன், நாமம் நமச்சிவாயவே. | [4] |
கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின், எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே. | [5] |
மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவிய பந்தனையவர் தாமும் பகர்வரேல், சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே. | [6] |
நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும், உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால்- வரதன் நாமம் நமச்சிவாயவே. | [7] |
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல் தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும், மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை நலம் கொள் நாமம் நமச்சிவாயவே. | [8] |
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன் பாதம் தான் முடி நேடிய பண்பராய், யாதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர் ஓதும் நாமம் நமச்சிவாயவே. | [9] |
கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள் வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்- விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய் நஞ்சுஉண் கண்டன் நமச்சிவாயவே. | [10] |
நந்தி நாமம் நமச்சிவாய! என்னும் சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் பந்தபாசம் அறுக்க வல்லார்களே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.051  
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
பண் - கௌசிகம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர் அந்தணர் முதலானோர் வருகையை அறிந்த சமணர் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டனர். தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்க அநுமதி பெற்றனர். சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை. அதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். ஒருபகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் தெரிவித்தனர். இத்தீ அரசன் முறை செய்யாமை யால் நேர்ந்ததாகும், ஆதலால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறையாயினும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக என்று கூறி செய்யனே திரு என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
பகைவர்கள் தொல்லைகள் நீங்க , நெருப்பு தொல்லைகளில் இருந்து விடுபட, சிறை வாசம் தடுக்க, சிறையில் இருந்து விடுபட ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=FKdAEZH4Pms
Audio: https://sivaya.org/audio/3.051 Seyyanae ThiruAalavaay.mp3
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே! | [1] |
சித்தனே! திரு ஆலவாய் மேவிய அத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! | [2] |
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச் சொக்கனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே! | [3] |
சிட்டனே! திரு ஆலவாய் மேவிய அட்டமூர்த்தியனே! அஞ்சல்! என்று அருள் துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! | [4] |
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய் அண்ணலே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; எண் இலா அமணர் கொளுவும் சுடர் பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே! | [5] |
தஞ்சம்! என்று உன் சரண் புகுந்தேனையும், அஞ்சல்! என்று அருள், ஆலவாய் அண்ணலே! வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர் பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! | [6] |
செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய் அங்கணா! அஞ்சல்! என்று அருள் செய், எனை; கங்குலார் அமண்கையர் இடும் கனல், பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே! | [7] |
தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய் ஆத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர் பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! | [8] |
தாவினான், அயன்தான் அறியா வகை மேவினாய்! திரு ஆலவாயாய், அருள் தூ இலா அமணர் கொளுவும் சுடர் பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே! | [9] |
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய அண்டனே! அஞ்சல்! என்று அருள் செய், எனை; குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே! | [10] |
அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால், வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும், செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.054  
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
பண் - கௌசிகம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான். ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.
கூன் நிமிற Audio: https://www.youtube.com/watch?v=ArwIB72oZ48
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்! வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக! ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே சூழ்க! வையகமும் துயர் தீர்கவே! | [1] |
அரிய காட்சியராய், தமது அங்கை சேர் எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும் கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும், பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே? | [2] |
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே, தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்; எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ! | [3] |
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா; கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார் | [4] |
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி; மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்! சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே | [5] |
ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம் பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக் கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில், நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே? | [6] |
கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே! | [7] |
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம் ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய, பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே! | [8] |
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி, நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப் போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே! | [9] |
மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும் பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி, கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே! | [10] |
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும், தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப் பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில், பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே! | [11] |
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல், பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும், வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே! | [12] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.067  
சுரர் உலகு, நரர்கள் பயில்
பண் - சாதாரி (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் அந்த நகரத்தில் பல நாட்கள் தங்கி பல வகையான பதிகங்கள் பாடினார். இந்த பதிகம் பன்னிரண்டு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் சீர்காழி நகரின் ஒரு பெயர் வந்த வரலாற்றினை கூறுவதால், வழிமொழிப் பதிகம் என பெயர் வந்தது. பாடல்களிலும் முன்பகுதியில் இறைவனது சிறப்பும் பின்பகுதியில் அந்த பெயர் வந்ததற்கான விரிவான தலபுராண வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளன. தலத்தின் பன்னிரண்டு பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயற்றப்பட்ட பாடல் எனினும், வழக்கமாக தான் குறிப்பிடும் இராவணின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம், சமணர்களை பற்றிய குறிப்பு மற்றும் பதிகத்தை ஓதுவதால் கிடைக்கும் பலங்கள் ஆகியவையும் இந்த பதிகத்தில் குறிப்பிடப் படுகின்றன. வேகமான சந்தமுடைய பாடல்கள் என்பதால் முடுகு விராகம் என்று இந்த பதிகம் அழைக்கப் படுகின்றது. சீர்காழியின் இந்த பன்னிரண்டு பெயர்களும் மந்திரம் என்பதால் இந்த பெயர்களை இந்த பதிகத்தில் கொடுத்துள்ள வரிசைப் படியே சொல்ல வேண்டும். Audio: https://www.youtube.com/watch?v=7yjD5f5r-uk
சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம், முரண் அழிய, அரண மதில் முப்- புரம் எரிய, விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் வரம் அருள வரல் முறையின் நிரல் நிறை கொள்வரு சுருதிசிர உரையினால், பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ, வளர் பிரமபுரமே. | [1] |
தாணு மிகு ஆண் இசைகொடு, ஆணு வியர் பேணுமது காணும் அளவில், கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி, மது நாணும் வகையே ஏணு கரி பூண் அழிய, ஆண் இயல் கொள் மாணி பதி-சேண் அமரர்கோன் வேணுவினை ஏணி, நகர் காணில், திவி காண, நடு வேணுபுரமே. | [2] |
பகல் ஒளிசெய் நக மணியை, முகை மலரை, நிகழ் சரணஅகவு முனிவர்க்கு அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம் பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள, நிகர் இல் இமையோர் புக, உலகு புகழ, எழில் திகழ, நிகழ் அலர் பெருகு புகலிநகரே. | [3] |
அம் கண் மதி, கங்கை நதி, வெங்கண் அரவங்கள், எழில் தங்கும் இதழித் துங்க மலர், தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் வெங்கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் வெங் குரு விளங்கி உமைபங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே. | [4] |
ஆண் இயல்பு காண, வனவாண இயல் பேணி, எதிர் பாணமழை சேர் தூணி அற, நாணி அற, வேணு சிலை பேணி அற, நாணி விசயன் பாணி அமர் பூண, அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில் பாணி உலகு ஆள, மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே. | [5] |
நிராமய! பராபர! புராதன! பராவு சிவ! ராக! அருள்! என்று, இராவும் எதிராயது பராய் நினை புராணன், அமராதி பதி ஆம் அராமிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வா- தராயனை விராய் எரி பராய், மிகு தராய் மொழி விராய பதியே. | [6] |
அரணை உறு முரணர் பலர் மரணம் வர, இரணம் மதில் அரம் மலி படைக் கரம் விசிறு விரகன், அமர் கரணன், உயர் பரன், நெறி கொள் கரனது இடம் ஆம் பரவு அமுது விரவ, விடல் புரளம் உறும் அரவை அரி சிரம் அரிய, அச் சிரம் அரன சரணம் அவை பரவ, இரு கிரகம் அமர் சிரபுரம் அதே. | [7] |
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய, நிறுவி விரல், மா- மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற, அருளும் இறைவன் இடம் ஆம் குறைவு இல் மிக நிறைதை உழி, மறை அமரர் நிறை அருள, முறையொடு வரும் புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற, அருளு புறவம் அதுவே. | [8] |
விண் பயில, மண் பகிரி, வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால், கண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம் மண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பு சகர் புண் பயில விண் படர, அச் சண்பை மொழி பண்ப முனி கண் பழி செய் பண்பு களை சண்பை நகரே. | [9] |
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர், சூழும் உடலாளர், உணரா ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் கீழ், இசை கொள் மேல் உலகில், வாழ் அரசு சூழ் அரசு வாழ, அரனுக்கு ஆழிய சில்காழி செய, ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே. | [10] |
நச்சு அரவு கச்சு என அசைச்சு, மதி உச்சியின் மிலைச்சு, ஒரு கையால் மெய்ச் சிரம் அணைச்சு, உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் மச்சம் மதம் நச்சி மதமச் சிறுமியைச் செய் தவ அச்ச விரதக் கொச்சை முரவு அச்சர் பணிய, சுரர்கள் நச்சி மிடை கொச்சைநகரே. | [11] |
ஒழுகல் அரிது அழி கலியில், உழி உலகு பழி பெருகு வழியை நினையா, முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனிகுழுவினொடு, கெழுவு சிவனைத் தொழுது, உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழி மொழிகள் மொழி தகையவே. | [12] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.072  
விங்கு விளை கழனி, மிகு
பண் - சாதாரி (திருத்தலம் திருமாகறல் ; அருள்தரு புவனநாயகியம்மை உடனுறை அருள்மிகு அடைக்கலங்காத்தநாதர் திருவடிகள் போற்றி )
எலும்பு முறிவு குணம் அடைவதற்கும் , இளம்பிள்ளை வாதம் , பக்க வாத நோய்கள் தீர்வதற்கு ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=KazBwKsulkI
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம், மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்- கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்; செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே. | [1] |
கலையின் ஒலி, மங்கையர்கள் பாடல் ஒலி, ஆடல், கவின் எய்தி, அழகு ஆர் மலையின் நிகர் மாடம், உயர் நீள்கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்- இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி, எரிபுன் சடையினுள் அலை கொள் புனல் ஏந்து பெருமான்-அடியை ஏத்த, வினை அகலும், மிகவே. | [2] |
காலையொடு துந்துபிகள், சங்கு, குழல், யாழ், முழவு, காமருவு சீர் மாலை வழிபாடு செய்து, மாதவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்- தோலை உடை பேணி, அதன்மேல் ஒர் சுடர் நாகம் அசையா, அழகிதாப் பாலை அன நீறு புனைவான்-அடியை ஏத்த, வினை பறையும், உடனே. | [3] |
இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில் மெய்யுள் உடனே, மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல் உளான்- கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி செஞ்சடையினான்-அடியையே நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே! | [4] |
துஞ்சு நறு நீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார் கழனிவாய், மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்- வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன், வளரும் நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன்-அடியாரை நலியா, வினைகளே | [5] |
மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன் ஆய் இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு மாகறல் உளான்- மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல் எளிதே. | [6] |
வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர் மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான்-எழில் அது ஆர் கைய கரி கால்வரையின் மேலது உரி-தோல் உடைய மேனி அழகு ஆர் ஐயன்-அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும், மிகவே. | [7] |
தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன் மாடமிசையே, மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்; பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு ஆர் பூசு பொடி ஈசன்! என ஏத்த, வினை நிற்றல் இல, போகும், உடனே. | [8] |
தூய விரிதாமரைகள், நெய்தல், கழுநீர், குவளை, தோன்ற, மது உண் பாய வரிவண்டு பலபண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்- சாய விரல் ஊன்றிய இராவணன் தன்மை கெட நின்ற பெருமான்- ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே. | [9] |
காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல் உளான்- நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன் ஆய், ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா, வினைகளே. | [10] |
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்- அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்-உரையால், மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும், உடனே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.078  
நீறு, வரி ஆடு அரவொடு,
பண் - சாதாரி (திருத்தலம் திருவேதிகுடி ; அருள்தரு மங்கையர்க்கரசியம்மை உடனுறை அருள்மிகு வேதபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=QWAjJTbfqv0
நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம், ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம் தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில் வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே. | [1] |
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர், தொல் ஆனை உரிவை மல் புரி புயத்து இனிது மேவுவர், எந்நாளும் வளர் வானவர் தொழத் துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர், இயன்ற தொகு சீர் வெற்பு அரையன் மங்கை ஒரு பங்கர், நகர் என்பர் திரு வேதிகுடியே. | [2] |
போழும் மதி, பூண் அரவு, கொன்றைமலர், துன்று சடை வென்றி புக மேல் வாழும் நதி தாழும் அருளாளர்; இருள் ஆர் மிடறர்; மாதர் இமையோர் சூழும் இரவாளர்; திருமார்பில் விரி நூலர்; வரிதோலர்; உடைமேல் வேழ உரி போர்வையினர்; மேவு பதி என்பர் திரு வேதிகுடியே. | [3] |
காடர், கரி காலர், கனல் கையர், அனல் மெய்யர், உடல் செய்யர், செவியில்- தோடர், தெரி கீளர், சரி கோவணவர், ஆவணவர் தொல்லை நகர்தான்- பாடல் உடையார்கள் அடியார்கள், மலரோடு புனல் கொண்டு பணிவார் வேடம் ஒளி ஆன பொடி பூசி, இசை மேவு திரு வேதிகுடியே. | [4] |
சொக்கர்; துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து, தொழும் மூவர் மகிழத் தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார்; இனிது தங்கும் நகர்தான்- கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரிவண்டு இசை குலாம், மிக்க அமரர் மெச்சி இனிது, அச்சம் இடர் போக நல்கு, வேதிகுடியே. | [5] |
செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான் உரிவை போர்த்து ஐயம் இடும்! என்று மடமங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர், வேதிகுடியே. | [6] |
உன்னி இருபோதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்க அருளித் துன்னி ஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடம் ஆம் கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி, அரு மங்கலம் மிக, மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே. | [7] |
உரக் கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள் அரக்கனை அடர்த்தவன், இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன், இடம் முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை விரைக் குழல் மிகக் கமழ, விண் இசை உலாவு திரு வேதிகுடியே. | [8] |
பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட, எரி ஆய், தேவும் இவர் அல்லர், இனி யாவர்? என, நின்று திகழ்கின்றவர் இடம் பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம், மேவு அரிய செல்வம் நெடுமாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே. | [9] |
வஞ்ச(அ)மணர், தேரர், மதிகேடர், தம் மனத்து அறிவு இலாதவர் மொழி தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் அஞ்சுபுலன் வென்று, அறுவகைப் பொருள் தெரிந்து, எழு இசைக் கிளவியால், வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே. | [10] |
கந்தம் மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்- பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலே சிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி, இமையோர் அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம்; ஆணை நமதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.092  
மருந்து அவை; மந்திரம், மறுமை
பண் - சாதாரி (திருத்தலம் திருநெல்வேலி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=y7lNMHc4Tas
Audio: https://sivaya.org/audio/3.092 Marunthavai Manthiram.mp3
மருந்து அவை; மந்திரம், மறுமை நன்நெறி அவை; மற்றும் எல்லாம்; அருந்துயர் கெடும்; அவர் நாமமே சிந்தை செய், நன் நெஞ்சமே! பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதர, துன்று பைம்பூஞ்- செருந்தி செம்பொன்மலர் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே. | [1] |
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர்; ஏறு அது ஏறிச் சென்று தாம், செடிச்சியர் மனைதொறும், பலிகொளும் இயல்பு அதுவே துன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப்போது அளைந்து தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே. | [2] |
பொறி கிளர் அரவமும், போழ் இளமதியமும், கங்கை என்னும் நெறி படு குழலியைச் சடைமிசைச் சுலவி, வெண் நீறு பூசி, கிறிபட நடந்து, நல் கிளி மொழியவர் மனம் கவர்வர் போலும் செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே. | [3] |
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல் செய்து அருளவேயும், பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி ஈண்டு மா மாடங்கள், மாளிகை, மீது எழு கொடி மதியம் தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர் தாமே. | [4] |
ஏன வெண் கொம்பொடும், எழில் திகழ் மத்தமும், இள அரவும், கூனல் வெண் பிறை தவழ் சடையினர்; கொல் புலித் தோல் உடையார் ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர்; பாடுவர், அருமறைகள் தேனில் வண்டு அமர் பொழில்-திரு நெல்வேலி உறை செல்வர் தாமே. | [5] |
வெடி தரு தலையினர்; வேனல் வெள் ஏற்றினர்; விரி சடையர் பொடி அணி மார்பினர்; புலி அதள் ஆடையர்; பொங்கு அரவர்; வடிவு உடை மங்கை ஓர்பங்கினர்; மாதரை மையல் செய்வார் செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர் தாமே. | [6] |
அக்கு உலாம் அரையினர்; திரை உலாம் முடியினர்; அடிகள்; அன்று, தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார்; கதிர் கொள் செம்மை புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலைத் திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே. | [7] |
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவே உந்தி, மா மலர் அடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர, மதுத் திவலை சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே. | [8] |
பைங் கண்வாள் அரவு அணையவனொடு பனி மலரோனும் காணாது அங்கணா! அருள்! என அவர் அவர் முறைமுறை இறைஞ்ச நின்றார் சங்க நால்மறையவர் நிறைதர, அரிவையர் ஆடல் பேண, திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர் தாமே. | [9] |
துவர் உறு விரி துகில் ஆடையர், வேடம் இல் சமணர், என்னும் அவர் உறு சிறு சொலை அவம் என நினையும் எம் அண்ணலார் தாம் கவர் உறு கொடி மல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆல, திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே. | [10] |
பெருந் தண் மா மலர்மிசை அயன் அவன் அனையவர், பேணு கல்வித் திருந்து மா மறையவர், திரு நெல்வேலி உறை செல்வர் தம்மை, பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன அருந்தமிழ் மாலைகள் பாடி ஆட, கெடும், அருவினையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.108  
வேத வேள்வியை நிந்தனை செய்து
பண் - பழம்பஞ்சுரம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க வேத வேள்வியை என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.
