சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
Vinayagar Thiruppugazh Songs

திருப்புகழ் # 1   - கைத்தல நிறைகனி  (விநாயகர்)  
திருப்புகழ் # 2   - பக்கரை விசித்ரமணி  (விநாயகர்)  
திருப்புகழ் # 3   - உம்பர் தரு  (விநாயகர்)  
திருப்புகழ் # 4   - நினது திருவடி  (விநாயகர்)  
திருப்புகழ் # 5   - விடமடைசு வேலை  (விநாயகர்)  
திருப்புகழ் # 10   - கறுக்கும் அஞ்சன  (திருப்பரங்குன்றம்)  
திருப்புகழ் # 146   - குருதி மலசலம்  (பழநி)  
திருப்புகழ் # 151   - கொந்துத் தரு  (பழநி)  
திருப்புகழ் # 371   - மகர மெறிகடல்  (திருவருணை)  
திருப்புகழ் # 409   - கரிமுகக் கடகளிறு  (திருவருணை)  
திருப்புகழ் # 523   - ஒருபதும் இருபதும்  (ஸ்ரீ சைலம் திருமலை)  
திருப்புகழ் # 584   - சரவண ஜாதா  (விநாயகமலை)  
திருப்புகழ் # 625   - கடினதட கும்ப  (குன்றக்குடி)  
திருப்புகழ் # 791   - குவளை பொருதிரு  (பாகை)  
திருப்புகழ் # 821   - கரமு முளரியின்  (திருவாரூர்)  
திருப்புகழ் # 906   - கமலத்தே குலாவும்  (வயலூர்)  
திருப்புகழ் # 913   - நெய்த்த சுரி  (வயலூர்)  
திருப்புகழ் # 934   - பரிவுறு நாரற்று  (சேலம்)  
திருப்புகழ் # 1158   - சுற்றத்தவர்களும்  (பொதுப்பாடல்கள்)  

கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி

வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி

அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி

# 1 கைத்தல நிறைகனி   (விநாயகர்)  
தத்தன தனதன தத்தன தனதன
     தத்தன தனதன ...... தனதான

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.
Back to Top

# 2 பக்கரை விசித்ரமணி   (விநாயகர்)  
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
     பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
     செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
     எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
     ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
     விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
     வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
Back to Top

# 3 உம்பர் தரு   (விநாயகர்)  
தந்ததனத் தானதனத் ...... தனதான
     தந்ததனத் தானதனத் ...... தனதான
கணபதியே நீ வந்திடுவாய் குண நிதியே அருள் தந்திடுவாய்
கணபதியே நீ வந்திடுவாய் குண நிதியே அருள் தந்திடுவாய்

உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.
Back to Top

# 4 நினது திருவடி   (விநாயகர்)  
தனன தனதன தத்தன தத்தன
     தனன தனதன தத்தன தத்தன
          தனன தனதன தத்தன தத்தன ...... தனதான

நினது திருவடி சத்திம யிற்கொடி
     நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
          நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
     நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
          நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
     மகர சலநிதி வைத்தது திக்கர
          வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
          வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
     சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
          திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
     நிரைய அரவநி றைத்தக ளத்திடை
          திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
     துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
          டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
     இரண பயிரவி சுற்றுந டித்திட
          எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.
Back to Top

# 5 விடமடைசு வேலை   (விநாயகர்)  
தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான

விடமடைசு வேலை அமரர்படை சூலம்
     விசையன்விடு பாண ...... மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
     வினையின்விளை வேதும் ...... அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
     கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
     கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
     இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
     கணபதியெ னாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
     அசலுமறி யாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
     அறிவருளும் ஆனை ...... முகவோனே.
Back to Top

# 10 கறுக்கும் அஞ்சன   (திருப்பரங்குன்றம்)  
தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
     நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
          கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ...... நகையாலே
களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
     மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
          கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி
நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
     அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
          நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ...... மிடறூடே
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
     இசைத்து நன்கொடு மனமது மறுகிட
          நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே
நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
     உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
          நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும்
நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
     சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
          நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா
திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு
     புழைக்கை தண்கட கயமுக மிகவுள
          சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே
சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
     பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
          திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
Back to Top

# 146 குருதி மலசலம்   (பழநி)  
தனன தனதன தனன தனதன
     தனன தனதன தனன தனதன
          தனன தனதன தனன தனதன ...... தனதான

குருதி மலசல மொழுகு நரகுட
     லரிய புழுவது நெளியு முடல்மத
          குருபி நிணசதை விளையு முளைசளி ...... யுடலூடே
குடிக ளெனபல குடிகை வலிகொடு
     குமர வலிதலை வயிறு வலியென
          கொடுமை யெனபிணி கலக மிடுமிதை ...... யடல்பேணி
மருவி மதனனுள் கரிய புளகித
     மணிய சலபல கவடி மலர்புனை
          மதன கலைகொடு குவடு மலைதனில் ...... மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிட
     மதன பிணியொடு கலைகள் சிதறிட
          மனது பதமுற வெனது தலைபத ...... மருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதிபெற
     நிசித அரவளை முடிகள் சிதறிட
          நெறிய கிரிகட லெரிய வுருவிய ...... கதிர்வேலா
நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
     நிருப குருபர குமர சரணென
          நெடிய முகிலுடல் கிழிய வருபரி ...... மயிலோனே
பருதி மதிகனல் விழிய சிவனிட
     மருவு மொருமலை யரையர் திருமகள்
          படிவ முகிலென அரியி னிளையவ ...... ளருள்பாலா
பரம கணபதி யயலின் மதகரி
     வடிவு கொடுவர விரவு குறமக
          ளபய மெனவணை பழநி மருவிய ...... பெருமாளே.
Back to Top