வழக்குகளில் வெற்றி பெற, கடன் தொல்லைகள் நீங்கி, கடன் பெறாமலே வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=JEAsR66LDzw
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே? பாதி மாது உடன் ஆய பரமனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! | [1] |
வைதிகத்தின் வழி ஒழுகாத அக் கைதவம்(ம்) உடைக் கார் அமண் தேரரை எய்தி, வாதுசெயத் திரு உள்ளமே? மை திகழ்தரு மா மணிகண்டனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! | [2] |
மறை வழக்கம் இலாத மா பாவிகள் பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை முறிய, வாதுசெயத் திரு உள்ளமே? மறி உலாம் கையில் மா மழுவாளனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! | [3] |
அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக் கறுத்து வாழ் அமண்கையர்கள் தம்மொடும் செறுத்து, வாதுசெயத் திரு உள்ளமே? முறித்த வான் மதிக்கண்ணி முதல்வனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! | [4] |
அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த, வாதுசெயத் திரு உள்ளமே? வெந்த நீறு அது அணியும் விகிர்தனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! | [5] |
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிந்தை முருட்டு அமண்குண்டரை ஓட்டி, வாதுசெயத் திரு உள்ளமே? காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! | [6] |
அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் விழல் அது என்னும் அருகர் திறத்திறம் கழல், வாதுசெயத் திரு உள்ளமே? தழல் இலங்கு திரு உருச் சைவனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! | [7] |
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் தேற்றி, வாதுசெயத் திரு உள்ளமே? ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! | [8] |
நீல மேனி அமணர் திறத்து நின் சீலம் வாது செயத் திரு உள்ளமே? மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர் கோலம் மேனி அது ஆகிய குன்றமே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! | [9] |
அன்று முப்புரம் செற்ற அழக! நின் துன்று பொன்கழல் பேணா அருகரைத் தென்ற வாதுசெயத் திரு உள்ளமே? கன்று சாக்கியர் காணாத் தலைவனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! | [10] |
கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட, மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப் பாடல் வல்லவர் பாக்கியவாளரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.117  
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
பண் - கௌசிகம் (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=wEt3BJdWfIo
யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மாயாழீ! காமா! காண் நாகா! காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா! | [1] |
யாகா! யாழீ! காயா! காதா! யார் ஆர் ஆ தாய் ஆயாய்! ஆயா! தார் ஆர் ஆயா! தாக ஆயா! காழீயா! கா, யா! | [2] |
தாவா மூவா தாசா! காழீ நாதா! நீ யாமா! மா! மா மா யாநீ! தான ஆழீ! காசா! தா! வா! மூ வாதா! | [3] |
நீவா வாயா! கா யாழீ! கா, வா, வான் நோ வாராமே! மேரா, வான் நோவாவா! காழீயா! காயா! வா வா, நீ! | [4] |
யா காலா! மேயா! காழீயா! மேதாவீ! தாய், ஆவீ! வீயாதா! வீ தாம் மே யாழீ! கா, யாம் மேல் ஆகு | [5] |
மேலே போகாமே, தேழீ, காலாலே கால் ஆனாயே! ஏல் நால் ஆகி ஆல் ஏலா! காழீ தே! மேகா! | [6] |
நீயா மானீ! ஏயா மாதா! ஏழீ! கா,நீதானே! நே தாநீ! காழீ வேதா! மாயாயே நீ, மாய் ஆநீ? | [7] |
நே(அ)ணவர் ஆ விழ யா (ஆ)சை இழியே! வேக (அ)தள் ஏரி! அளாய உழி கா! காழிஉளாய்! அரு இளவு ஏது அ(ஃ)கவே; ஏழ் இசை யாழ இராவணனே. | [8] |
காலே மேலே காண் நீ காழீ! காலே! மாலே! மேபூ பூமேல் ஏ(ய்), மாலே, காழீ! காண்! ஈ, காலே! மேலே | [9] |
வேரியும் ஏண் நவ காழியொயே! ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே; தேர(ர்)களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி! கா வணமே உரிவே. | [10] |
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி! தாய் ஏல் நன் நீயே; நன் நீள்! ஆய் உழி கா! காழி உளான் இன் நையே நினையே, தாழ் இசையா, தமிழ் ஆகரனே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.120  
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
பண் - புறநீர்மை (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=z2C_j--RpY8
Audio: https://sivaya.org/audio/3.120 Mangayarkarasi.mp3
Audio: https://sivaya.org/audio/3.120 mangayarkarasi.mp3
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி, பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ, பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே. | [1] |
வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன், வெள்ளைநீறு அணியும் கொற்றவன்தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும் ஒற்றை வெள்விடையன், உம்பரார்தலைவன், உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு அற்றவர்க்கு அற்ற சிவன், உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே. | [2] |
செந்துவர்வாயாள் சேல் அன கண்ணாள், சிவன் திருநீற்றினை வளர்க்கும் பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய, பார் இடை நிலவும் சந்தம் ஆர் தரளம், பாம்பு, நீர், மத்தம், தண் எருக்கம்மலர், வன்னி, அந்தி வான்மதி, சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே. | [3] |
கணங்கள் ஆய் வரினும், தமியராய் வரினும், அடியவர் தங்களைக் கண்டால், குணம்கொடு பணியும் குலச்சிறை குலாவுங் கோபுரம் சூழ் மணிக் கோயில் மணம் கமழ் கொன்றை, வாள் அரா, மதியம், வன்னி, வண் கூவிளமாலை, அணங்கு, வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே. | [4] |
செய்யதாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல் செல்வி, பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்தொறும் பணிந்து இனிது ஏத்த, வெய்ய வேல், சூலம், பாசம், அங்குசம், மான், விரி கதிர் மழு உடன் தரித்த ஐயனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே. | [5] |
நலம் இலர் ஆக, நலம் அது உண்டு ஆக, நாடவர் நாடு அறிகின்ற குலம் இலர் ஆக, குலம் அது உண்டு ஆக, தவம் பணி குலச்சிறை பரவும் கலை மலி கரத்தன், மூஇலைவேலன், கரிஉரி மூடிய கண்டன், அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல், ஆலவாய் ஆவதும் இதுவே. | [6] |
முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க, பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய, நின்ற சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலை உடனே சுடர் மரகதம் அடுத்தால் போல், அத்தனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே. | [7] |
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சு எழுத்து ஓதி, நல்லராய் நல் இயல்பு ஆகும் கோவணம் பூதி சாதனம் கண்டால்-தொழுது எழு குலச்சிறை போற்ற, ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி, ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே. | [8] |
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன் தன் மகள் ஆம் பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ, விண் உளார் இருவர் கீழொடு மேலும் அளப்பு அரிது ஆம் வகை நின்ற அண்ணலார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே. | [9] |
தொண்டராய் உள்ளார் திசைதிசைதொறும் தொழுது தன் குணத்தினைக் குலாவக் கண்டு, நாள்தோறும் இன்பு உறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த, குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள் குறியின் கண் நெறி இடை வாரா அண்ட நாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே. | [10] |
பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும் இவர் பணியும் அந் நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி, கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு இன்நலம் பாட வல்லவர், இமையோர் ஏத்த, வீற்றிருப்பவர், இனிதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.123  
நிரை கழல் அரவம் சிலம்பு
பண் - புறநீர்மை (திருத்தலம் திருக்கோணமலை ; அருள்தரு மாதுமையம்மை உடனுறை அருள்மிகு கோணீசர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=EwSCSulZrO4
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி வரை கெழு மகள் ஓர்பாகமாப் புணர்ந்த வடிவினர், கொடி விடையர் கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப(அ)ருங் கன மணி வரன்றி, குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே. | [1] |
கடிது என வந்த கரிதனை உரித்து அவ் உரி மேனிமேல் போர்ப்பர் பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய கொடிது எனக் கதறும் குரைகடல் சூழ்ந்து கொள்ள, முன் நித்திலம் சுமந்து குடிதனை நெருங்கிப் பெருக்கம் ஆய்த் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே. | [2] |
பனித்த இளந்திங்கள் பைந்தலை நாகம் படர் சடை முடி இடை வைத்தார் கனித்து இளந் துவர்வாய்க் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர், மதில்மேல் தனித்த பேர் உருவ விழித் தழல் நாகம் தாங்கிய மேரு வெஞ்சிலையாக் குனித்தது ஓர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே. | [3] |
பழித்த இளங் கங்கை சடை இடை வைத்து, பாங்கு உடை மதனனைப் பொடியா விழித்து, அவன் தேவி வேண்ட, முன் கொடுத்த விமலனார்; கமலம் ஆர் பாதர் தெழித்து முன் அரற்றும் செழுங் கடல்-தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து கொழித்து, வன் திரைகள் கரை இடைச் சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே. | [4] |
தாயினும் நல்ல தலைவர்! என்று அடியார் தம் அடி போற்று இசைப்பார்கள் வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர், காண் பலவேடர், நோயிலும் பிணியும் தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலும் சுனையும் கடல் உடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே. | [5] |
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணிதன் உயிர்மேல் வரும் கூற்றைத் திரிந்திடா வண்ணம் உதைத்து, அவற்கு அருளும் செம்மையார்; நம்மை ஆள் உடையார் விரிந்து உயர் மௌவல், மாதவி, புன்னை, வேங்கை, வண் செருந்தி, செண்பகத்தின் குருந்தொடு, முல்லை, கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே. | [6] |
எடுத்தவன் தருக்கை இழித்தவர், விரலால்; ஏத்திட ஆத்தம் ஆம் பேறு தொடுத்தவர்; செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர்; வேள்வி தடுத்தவர்; வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர்; விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமாலைஅமர்ந்தாரே. | [8] |
அருவராது ஒரு கை வெண்தலை ஏந்தி; அகம்தொறும் பலி உடன் புக்க பெருவராய் உறையும் நீர்மையர்; சீர்மைப் பெருங்கடல் வண்ணனும், பிரமன், இருவரும் அறியா வண்ணம் ஒள் எரி ஆய் உயர்ந்தவர்; பெயர்ந்த நல் மாற்கும் குருவராய் நின்றார், குரைகழல் வணங்க; கோணமாமலை அமர்ந்தாரே. | [9] |
நின்று உணும் சமணும், இருந்து உணும் தேரும், நெறி அலாதன புறம்கூற, வென்று நஞ்சு உண்ணும் பரிசினர்; ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரைபல மோதிக் குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே. | [10] |
குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை, கற்று உணர் கேள்விக் காழியர்பெருமான்-கருத்து உடை ஞானசம்பந்தன்- உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்-ஐந்தும் உரைப்பவர், கேட்பவர், உயர்ந்தோர் சுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்; தோன்றுவர்,வான் இடைப் பொலிந்தே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.125  
கல் ஊர்ப் பெரு மணம்
பண் - அந்தாளிக்குறிஞ்சி (திருத்தலம் திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) ; அருள்தரு நங்கையுமைநாயகியம்மை உடனுறை அருள்மிகு சிவலோகத்தியாகேசர் திருவடிகள் போற்றி )
சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழா வினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத் தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர் கள் வேண்டக் கோயிலின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞான சம்பந்தரை நோக்கி யான் பெற்ற அருநிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன் என உரைத்தார். மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்பால் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் காதலியாரைக் கைப்பற்றித் தீவலம் வரும்போது விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்னும் நினைவினராய் இருவினைக்கு வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து கொண்டதே இனி இவளோடும் அந்தமில் சிவன்தாளை அடைவோம் என உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று கல்லூர்ப் பெருமணம் வேண்டா எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். Audio: https://www.youtube.com/watch?v=28Azl8Dg42c
கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா கழுமலம் பல் ஊர்ப் பெரு மணம் பாட்டு மெய் ஆய்த்தில? சொல் ஊர்ப் பெரு மணம் சூடலரே! தொண்டர் நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே! | [1] |
தரு மணல் ஓதம் சேர் தண்கடல் நித்திலம் பரு மணலாக் கொண்டு, பாவை நல்லார்கள், வரும் மணம் கூட்டி, மணம் செயும் நல்லூர்ப்- பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே! | [2] |
அன்பு உறு சிந்தையராகி, அடியவர் நன்பு உறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று, இன்பு உறும் எந்தை இணை அடி ஏத்துவார் துன்பு உறுவார் அல்லர்; தொண்டு செய்தாரே. | [3] |
வல்லியந்தோல் உடை ஆர்ப்பது; போர்ப்பது கொல் இயல் வேழத்து உரி; விரி கோவணம் நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம் புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே. | [4] |
ஏறு உகந்தீர்; இடுகாட்டு எரி ஆடி, வெண்- நீறு உகந்தீர்; நிரை ஆர் விரி தேன் கொன்றை நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம் வேறு உகந்தீர்! உமை கூறு உகந்தீரே! | [5] |
சிட்டப்பட்டார்க்கு எளியான், செங்கண் வேட்டுவப்- பட்டம் கட்டும் சென்னியான், பதி ஆவது நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானீரே! | [6] |
மேகத்த கண்டன், எண்தோளன், வெண் நீற்று உமை பாகத்தன், பாய் புலித்தோலொடு பந்தித்த நாகத்தன்-நல்லூர்ப்பெருமணத்தான்; நல்ல போகத்தன், யோகத்தையே புரிந்தானே. | [7] |
தக்கு இருந்தீர்! அன்று தாளால் அரக்கனை உக்கு இருந்து ஒல்க உயர்வரைக்கீழ் இட்டு நக்கு இருந்தீர்; இன்று நல்லூர்ப்பெருமணம் புக்கு இருந்தீர்! எமைப் போக்கு அருளீரே! | [8] |
ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை மாலும் தம் மாண்பு அறிகின்றிலர்; மாமறை- நாலும் தம் பாட்டு என்பர்; நல்லூர்ப்பெருமணம்- போலும், தம் கோயில் புரிசடையார்க்கே. | [9] |
ஆதர் அமணொடு, சாக்கியர், தாம் சொல்லும் பேதைமை கேட்டுப் பிணக்கு உறுவீர்! வம்மின்! நாதனை, நல்லூர்ப்பெருமணம் மேவிய வேதன, தாள் தொழ, வீடு எளிது ஆமே. | [10] |
நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன், பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை, உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு அறும், பழி பாவம்; அவலம் இலரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.001  
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல
பண் - கொல்லி (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
மருள்நீக்கியார், தனது சிறுவயதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்தார். மருள்நீக்கியாரின் சகோதரி திலகவதியார் ஆதரவாக இருந்தார். வாழ்க்கையில் பிடிப்பு ஏதும் இல்லாத நிலையில் சமண சமயத்துக் கொள்கைகள் அவரை ஈர்த்தன. சமண சமயக் கொள்கைகளை எளிதில் கற்றுத் தேர்ந்த மருள்நீக்கியார், சமணர்களின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டு தருமசேனர் என்று அழைக்கப்பட்டு கடலூரை அடுத்துள்ள பாடலிபுத்திரத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு கட்டதில், தருமசேனருக்கு கொடிய சூலைநோய் ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் துடித்த அவருக்கு சமண சமய மந்திரங்களும் தந்திரங்களும், மற்ற மருத்துவமும் பலன் ஏதும் அளிக்கவில்லை. சமணர்கள் செய்த மருத்துவங்கள் மந்திரங்கள் ஏதும் பலனளிக்காத நிலையில், இரவோடு இரவாக யாரும் அறியாமல் தமது தமக்கையார் இருக்கும் திருவதிகை சென்றார். திலகவதியார், சிவபிரானின் கழல்களை வணங்கி அவருக்கு பணி செய்து உய்யலாம் என்று கூறித் தேற்றி, நமச்சிவாய என்ற மந்திரத்தை ஓதி அவருக்கு திருநீறு அளித்தார். திருக்கோயிலை வலம் வந்த மருள்நீக்கியார், தரையில் விழுந்து பெருமானை வணங்கிய பின்னர் அவரது சன்னதியில் நின்று கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தை பாடினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வயிற்று வலி, குடல் தொடர்பான அனைத்து தொல்லைகள் நீங்கும் Audio: https://www.youtube.com/watch?v=MKE6sESuM58
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்- கொடுமைபல செய்தன நான் அறியேன்; ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன், எப்பொழுதும்; தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட, ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! | [1] |
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்; நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்; வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்; வயிற்றோடு துடக்கி முடக்கியிட, நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர் அஞ்சேலும்! என்னீர்-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! | [2] |
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்! படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால், சுடுகின்றதுசூலை தவிர்த்து அருளீர் பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்! பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண் தலை கொண்டு அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! | [3] |
முன்னம், அடியேன் அறியாமையினால் முனிந்து, என்னை நலிந்து முடக்கியிடப், பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்; சுடு கின்றது சூலை தவிர்த்து அருளீர் தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ, தலைஆயவர் தம் கடன் ஆவதுதான்? அன்ன நடையார் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! | [4] |
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால், கரை நின்றவர், கண்டுகொள்! என்று சொல்லி, நீத்து ஆய கயம் புக நூக்கியிட, நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்; வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்; வயிற்றோடு துடக்கி முடக்கியிட ஆர்த்தார்-புனல் ஆர் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! | [5] |
சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்; தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்; நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்; உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்; உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்! உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்! அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! | [6] |
உயர்ந்தேன், மனை வாழ்க்கையும் ஒண் பொருளும், ஒருவர் தலை காவல் இலாமையினால்; வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால், வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான் அயர்ந்தேன், அடியேன்;-அதிகைக்கெடில வீரட்டானத்து உறை அம்மானே! | [7] |
வலித்தேன் மனை வாழ்க்கை, மகிழ்ந்து அடியேன், வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்; சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை; சங்கவெண் குழைக் காது உடை எம்பெருமான்! கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன, அலுத்தேன், அடியேன்;-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! | [8] |
பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்! புரி புன் சடையீர்! மெலியும் பிறையீர் துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர் என்போலிகள் உம்மை இனித் தெளியார், அடியார் படுவது இதுவே ஆகில்; அன்பே அமையும்-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! | [9] |
போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்! புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்! ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ் அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்; வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால், என் வேதனை ஆன விலக்கியிடாய்- ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.002  
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்
பண் - காந்தாரம் (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
பிறகு சமணர்கள் ஒன்றுகூடி மன்னனிடம் சென்று நம் சமயச் சார்பில் பெற்ற சாதகத்தால் இவன் சாவாது பிழைத்திருக்கின்றான், இனி விடம் ஊட்டுவதே தரத்தக்க தண்டனை என்று கூறினர். அரசனும் இசைந்தனன். கொலை பாதகத்திற்கும் அஞ்சாத அக்கொடி யோர் விடங்கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர்க்கு அளித்து உண்ணும்படிச் செய்தனர். எம்பிரான் அடியார்க்கு நஞ்சும் அமுதாம் என்றுகூறி அதை உண்டு எவ்விதத் தீங்கும் அடையாமல் விளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெரு மானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று. நஞ்சும் இவனுக்கு அமுதாயிற்று. இவன் பிழைப்பானாகில் இனி, நமக்கு இறுதி வருவது உறுதி என்றெண்ணி முன்போல் அரசன் பாற் சென்று நம் சமயத்திற் கற்ற மந்திர வலிமையால் உயிர் பிழைத் தான், அவன் இறவாதிருந்தால் எங்கள் உயிரும் நும் அரசாட்சியும் அழிவது திண்ணம், என்று கூறினர். மத யானையை விடுத்து இடறச் செய்வதே தண்டனை என்று தீர்மானிக்கப்பெற்றது. குன்றுபோல் விளங்கிய மதயானை கூடத்தை விட்டுப் புறப்பட்டது. பயங்கரமான அந்த யானை திருநாவுக்கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர். திருநாவுக்கரசர் சுண்ணவெண் சந்தனச்சாந்தும் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி யானையுரித்த பிரான் கழல்போற்றியிருந்தார். மதயானை மும்முறை வலம்வந்து வீழ்ந்து வணங்கித் தன்னை ஏவிய பாகரையும் சமணரையும் மிதித்துக் கொன்று சென்றது.
அபாயகரமான விஷங்கள், விஷ உணவு இவற்றின் இருந்து தப்பிக்க
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும், வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும், அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும், திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. | [1] |
பூண்டது ஒர் கேழல் எயிறும், பொன் திகழ் ஆமை புரள, நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலாக் கதிர் போல வெண் நூலும், காண் தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும், ஈண்டு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. | [2] |
ஒத்த வடத்து இள நாகம் உருத்திர பட்டம் இரண்டும், முத்துவடக் கண்டிகையும், முளைத்து, எழு மூ இலை வேலும், சித்த வடமும், அதிகைச் சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து தத்தும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்! அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை | [3] |
மடமான் மறி, பொன் கலையும், மழு, பாம்பு, ஒரு கையில் வீணை, குடமால் வரைய திண் தோளும், குனி சிலைக் கூத்தின் பயில்வும், இடம் மால் தழுவிய பாகம், இரு நிலன் ஏற்ற சுவடும், தடம் ஆர் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. | [4] |
பலபல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும், வலம் ஏந்து இரண்டு சுடரும், வான் கயிலாயமலையும், நலம் ஆர் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்! அஞ்சுவது யாதென்றும் இல்லை: அஞ்ச வருவதும் இல்லை. | [5] |
கரந்தன கொள்ளி விளக்கும், கறங்கு துடியின் முழக்கும், பரந்த பதினெண் கணமும், பயின்று அறியாதன பாட்டும், அரங்கு இடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும், நிரந்த கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. | [6] |
கொலை வரி வேங்கை அதளும், குலவோடு இலங்கு பொன் தோடும், விலை பெறு சங்கக் குழையும், விலை இல் கபாலக் கலனும், மலைமகள் கைக்கொண்ட மார்பும், மணி ஆர்ந்து இலங்கு மிடறும், உலவு கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. | [7] |
ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும், பாடல் பயின்ற பல் பூதம், பல் ஆயிரம் கொள் கருவி நாடற்கு அரியது ஒர் கூத்தும், நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து ஓடும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. | [8] |
நரம்பு எழு கைகள் பிடித்து, நங்கை நடுங்க, மலையை உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற, வரங்கள் கொடுத்து அருள் செய்வான், வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து நிரம்பு கெடிலப்புனலும் உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. | [9] |
சூழும் அரவத்துகிலும், துகில் கிழி கோவணக்கீளும், யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற வேழம் உரித்த நிலையும், விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து தாழும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.003  
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
பண் - காந்தாரம் (திருத்தலம் திருவையாறு ; அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
வடதிசைப் பெருந்தலங்களாக வழியில் உள்ள திருப்பருப்பதம் முதலான தலங்களைத் தரிசித்துக்கொண்டு அடியார்களை விடுத்துத் தனியே இரவுபகலாய், காடுமேடு, மலை, மணல் பரப்புக்களில் நடந்துசென்றார். கால்களால் நடக்கலற்றாது கைகளால் தாவிச் சென்றார். கைகளும் மணிக்கட்டு வரை தேய்ந்தன. மார்பினால் உந்திச் சென்றார். என்புகளும் தேய்ந்து முறிந்தன. எப்படியும் கயிலைநாதனைக் கண்டு இன்புற வேண்டும் என்ற வேட்கையால் புரண்டு புரண்டு சென்று உடலுறுப்புக்கள் முழுதும் தேய்ந்து ஓரிடத்தில் செயலற்றுத் தங்கிக் கிடந்தார். பெருமான் ஒரு முனிவர் வேடம் பூண்டு எதிரே நின்று, திருக்கயிலை மானிடர் சென்றடைதற்கு எளிதோ? திரும்பிச் செல்லும், இதுவே தக்கது என்று கூற அப்பரும், என்னை ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என்று உறுதி மொழிந்தார். முனிவராய் வந்த பெருமான் மறைந்து அசரீரியாய் நாவினுக்கரசனே! எழுந்திரு என்று கூறினன். அப்பொழுதே உடல் நலம் பெற்று நாவுக்கரசர் எழுந்து பணிந்து அண்ணலே, கயிலையில் நின்திருக்கோலம் நண்ணி நான்தொழ நயந்தருள்புரி எனப் பணிந்தார். பெருமான் மீண்டும் அசரீரியாய் இத் தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் திருக்கயிலையில் வீற்றிருக்கும் காட்சியைக் காண்க என்று கூறினன். அவ்வாறே அப்பரும் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே அத்தடாகத்தில் மூழ்கி எழுந்தனர். திருவையாற்றில் உள்ள தடாகத்தில் திருநாவுக்கரசர் எழுந்தார். ஐயாற்றிறைவரை வணங்கப் புகுமளவில் அங்குள்ள உயிர்கள் அனைத்தும் சத்தியும் சிவமுமாம் காட்சிகளைக் காட்டின. அப்பெருங் கோயில் கயிலைங்கிரியாய்க் காட்சி அளித்தது. திருமால், பிரமன், இந்திரன் முதலானோர் போற்ற வேதம் முழங்க, விண்ணவர், சித்தர் வித்யாதரர்களுடன் மாதவர் முனிவர் போன்ற இறைவன் அம்பிகையோடு எழுந்தருளியிருக்கும் அருட்காட்சி கண்டு ஆனந்தக் கூத்தாடினார்; பாடினார்; பல்வகைப் பாமாலைகளாலும் போற்றிப் பரவிப் புகழ்ந்து மகிழ்ந்தார். பெருமான் கயிலைக் காட்சியை மறைத்தருளினான். திரு நாவுக்கரசர் திகைத்து இதுவும் இறைவன் திருவருளே என்று எண்ணித் தெளிந்து மாதர்ப் பிறைக்கண்ணியானை என்ற திருப்பதிகம் பாடித் தொழுதார். Audio: https://www.youtube.com/watch?v=kGyJHnSZZ48
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி, போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன், யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது, காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன். கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன். | [1] |
போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி, வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன், ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது, கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! | [2] |
எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி, முரித்த இலயங்கள் இட்டு, முகம் மலர்ந்து ஆடா வருவேன், அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது, வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! | [3] |
பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி, துறை இளம் பல்மலர் தூவி, தோளைக் குளிரத் தொழுவேன், அறை இளம் பூங் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது, சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டுஅறியாதன கண்டேன்! | [4] |
ஏடுமதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடி, காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன், ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது, பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! | [5] |
தண்மதிக்கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி, உள் மெலி சிந்தையன் ஆகி, உணரா, உருகா, வருவேன், அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது, வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! | [6] |
கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி, வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன், அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது, இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! | [7] |
விரும்பு மதிக் கண்ணி யானை மெல்லியலாளொடும் பாடி, பெரும் புலர்காலை எழுந்து, பெறு மலர் கொய்யா வருவேன். அருங் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது, கருங் கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! | [8] |
முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி, பற்றிக் கயிறு அறுக்கில்லேன், பாடியும் ஆடா வருவேன், அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது, நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! | [9] |
திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி, எங்கு அருள் நல்கும் கொல், எந்தை எனக்கு இனி? என்னா வருவேன், அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது, பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்; கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! | [10] |
வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி, களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன், அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது, இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;- கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்! | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.009  
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு
பண் - சாதாரி (திருத்தலம் பொது - திருஅங்கமாலை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உடல் உறுப்புகள் நலம் பெற ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=YNtyl_vCMWI
Audio: https://sivaya.org/audio/4.009 தலையே, நீ வணங்காய்.mp3
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து, தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்! | [1] |
கண்காள், காண் மின்களோ!-கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னை, எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை,-கண்காள், காண்மின்களோ! | [2] |
செவிகாள், கேண்மின்களோ!-சிவன், எம் இறை, செம்பவள எரி போல், மேனிப் பிரான், திறம் எப்போதும், செவிகாள், கேண்மின்களோ! | [3] |
மூக்கே, நீ முரலாய்!-முதுகாடு உறை முக்கண்ணனை, வாக்கே நோக்கிய மங்கை மணாளனை,-மூக்கே, நீ முரலாய்! | [4] |
வாயே, வாழ்த்துக் கண்டாய்!-மதயானை உரி போர்த்து, பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை- வாயே, வாழ்த்து கண்டாய்! | [5] |
நெஞ்சே, நீ நினையாய்!-நிமிர் புன் சடை நின் மலனை, மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை,-நெஞ்சே, நீ நினையாய்! | [6] |
கைகாள், கூப்பித் தொழீர்!-கடி மா மலர் தூவி நின்று, பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனை-கைகாள், கூப்பித் தொழீர்! | [7] |
ஆக்கையால் பயன் என்?- அரன் கோயில் வலம்வந்து. பூக் கையால் அட்டி, போற்றி! என்னாத இவ் ஆக்கையால் பயன் என்? | [8] |
கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில் கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்? | [9] |
உற்றார் ஆர் உளரோ?-உயிர் கொண்டு போம்பொழுது, குற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு உற்றார் ஆர் உளரோ? | [10] |
இறுமாந்து இருப்பன் கொலோ?-ஈசன் பல் கணத்து எண்ணப் பட்டு, சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று, அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ? | [11] |
தேடிக் கண்டு கொண்டேன்!-திருமாலொடு நான்முகனும் தேடித் தேட ஒணாத் தேவனை, என் உள்ளே, தேடிக் கண்டு கொண்டேன்! | [12] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.011  
சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்
பண் - காந்தாரம் (திருத்தலம் பொது - நமசிவாயத் திருப்பதிகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
யானைக்குத் தப்பி ஓடிய சமணர் மன்னவனிடம் சென்றனர். பலவாறு வீழ்ந்து புலம்பினர். பல்லவனும் இனி என்செய்வது என்று வினவினான். அவன் அழிந்தால்தான் நம் அவமானம் தீரும்; எனவே கல்லோடு கட்டிக் கடலில் தள்ளுவதே வழி என்று சமணர் கூறினர். அவ்வாறே பல்லவனும் பணித்தான். கொலையாளர்களும் திருநாவுக் கரசரைக் கல்லோடு பிணைத்துக் கடலில் தள்ளித் திரும்பினர். திருநாவுக்கரசர் சொற்றுணை வேதியன் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி திருவைந்தெழுத்தின் பெருமையைத் திருப்பதிகத்தால் அருளிச் செய்தார். இருவினைக் கயிறுகளால் மும்மலக் கல்லில் கட்டிப் பிறவிப் பெருங்கடலில் போடப்பெற்ற உயிர்களைக் கரையேற்றவல்ல திருவைந்தெழுத்தின் பெருமையால் கல் தெப்பமாகக் கடலில் மிதந்தது. கயிறு அறுந்தது. கடல் மன்னனாகிய வருணன் திருநாவுக்கரசரை அலைகளாகிய கைகளால் திருமுடிமேல் தாங்கிக் கொண்டுவந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தான்.
கொடிய மிருகங்கள், மனிதர்களளிடம் இருந்து தப்பிக்க Audio: https://www.youtube.com/watch?v=GcaDjvjf6fA
சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ, கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும், நல்-துணை ஆவது நமச்சிவாயவே! | [1] |
பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை; ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்; கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது; நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே! | [2] |
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல் உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்; பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே! | [3] |
இடுக்கண் பட்டு இருக்கினும், இரந்து யாரையும், விடுக்கிற்பிரான்! என்று வினவுவோம் அல்லோம்; அடுக்கற் கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே! | [4] |
வெந்த நீறு அருங் கலம், விரதிகட்கு எலாம்; அந்தணர்க்கு அருங் கலம் அருமறை, ஆறு அங்கம்; திங்களுக்கு அருங் கலம் திகழும் நீள் முடி நங்களுக்கு அருங் கலம் நமச்சிவாயவே.! | [5] |
சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்; குலம் இலர் ஆகிலும், குலத்திற்கு ஏற்பது ஓர் நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே! | [6] |
வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார், அந் நெறி; கூடிச் சென்றலும், ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும், நாடினேன்; நாடிற்று, நமச்சிவாயவே! | [7] |
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது; சொல் அக விளக்கு அது சோதி உள்ளது பல் அக விளக்கு அது பலரும் காண்பது; நல் அக விளக்கு அது நமச்சிவாயவே! | [8] |
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்- தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே; அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் நன் நெறி ஆவது நமச்சிவாயவே! | [9] |
மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன் பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ, நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.013  
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருவையாறு ; அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=LtFr6FRYsgI
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால் யாதொன்றும் இடகிலேன்; அமணர்கள் தம் அறவுரை கேட்டு அலமந்தேன்; தொடர்கின்றேன், -உன்னுடைய தூ மலர்ச் சேவடி காண்பான், அடைகின்றேன்; ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [1] |
செம்பவளத் திரு உருவர், திகழ் சோதி, குழைக் காதர் கொம்பு அமரும் கொடிமருங்குல் கோல் வளையாள் ஒருபாகர், வம்பு அவிழும் மலர்க்கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த அம் பவள ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [2] |
நணியானே! சேயானே! நம்பானே! செம் பொன்னின் துணியானே! தோலானே! சுண்ண வெண் நீற்றானே! மணியானே! வானவர்க்கு மருந்து ஆகிப் பிணி தீர்க்கும் அணியானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [3] |
ஊழித் தீ ஆய் நின்றாய்! உள்குவார் உள்ளத்தாய்! வாழித் தீ ஆய் நின்றாய்! வாழ்த்துவார் வாயானே! பாழித் தீ ஆய் நின்றாய்! படர் சடை மேல் பனிமதியம் ஆழித் தீ ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [4] |
சடையானே! சடை இடையே தவழும் தண் மதியானே! விடையானே! விடை ஏறிப் புரம் எரித்த வித்தகனே! உடையானே! உடை தலை கொண்டு ஊர் ஊர் உண் பலிக்கு உழலும் அடையானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [5] |
நீரானே! தீயானே! நெதியானே! கதியானே! ஊரானே! உலகானே! உடலானே! உயிரானே! பேரானே! பிறை சூடீ! பிணி தீர்க்கும் பெருமான்! என்று ஆராத ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [6] |
கண் ஆனாய்! மணி ஆனாய்! கருத்து ஆனாய்! அருத்து ஆனாய்! எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்! விண் ஆனாய்! விண் இடையே புரம் எரித்த வேதியனே! அண் ஆன ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [7] |
மின் ஆனாய்! உரும் ஆனாய்! வேதத்தின் பொருள் ஆனாய்! பொன் ஆனாய்! மணி ஆனாய்! பொரு கடல் வாய் முத்து ஆனாய்! நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி அன்னானே! ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [8] |
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்தப் பத்தர் பலர் நீர் மூழ்கிப் பலகாலும் பணிந்து ஏத்த, எத்திசையும் வானவர்கள், எம்பெருமான் என இறைஞ்சும் அத் திசை ஆம் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [9] |
கருவரை சூழ் கடல் இலங்கைக் கோமானைக் கருத்து அழியத் திரு விரலால் உதகரணம் செய்து உகந்த சிவமூர்த்தி, பெருவரை சூழ் வையகத்தார், பேர் நந்தி என்று ஏத்தும் அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.015  
பற்று அற்றார் சேர் பழம்
பண் - பழம்பஞ்சுரம் (திருத்தலம் பாவநாசத் திருப்பதிகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சேத்திரக்கோவை Audio: https://www.youtube.com/watch?v=eUlIEsCnKo4
Audio: https://sivaya.org/audio/4.015 Patru Atrraar.mp3
Audio: https://sivaya.org/audio/4.015 - பற்று அற்றார் சேர்.mp3
பற்று அற்றார் சேர்| பழம் பதியை,| பாசூர் நிலாய| பவளத்தை, சிற்றம்பலத்து எம் |திகழ்கனியை,| தீண்டற்கு அரிய |திரு உருவை, வெற்றியூரில்| விரிசுடரை,| விமலர்கோனை, |திரை சூழ்ந்த ஒற்றியூர் எம் | உத்தமனை,| உள்ளத்துள்ளே | வைத்தேனே. | [1] |
ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானை, கானப் பேரூர்க் கட்டியை, கானூர் முளைத்த கரும்பினை, வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை, மானக் கயிலை மழகளிற்றை, மதியை, சுடரை, மறவேனே. | [2] |
மதி அம் கண்ணி நாயிற்றை, மயக்கம் தீர்க்கும் மருந்தினை, அதிகைமூதூர் அரசினை, ஐயாறு அமர்ந்த ஐயனை, விதியை, புகழை, வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை, நெதியை, ஞானக் கொழுந்தினை, நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே. | [3] |
புறம் பயத்து எம் முத்தினை, புகலூர் இலங்கு பொன்னினை, உறந்தை ஓங்கு சிராப் பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை, கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை, அறம் சூழ் அதிகை வீரட்டத்து அரிமான் ஏற்றை, அடைந்தேனே. | [4] |
கோலக் காவில் குருமணியை, குடமூக்கு உறையும் விடம் உணியை, ஆலங்காட்டில் அம் தேனை, அமரர் சென்னி ஆய்மலரை, பாலில்-திகழும் பைங்கனியை, பராய்த்துறை எம் பசும் பொன்னை, சூலத்தானை, துணை இலியை, தோளைக் குளிரத் தொழுதேனே. | [5] |
மருகல் உறை மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின் மாலையை, கருகாவூரில் கற்பகத்தை, காண்டற்கு அரிய கதிர் ஒளியை, பெருவேளூர் எம் பிறப்பு இலியை, பேணுவார்கள் பிரிவு அரிய திரு வாஞ்சியத்து எம் செல்வனை, சிந்தையுள்ளே வைத்தேனே. | [6] |
எழில் ஆர் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை, குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை, நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை, அழல் ஆர் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து வைத்தேனே. | [7] |
மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும் மணாளனை, ஆலைக் கரும்பின் இன்சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலை, சோலைத் துருத்தி நகர் மேய சுடரில்-திகழும் துளக்கு இலியை, மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே. | [8] |
சோற்றுத்துறை எம் சோதியை, துருத்தி மேய தூமணியை, ஆற்றில் பழனத்து அம்மானை, ஆலவாய் எம் அருமணியை, நீரில் பொலிந்த நிமிர் திண்தோள் நெய்த்தானத்து எம் நிலாச்சுடரைத் தோற்றக் கடலை, அடல் ஏற்றை, தோளைக் குளிரத் தொழுதேனே. | [9] |
புத்தூர் உறையும் புனிதனை, பூவணத்து எம் போர் ஏற்றை, வித்து ஆய் மிழலை முளைத்தானை, வேள்விக் குடி எம் வேதியனை, பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை, பொதியில் மேய புராணனை, வைத்தேன், என் தன் மனத்துள்ளே-மாத்தூர் மேய மருந்தையே. | [10] |
முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள் ஏறு ஊர்ந்தானை, அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானை, சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடிச் சேர்த்தி, எந்தை பெம்மான், என் எம்மான் என்பார் பாவம் நாசமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.018  
ஒன்று கொல் ஆம் அவர்
பண் - இந்தளம் (திருத்தலம் பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திங்களூரில் அப்பூதி அடிகள் என்பார் திருநாவுக்கரசர் பெருமையைக் கேள்வியுற்று திருநாவுக்கரசர் பெயரில் பல தர்மங்களை செய்து வந்தார். திங்களூர் வந்த திருநாவுக்கரசர். அப்பூதிஅடிகளைப் பற்றி கேள்வி பட்டு, அப்பூதியின் வீடு அடைந்தார். வந்தவர் திருநாவுக்கரசர் என்றவுடன், அப்பூதி வீடே மிகுந்த மகிழ்வுடன் அமுது தயார் செய்தார்கள். தம் மூத்தமகனாராகிய மூத்த திருநாவுக்கரசை அழைத்துத் திருவமுது படைக்க வாழைக் குருத்து அரிந்து வருமாறு அனுப்பினார். அப்போது விஷநாகம் ஒன்று மூத்த திருநாவுக்கரசைத் தீண்டி உயிர் துறந்தார். மகன் இறந்ததையும் பொருட்படுத்தாது அப்பிள்ளையை ஒருபால் மறைய வைத்து அப்பரடிகளுக்கு விருந்தூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை விருந்துண்ண அழைத்து வந்து அமர்த்தி வணங்கித் திருநீறுபெற்றார். மூத்த திருநாவுக் கரசை அழையும் என்று அப்பர் கூற, இப்போது அவன் இங்கு உதவான் என்று அப்பூதிகூறினார். திருநாவுக்கரசர் நிகழ்ந்ததறிந்து மூத்த திருநாவுக்கரசைத் திருக்கோயிலுக்குமுன் எடுத்துவரச் செய்து இறை யருளால் உயிர்பெற்றெழும்வண்ணம் ஒன்றுகொலாம் என்ற திருப் பதிகம் பாடியருளினர்.
ஒவ்வாமை, பாம்பு, பூரான் விஷம் மற்றும் விஷக்கடி நீங்குவதற்கு ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=cT31jKOzFW0
Audio: https://sivaya.org/audio/4.018 ondru kolaam avaravar.mp3
ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை; ஒன்று கொல் ஆம் உயரும் மதி சூடுவர்; ஒன்று கொல் ஆம் இடு வெண் தலை கையது; ஒன்று கொல் ஆம் அவர் ஊர்வதுதானே. | [1] |
இரண்டு கொல் ஆம் இமையோர் தொழு பாதம்; இரண்டு கொல் ஆம் இலங்கும் குழை; பெண், ஆண், இரண்டு கொல் ஆம் உருவம்; சிறு மான், மழு, இரண்டு கொல் ஆம் அவர் ஏந்தின தாமே. | [2] |
மூன்று கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன; மூன்று கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை; மூன்று கொல் ஆம் கணை, கையது வில், நாண்; மூன்று கொல் ஆம் புரம் எய்தன தாமே. | [3] |
நாலு கொல் ஆம் அவர்தம் முகம் ஆவன; நாலு கொல் ஆம் சனனம் முதல்- தோற்றமும்; நாலு கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள் நாலு கொல் ஆம் மறை பாடினதாமே. | [4] |
அஞ்சு கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம்; அஞ்சு கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன; அஞ்சு கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை; அஞ்சு கொல் ஆம் அவர் ஆடின தாமே. | [5] |
ஆறு கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன; ஆறு கொல் ஆம் அவர் தம் மகனார் முகம்; ஆறு கொல் ஆம் அவர் தார்மிசை வண்டின் கால்; ஆறு கொல் ஆம் சுவை ஆக்கினதாமே. | [6] |
ஏழு கொல் ஆம் அவர் ஊழி படைத்தன; ஏழு கொல் ஆம் அவர் கண்ட இருங் கடல்; ஏழு கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள் ஏழு கொல் ஆம் இசை ஆக்கினதாமே. | [7] |
எட்டுக் கொல் ஆம் அவர் ஈறு இல் பெருங் குணம்; எட்டுக் கொல் ஆம் அவர் சூடும் இன மலர்; எட்டுக் கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன; எட்டுக் கொல் ஆம் திசை ஆக்கினதாமே. | [8] |
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன; ஒன்பது போல் அவர் மார்பினில் நூல்-இழை; ஒன்பது போல் அவர் கோலக் குழல் சடை; ஒன்பது போல் அவர் பார் இடம்தானே. | [9] |
பத்துக் கொல் ஆம் அவர் பாம்பின் கண், பாம்பின் பல்; பத்துக் கொல் ஆம் எயிறு(ந்) நெரிந்து உக்கன; பத்துக் கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை; பத்துக் கொல் ஆம் அடியார் செய்கை தானே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.063  
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்
பண் - திருநேரிசை (திருத்தலம் திருவண்ணாமலை ; அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=fkS7G-zK1CU
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா! மிக்க சோதியே! துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே! ஆதியே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே! நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே. | [1] |
பண் தனை வென்ற இன் சொல் பாவை ஓர்பங்க! நீல- கண்டனே! கார் கொள் கொன்றைக் கடவுளே! கமலபாதா! அண்டனே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே! தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே. | [2] |
உருவமும் உயிரும் ஆகி, ஓதிய உலகுக்கு எல்லாம் பெரு வினை பிறப்பு வீடு ஆய், நின்ற எம் பெருமான்! மிக்க அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய்! அண்டர்கோவே! மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே. | [3] |
பைம்பொனே! பவளக்குன்றே! பரமனே! பால் வெண் நீற்றாய்! செம்பொனே! மலர் செய் பாதா! சீர் தரு மணியே! மிக்க அம் பொனே! கொழித்து வீழும் அணி அணாமலை உளானே! என் பொனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே. | [4] |
பிறை அணி முடியினானே! பிஞ்ஞகா! பெண் ஓர்பாகா! மறைவலா! இறைவா! வண்டு ஆர் கொன்றையாய்! வாம தேவா! அறைகழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே! இறைவனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே. | [5] |
புரிசடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்துக் கரி உரி போர்வை ஆகக் கருதிய காலகாலா! அரிகுலம் மலிந்த அண்ணாமலை உளாய்!-அலரின் மிக்க வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே. | [6] |
இரவியும், மதியும், விண்ணும், இரு நிலம், புனலும், காற்றும், உரகம் ஆர் பவனம் எட்டும், திசை, ஒளி, உருவம் ஆனாய்! அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே! பரவும் நின் பாதம் அல்லால், பரம! நான் பற்று இலேனே. | [7] |
பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்; நீர்த் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய்- ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே! தீர்த்தனே!-நின்தன் பாதத் திறம் அலால்-திறம் இலேனே. | [8] |
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே! மாலும் நான்முகனும் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்! ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே! வால் உடை விடையாய்!-உன் தன் மலர் அடி மறப்பு இலேனே. | [9] |
இரக்கம் ஒன்று யாதும் இல்லாக் காலனைக் கடிந்த எம்மான்! உரத்தினால் வரையை ஊக்க, ஒரு விரல் நுதியினாலே! அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய்! அமரர் ஏறே! சிரத்தினால் வணங்கி ஏத்தித் திருவடி மறப்பு இலேனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.094  
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்
பண் - திருவிருத்தம் (திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) ; அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டேசுவரர் திருவடிகள் போற்றி )
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும்கூடி அரஹர முழக்கம் செய்து திரு நாவுக்கரசரை வரவேற்றனர். திருநாவுக்கரசர் அடியார் கூட்டத்தோடு திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றிப் பரவினார்.
கடல் மற்றும் நீரினால் வரும் துன்பங்களில் இருந்து தப்பிக்க Audio: https://www.youtube.com/watch?v=D2gzNhT2Uj8
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய், மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே. | [1] |
பற்று ஆய் நினைந்திடு, எப்போதும்!-நெஞ்சே!-இந்தப் பாரை முற்றும் சுற்று ஆய் அலைகடல் மூடினும் கண்டேன், புகல் நமக்கு; உற்றான், உமையவட்கு அன்பன், திருப் பாதிரிப்புலியூர் முற்றா முளைமதிக் கண்ணியினான்தன மொய்கழலே. | [2] |
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்; இனி நமக்கு இங்கு அடையா, அவலம்; அருவினை சாரா; நமனை அஞ்சோம்; புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர் உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே? | [3] |
மாயம் எல்லாம் முற்ற விட்டு, இருள் நீங்க, மலைமகட்கே நேயம் நிலாவ இருந்தான் அவன்தன் திருவடிக்கே தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும்-திருப் பாதிரிப்புலியூர் மேய நல்லான் மலர்ப்பாதம் என் சிந்தையுள் நின்றனவே. | [4] |
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி, மனத்து அடைத்து சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால், மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர் அத்தன் அருள் பெறல் ஆமோ?-அறிவு இலாப் பேதைநெஞ்சே! | [5] |
கருஆய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்; உருஆய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன், உனது அருளால், திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன்; தருவாய், சிவகதி நீ!-பாதிரிப்புலியூர் அரனே! | [6] |
எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்! திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழச் செற்றவனே! பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க் கண் ஆர் நுதலாய்!-கழல் நம் கருத்தில் உடையனவே. | [7] |
புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரவேண்டும்-இவ் வையகத்தே தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச் செழுநீர்ப்-புனல் கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே! | [8] |
மண் பாதலம் புக்கு, மால்கடல் மூடி, மற்று ஏழ் உலகும் விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும், அஞ்சல், நெஞ்சே! திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப் பாதிரிப்புலியூர்க் கண் பாவும் நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே. | [9] |
திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டு, திகைத்து, முத்தி தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன்; வரை எடுத்த பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய்! பாதிரிப்புலியூர் இருந்தாய்! அடியேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.096  
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம்
பண் - திருவிருத்தம் (திருத்தலம் திருச்சத்திமுற்றம் ; அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
திருச்சத்திமுற்றத்துப் பெருமானாகிய சிவக்கொழுந்தீசனைப் பணிந்து கோவாய்முடுகி என்று தொடங்கி கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என்தலைமேற் சூட்டியருளுக என்று திருவடி தீகை்ஷ செய்யுமாறு வேண்டினர். Audio: https://www.youtube.com/watch?v=lH-R3BTHJ4Q
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன் முன் பூ ஆர் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை! போக விடில் மூவா முழுப்பழி மூடும்கண்டாய்-முழங்கும் தழல் கைத் தேவா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! | [1] |
காய்ந்தாய், அநங்கன் உடலம் பொடிபட; காலனை முன் பாய்ந்தாய், உயிர் செக; பாதம் பணிவார்தம் பல்பிறவி ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய், அடியேற்கு அருளாய்! உன் அன்பர் சிந்தை சேர்ந்தாய்-திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! | [2] |
பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப, மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி! அத்தா! அடியேன் அடைக்கலம் கண்டாய்-அமரர்கள் தம் சித்தா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! | [3] |
நில்லாக் குரம்பை நிலையாக் கருதி, இந் நீள் நிலத்து ஒன்று அல்லாக் குழி வீழ்ந்து, அயர்வு உறுவேனை வந்து ஆண்டுகொண்டாய்; வில் ஏர் புருவத்து உமையாள் கணவா! விடின் கெடுவேன்- செல்வா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! | [4] |
கரு உற்று இருந்து உன் கழலே நினைந்தேன்; கருப்புவியில்- தெருவில் புகுந்தேன்; திகைத்த(அ)அடியேனைத் திகைப்பு ஒழிவி! உருவில்-திகழும் உமையாள் கணவா! விடின் கெடுவேன்- திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! | [5] |
வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் இம்மை உன் தாள் என் தன் நெஞ்சத்து எழுதிவை! ஈங்கு இகழில் அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார்?- செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! | [6] |
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால் சுட்டாய்; என் பாசத்தொடர்பு அறுத்து ஆண்டுகொள்!-தும்பி பம்பும் மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் சிட்டா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! | [7] |
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு, இமையோர் பொறை இரப்ப நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய், நீலகண்டா! புகழ்ந்த அடியேன் தன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய்!- திகழ்ந்த திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! | [8] |
தக்கு ஆர்வம் எய்திச் சமண் தவிர்ந்து உன் தன் சரண் புகுந்தேன்; எக் காதல், எப் பயன், உன் திறம் அல்லால் எனக்கு உளதே?- மிக்கார் திலையுள் விருப்பா! மிக வடமேரு என்னும் திக்கா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! | [9] |
பொறித் தேர் அரக்கன் பொருப்பு எடுப்பு உற்றவன் பொன்முடி தோள் இற, தாள் ஒருவிரல் ஊன்றிட்டு, அலற இரங்கி, ஒள்வாள் குறித்தே கொடுத்தாய்; கொடியேன் செய் குற்றக் கொடுவினைநோய் செறுத்தாய்-திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.109  
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று
பண் - திருவிருத்தம் (திருத்தலம் திருத்தூங்கானைமாடம் ; அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி )
திருப்பெண்ணாகடத்துத் தூங்கானைமாடம் என்னும் திருக் கோயிலில் உள்ள பெருமானைப் பணிந்து சமண் சமயத் தொடக்குண்ட உடல் தூய்மைபெற இடபக்குறி சூலக்குறி பொறித்தருள வேண்டினார். பொன்னார் திருவடிக்கு என்று தொடங்கித் திருவடிக்கு விண்ணப்ப மும் தெரிவித்தார். இறைவன் திருவருளால் சிவபூதம் ஒன்று வந்து திருநாவுக்கரசர் தோள்களில் இடபக்குறி சூலக்குறி பொறித்தது. திருநாவுக்கரசர் சிவபிரான் திருவருளை வியந்து மகிழ்ந்து உய்ந்தேன் என்று பணிந்தார்.
கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள Audio: https://www.youtube.com/watch?v=PjnXvyDvdyM
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு, விண்ணப்பம்: போற்றி செய்யும் என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், இருங் கூற்று அகல மின் ஆரும் மூஇலைச்சூலம் என்மேல் பொறி-மேவு கொண்டல் துன் ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே! | [1] |
ஆவா! சிறுதொண்டன் என் நினைந்தான்! என்று அரும் பிணிநோய் காவாது ஒழியின் கலக்கும், உன்மேல் பழி; காதல் செய்வார் தேவா! திருவடி நீறு என்னைப் பூசு-செந்தாமரையின் பூ ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் புண்ணியனே! | [2] |
கடவும் திகிரி கடவாது ஒழியக் கயிலை உற்றான் படவும் திருவிரல் ஒன்று வைத்தாய்; பனிமால்வரை போல் இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய்-இருஞ் சோலை திங்கள் தடவும் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் தத்துவனே! | [3] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.001  
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
சிவபெருமான் திருவருளால், பெண்ணாகடம் தலத்தில் தனது உடலில் சூலம் மற்றும் இடபக் குறிகள் பொறிக்கப் பெற்ற பின்னர் அப்பர் பிரான் தில்லை வந்தடைந்தார். பத்தனாய் பாடமாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடி சில நாட்கள் தில்லைப் பதியில் உழவாரப் பணி செய்துவந்தார். சிவபிரான் தன்னுடன் நேரில் பேசி அருளியதால் மிகவும் அகமகிழ்ந்த அப்பர் பிரான், தில்லையில் உழவாரப் பணிகள் செய்த போது பாடிய பதிகம் இது. உள்ளத்தில் இருந்து எழுந்த அன்பொடு செய்யப்பட்ட பணி என்பதால், கண்களிலிருந்து பொழிந்த ஆனந்தக் கண்ணீர், உடலில் பூசப்பட்டிருந்த திருநீற்றுடன் கலந்து வண்டலாக மாறியது என்று சேக்கிழார் கூறுகின்றார். சிதம்பரத்தில் அன்னதானம் இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் அன்னம் பாலிக்கும் என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம்.
சாப்பாடு குறைவின்றி கிடைக்க. உணவிற்கு முன் கூற வேண்டிய பாடல். Audio: https://www.youtube.com/watch?v=X012Z-pSPW4
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே | [1] |
அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர், சுரும்பு அற்றப் படத் தூவி, தொழுமினோ- கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன், பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே! | [2] |
அரிச்சு உற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர், எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர் சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம், திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே! | [3] |
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்? தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?- தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே. | [4] |
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம் நான் நிலாவி இருப்பன், என் நாதனை; தேன் நிலாவிய சிற்றம்பலவனார் வான் நிலாவி இருக்கவும் வைப்பரே. | [5] |
சிட்டர், வானவர், சென்று வரம் கொளும் சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலத்து உறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச் சிட்டர்பால் அணுகான், செறு காலனே. | [6] |
ஒருத்தனார், உலகங்கட்கு ஒரு சுடர், திருத்தனார், தில்லைச் சிற்றம்பலவனார், விருத்தனார், இளையார், விடம் உண்ட எம் அருத்தனார், அடியாரை அறிவரே. | [7] |
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்து உள்-நிறைந்து நின்று ஆடும், ஒருவனே. | [8] |
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம் வல்லை வட்டம் மதில் மூன்று உடன்மாய்த்தவன் தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை ஒல்லை, வட்டம் கடந்து, ஓடுதல் உண்மையே. | [9] |
நாடி, நாரணன் நான்முகன் என்று இவர் தேடியும், திரிந்தும், காண வல்லரோ- மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து- ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே? | [10] |
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன், சதுரன், சிற்றம்பலவன், திருமலை அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே! | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.002  
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
அன்னம் பாலிக்கும் என்று தொடங்கும் பதிகத்தையும் பாடிய பின்னர், அருகில் இருக்கும் வேட்களம், கழிப்பாலை ஆகிய தலங்களில் உள்ள இறைவனை வழிபட்டு, பதிகங்கள் அருளிய பின்னர் மறுபடியும் தில்லைக் கூத்தனைக் காண ஆர்வம் கொண்டார். கழிப்பாலைத் தலத்திலிருந்து தில்லை வரும் வழியில், தில்லைப் பெருமானை மறந்து வாழ்வினில் உய்வினை அடைய முடியாது என்ற பொருள் படும் இந்த பதிகத்தைப் பாடியவாறே தில்லை வந்து சேர்கின்றார். Audio: https://www.youtube.com/watch?v=8AFLlyMIz3k
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன், நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன், அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனை, தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ? | [1] |
தீர்த்தனை, சிவனை, சிவலோகனை, மூர்த்தியை, முதல் ஆய ஒருவனை, பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக் கூத்தனை, கொடியேன் மறந்து உய்வனோ? | [2] |
கட்டும் பாம்பும், கபாலம், கை மான்மறி, இட்டம் ஆய் இடுகாட்டு எரி ஆடுவான், சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை, எள்-தனைப் பொழுதும் மறந்து உய்வனோ? | [3] |
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட நீண் உலகுஎலாம் ஆளக் கொடுத்த என் ஆணியை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற தாணுவை, தமியேன் மறந்து உய்வனோ? | [4] |
பித்தனை, பெருங்காடு அரங்கா உடை முத்தனை, முளைவெண் மதி சூடியை, சித்தனை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற அத்தனை, அடியேன் மறந்து உய்வனோ? | [5] |
நீதியை, நிறைவை, மறைநான்கு உடன் ஓதியை, ஒருவர்க்கும் அறிவு ஒணாச் சோதியை, சுடர்ச் செம்பொனின் அம்பலத்து ஆதியை, அடியேன் மறந்து உய்வனோ? | [6] |
மை கொள் கண்டன், எண் தோளன், முக்கண்ணினன், பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார், செய்யமாது உறை சிற்றம்பலத்து எங்கள் ஐயனை, அடியேன் மறந்து உய்வனோ? | [7] |
முழுதும் வான் உலகத்து உள தேவர்கள் தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை, இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ? | [8] |
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை, வார் உலாம் முலை மங்கை மணாளனை, தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை, ஆர்கிலா அமுதை, மறந்து உய்வனோ? | [9] |
ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம் வீங்கி விம்முற ஊன்றிய தாளினான், தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை, பாங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ? | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.010  
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
திருப்புகலூரில் சந்தித்துக் கொண்ட அப்பர் பிரானும், ஞானசம்பந்தப் பெருமானும் திருவீழிமிழலை முதலான பல தலங்களுக்கு, இருவரும் சேர்ந்து சென்றனர். பல தலங்கள் சேர்ந்து தரிசித்த பின்னர் இருவரும் திருமறைக்காடு வந்தடைந்தனர். அப்பர் பிரானும் திருஞான சம்பந்தரும் தங்களது ஊருக்கு வரும் செய்தியினை அறிந்த, திருமறைக்காடு தலத்தில் இருந்த அடியவர்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருவரையும் வரவேற்றனர். கோயிலின் வெளி வாயில் வழியாக உட்புகுந்த இருவரும், திருக்கோயிலை வலம் வந்து உள்வாயில் வந்து சேர்ந்தனர். உள்வாயில் அடைத்து இருப்பதை கண்ணுற்ற இருவரும் வாயிலை வணங்கி நின்றனர். பண்டைய நாளில், வேதங்கள் சிவபிரானை வழிபட்ட பின்னர், கோயில் வாயிற்கதவுகளை திருக்காப்பிட்டு மூடிய நாள் முதலாக, அந்த கதவுகள் மூடியே இருப்பதாக அருகே இருந்த அடியார்கள் கூறினார்கள். மறைகள் ஓதும் பெருமையுடைய அன்பர்கள் பலர் முயன்றும், மூடிய கதவுகள் திறக்கப்படவில்லை என்று கூறிய அடியார்கள், தாங்கள் அனைவரும் திட்டிவாசல் எனப்படும் அருகிலிருந்த சிறிய வாயில் வழியாக திருக்கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபாட்டு வருவதாக கூறினார்கள். இதனைக் கேட்ட ஞானசம்பந்தப் பெருமான் அப்பர் பிரானிடம், தாங்கள் இருவரும் எந்த விதத்திலாவது சிவபிரானிடம் வேண்டி, அடைக்கப்பட்டுள்ள கோயில் கதவுகள் திறக்க வேண்டி இறைவனின் அருளினை நாடி செந்தமிழ்ப் பாடல்கள் பாடவேண்டும் என்று உரைத்தார். அப்பர் பிரான் உடனே ஆளுடையப் பிள்ளையாரை நோக்கி, கதவு திறப்பதற்காக நான் பாடவேண்டும் என்று நீர் விரும்பினால் நான் அவ்வாறே செய்வேன் என்று கூறினார். Audio: https://www.youtube.com/watch?v=2sD4CmYuQBw
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ! மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ! கண்ணினால் உமைக் காணக் கதவினைத் திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே! | [1] |
ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ! மூண்ட கார்முகிலின் முறிக்கண்டரோ! ஆண்டுகொண்ட நீரே அருள் செய்திடும்! நீண்ட மாக் கதவின் வலி நீக்குமே! | [2] |
அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ! துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ! பட்டம் கட்டிய சென்னிப் பரமரோ! சட்ட இக் கதவம் திறப்பிம்மினே! | [3] |
அரிய நால்மறை ஓதிய நாவரோ! பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ! விரிகொள் கோவண ஆடை விருத்தரோ! பெரிய வான் கதவம் பிரிவிக்கவே! | [4] |
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ! கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ! விலை இல் மா மணிவண்ண உருவரோ!- தொலைவு இலாக் கதவம் துணை நீக்குமே! | [5] |
பூக்கும் தாழை புறணி அருகு எலாம் ஆக்கும் தண்பொழில் சூழ் மறைக்காடரோ! ஆர்க்கும் காண்பு அரியீர்! அடிகேள்!-உமை நோக்கிக் காணக் கதவைத் திறவுமே! | [6] |
வெந்தவெண்பொடிப் பூசும் விகிர்தரோ! அந்தம் இ(ல்)லி, அணி மறைக்காடரோ! எந்தை!-நீ அடியார் வந்து இறைஞ்சிட இந்த மாக் கதவம் பிணை நீக்குமே! | [7] |
ஆறு சூடும் அணி மறைக்காடரோ! கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ! ஏறு அது ஏறிய எம்பெருமான்!-இந்த மாறு இலாக் கதவம் வலி நீக்குமே! | [8] |
சுண்ணவெண்பொடிப் பூசும் சுவண்டரோ! பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ! அண்ணல், ஆதி, அணி மறைக்காடரோ! திண்ணமாக் கதவம் திறப்பிம்மினே! | [9] |
விண் உளார் விரும்பி(ய்) எதிர் கொள்ளவே மண் உளார் வணங்கும் மறைக்காடரோ! கண்ணினால் உமைக் காணக் கதவினைத் திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே! | [10] |
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர் இரக்கம் ஒன்று இலீர்; எம்பெருமானிரே! சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ! சரக்க இக் கதவம் திறப்பிம்மினே! | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.042  
நன்று நாள்தொறும் நம் வினை
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருவேட்களம் ; அருள்தரு நல்லநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசுபதேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=XxDlzhksrI0
நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்; என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்; சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை துன்று பொன்சடையானைத் தொழுமினே! | [1] |
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்; பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்; விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது இருப்பன் ஆகில், எனக்கு இடர் இல்லையே. | [2] |
வேட்களத்து உறை வேதியன், எம் இறை; ஆக்கள் ஏறுவர்; ஆன் ஐஞ்சும் ஆடுவர்; பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால் காப்பர் நம்மை, கறைமிடற்று அண்ணலே. | [3] |
அல்லல் இல்லை; அருவினைதான் இல்லை- மல்கு வெண்பிறை சூடும் மணாளனார், செல்வனார், திரு வேட்களம் கைதொழ வல்லர் ஆகில்; வழி அது காண்மினே! | [4] |
துன்பம் இல்லை; துயர் இல்லை; யாம், இனி நம்பன் ஆகிய நல் மணிகண்டனார், என் பொனார், உறை வேட்கள நன்நகர் இன்பன், சேவடி ஏத்தி இருப்பதே. | [5] |
கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே பொட்ட வல் உயிர் போவதன் முன்னம், நீர், சிட்டனார் திரு வேட்களம் கைதொழ பட்ட வல்வினை ஆயின பாறுமே. | [6] |
வட்ட மென் முலையாள் உமை பங்கனார், எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார், சிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுது இட்டம் ஆகி இரு, மட நெஞ்சமே! | [7] |
நட்டம் ஆடிய நம்பனை, நாள்தொறும் இட்டத்தால் இனிது ஆக நினைமினோ- வட்டவார் முலையாள் உமை பங்கனார், சிட்டனார், திரு வேட்களம் தன்னையே! | [8] |
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் சுட்ட கொள்கையர் ஆயினும், சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் சிட்டர்போல்-திரு வேட்களச் செல்வரே. | [9] |
சேடனார் உறையும் செழு மாமலை ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற வாட ஊன்றி, மலர் அடி வாங்கிய வேடனார் உறை வேட்களம் சேர்மினே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.067  
படையும் பூதமும் பாம்பும் புல்வாய்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருவாஞ்சியம் ; அருள்தரு வாழவந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு வாஞ்சியநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=ovtRQxKv5ZE
படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்- உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம், புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம் அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே. | [1] |
பறப்பையும் பசுவும் படுத்துப் பல- திறத்தவும்(ம்) உடையோர் திகழும் பதி, கறைப் பிறைச் சடைக் கண்ணுதல் சேர்தரு சிறப்பு உடை, திரு வாஞ்சியம் சேர்மினே! | [2] |
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி, சுற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம் பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே. | [3] |
அங்கம் ஆறும் அருமறை நான்கு உடன் தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர், செங்கண் மால இடம் ஆர், திரு வாஞ்சியம் தங்குவார் நம் அமரர்க்கு அமரரே. | [4] |
நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை ஆறு சூடும் அடிகள் உறை பதி, மாறுதான் ஒருங்கும் வயல், வாஞ்சியம் தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே. | [5] |
அற்றுப் பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு உற்ற நல்-துணை ஆவான் உறை பதி, தெற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம் கற்றுச் சேர்பவர்க்குக் கருத்து ஆவதே. | [6] |
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள் திருத்தும் சேவடியான் திகழும் நகர் ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம் அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே. | [7] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.075  
மரக் கொக்குஆம் என வாய்விட்டு
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருக்குரக்குக்கா ; அருள்தரு கொந்தளநாயகியம்மை உடனுறை அருள்மிகு கொந்தளக்கருணைநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=Ph5jvuLnL0Q
மரக் கொக்குஆம் என வாய்விட்டு அலறி, நீர், சரக்குக் காவி, திரிந்து அயராது, கால் பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரைக் குரக்குக்கா அடைய, கெடும், குற்றமே. | [1] |
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல் கொட்டாறே, புனல் ஊறு குரக்குக்கா, முட்டு ஆறா, அடி ஏத்த முயல்பவர்க்கு இட்டு ஆறா, இடர் ஓட எடுக்குமே. | [2] |
கை அனைத்தும் கலந்து எழு காவிரி, செய் அனைத்திலும் சென்றிடும், செம் புனல் கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே. | [3] |
மிக்கு அனைத்துத் திசையும் அருவிகள் புக்குக் காவிரி போந்த புனல் கரை, கொக்கு இனம் பயில் சோலை, குரக்குக்கா நக்கனை நவில்வார் வினை நாசமே. | [4] |
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட, கொட்ட மா முழவு, ஓங்கு குரக்குக்கா இட்டம் ஆய் இருப்பார்க்கு இடர் இல்லையே. | [5] |
மேலை வானவரோடு, விரி கடல் மாலும், நான்முகனாலும், அளப்பு ஒணாக் கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்- பாலராய்த் திரிவார்க்கு இல்லை, பாவமே. | [6] |
ஆலநீழல் அமர்ந்த அழகனார், காலனை உதைகொண்ட கருத்தனார், கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்- பாலருக்கு அருள்செய்வர், பரிவொடே. | [7] |
செக்கர் அங்கு எழு செஞ்சுடர்ச் சோதியார், அக்கு அரையர், எம் ஆதிபுராணனார், கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா நக்கனை, தொழ, நம் வினை நாசமே. | [8] |
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழுமின், நீர், கரிய கண்டன் கழல் அடி தன்னையே! குரவனம் செழுங் கோயில் குரக்குக்கா இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே! | [9] |
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி, உரத்தை, ஒல்க அடர்த்தான் உறைவு இடம்- குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா; வரத்தனைப் பெற வான் உலகு ஆள்வரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.077  
பூரியா வரும், புண்ணியம்; பொய்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருச்சேறை (உடையார்கோவில்) ; அருள்தரு ஞானவல்லியம்மை உடனுறை அருள்மிகு சென்னெறியப்பர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=lrthL1RMyoY
பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்; கூரிது ஆய அறிவு கைகூடிடும்- சீரியார் பயில் சேறையுள் செந்நெறி நாரிபாகன்தன் நாமம் நவிலவே. | [1] |
என்ன மா தவம் செய்தனை!- நெஞ்சமே!- மின்னுவார் சடை வேத விழுப்பொருள், செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி மன்னு சோதி, நம்பால் வந்து வைகவே. | [2] |
பிறப்பு, மூப்பு, பெரும் பசி, வான் பிணி, இறப்பு, நீங்கிடும்; இன்பம் வந்து எய்திடும்- சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல் மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே. | [3] |
மாடு தேடி, மயக்கினில் வீழ்ந்து, நீர், ஓடி எய்த்தும், பயன் இலை; ஊமர்காள்! சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவிய ஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மினே! | [4] |
எண்ணி நாளும், எரி அயில் கூற்றுவன் துண்ணென்று ஒன்றில்- துரக்கும் வழி கண்டேன்; திண் நன் சேறைத் திருச் செந்நெறி உறை அண்ணலார் உளர்: அஞ்சுவது என்னுக்கே? | [5] |
தப்பி வானம், தரணி கம்பிக்கில் என்? ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்? செப்பம் ஆம் சேறைச் செந்நெறி மேவிய அப்பனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே? | [6] |
வைத்த மாடும், மடந்தை நல்லார்களும், ஒத்து ஒவ்வாத உற்றார்களும், என் செய்வார்? சித்தர் சேறைத் திருச் செந்நெறி உறை அத்தர்தாம் உளர்; அஞ்சுவது என்னுக்கே? | [7] |
குலன்கள் என் செய்வ? குற்றங்கள் என் செய்வ? துலங்கி நீ நின்று சோர்ந்திடல், நெஞ்சமே! இலங்கு சேறையில் செந்நெறி மேவிய அலங்கனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே? | [8] |
பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் விழவிடாவிடில், வேண்டிய எய்த ஒணா; திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய அழகனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே! | [9] |
பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான் வருந்த ஊன்றி, மலர் அடி வாங்கினான் திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.078  
சங்கு உலாம் முன்கைத் தையல்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=mJZCB9wqOjk
சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன், வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன், கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என, எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே. | [1] |
வாடி வாழ்வது என் ஆவது? மாதர்பால் ஓடி, வாழ்வினை உள்கி, நீர், நாள்தொறும் கோடிகாவனைக் கூறீரேல், கூறினேன்: பாடிகாவலில் பட்டுக் கழிதிரே. | [2] |
முல்லை நல்முறுவல்(ல்) உமை பங்கனார், தில்லை அம்பலத்தில்(ல்) உறை செல்வனார், கொல்லை ஏற்றினர், கோடிகாவா! என்று அங்கு ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே. | [3] |
நா வளம் பெறும் ஆறு, மன் நன்னுதல் ஆமளம் சொலி, அன்பு செயின்(ன்) அலால், கோமளஞ்சடைக் கோடிகாவா! என, ஏவள்? என்று எனை ஏசும், அவ் ஏழையே. | [4] |
வீறுதான் பெறுவார் சிலர் ஆகிலும், நாறு பூங்கொன்றைதான் மிக நல்கானேல், கூறுவேன், கோடிகா உளாய்? என்று; மால் ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ? | [5] |
நாடி நாரணன், நான்முகன், வானவர் தேடி ஏசறவும், தெரியாதது ஓர் கோடிகாவனைக் கூறாத நாள் எலாம் பாடிகாவலில் பட்டுக் கழியுமே. | [6] |
வரங்களால் வரையை எடுத்தான் தனை அரங்க ஊன்றி அருள் செய்த அப்பன் ஊர், குரங்கு சேர் பொழில் கோடிகாவா! என இரங்குவேன், மனத்து ஏதங்கள் தீரவே. | [7] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.085  
மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருச்சிராப்பள்ளி ; அருள்தரு மட்டுவார்குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=n9abER-qR0M
மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா உகந்து ஏறும் இறைவனார்; கட்டு நீத்தவர்க்கு இன் அருளே செயும் சிட்டர்போலும்-சிராப்பள்ளிச் செல்வரே. | [1] |
அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார், அரி அயன் தொழுது ஏத்தும் அரும்பொருள், பெரியவன், சிராப்பள்ளியைப் பேணுவார் அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே. | [2] |
அரிச்சு, இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு, சுரிச்சு இராது,-நெஞ்சே!-ஒன்று சொல்லக் கேள்: திரிச் சிராப்பள்ளி என்றலும், தீவினை நரிச்சு இராது நடக்கும் நடக்குமே. | [3] |
தாயும் ஆய் எனக்கே, தலை கண்ணும் ஆய், பேயனேனையும் ஆண்ட பெருந்தகை; தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாயனார் என, நம் வினை நாசமே. | [4] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.090  
மாசு இல் வீணையும், மாலை
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் பொது -தனித் திருக்குறுந்தொகை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தனது தமக்கையார் பின்பற்றும் சைவ சமயத்தைச் சாரவேண்டும் என்பதற்காக தருமசேனர், சூலை நோய் வந்தது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றியதாகவும், சைவ சமயம் சார்ந்ததன் பின்னர் சமண மதத்தை இழிவாக பேசுவதாகவும் மன்னனிடம் முறையிட்ட குருமார்கள், அவரை அழைத்து மன்னன் விசாரணை செய்யவேண்டும் என்று கோரினார்கள். மன்னனும் தனது மந்திரியையும் காவலர்களையும் திருநாவுக்கரசரை விசாரணை செய்ய அழைத்து வர அனுப்பினான். திருவதிகை சென்ற அமைச்சர் திருநாவுக்கரசரை சந்தித்த போது, அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று முழங்கினார். தான் துறவி என்பதால் எந்த அரசரின் ஆணையும் தன்னைக் கட்டுபடுத்தாது என்றும், தான் எவருக்கும் குடிமகன் அல்ல என்பதையும் தெரிவித்த திருநாவுக்கரசர் முதலில் மன்னனைக் காண மறுத்தார். அவரை அழைத்துச் செல்லாவிடின் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று அவரிடம் தெரிவித்த அமைச்சர், தங்களது உயிரினைக் காப்பாற்றும் பொருட்டு நாவுக்கரசு பெருமானை தங்களுடன் வருமாறு வேண்டவே, நாவுக்கரசர் அவர்களுடன் மன்னனை சந்திக்கச் சென்றார். இதனிடையில் சமண குருமார்கள் நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாய்) இடுவதே அவர் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை என்று மன்னனிடம் கூறவே, மன்னனும் அந்த தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டான். நீற்றறையின் உள்ளே அடிகளாரை இருத்தி, வெளியே தாளிட்டு காவலுக்கு ஆட்களையும் மன்னன் நியமித்தான். நாயனார் ஈசன் அடியவருக்கு துன்பங்களும் வருமோ என்ற நம்பிக்கையில், நீற்றறையின் உள்ளே அமர்ந்தபடியே இந்தப் பதிகத்தை பாடினார். Audio: https://www.youtube.com/watch?v=J7MfBAIcQ04
மாசு இல் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும், மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே- ஈசன், எந்தை, இணைஅடி நீழலே. | [1] |
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்; நமச்சிவாயவே நான் அறி விச்சையும்; நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே; நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே. | [2] |
ஆள் ஆகார்; ஆள் ஆனாரை அடைந்து உய்யார்; மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்; தோளாத(ச்) சுரையோ, தொழும்பர் செவி? வாளா மாய்ந்து மண் ஆகிக் கழிவரே! | [3] |
நடலை வாழ்வுகொண்டு என் செய்திர்? நாண் இலீர்? சுடலை சேர்வது சொல் பிரமாணமே; கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால், உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே! | [4] |
பூக் கைக் கொண்டு அரன் பொன் அடி போற்றிலார்; நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்; ஆக்கைக்கே இரை தேடி, அலமந்து, காக்கைக்கே இரை ஆகி, கழிவரே! | [5] |
குறிகளும்(ம்), அடையாளமும், கோயிலும், நெறிகளும்(ம்), அவர் நின்றது ஓர் நேர்மையும், அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும், பொறி இலீர்! மனம் என்கொல், புகாததே? | [6] |
வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச் சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே! | [7] |
எழுது பாவை நல்லார் திறம் விட்டு, நான், தொழுது போற்றி, நின்றேனையும் சூழ்ந்து கொண்டு, உழுத சால்வழியே உழுவான் பொருட்டு இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே! | [8] |
நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன் ஆர் சடைப் புண்ணியன், பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பவர், அவர்தம்மை நாணியே. | [9] |
விறகில்-தீயினன், பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன்மா மணிச்சோதியான்; உறவுகோல் நட்டு, உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.092  
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் பொது -காலபாசத் திருக்குறுந்தொகை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=B9FQAcbnw-g
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப் பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல், கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்- கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே! | [1] |
நடுக்கத்துள்ளும், நகையுளும், நம்பற்குக் கடுக்கக் கல்லவடம் இடுவார்கட்குக் கொடுக்கக் கொள்க என உரைப்பார்களை இடுக்கண் செய்யப் பெறீர், இங்கு நீங்குமே! | [2] |
கார் கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் ஆர்கள் ஆகினும் ஆக; அவர்களை நீர்கள் சாரப்பெறீர், இங்கு நீங்குமே! | [3] |
சாற்றினேன்: சடை நீள் முடிச் சங்கரன், சீற்றம் காமன்கண் வைத்தவன், சேவடி ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய், போற்றி! என்று உரைப்பார் புடை போகலே! | [4] |
இறை என் சொல் மறவேல், நமன்தூதுவீர்! பிறையும் பாம்பும் உடைப் பெருமான் தமர், நறவம் நாறிய நன்நறுஞ் சாந்திலும் நிறைய நீறு அணிவார், எதிர் செல்லலே! | [5] |
வாமதேவன் வள நகர் வைகலும், காமம் ஒன்று இலராய், கை விளக்கொடு தாமம், தூபமும், தண் நறுஞ் சாந்தமும், ஏமமும், புனைவார் எதிர் செல்லலே! | [6] |
படையும் பாசமும் பற்றிய கையினீர்! அடையன்மின், நமது ஈசன் அடியரை! விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம் புடை புகாது, நீர், போற்றியே போமினே! | [7] |
விச்சை ஆவதும், வேட்கைமை ஆவதும், நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே; அச்சம் எய்தி அருகு அணையாது, நீர், பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே! | [8] |
இன்னம் கேண்மின்: இளம்பிறை சூடிய மன்னன் பாதம் மனத்து உடன் ஏத்துவார், மன்னும் அஞ்சு எழுத்து ஆகிய மந்திரம்- தன்னில் ஒன்று வல்லாரையும், சாரலே! | [9] |
மற்றும் கேண்மின்: மனப் பரிப்பு ஒன்று இன்றிச் சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம், ஒற்றை ஏறு, உடையான் அடியே அலால் பற்று ஒன்று இ(ல்)லிகள் மேல் படைபோகலே! | [10] |
அரக்கன் ஈர்-ஐந்தலையும் ஓர் தாளினால் நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும், சுருக்கெனாது, அங்குப் பேர்மின்கள்! மற்று நீர் சுருக்கெனில், சுடரான் கழல் சூடுமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.100  
வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=lk4SHPhE4ng
வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின் நாயகன்; மாதவர் நாயகன்; ஆதிநாயகன்; ஆதிரைநாயகன்; பூதநாயகன் புண்ணியமூர்த்தியே. | [1] |
செத்துச் செத்துப் பிறப்பதே தேவு என்று பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ, அத்தன் என்று அரியோடு பிரமனும் துத்தியம் செய நின்ற நல்சோதியே? | [2] |
நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்; ஆறுகோடி நாராயணர் அங்ஙனே; ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்; ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே. | [3] |
வாது செய்து மயங்கும் மனத்தராய் ஏது சொல்லுவீர் ஆகிலும், ஏழைகாள்! யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம் மாதேவன்(ன்) அலால் தேவர் மற்று இல்லையே. | [4] |
கூவல் ஆமை குரைகடல் ஆமையை, கூவலோடு ஒக்குமோ, கடல்? என்றல் போல், பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால், தேவதேவன் சிவன் பெருந்தன்மையே. | [5] |
பேய்வனத்து அமர்வானை, பிரார்த்தித்தார்க்கு ஈவனை, இமையோர் முடி தன் அடிச் சாய்வனை,-சலவார்கள்-தமக்கு உடல் சீவனை, சிவனை, சிந்தியார்களே. | [6] |
எரி பெருக்குவர்; அவ் எரி ஈசனது உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்; அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய் நரிவிருத்தம் அது ஆகுவர், நாடரே. | [7] |
அருக்கன் பாதம் வணங்குவர், அந்தியில்; அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ? இருக்கு நால்மறை ஈசனையே தொழும் கருத்தினை நினையார், கல்மனவரே. | [8] |
தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்- ஆய உள்ளத்து அமுது அருந்தப் பெறார்- பேயர், பேய்முலை உண்டு உயிர் போக்கிய மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே. | [9] |
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள் பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்- கருத்து இலாக் கயக்கவணத்தோர்களே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.001  
அரியானை, அந்தணர் தம் சிந்தை
பண் - பெரியதிருத்தாண்டகம் (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=OC5AJDOyUGs
அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை, அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும் தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை, தேவர்கள்தம் கோனை, மற்றைக் கரியானை, நான்முகனை, கனலை, காற்றை, கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. | [1] |
கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை, அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை, ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே; மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை, வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்- பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. | [2] |
கருமானின் உரி-அதளே உடையா வீக்கி, கனை கழல்கள் கலந்து ஒலிப்ப, அனல் கை ஏந்தி, வரு மானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட, வளர்மதியம் சடைக்கு அணிந்து, மான் நேர் நோக்கி அரு மான வாள் முகத்தாள் அமர்ந்து காண, அமரர்கணம் முடி வணங்க, ஆடுகின்ற பெருமானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. | [3] |
அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை, அமரர்கள்தம் பெருமானை, அரனை, மூவா- மருந்து அமரர்க்கு அருள் புரிந்த மைந்தன் தன்னை, மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும் திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய பெருந்தகையை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. | [4] |
அருந்துணையை; அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை; அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு, வான் புலன்கள் அகத்து அடக்கி, மடவாரோடும் பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றி, பொது நீக்கி, தனை நினைய வல்லோர்க்கு என்றும் பெருந்துணையை; பெரும்பற்றப்புலியூரானை;- பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. | [5] |
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னை, கன வயிரக் குன்று அனைய காட்சியானை, அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான் தன்னை, அருமறையோடு ஆறு அங்கம் ஆயினானை, சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச் சுடர்க்கொழுந்தை, துளக்கு இல்லா விளக்கை, மிக்க பெரும்பொருளை, பெரும்பற்றப்புலியூரானை, - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. | [6] |
வரும் பயனை, எழு நரம்பின் ஓசையானை, வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி அரும் பயம் செய் அவுணர் புரம் எரியக் கோத்த அம்மானை, அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னை, சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் -துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப் பெரும்பயனை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. | [7] |
கார் ஆனை ஈர் உரிவைப் போர்வையானை, காமரு பூங் கச்சி ஏகம்பன் தன்னை, ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை, அமரர்களுக்கு அறிவு அரிய அளவு இலானை, பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை, பரனை, எண் இல் பேரானை, பெரும்பற்றப்புலியூரானை, - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. | [8] |
முற்றாத பால் மதியம் சூடினானை, மூ உலகம் தான் ஆய முதல்வன் தன்னை, செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தன்னை, திகழ் ஒளியை, மரகதத்தை, தேனை, பாலை, குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன் தன்னை, கூத்து ஆட வல்லானை, கோனை, ஞானம் பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை,- பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. | [9] |
கார் ஒளிய திருமேனிச் செங்கண் மாலும், கடிக்கமலத்து இருந்த (அ)அயனும், காணா வண்ணம் சீர் ஒளிய தழல் பிழம்பு ஆய் நின்ற தொல்லைத், திகழ் ஒளியை; சிந்தை தனை மயக்கம் தீர்க்கும் ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும், ஏழ் உலகுங் கடந்தண்டத் அப்பால் நின்ற பேர் ஒளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப், சோத நாள் எல்லாம் பிறவா நாளே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.018  
வடி ஏறு திரிசூலம் தோன்றும்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருப்பூவணம் ; அருள்தரு மின்னாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு பூவணநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=CSi8Ue29CLI
வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்; வளர் சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்; கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்; காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்; இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்; எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும் பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. | [1] |
ஆண் ஆகிப் பெண் ஆய வடிவு தோன்றும்; அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆகித் தோன்றும்; ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகித் தோன்றும்; ஒற்றை வெண் பிறை தோன்றும்; பற்றார் தம்மேல் சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்; செத்தவர்தம் எலும்பினால் செறியச் செய்த பூண் நாணும் அரை நாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. | [2] |
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று சொல் ஆகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்; சூழ் அரவும், மான்மறியும், தோன்றும் தோன்றும்; அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்; ஐவகையால் நினைவார் பால் அமர்ந்து தோன்றும்; பொல்லாத புலால் எலும்பு பூண் ஆய்த் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. | [3] |
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்; பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்; நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும்; நால்மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்; உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும்; ஊரல் வெண் சிரமாலை உலாவித் தோன்றும்; புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. | [4] |
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும், மாசு இலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்; இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும்; இருங்கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்; கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில்- தோன்றும். புயல் பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. | [5] |
பார் ஆழி வட்டத்தார் பரவி இட்ட பல்மலரும், நறும்புகையும், பரந்து தோன்றும்; சீர் ஆழித் தாமரையின்மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும்; ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து, அன்று, போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. | [6] |
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்; சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை தோன்றும்; மின் அனைய நுண் இடையாள் பாகம் தோன்றும்; வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல் தோன்றும்; துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும்; பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. | [7] |
செறி கழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்; திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்; நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்; நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்; மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்; மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்; பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. | [8] |
அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்; அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்- மருப்பு ஓட்டு மணிவயிரக்கோவை தோன்றும்; மணம் மலிந்த நடம் தோன்றும்; மணி ஆர் வைகைத் திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்; செக்கர்வான் ஒளி மிக்குத் திகழ்ந்த சோதிப் பொருப்பு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. | [9] |
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி,அன்று, தன் முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்; பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று, பலபிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்; கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்; பூங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. | [10] |
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ் உரு ஆய் நிற்கின்ற அருளும் தோன்றும்; வார் உருவப்பூண் முலை நல் மங்கை தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்; நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை நெறு நெறு என அடர்த்திட்ட நிலையும் தோன்றும்; போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.019  
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=XBV0vMkPOq4
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி; முதிரும் சடைமுடி மேல் முகிழ்வெண்திங்கள் வளைத்தானை; வல் அசுரர் புரங்கள் மூன்றும், வரை சிலையா வாசுகி மா நாணாக் கோத்துத் துளைத்தானை, சுடு சரத்தால் துவள நீறா; தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடித் திளைத்தானை;-தென் கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. | [1] |
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை, மேல் ஆடு புரம் மூன்றும் பொடி செய்தானை, பண் நிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானை, பசும் பொன்னின் நிறத்தானை, பால் நீற்றானை, உள்-நிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான் தன்னை,- தெள்-நிலவு தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. | [2] |
நீர்த்திரளை நீள் சடைமேல் நிறைவித்தானை, நிலம் மருவி நீர் ஓடக் கண்டான் தன்னை, பால்-திரளைப் பயின்று ஆட வல்லான் தன்னை, பகைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்தான் தன்னை, கால்-திரள் ஆய் மேகத்தினுள்ளே நின்று கடுங் குரல் ஆய் இடிப்பானை, கண் ஓர் நெற்றித் தீத்திரளை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. | [3] |
வானம், இது, எல்லாம் உடையான் தன்னை; வரி அரவக் கச்சானை; வன்பேய் சூழக் கானம் அதில் நடம் ஆட வல்லான் தன்னை, கடைக் கண்ணால் மங்கையையும் நோக்கா; என்மேல் ஊனம் அது எல்லாம் ஒழித்தான் தன்னை; உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற தேன் அமுதை;-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. | [4] |
ஊரானை, உலகு ஏழ் ஆய் நின்றான் தன்னை, ஒற்றை வெண் பிறையானை, உமையோடு என்றும் பேரானை, பிறர்க்கு என்றும் அரியான் தன்னை, பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் ஆரானை, அமரர்களுக்கு அமுது ஈந்தானை, அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும் சீரானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. | [5] |
மூவனை, மூர்த்தியை, மூவா மேனி உடையானை, மூ உலகும் தானே எங்கும் பாவனை, பாவம் அறுப்பான் தன்னை, படி எழுதல் ஆகாத மங்கையோடும் மேவனை, விண்ணோர் நடுங்கக் கண்டு விரிகடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த தேவனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. | [6] |
துறந்தார்க்குத் தூ நெறி ஆய் நின்றான் தன்னை, துன்பம் துடைத்து ஆள வல்லான் தன்னை, இறந்தார்கள் என்பே அணிந்தான் தன்னை, எல்லி நடம் ஆட வல்லான் தன்னை; மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான் தன்னை, மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும் சிறந்தானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. | [7] |
வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானை, கருத்து அறிந்து முடிப்பான் தன்னை, தூயானை, தூ வெள்ளை ஏற்றான் தன்னை, சுடர்த் திங்கள் சடையானை, தொடர்ந்து நின்ற என் தாயானை, தவம் ஆய தன்மையானை, தலை ஆய தேவாதி தேவர்க்கு என்றும் சேயானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. | [8] |
பகைச் சுடர் ஆய்ப் பாவம் அறுப்பான் தன்னை, பழி இலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை, வகைச் சுடர் ஆய் வல் அசுரர் புரம் அட்டானை, வளைவு இலியாய் எல்லார்க்கும் அருள் செய்வானை, மிகைச் சுடரை, விண்ணவர்கள், மேல் அப்பாலை, மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும் திகைச் சுடரை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. | [9] |
மலையானை, மா மேரு மன்னினானை, வளர்புன் சடையானை, வானோர் தங்கள் தலையானை, என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை, தானே எங்கும் துலை ஆக ஒருவரையும் இல்லாதானை, தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த சிலையானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. | [10] |
தூர்த்தனைத் தோள் முடிபத்து இறுத்தான் தன்னை, தொல்-நரம்பின் இன் இசை கேட்டு அருள் செய்தானை, பார்த்தனைப் பணி கண்டு பரிந்தான் தன்னை, பரிந்து அவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை, ஆத்தனை, அடியேனுக்கு அன்பன் தன்னை, அளவு இலாப் பல் ஊழி கண்டு நின்ற தீர்த்தனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.032  
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
சிவார்ச்சனை Audio: https://www.youtube.com/watch?v=c0llPrAgTrM
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி! கழல் அடைந்தார் செல்லும் கதியே, போற்றி! அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி! அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி! மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி! வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி! செற்றவர் தம் புரம் எரித்த சிவனே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. | [1] |
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய், போற்றி! மதயானை ஈர் உரிவை போர்த்தாய், போற்றி! கொங்கு அலரும் நறுங்கொன்றைத் தாராய், போற்றி! கொல் புலித் தோல் ஆடைக் குழகா, போற்றி! அங்கணனே, அமரர்கள் தம் இறைவா, போற்றி! ஆலமர நீழல் அறம் சொன்னாய், போற்றி! செங்கனகத் தனிக் குன்றே, சிவனே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. | [2] |
மலையான் மடந்தை மணாளா, போற்றி! மழவிடையாய்! நின் பாதம் போற்றி போற்றி! நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய், போற்றி! நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய், போற்றி! இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ, போற்றி! ஏழ்கடலும் ஏழ் பொழிலும் ஆனாய், போற்றி! சிலையால் அன்று எயில் எரித்த சிவனே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. | [3] |
பொன் இயலும் மேனியனே, போற்றி போற்றி! பூதப்படை உடையாய், போற்றி போற்றி! மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய், போற்றி! மறி ஏந்து கையானே, போற்றி போற்றி! உன்னுமவர்க்கு உண்மையனே, போற்றி போற்றி! உலகுக்கு ஒருவனே, போற்றி போற்றி! சென்னி மிசை வெண் பிறையாய், போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. | [4] |
நஞ்சு உடைய கண்டனே, போற்றி போற்றி! நல்-தவனே, நின் பாதம் போற்றி போற்றி! வெஞ்சுடரோன் பல் இறுத்த வேந்தே, போற்றி! வெண்மதி அம் கண்ணி விகிர்தா, போற்றி! துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய், போற்றி! தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ, போற்றி! செஞ்சடையாய், நின் பாதம் போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. | [5] |
சங்கரனே, நின் பாதம் போற்றி போற்றி! சதாசிவனே, நின் பாதம் போற்றி போற்றி! பொங்கு அரவா, நின் பாதம் போற்றி போற்றி! புண்ணியனே, நின் பாதம் போற்றி போற்றி! அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா, நின் பாதம் போற்றி போற்றி! செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. | [6] |
வம்பு உலவு கொன்றைச் சடையாய், போற்றி! வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய், போற்றி! கொம்பு அனைய நுண் இடையாள் கூறா, போற்றி! குரை கழலால் கூற்று உதைத்த கோவே, போற்றி! நம்புமவர்க்கு அரும்பொருளே, போற்றி போற்றி! நால்வேதம் ஆறு அங்கம் ஆனாய், போற்றி! செம்பொனே, மரகதமே, மணியே, போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. | [7] |
உள்ளம் ஆய் உள்ளத்தே நின்றாய், போற்றி! உகப்பார் மனத்து என்றும் நீங்காய், போற்றி! வள்ளலே, போற்றி! மணாளா, போற்றி! வானவர் கோன் தோள் துணித்த மைந்தா, போற்றி! வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா, போற்றி! மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய், போற்றி! தெள்ளு நீர்க் கங்கைச் சடையாய், போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. | [8] |
பூ ஆர்ந்த சென்னிப் புனிதா, போற்றி! புத்தேளிர் போற்றும் பொருளே, போற்றி! தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே, போற்றி! திருமாலுக்கு ஆழி அளித்தாய், போற்றி! சாவாமே காத்து என்னை ஆண்டாய், போற்றி! சங்கு ஒத்த நீற்று எம் சதுரா, போற்றி! சே ஆர்ந்த வெல் கொடியாய், போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. | [9] |
பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய், போற்றி! பெண் உருவோடு ஆண் உரு ஆய் நின்றாய், போற்றி! கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய், போற்றி! காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய், போற்றி! அருமந்த தேவர்க்கு அரசே, போற்றி! அன்று அரக்கன் ஐந் நான்கு தோளும், தாளும், சிரம், நெரித்த சேவடியாய், போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.054  
ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) ; அருள்தரு தையல்நாயகியம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=mpXiqrBMFK4
ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம் நீண்டானை; நெடுங்கள மா நகரான் தன்னை; நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் கீண்டானை; கேதாரம் மேவினானை; கேடு இலியை; கிளர் பொறிவாள் அரவோடு என்பு பூண்டானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [1] |
சீர்த்தானை, சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை, சிவன் தன்னை, தேவ தேவை, கூர்த்தானை, கொடு நெடுவேல் கூற்றம் தன்னைக் குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம் பேர்த்தானை, பிறப்பு இலியை, இறப்பு ஒன்று இல்லாப் பெம்மானை, கைம்மாவின் உரிவை பேணிப் போர்த்தானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [2] |
பத்திமையால் பணிந்து, அடியேன் தன்னைப் பல்-நாள் பாமாலை பாடப் பயில்வித்தானை; எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை; எம்மானை; என் உள்ளத்துள்ளே ஊறும் அத் தேனை; அமுதத்தை; ஆவின் பாலை; அண்ணிக்கும் தீம் கரும்பை; அரனை; ஆதிப்- புத்தேளை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [3] |
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து, ஏழையேனை உய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டி, தன் போல் சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த அருளானை; ஆதி மா தவத்து உளானை; ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற பொருளானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [4] |
மின் உருவை; விண்ணகத்தில் ஒன்று ஆய், மிக்கு வீசும் கால் தன் அகத்தில் இரண்டு ஆய், செந்தீத்- தன் உருவில் மூன்று ஆய், தாழ் புனலில் நான்கு ஆய், தரணிதலத்து அஞ்சு ஆகி, எஞ்சாத் தஞ்ச மன் உருவை; வான் பவளக்கொழுந்தை; முத்தை; வளர் ஒளியை; வயிரத்தை; மாசு ஒன்று இல்லாப் பொன் உருவை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [5] |
அறை ஆர் பொன்கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன் தன்னை, கறை ஆர் மூ இலை நெடுவேல் கடவுள் தன்னை, கடல் நாகைக்காரோணம் கருதினானை, இறையானை, என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை, ஏழ்பொழிலும் தாங்கி நின்ற பொறையானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [6] |
நெருப்பு அனைய திருமேனி வெண்நீற்றானை, நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற விருப்பவனை, வேதியனை, வேதவித்தை, வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி இருப்பவனை, இடை மருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை, எனை ஆளும் கயிலை என்னும் பொருப்பவனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [7] |
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை, பிரிவு இலா அடியார்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப்பானை, மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை, திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக் கொண்ட போரானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [8] |
பண்ணியனை, பைங்கொடியாள் பாகன் தன்னை, படர் சடைமேல் புனல் கரந்த படிறன் தன்னை, நண்ணியனை, என் ஆக்கித் தன் ஆனானை, நால் மறையின் நல் பொருளை, நளிர் வெண்திங்கள் கண்ணியனை, கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை, நாரணனை, கமலத்து ஓங்கும் புண்ணியனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [9] |
இறுத்தானை, இலங்கையர் கோன் சிரங்கள் பத்தும்; எழு நரம்பின் இன் இசை கேட்டு இன்பு உற்றானை; அறுத்தானை, அடியார் தம் அருநோய் பாவம்; அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் கறுத்தானை; கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை; கனல், மழுவும், கலையும், அங்கை பொறுத்தானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.055  
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருக்கயிலாயம் ; அருள்தரு பார்வதியம்மை உடனுறை அருள்மிகு கயிலாயநாதர் திருவடிகள் போற்றி )
சிவார்ச்சனை Audio: https://www.youtube.com/watch?v=7qLrT5FepJ0
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி! மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி! ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி! ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி! ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி! ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி! காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. | [1] |
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி! பிறவி அறுக்கும் பிரானே, போற்றி! வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய், போற்றி! மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி! பொய்ச் சார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி! போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி! கச்சு ஆக நாகம் அசைத்தாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. | [2] |
மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி! மருவி என் சிந்தை புகுந்தாய், போற்றி! உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி! உள் ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி! திரு ஆகி நின்ற திறமே, போற்றி! தேசம் பரவப்படுவாய், போற்றி! கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. | [3] |
வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி! வந்து என்தன் சிந்தை புகுந்தாய், போற்றி! ஊனத்தை நீக்கும் உடலே, போற்றி! ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி! தேன(த்)த்தை வார்த்த தெளிவே, போற்றி! தேவர்க்கும் தேவனாய் நின்றாய், போற்றி! கானத் தீ ஆடல் உகந்தாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. | [4] |
ஊர் ஆகி நின்ற உலகே, போற்றி! ஓங்கி அழல் ஆய் நிமிர்ந்தாய், போற்றி! பேர் ஆகி எங்கும் பரந்தாய், போற்றி! பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி! நீர் ஆவி ஆன நிழலே, போற்றி! நேர்வார் ஒருவரையும் இல்லாய், போற்றி! கார் ஆகி நின்ற முகிலே, போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. | [5] |
சில் உரு ஆய்ச் சென்று திரண்டாய், போற்றி! தேவர் அறியாத தேவே, போற்றி! புல் உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய், போற்றி! போகாது என் சிந்தை புகுந்தாய், போற்றி! பல் உயிர் ஆய்ப் பார்தோறும் நின்றாய், போற்றி! பற்றி உலகை விடாதாய், போற்றி! கல் உயிர் ஆய் நின்ற கனலே, போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. | [6] |
பண்ணின் இசை ஆகி நின்றாய், போற்றி! பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி! எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய், போற்றி! என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி! விண்ணும் நிலனும் தீ ஆனாய், போற்றி! மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய், போற்றி! கண்ணின் மணி ஆகி நின்றாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. | [7] |
இமையாது உயிராது இருந்தாய், போற்றி! என் சிந்தை நீங்கா இறைவா, போற்றி! உமை பாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி! ஊழி ஏழ் ஆன ஒருவா, போற்றி! அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய், போற்றி! ஆதி புராணனாய் நின்றாய், போற்றி! கமை ஆகி நின்ற கனலே, போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. | [8] |
மூவாய், பிறவாய், இறவாய், போற்றி! முன்னமே தோன்றி முளைத்தாய், போற்றி! தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி! சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி! ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி! அல்லல் நலிய அலந்தேன், போற்றி! காவாய்! கனகத்திரளே, போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. | [9] |
நெடிய விசும்போடு கண்ணே, போற்றி! நீள அகலம் உடையாய், போற்றி! அடியும் முடியும் இகலி, போற்றி! அங்கு ஒன்று அறியாமை நின்றாய், போற்றி! கொடிய வன் கூற்றம் உதைத்தாய், போற்றி! கோயிலா என் சிந்தை கொண்டாய், போற்றி! கடிய உருமொடு மின்னே, போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. | [10] |
உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி! ஓதாதே வேதம் உணர்ந்தாய், போற்றி! எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி! இறை விரலால் வைத்து உகந்த ஈசா, போற்றி! பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய், போற்றி! பண்டே என் சிந்தை புகுந்தாய், போற்றி! கண் ஆய் உலகுக்கு நின்றாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.070  
தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி,
பண் - தக்கேசி (திருத்தலம் பொது -க்ஷேத்திரக்கோவை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருக்ஷேத்திரக் கோவை Audio: https://www.youtube.com/watch?v=fvw53cffuNU
தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர், கொல்லிக் குளிர் அறைப்பள்ளி, கோவல்-வீரட்டம், கோகரணம், கோடிகாவும், முல்லைப் புறவம் முருகன் பூண்டி, முழையூர், பழையாறை, சத்தி முற்றம், கல்லில்-திகழ் சீர் ஆர் காளத்தியும், கயிலாய நாதனையே காணல் ஆமே. | [1] |
ஆரூர் மூலட்டானம், ஆனைக்காவும், ஆக்கூரில்-தான் தோன்றி மாடம், ஆவூர், பேரூர், பிரமபுரம், பேராவூரும், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், பேணும் கூர் ஆர் குறுக்கை வீரட்டான(ம்)மும், கோட்டூர், குடமூக்கு, கோழம்ப(ம்)மும், கார் ஆர் கழுக்குன்றும், கானப்பேரும், கயிலாய நாதனையே காணல் ஆமே. | [2] |
இடை மருது, ஈங்கோய், இராமேச்சுரம், இன்னம்பர், ஏர் இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்க(ள்)ளூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை, கயிலாய நாதனையே காணல் ஆமே. | [3] |
எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங்கோட்டூர், இறையான் சேரி, அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர், ஆவடுதண்துறை, அழுந்தூர், ஆறை, கச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக்கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி, கச்சிப் பலதளியும், ஏகம்பத்தும், கயிலாய நாதனையே காணல் ஆமே. | [4] |
கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்காவும், நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்காவும், நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், ஏர் ஆரும் ஏமகூடம், கடம்பை, இளங்கோயில் தன்னிலுள்ளும், கயிலாய நாதனையே காணல் ஆமே. | [5] |
மண்ணிப் படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை, மந்தாரம், வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களத்தும், பெண்ணை அருள்-துறை, தண் பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெரு வேளூரும், கண்ணை, களர்க் காறை, கழிப்பாலையும், கயிலாய நாதனையே காணல் ஆமே. | [6] |
வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர், வேதிகுடி, விசயமங்கை, வியலூர், ஆழி அகத்தியான்பள்ளி, அண்ணாமலை, ஆலங்காடும், அரதைப்பெரும்- பாழி, பழனம், பனந்தாள், பாதாளம், பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட்டூர், தண் காழி, கடல் நாகைக்காரோணத்தும், கயிலாய நாதனையே காணல் ஆமே. | [7] |
உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காட்டுள்ளும், மஞ்சு ஆர் பொதியில் மலை, தஞ்சை, வழுவூர்-வீரட்டம், மாதானம், கேதாரத்தும், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகா, வேதீச்சுரம், விவீச்சுரம், வெற்றியூரும், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கையும், கயிலாய நாதனையே காணல் ஆமே. | [8] |
திண்டீச்சுரம், சேய்ஞலூர், செம்பொன் பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, கொண்டீச்சுரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு(வ்), அண்டர் தொழும் அதிகை வீரட்டானம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூரும், கண்டியூர் வீரட்டம், கருகாவூரும், கயிலாய நாதனையே காணல் ஆமே. | [9] |
நறையூரில் சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சுரம், நல்லூர், நல்ல துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமீச்சுரம், உறையூர், கடல் ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஓர் ஏடகத்தும், கறையூர், கருப்பறியல், கன்றாப்பூரும், கயிலாய நாதனையே காணல் ஆமே. | [10] |
புலி வலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம், பூவணம், பொய்கை நல்லூர், வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி நிலம் மலி நெய்த்தானத்தோடு, எத்தானத்தும் நிலவு பெருங்கோயில், பல கண்டால், தொண்டீர்! கலி வலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற கயிலாய நாதனையே காணல் ஆமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.094  
இரு நிலன் ஆய், தீ
பண் - புறநீர்மை (திருத்தலம் நின்றத் திருத்தாண்டகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=9kNln4y0aWI
இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் மாகி, இயமானனாய், எறியும் காற்றும் மாகி, அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி யாகி, பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே யாகி, நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை யாகி, நிமிர் புன்சடை அடிகள் நின்ற வாறே!. | [1] |
மண் ஆகி, விண் ஆகி, மலையும் மாகி, வயிரமும் ஆய், மாணிக்கம் தானே யாகி, கண் ஆகி, கண்ணுக்கு ஓர் மணியும் மாகி, கலை ஆகி, கலை ஞானம் தானே யாகி, பெண் ஆகி, பெண்ணுக்கு ஓர் ஆணும் மாகி, பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் மாகி, எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் மாகி, எழும் சுடர் ஆய் எம் அடிகள் நின்ற வாறே!. | [2] |
கல் ஆகி, களறு ஆகி, கானும் மாகி, காவிரி ஆய், கால் ஆறு ஆய், கழியும் மாகி, புல் ஆகி, புதல் ஆகி, பூடும் மாகி, புரம் ஆகி, புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி, சொல் ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும் மாகி, சுலாவு ஆகி, சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி, நெல் ஆகி, நிலன் ஆகி, நீரும் மாகி, நெடுஞ்சுடர் ஆய் நிமிர்ந்து, அடிகள் நின்ற வாறே!. | [3] |
காற்று ஆகி, கார் முகில் ஆய், காலம் மூன்று ஆய், கனவு ஆகி, நனவு ஆகி, கங்குல் ஆகி, கூற்று ஆகி, கூற்று உதைத்த கொல் களிறும் மாகி, குரை கடல் ஆய், குரை கடற்கு ஓர் கோமானு மாய், நீற்றானாய், நீறு ஏற்ற மேனி யாகி, நீள் விசும்பு ஆய், நீள் விசும்பின் உச்சி யாகி, ஏற்றானாய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே. | [4] |
தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி, திசை யாகி, அத் திசைக்கு ஓர் தெய்வம் மாகி, தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி, தாரகையும் ஞாயிறும் தண் மதியும் மாகி, காய் ஆகி, பழம் மாகி, பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே யாகி, நீ ஆகி, நான் ஆகி, நேர்மை யாகி, நெடுஞ்சுடர் ஆய், நிமிர்ந்து அடிகள் நின்ற வாறே. | [5] |
அங்கம் ஆய், ஆதி ஆய், வேதம் மாகி, அருமறையோடு ஐம்பூதம் தானே யாகி, பங்கம் ஆய், பல சொல்லும் தானே யாகி, பால் மதியோடு ஆதி ஆய், பான்மை யாகி, கங்கை ஆய், காவிரி ஆய், கன்னி ஆகி, கடல் ஆகி, மலை யாகி, கழியும் மாகி, எங்கும் ஆய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே. | [6] |
மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி, மறி கடலும் மால் விசும்பும் தானே யாகி, கோதாவிரி ஆய், குமரி ஆகி, கொல் புலித் தோல் ஆடைக் குழகன் ஆகி, போது ஆய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி, ஆதானும் என நினைந்தார்க்கு எளிதே யாகி, அழல் வண்ண வண்ணர் தாம் நின்ற வாறே!. | [7] |
ஆ ஆகி, ஆவினில் ஐந்தும் ஆகி, அறிவு ஆகி, அழல் ஆகி, அவியும் மாகி, நா ஆகி, நாவுக்கு ஓர் உரையும் மாகி, நாதனாய், வேதத்தின் உள்ளோன் ஆகி, பூ ஆகி, பூவுக்கு ஓர் நாற்றம் மாகி, பூக்குளால் வாசம் ஆய் நின்றான் ஆகி, தே ஆகி, தேவர் முதலும் ஆகி, செழுஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற வாறே!. | [8] |
நீர் ஆகி, நீள் அகலம் தானே யாகி, நிழல் ஆகி, நீள் விசும்பின் உச்சி யாகி, பேர் ஆகி, பேருக்கு ஓர் பெருமை யாகி, பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி, ஆரேனும் தன் அடைந்தார் தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம் பார் ஆகி, பண் ஆகி, பாடல் ஆகி, பரஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற வாறே!. | [9] |
மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம் ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் மாகி, பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை யாகி, பரப்பு ஆகி, பரலோகம் தானே யாகி, பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய், புராணன் தானே யாகி, ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற வாறே!. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.095  
அப்பன் நீ, அம்மை நீ,
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் பொது -தனித் திருத்தாண்டகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=gyQIiJdYqsE
அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,| அன்பு உடைய மாமனும் மாமியும் நீ, ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,| ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ, துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,| துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,| இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே. | [1] |
வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்;| வெய்ய வினைப் பகையும் பைய நையும்; எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்;| எங்கு எழில் என் ஞாயிறு? எளியோம் அல்லோம் அம் பவளச் செஞ்சடை மேல் ஆறு சூடி,| அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த செம்பவள வண்ணர், செங்குன்ற வண்ணர்,| செவ்வான வண்ணர், என் சிந்தையாரே. | [2] |
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே? அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே? ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே? உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே? பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே? பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே? காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே? காண்பார் ஆர், கண்ணுதலாய்! காட்டாக்காலே?. | [3] |
நல் பதத்தார் நல் பதமே! ஞானமூர்த்தீ! | நலஞ்சுடரே! நால் வேதத்து அப்பால் நின்ற சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற | சொலற்கு அரிய சூழலாய்! இது உன் தன்மை; நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம் தன்னுள் | நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற கற்பகமே! யான் உன்னை விடுவேன் அல்லேன் |-கனகம், மா மணி, நிறத்து எம் கடவுளானே!. | [4] |
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும், | திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும், பருக்கு ஓடிப் பத்திமையால் பாடா ஊரும், | பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும், விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும், | விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும், அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும், | அவை எல்லாம் ஊர் அல்ல; அடவி- காடே!. | [5] |
திருநாமம் அஞ்சு எழுத்தும் செப்பார் ஆகில், | தீ வண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில், ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில், | உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில், அருநோய்கள் கெட வெண்நீறு அணியார் ஆகில், | அளி அற்றார்; பிறந்த ஆறு ஏதோ என்னில், பெரு நோய்கள் மிக நலிய, பெயர்த்தும் செத்தும் | பிறப்பதற்கே தொழில் ஆகி, இறக்கின்றாரே!. | [6] |
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்; | நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்; மன் ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்; | மறை நான்கும் ஆனாய்; ஆறு அங்கம் ஆனாய்; பொன் ஆனாய்; மணி ஆனாய்; போகம் ஆனாய்; | பூமிமேல் புகழ் தக்க பொருளே! உன்னை, என் ஆனாய்! என் ஆனாய்! என்னின் அல்லால், | ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?. | [7] |
அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; | அருள் நோக்கில்-தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்; எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்; | எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்; பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன், | பிழைத் தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே! இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ! | எம்பெருமான் திருக்கருணை இருந்த ஆறே!. | [8] |
குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்; | குற்றமே பெரிது உடையேன்; கோலம் ஆய நலம் பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்; | நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற விலங்கு அல்லேன்; விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்; | வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்; இலம் பொல்லேன்; இரப்பதே ஈய மாட்டேன்; |என் செய்வான் தோன்றினேன், ஏழையேனே?. | [9] |
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து | தரணியொடு வான் ஆளத் தருவரேனும், மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்,| மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில் அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயரா(அ)ய் | ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும், கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்,| அவர் கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.096  
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் பொது -தனித் திருத்தாண்டகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=S2QAPPvNFiw
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்; அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்; தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார்; தலை அதனில் பலி கொண்டார்; நிறைவு ஆம் தன்மை வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார்; மான் இடம் கொண்டார்; வலங்கை மழுவாள் கொண்டார்; காமனையும் உடல் கொண்டார், கண்ணால் நோக்கி; கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே. | [1] |
முப்புரி நூல் வரை மார்பில் முயங்கக் கொண்டார்; முது கேழல் முளை மருப்பும் கொண்டார், பூணா; செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார்; செம்மேனி வெண் நீறு திகழக் கொண்டார்; துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார்; சுடர் முடி சூழ்ந்து, அடி அமரர் தொழவும் கொண்டார்; அப் பலி கொண்டு ஆயிழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே. | [2] |
முடி கொண்டார்; முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆகக் கொண்டார்; அடி கொண்டார், சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப; அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்; வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கைக் கொண்டார்; மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்; துடி கொண்டார்; கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே. | [3] |
பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார்; பூதப்படைகள் புடை சூழக் கொண்டார்; அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார்; அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்கக் கொண்டார்; கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார்; கொடியானை அடல் ஆழிக்கு இரையாக் கொண்டார்; செக்கர் நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார் தாமே. | [4] |
அந்தகனை அயில் சூலத்து அழுத்திக் கொண்டார்; அரு மறையைத் தேர்க்குதிரை ஆக்கிக் கொண்டார்; சுந்தரனைத் துணைக் கவரி வீசக் கொண்டார்; சுடுகாடு நடம் ஆடும் இடமாக் கொண்டார்; மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக் கொண்டார்; மாகாளன் வாசல் காப்பு ஆகக் கொண்டார்; தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார் சமண் தீர்த்து என் தன்னை ஆட் கொண்டார் தாமே. | [5] |
பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார்; பவள நிறம் கொண்டார்; பளிங்கும் கொண்டார்; நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார்; நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார்; வார் அடங்கு வனமுலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார்; வளையும் கொண்டார்; ஊர் அடங்க, ஒற்றி நகர் பற்றிக் கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே. | [6] |
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்காக் கொண்டார்; ஆலால அரு நஞ்சம் அமுதாக் கொண்டார்; கணி வளர் தார்ப் பொன் இதழிக் கமழ்தார் கொண்டார்; காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார்; மணி பணத்த அரவம் தோள்வளையாக் கொண்டார்; மால் விடை மேல் நெடுவீதி போதக் கொண்டார்; துணி புலித்தோலினை ஆடை உடையாக் கொண்டார்; சூலம் கைக் கொண்டார் தொண்டு எனைக் கொண்டாரே. | [7] |
பட மூக்கப் பாம்பு அணையானோடு, வானோன், பங்கயன், என்று அங்கு அவரைப் படைத்துக் கொண்டார்; குட மூக்கில் கீழ்க்கோட்டம் கோயில் கொண்டார்; கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக் கொண்டார்; நெடு மூக்கின் கரியின் உரி மூடிக் கொண்டார்; நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்; இடம் ஆக்கி இடை மருதும் கொண்டார், பண்டே; என்னை இந் நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே. | [8] |
எச்சன் இணை தலை கொண்டார்; பகன் கண் கொண்டார்; இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக் கொண்டார்; மெச்சன் விதாத்திரன் தலையும் வேறாக் கொண்டார்; விறல் அங்கி கரம் கொண்டார்; வேள்வி காத்து, உச்ச நமன் தாள் அறுத்தார்; சந்திரனை உதைத்தார்; உணர்வு இலாத் தக்கன் தன் வேள்வி எல்லாம் அச்சம் எழ அழித்துக் கொண்டு, அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே. | [9] |
சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார்; சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்; உடை ஒன்றில் புள்ளி உழைத்தோலும் கொண்டார்; உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்; கடை முன்றில் பலி கொண்டார்; கனலும் கொண்டார்; காபால வேடம் கருதிக் கொண்டார்; விடை வென்றிக் கொடி அதனில் மேவக் கொண்டார் வெந்துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே. | [10] |
குரா மலரோடு, அரா, மதியம், சடை மேல் கொண்டார்; குடமுழ, நந்தீசனை, வாசகனாக் கொண்டார்; சிராமலை தம் சேர்வு இடமாத் திருந்தக் கொண்டார்; தென்றல் நெடுந்தேரோனைப் பொன்றக் கொண்டார்; பராபரன் என்பது தமது பேராக் கொண்டார்; பருப்பதம் கைக்கொண்டார்; பயங்கள் பண்ணி இராவணன் என்று அவனைப் பேர் இயம்பக் கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.098  
நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் பொது - மறுமாற்றம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருநாவுக்கரசர் சிவநெறி சேர்ந்தசெய்தி சமணர் செவிகட்கு எட்டியது. தம் சமயத்தை நிலைநிறுத்திவந்த தருமசேனர் சைவம் சார்ந்து ஒருவராலும் நீக்கமுடியாத சூலைநோய் நீங்கப் பெற்றார் என்பதை உலகம் அறியின், நம்மதம் அழியும் என்றஞ்சினர். மன்னனுக்கு இச்செய்தியை மறைத்து மொழிந்தனர். தருமசேனர் தம் தமக்கையார் மேற்கொண்டிருக்கும் சமயத்தைச் சார விரும்பிச் சூலை நோய் வந்ததாகப் பொய்கூறிச் சைவராய் நம் மதத்தையும் கடவுளரை யும் இழித்துரைக்கின்றார் என்று பொய்ச்செய்தி சித்திரித்து மெய்யுரை போல் வேந்தனிடம் விளம்பினர். இத்தகைய குற்றத்திற்குத் தரப்படும் தண்டனை யாதென அவர்களையே வினவினான் அரசன். நன்றாகத் தண்டித்து ஒறுக்கவேண்டும் என்றனர் சமணர். மன்னவன் அமைச் சரை வரவழைத்துத் திருநாவுக்கரசரைத் தம்மிடம் அழைத்துவருமாறு அனுப்பினான். அமைச்சரும் திருநாவுக்கரசரிடம் சென்று அரசன் ஆணையை அறிவித்து நின்றார்கள். திருநாவுக்கரசர் சிவபெரு மானுக்கே மீளா ஆளாய் அவன் திருவடிகளையே சிந்திக்கும் நாம் யார்க்கும் அடங்கிவாழும் எளிமையுடையோமல்லம். நமன் வரினும் அஞ்சோம் என்னும் பொருள் பொதிந்த தொடக்கத்தை உடைய நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் மறுமாற்றத் திருத் தாண்டகப் பதிகம் பாடியருளினார். Audio: https://www.youtube.com/watch?v=ySLUSOx0X50
நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்; ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்; இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை; தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன சங்கரன், நல் சங்க வெண்குழை ஓர் காதின் கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க் கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே. | [1] |
அகலிடமே இடம் ஆக ஊர்கள் தோறும் அட்டு உண்பார், இட்டு உண்பார், விலக்கார், ஐயம்; புகல் இடம் ஆம் அம்பலங்கள்; பூமிதேவி உடன் கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே; இகல் உடைய விடை உடையான் ஏன்று கொண்டான்; இனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்; துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்கக் கடவோமோ? துரிசு அற்றோமே. | [2] |
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்; மாதேவா! மாதேவா! என்று வாழ்த்தி, நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்; நீறு அணியும் கோலமே நிகழப் பெற்றோம்; கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக் கல் மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்; பார் ஆண்டு பகடு ஏறித் வருவார் சொல்லும் பணி கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே. | [3] |
உறவு ஆவார், உருத்திர பல் கணத்தினோர்கள்; உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே; செறு வாரும் செற மாட்டார்; தீமை தானும் நன்மை ஆய்ச் சிறப்பதே; பிறப்பில் செல்லோம்; நறவு ஆர் பொன் இதழி நறுந் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம், நாவால்; சுறவு ஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட சுடர் நயனச் சோதியையே தொடர்வு உற்றோமே. | [4] |
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்; இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை; சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்; சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்; ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே; உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்; பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னிப் புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே. | [5] |
மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன மூர்த்தியே! என்று முப்பத்து மூவர்- தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவளத் திருமேனிச் சிவனே! என்னும் நா உடையார் நமை ஆள உடையார் அன்றே; நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்; கடுமையொடு களவு அற்றோமே. | [6] |
நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும், நெருப்பினொடு, காற்று ஆகி, நெடு வான் ஆகி, அற்பமொடு பெருமையும் ஆய், அருமை ஆகி, அன்பு உடையார்க்கு எளிமையது ஆய், அளக்கல் ஆகாத் தற்பரம் ஆய், சதாசிவம் ஆய், தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும் பொற்பு உடைய பேசக் கடவோம்; பேயர் பேசுவன பேசுதுமோ? பிழை அற்றோமே. | [7] |
ஈசனை, எவ் உலகினுக்கும் இறைவன் தன்னை, இமையவர் தம் பெருமானை, எரி ஆய் மிக்க தேசனை, செம்மேனி வெண் நீற்றானை, சிலம்பு அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற நேசனை, நித்தலும் நினையப் பெற்றோம்; நின்று உண்பார் எம்மை நினையச் சொன்ன வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே; வந்தீர் ஆர்? மன்னவன் ஆவான் தான் ஆரே?. | [8] |
சடை உடையான்; சங்கக் குழை ஓர் காதன்; சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி, விடை உடையான்; வேங்கை அதள் மேல் ஆடை, வெள்ளி போல் புள்ளி உழை- மான்தோல் சார்ந்த உடை, உடையான்; நம்மை உடையான் கண்டீர்; உம்மோடு மற்றும் உளராய் நின்ற படை உடையான் பணி கேட்கும் பணியோம் அல்லோம்; பாசம் அற வீசும் படியோம், நாமே. | [9] |
நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்; நாண் அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்; ஆவா! என்று எமை ஆள்வான், அமரர் நாதன், அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து இருந்தான்; தென் திசைக்கோன் தானே வந்து, கோ ஆடி, குற்றேவல் செய்க என்றாலும், குணம் ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.099  
எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருப்புகலூர் ; அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி )
இறைவன் திருவடி அடையும் காலம் அணித்தாக திருநாவுக் கரசர் திருப்புகலூரிலேயே தங்கியிருந்தார். எல்லாவுலகமும் போற்ற எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ என்று தொடங்கித் திருத்தாண்டகத் திருப்பதிகம் பாடிப் போற்றி நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி ஆண்ட அரசு ஒரு சித்திரைமாதச் சதய நாளில் அண்ணலார் சேவடியை அடைந்து இன்புற்று அமர்ந்தருளினார். Audio: https://www.youtube.com/watch?v=Nc47vuCZpt4
எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ, எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்? கண் இலேன்! மற்று ஓர் களை கண் இல்லேன், கழல் அடியே கை தொழுது காணின் அல்லால்; ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்; ஒக்க அடைக்கும் போது உணர மாட்டேன்; புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!. | [1] |
அங்கமே பூண்டாய்! அனல் ஆடினாய்! ஆதிரையாய்! ஆல் நிழலாய்! ஆன் ஏறு ஊர்ந்தாய்! பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய்! பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்! சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சு உண்டு, சாவா மூவாச் சிங்கமே! உன் அடிக்கே போதுகின்றேன் திருப் புகலூர் மேவிய தேவதேவே!. | [2] |
பை அரவக் கச்சையாய்! பால் வெண் நீற்றாய்! பளிக்குக் குழையினாய்! பண் ஆர் இன்சொல் மை விரவு கண்ணாளைப் பாகம் கொண்டாய்! மான்மறி கை ஏந்தினாய்! வஞ்சக் கள்வர்- ஐவரையும் என்மேல்-தரவு அறுத்தாய்; அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவது இல்லை; பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன்- பூம் புகலூர் மேவிய புண்ணியனே!. | [3] |
தெருளாதார் மூ எயிலும் தீயில் வேவச் சிலை வளைத்து, செங் கணையால் செற்ற தேவே! மருளாதார் தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய்! மருந்து ஆய்ப் பிணி தீர்ப்பாய், வானோர்க்கு என்றும்! அருள் ஆகி, ஆதி ஆய், வேதம் ஆகி, அலர் மேலான் நீர் மேலான் ஆய்ந்தும் காணாப் பொருள் ஆவாய்! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!. | [4] |
நீர் ஏறு செஞ்சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே! பார் ஏறு படுதலையில் பலி கொள்வானே! பண்டு அநங்கற் காய்ந்தானே! பாவநாசா! கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே! கருங்கைக் களிற்று உரிவை கதறப் போர்த்த போர் ஏறே! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!. | [5] |
விரிசடையாய்! வேதியனே! வேத கீதா! விரி பொழில் சூழ் வெண் காட்டாய்! மீயச் சூராய்! திரிபுரங்கள் எரி செய்த தேவதேவே! திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேயாய்! மருவு இனியார் மனத்து உளாய்! மாகாளத்தாய்! வலஞ்சுழியாய்! மா மறைக்காட்டு எந்தாய்! என்றும் புரிசடையாய்! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!. | [6] |
தே ஆர்ந்த தேவனை, தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு, தேடி நின்று, நா ஆர்ந்த மறை பாடி, நட்டம் ஆடி, நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற, கா ஆர்ந்த பொழில்-சோலைக் கானப்பேராய்! கழுக்குன்றத்து உச்சியாய்! கடவுளே! நின் பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!. | [7] |
நெய் ஆடி! நின்மலனே! நீலகண்டா! நிறைவு உடையாய்! மறை வல்லாய்! நீதியானே! மை ஆடு கண் மடவாள் பாகத்தானே! மான் தோல் உடையாய்! மகிழ்ந்து நின்றாய்! கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு, அடியேன் நான் இட்டு, கூறி நின்று பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!. | [8] |
துன்னம் சேர் கோவணத்தாய்! தூய நீற்றாய்! துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி, தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடிமேல் வைத்து உகந்த தன்மையானே! அன்ன நடை மடவாள் பாகத்தானே! அக்கு ஆரம் பூண்டானே! ஆதியானே! பொன் அம்கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!. | [9] |
ஒருவரையும் அல்லாது உணராது, உள்ளம்; உணர்ச்சித் தடுமாற்றத்துள்ளே நின்ற இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி, இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன்; ஏலக் கருவரை சூழ் கானல் இலங்கை வேந்தன் கடுந் தேர் மீது ஓடாமைக் காலால் செற்ற பொரு வரையாய்! உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே!. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.001  
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்
பண் - இந்தளம் (திருத்தலம் திருவெண்ணெய்நல்லூர் ; அருள்தரு வேற்கண்மங்கையம்மை உடனுறை அருள்மிகு தடுத்தாட்கொண்டவீசுவரர் திருவடிகள் போற்றி )
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்த போது சுந்தரருக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த ஈசன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அந்த ஓலையை சுந்தரர் கிழித்தெறிந்தார். முதியவர் வழக்கை திருவெண்ணெய்நல்லூருக்கு எடுத்து சென்று வென்றார். அடிமை ஆன சுந்தரர் முதியவரின் வீட்டைக் காண்பிக்க சொல்ல, முதியவர் திருவெண்ணெய்நல்லூர் ஆலயத்திற்கு கூட்டி சென்று மறைந்தார். முதியவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெரு மான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து `நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். பெருமான் அவரை நோக்கி `நம்மிடம் நீ வன்மை பேசினமையால் வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனை பாடல்களே ஆகும். ஆதலால் இவ்வுலகில் நம்மை, செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றுக எனப் பணித்தருளினார். அன்பனே! யான் ஓலைகாட்டி நின்னை ஆட்கொள்ள வந்தபோது நீ என்னைப் பித்தன் என்று கூறினாய். ஆதலால் என்பெயர் பித்தன் என்றே பாடுக` என்று இறைவன் அருளிச்செய்தார். வன்தொண்டர் தம்மை பித்தா பிறைசூடீ என்று தொடங்கும் திருப்பதிகத்தால் பாடியருளினார்.
குருவருள் பெறஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=g5cyWyIOPY8
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? . | [1] |
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை, பேய் ஆய்த் திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்; வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? . | [2] |
மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை; பொன்னே, மணிதானே, வயிர(ம்)மே, பொருது உந்தி மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? . | [3] |
முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றம் ஊர்தீ! கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள், நீ! செடிஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? . | [4] |
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம்(ம்) அது பணியாய்! ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா! தாது ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆதீ! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? . | [5] |
தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ! எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண(ந்) நகை செய்தாய்! மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? . | [6] |
ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்; வான் ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்; தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? . | [7] |
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்! தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர் வான் நீர் ஏற்றாய்! பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? . | [8] |
மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா! தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே; செழு வார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் அழகா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? . | [9] |
கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக் கையால் பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி, சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? . | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.005  
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
பண் - இந்தளம் (திருத்தலம் திருஓணகாந்தன்தளி ; அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஓணகாந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
கச்சூரிலிருந்து புறப்பட்டுக் காஞ்சிபுரத்தை யணைந்து, திரு வேகம்பத்தை யடைந்து ஏகாம்பரநாதரைப் போற்றினார். தொண்டர் குழாங்களோடு சிலநாள் அங்குத் தங்கினார். காஞ்சியில் காமகோட்டம், திருமேற்றளி ஆகிய இடங்களையும் சென்று தரிசித்தார். திருவோணகாந்தன்தளி இறைவனை வணங்கி நெய்யும் பாலும் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் பொன் பெற்றார்.
பொன் பெற Audio: https://www.youtube.com/watch?v=TzdBCOhKDC4
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்; கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்; ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு, உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே!. | [1] |
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி; அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கோற்று அடியாளால்; உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! . | [2] |
பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி உன் கழல் ஏத்துவார்கள் மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி, மதி உடையவர் செய்கை செய்யீர்; அற்ற போழ்தும் அலந்த போழ்தும், ஆபற் காலத்து, அடிகேள்! உம்மை ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே! . | [3] |
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்? பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! . | [4] |
கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே, ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்; தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்; ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே! | [5] |
வார் இருங்குழல், வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்- தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த, கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய் ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே! | [6] |
பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை; மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்; எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓதீர்; உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே! | [7] |
வலையம் வைத்த கூற்றம் ஈவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு, சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால், கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவர் ஊடு ஐ- உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்-ஓணகாந்தன் தளி உளீரே! | [8] |
வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே? ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று; தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உந்தம் ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே! | [9] |
ஓவணம் மேல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம் ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி, கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன பாவணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.020  
நீள நினைந்து அடியேன் உமை
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கோளிலி (திருக்குவளை) ; அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு கோளிலிநாதர் திருவடிகள் போற்றி )
நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை மூன்று பொழுதும் வணங்கி வாழ்ந்து வரும் நாளில் திருக்கோளிலி என்னும் தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியில் விழுமிய பெரியார் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டு அவர் அமுது செய்யும் வண்ணம் செந்நெல், பருப்பு முதலிய பொருள்களைப் பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் நியமத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வாறு குண்டையூர்க் கிழார் தொண்டாற்றிவரும் காலத் தில் ஒருசமயம் மழையின்மையால் நிலவளம் சுருங்கிற்று. விளை பொருள்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய தானியங்கள் இல்லாமல் மனங்கவன்று உணவுகொள்ளாது அன்றிரவு துயின்றார். பெருமான் அவர் கனவில் தோன்றி ஆரூரனுக்குப் படி அமைக்க உனக்கு நெல்தந்தோம் என்றருளிச் செய்து குபேரனை ஏவியிடக் குண்டையூர் முழுதும் நெல் மலை வானவெளியும் மறையும்படி ஓங்கிநின்றது. குண்டையூர்க்கிழார் காலையில் எழுந்து நெல்மலையைக் கண்டு வியந்து திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் இறைவன் கருணையை எடுத்தியம்பி அந்நெல்மலை மனிதர்களால் எடுத்துவரும் அளவினதன்று. தாங்கள் எவ்விதமேனும் அதனை ஏற்றருள வேண்டும் என்று வேண்டினார். அதனைக்கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக்கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து நீளநினைந் தடியேன் என்னும் திருப்பதிகம்பாடி நெல்லையெடுத்துச்செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார். இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் திருவாரூர் முழுவதும் நெல்லைக்கொண்டுவந்து குவிக்கும் என்றதோர் அருள்வாக்கு பெருமானருளால் விசும்பிடையெழுந்தது. அதுகேட்டுமகிழ்ந்த சுந்தரர் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்து பரவை யார்க்குத் தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.
பஞ்சத்தின் போதும் நல்ல உணவு கிடைக்க Audio: https://www.youtube.com/watch?v=0caMnbm5nqY
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்; வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே, கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! . | [1] |
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்! விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்த எம் வேதியனே! தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! . | [2] |
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்; மாதர் நல்லார் வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; ஆதியே, அற்புதனே, அவை அட்டித்தரப் பணியே! . | [3] |
சொல்லுவது என், உனை நான்? தொண்டை வாய் உமை நங்கையை நீ புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ? கொல்லை வளம் புறவில்-குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! . | [4] |
முல்லை முறுவல் உமை ஒரு பங்கு உடை முக்கணனே! பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா! கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி எம்பெருமான்! அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! . | [5] |
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர் பங்கு உடையாய்! பரவை பசி வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே! குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே! . | [6] |
எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்; வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே! செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அன்பு அது(வ்) ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! . | [7] |
அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்! பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்; குரக்கு இனங்கள் குதி கொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்; இரக்கம் அது ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! . | [8] |
பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும் கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்! தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்! அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! . | [9] |
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி மேயவனை நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏத்திய பத்தும் வல்லார், அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான் உலகு ஆள்பவரே . | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.024  
பொன் ஆர் மேனியனே! புலித்தோலை
பண் - நட்டராகம் (திருத்தலம் திருமழபாடி ; அருள்தரு அழகம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பநாதர் திருவடிகள் போற்றி )
இறைவன் எழுந்தருளிய தலங்கள் பலவற்றையும் வழிபட எண்ணிய சுந்தரர், திருவாரூரினின்றும் புறப்பட்டு, நன்னிலம், வீழிமிழலை, திருவாஞ்சியம் நறையூர்ச்சித்தீச்சரம், அரிசிற்கரைப்புத்தூர், ஆவடுதுறை, இடைமருது, நாகேச்சரம், சிவபுரம், கலயநல்லூர், குடமூக்கு, வலஞ்சுழி, நல்லூர், சோற்றுத்துறை, கண்டியூர், ஐயாறு, பூந்துருத்தி ஆகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, திருவாலம்பொழிலை அடைந்தார். அன்றிரவு அவர் துயிலும் பொழுது, சிவபெருமான் அவர் கனவில் தோன்றி, மழபாடிக்கு வருதற்கு மறந்தாயோ என வினவி மறைந்தார். துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், காவிரியைக் கடந்து, திருமழபாடி சென்று, இறைவனை வணங்கிப் பொன்னார் மேனியனே என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். Audio: https://www.youtube.com/watch?v=gT_jrRKsfvo
பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து, மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே! மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே! அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?. | [1] |
கீள் ஆர் கோவணமும், திருநீறு மெய் பூசி, உன்தன் தாளே வந்து அடைந்தேன்; தலைவா! எனை ஏன்றுகொள், நீ! வாள் ஆர் கண்ணி பங்கா! மழபாடியுள் மாணிக்கமே! கேளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?. | [2] |
எம்மான், எம் அ(ன்)னை, என் தனக்கு எள்-தனைச் சார்வு ஆகார்; இம் மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்; மைம் மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அம்மான்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?. | [3] |
பண்டே நின் அடியேன்; அடியார் அடியார்கட்கு எல்லாம் தொண்டே பூண்டொழிந்தேன்; தொடராமைத் துரிசு அறுத்தேன்; வண்டு ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அண்டா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?. | [4] |
கண் ஆய், ஏழ் உலகும் கருத்து ஆய அருத்தமும் ஆய், பண் ஆர் இன் தமிழ் ஆய், பரம் ஆய பரஞ்சுடரே! மண் ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அண்ணா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . | [5] |
நாளார் வந்து அணுகி நலியாமுனம், நின் தனக்கே ஆளா வந்து அடைந்தேன்; அடியேனையும் ஏன்றுகொள், நீ! மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே! ஆளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . | [6] |
சந்து ஆரும் குழையாய்! சடைமேல் பிறைதாங்கி! நல்ல வெந்தார் வெண்பொடியாய்! விடை ஏறிய வித்தகனே! மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! எந்தாய்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . | [7] |
வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் செய்ய மலர்கள் இட, மிகு செம்மையுள் நின்றவனே! மை ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! ஐயா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . | [8] |
நெறியே! நின்மலனே! நெடுமால் அயன் போற்றி செய்யும் குறியே! நீர்மையனே! கொடி ஏர் இடையாள் தலைவா! மறி சேர் அம் கையனே! மழபாடியுள் மாணிக்கமே! அறிவே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?. | [9] |
ஏர் ஆர் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை, வார் ஆர் கொங்கை உடன் மழபாடியுள் மேயவனை, சீர் ஆர் நாவலர் கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ் பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே . | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.025  
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
பண் - நட்டராகம் (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
தில்லைருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிப்புத்தூர், கானாட்டுமுள்ளூர், எதிர்கொள்பாடி வேள்விக்குடி முதலிய தலங்களை யிறைஞ்சித் திருப்பதிகங்கள் பாடித் திருவாரூரை யடைந்து பூங்கோயிற் பெருமானைத் தொழுது பரவையாருடன் இனிதிருந்தார். இங்ஙனம் வைகும் நாளில் ஒருநாள் பரவையாரை நோக்கி, முதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் புகவிட்டோம். அப்பொன்னை இந்நகரத் திருக்குளத்தில் எடுத்து வருவோம் வருக என அழைத்தார். பரவையாரும் வியப்பெய்தி உடன் சென்றார். நம்பியாரூரர் பெருமானை வணங்கிக் கோயிலை வலம் வந்து கோயிலின் மேல்பால் உள்ள திருக்குளத்தின் வடகீழ்க் கரையில் பரவையாரை நிற்கச் செய்து, தாம் இறங்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரர்தம் செந்தமிழ்ப் பதிகம் கேட்கும் விருப்பினால் இறைவன் பொன்னை விரைவில் தோன்றாதவாறு செய்தருளினார். இந்நிலையில் பரவையார் ஆற்றலிட்டுக் குளத்தில் தேடும் நிலையை எண்ணி நகைத்துரைத்தார். அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த பெருமானே பரவை நகைத்துரையாதவாறு முன்னுரைத்தபடி செம் பொன்னைத் தந்தரளுக எனப் பொன்செய்த மேனியினீர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலளவும் பொன் கிடைத்திலது, ஒன்பதாந் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்திரள் சுந்தரர் கைக்குள் கிடைத்தது.
கைக்கு கிடைத்த பொருள் கை ந்ழுவிப் போனால் மீண்டும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=J0kKlrUj_Pk
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்; முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்; மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே, என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே?. | [1] |
உம்பரும் வானவரும்(ம்) உடனே நிற்கவே, எனக்குச் செம்பொனைத் தந்து அருளி, திகழும் முதுகுன்று அமர்ந்தீர்; வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்; எம்பெருமான்! அருளீர், அடியேன் இட்டளம் கெடவே! . | [2] |
பத்தா! பத்தர்களுக்கு அருள் செய்யும் பரம்பரனே! முத்தா! முக்கணனே! முதுகுன்றம் அமர்ந்தவனே! மைத்து ஆரும் தடங்கண் பரவை இவள் வாடாமே, அத்தா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! . | [3] |
மங்கை ஓர் கூறு அமர்ந்தீர்; மறை நான்கும் விரித்து உகந்தீர்; திங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்று அமர்ந்தீர்; கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே, அங்கணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! . | [4] |
மை ஆரும் மிடற்றாய்! மருவார் புரம் மூன்று எரித்த செய்யார் மேனியனே! திகழும் முதுகுன்று அமர்ந்தாய்! பை ஆரும்(ம்) அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்; ஐயா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! . | [5] |
நெடியான், நான்முகனும்(ம்), இரவி(ய்)யொடும், இந்திரனும், முடியால் வந்து இறைஞ்ச(ம்) முதுகுன்றம் அமர்ந்தவனே! படி ஆரும்(ம்) இயலாள் பரவை இவள் தன் முகப்பே, அடிகேள்! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! . | [6] |
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் வந்து அணவும் மதி சேர், சடை மா முதுகுன்று உடையாய்! பந்து அணவும் விரலாள் பரவை இவள் தன் முகப்பே, அந்தணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! . | [7] |
பரசு ஆரும் கரவா! பதினெண் கணமும் சூழ முரசார் வந்து அதிர(ம்), முதுகுன்றம் அமர்ந்தவனே! விரை சேரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, அரசே! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! . | [8] |
ஏத்தாது இருந்து அறியேன்; இமையோர் தனி நாயகனே! மூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே! பூத்து ஆரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, கூத்தா! தந்து அருளாய், கொடியேன் இட்டளம் கெடவே! . | [9] |
பிறை ஆரும் சடை எம்பெருமான்! அருளாய் என்று, முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை மறையார் தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன்-சொன்ன இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம், சிவலோகம் அதே . | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.034  
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
பண் - கொல்லி (திருத்தலம் திருப்புகலூர் ; அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினியீசுவரர் திருவடிகள் போற்றி )
நாட்டியத்தான் குடியினின்றும் புறப்பட்டு, வலிவலம் என்ற தலத்தையடைந்து பெருமானைத் தரிசித்த சுந்தரர், மீண்டும் திருவாரூரை அடைந்தார். அப்போது பங்குனி உத்திரத் திருவிழா அணுகியது. அத்திருவிழாவில் பரவையார் செலவு செய்தற்குரிய பொன்னைக் கொண்டுவரும் பொருட்டுத் திருப்புகலூரை அடைந்தார். திருக்கோயிலிற் சென்று இறைவனைப் பணிந்து போற்றி அண்மையிலுள்ள திருமடத்திற்குச் செல்லத் திருவுளங் கொண்டு, கோயில் வாயிலிலேயே சிறிது நேரம் இளைப்பாறியிருந்தார். இறைவனருளால் அப்போது அவருக்கு உறக்கம் வருதாயிற்று. திருக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பெற்றிருந்த செங்கற்களைக் கொண்டுவரச் செய்து தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு மேலாடைய அதன்மேல் விரித்துத் துயில்வாராயினார். பின் துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், தலைக்கு அணையாக வைக்கப் பெற்றிருந்த செங்கற்களெல்லாம் பொன் கட்டிகளாக மாறியிருப்பதைக் கண்டு வியந்து, திருவருளைத் துதித்துத் திருக்கோயிலுள்ளே சென்று தொழுது தம்மையே புகழ்ந்து எனறு தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.
உணவும் , உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்க்கு ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=sGcq0xXT5JA
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்! இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்; அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. | [1] |
மிடுக்கு இலாதானை, வீமனே; விறல் விசயனே, வில்லுக்கு இவன்; என்று, கொடுக்கிலாதானை, பாரியே! என்று, கூறினும் கொடுப்பார் இலை; பொடிக் கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. | [2] |
காணியேல் பெரிது உடையனே! கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை, பேணியே விருந்து ஓம்புமே! என்று பேசினும் கொடுப்பார் இலை; பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண் புகலூர் பாடுமின், புலவீர்காள்! ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. | [3] |
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை, வரைகள் போல்-திரள் தோளனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை; புரை வெள் ஏறு உடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. | [4] |
வஞ்சம் நெஞ்சனை, மா சழக்கனை, பாவியை, வழக்கு இ(ல்)லியை, பஞ்சதுட்டனை, சாதுவே! என்று பாடினும் கொடுப்பார் இலை; பொன் செய் செஞ்சடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. | [5] |
நலம் இலாதானை, நல்லனே! என்று, நரைத்த மாந்தரை, இளையனே! குலம் இலாதானை, குலவனே! என்று, கூறினும் கொடுப்பார் இலை; புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அலமரது அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. | [6] |
நோயனை, தடந்தோளனே! என்று, நொய்ய மாந்தரை, விழுமிய தாய் அன்றோ, புலவோர்க்கு எலாம்! என்று, சாற்றினும் கொடுப்பார் இலை; போய் உழன்று கண் குழியாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்! ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. | [7] |
எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும், ஈக்கும் ஈகிலன் ஆகிலும், வள்ளலே! எங்கள் மைந்தனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை; புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. | [8] |
கற்றிலாதானை, கற்று நல்லனே!, காமதேவனை ஒக்குமே , முற்றிலாதானை, முற்றனே!, என்று மொழியினும் கொடுப்பார் இலை; பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. | [9] |
தையலாருக்கு ஒர் காமனே! என்றும், சால நல அழகு உடை ஐயனே! கை உலாவிய வேலனே! என்று, கழறினும் கொடுப்பார் இலை; பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்! ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. | [10] |
செறுவினில் செழுங் கமலம் ஓங்கு தென்புகலூர் மேவிய செல்வனை நறவம் பூம்பொழில் நாவலூரன்-வனப்பகை அப்பன், சடையன்தன் சிறுவன், வன்தொண்டன், ஊரன்-பாடிய பாடல் பத்து இவை வல்லவர் அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.039  
தில்லை வாழ் அந்தணர் தம்
பண் - கொல்லிக்கௌவாணம் (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் தியாகேசன் திருக்கோயிலை அடைந்து வணங்கப் புறப்பட்டு சென்று அடைந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ? என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார். தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து பெருமான், அவரைப் பார்த்து முறைப்படி அடியார்களைப் பணிந்து அவர்களைப் பாடுக என்றருளிச் செய்தார். நம்பியாரூரர், அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார். நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
சிவனடியார்கள் ஆசி பெற Audio: https://www.youtube.com/watch?v=F-qNMxHIme8
Audio: https://www.youtube.com/watch?v=j3zT6yhDffM
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்; இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்; வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்; அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . | [1] |
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்; கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்; கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்; மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன், எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும் அடியேன்; அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . | [2] |
மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்; முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்; செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்; திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்; மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க, வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த, அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . | [3] |
திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்; பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்; பெரு மிழலைக் குறும்பற்கும், பேயார்க்கும், அடியேன்; ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்; ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு அடியேன்; அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . | [4] |
வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்; ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்; நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்; நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும், அடியேன்; அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . | [5] |
வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்; சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்; செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்; கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்; கடல் காழி கணநாதன் அடியார்க்கும் அடியேன்; ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . | [6] |
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்; பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்; மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்; விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்; கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன், கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,- அடியார்க்கும் அடியேன்; ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . | [7] |
கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்; நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்; துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித் தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்; அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில்அம்மானுக்கு ஆளே . | [8] |
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்- காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்; மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை மன்னவன் ஆம்செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்; புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த் துணைக்கும் அடியேன்; அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . | [9] |
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்; பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்; சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்; திரு ஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்; முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்; முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்; அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே . | [10] |
மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல், வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்; தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்; திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்; என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன், இசைஞானி, காதலன்-திரு நாவலூர்க் கோன், அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே . | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.046  
பத்து ஊர் புக்கு, இரந்து,
பண் - கொல்லிக்கௌவாணம் (திருத்தலம் திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ; அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி )
சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார் (கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே , காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் ; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும்) . இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறு மணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரை களும் பரிசாக வழங்கியருளினார். அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையினின்றும் புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார்.
நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள்,விருந்து உணவு கிடைக்க; அனைத்து சுக போகங்களும் கிடைக்க Audio: https://www.youtube.com/watch?v=P-LoRs-kJuE
பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, | பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்; செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; | செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-|அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! . | [1] |
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனைத் தீற்றி, | விருத்தி நான் உமை வேண்ட, துருத்தி புக்கு அங்கு இருந்தீர்; பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டிப் | பகட்ட நான் ஒட்டுவனோ? பல காலும் உழன்றேன்; சேம்பினோடு செங்கழு நீர் தண் கிடங்கில்-திகழும் |திரு ஆரூர் புக்கு இருந்த தீவண்ணர் நீரே; காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! . | [2] |
பூண்பது ஓர் இள ஆமை; பொருவிடை ஒன்று ஏறி,| பொல்லாத வேடம் கொண்டு, எல்லாரும் காணப் பாண் பேசி, படுதலையில் பலி கொள்கை தவிரீர்;| பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர்; வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால்,| வெற்பு அரையன் மடப்பாவை பொறுக்குமோ? சொல்லீர் காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடுவீதிக் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! . | [3] |
விட்டது ஓர் சடை தாழ, வீணை விடங்கு ஆக,| வீதி விடை ஏறுவீர்; வீண் அடிமை உகந்தீர்; துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடிச்| சுந்தரராய்த் தூ மதியம் சூடுவது சுவண்டே? வட்டவார் குழல் மடவார் தம்மை மயல் செய்தல் | மா தவமோ? மாதிமையோ? வாட்டம் எலாம் தீரக் கட்டி எமக்கு ஈவது தான் எப்போது? சொல்லீர்| கடல |