# 151 கொந்துத் தரு   (பழநி)  
தந்தத் தனதன தனனா தனனா
     தந்தத் தனதன தனனா தனனா
          தந்தத் தனதன தனனா தனனா ...... தனதான

கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
     விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ
          கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ ...... விழிவேலோ
கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
     வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
          கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ ...... எனுமாதர்
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
     தந்தித் திரிகட கிடதா எனவே
          சிந்திப் படிபயில் நடமா டியபா ...... விகள்பாலே
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
     வந்தித் தருள்தரு மிருசே வடியே
          சிந்தித் திடமிகு மறையா கியசீ ...... ரருள்வாயே
வெந்திப் புடன்வரு மவுணே சனையே
     துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்
          வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே ...... தவவாழ்வே
விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்
     கஞ்சத் தயனுட னமரே சனுமே
          விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே ...... லருள்கூர்வாய்
தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
     செங்கட் கருமுகில் மருகா குகனே
          சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் ...... கதிர்காமா
சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்
     இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர்
          துங்கப் பழநியில் முருகா இமையோர் ...... பெருமாளே.
Back to Top

# 371 மகர மெறிகடல்   (திருவருணை)  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

மகர மெறிகடல் விழியினு மொழியினு
     மதுப முரல்குழல் வகையினு நகையினும்
          வளமை யினுமுக நிலவினு மிலவினு ...... நிறமூசும்
மதுர இதழினு மிடையினு நடையினு
     மகளிர் முகுளித முலையினு நிலையினும்
          வனச பரிபுர மலரினு முலரினு ...... மவர்நாமம்
பகரு கினுமவர் பணிவிடை திரிகினு
     முருகி நெறிமுறை தவறினு மவரொடு
          பகடி யிடுகினு மமளியி லவர்தரு ...... மநுராகப்
பரவை படியினும் வசமழி யினுமுத
     லருணை நகர்மிசை கருணையொ டருளிய
          பரம வொருவச னமுமிரு சரணமு ...... மறவேனே
ககன சுரபதி வழிபட எழுகிரி
     கடக கிரியொடு மிதிபட வடகுல
          கனக கனகுவ டடியொடு முறிபட ...... முதுசூதங்
கதறு சுழிகட லிடைகிழி படமிகு
     கலக நிசிசரர் பொடிபட நடவிய
          கலப மதகத துரகத ந்ருபகிரி ...... மயில்வாழ்வே
தகன கரதல சிவசுத கணபதி
     சகச சரவண பரிமள சததள
          சயன வனசரர் கதிபெற முனிபெறு ...... புனமானின்
தரள முகபட நெறிபட நிமிர்வன
     தருண புளகித ம்ருகமத தனகிரி
          தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய ...... பெருமாளே.
Back to Top

# 409 கரிமுகக் கடகளிறு   (திருவருணை)  
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
     தனதனத் தனதனத் ...... தனதான

கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்
     கஜமுகத் தவுணனைக் ...... கடியானை
கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்
     கனிவயிற் றினிலடக் ...... கியவேழம்
அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்
     தமர்புரிக் கணபதிக் ...... கிளையோனே
அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்
     றியைமிகுத் தறுமுகக் ...... குமரேசா
நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்
     கையில்பிடித் தெதிர்நடத் ...... திடுமீசன்
நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்
     கரியுரித் தணிபவற் ...... கொருசேயே
துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்
     துரியமெய்த் தரளமொய்த் ...... திடவீறிச்
சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
     சுடரயிற் சரவணப் ...... பெருமாளே.
Back to Top

# 523 ஒருபதும் இருபதும்   (ஸ்ரீ சைலம் திருமலை)  
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா

ஒருபது மிருபது மறுபது முடனறு
     முணர்வுற இருபத ...... முளநாடி
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
     வெளியொடு வொளிபெற ...... விரவாதே
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
     திரிதொழி லவமது ...... புரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
     தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
     பயறொடு சிலவகை ...... பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
     எழுதிய கணபதி ...... யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
     பிணிகெட அருள்தரு ...... குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
     பிணையமர் திருமலை ...... பெருமாளே.
Back to Top

# 584 சரவண ஜாதா   (விநாயகமலை)  
தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
     தனதன தானா தனாதன ...... தனதான

சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
     சததள பாதா நமோநம ...... அபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
     சமதள வூரா நமோநம ...... ஜகதீச
பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
     பரிமள நீபா நமோநம ...... உமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
     பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய்
இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
     ரெவர்களு மீடேற ஏழ்கடல் ...... முறையோவென்
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
     ரிகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனே
மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
     வசுவெனு மாகார ஈசனு ...... மடிபேண
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
     வனசர ராதார மாகிய ...... பெருமாளே.
Back to Top

# 625 கடினதட கும்ப   (குன்றக்குடி)  
தனதனன தந்த தானன தனதனன தந்த தானன
     தனதனன தந்த தானன ...... தனதான

கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழு
     கலவிதரு கின்ற மாதரொ ...... டுறவாடிக்
கனவளக பந்தி யாகிய நிழல்தனிலி ருந்து தேனுமிழ்
     கனியிதழை மென்று தாடனை ...... செயலாலே
துடியிடைநு டங்க வாள்விழி குழைபொரநி ரம்ப மூடிய
     துகில்நெகிழ வண்டு கோகில ...... மயில்காடை
தொனியெழவி ழைந்து கூரிய கொடுநகமி சைந்து தோள்மிசை
     துயிலவச இன்ப மேவுத ...... லொழிவேனோ
இடிமுரச றைந்து பூசல்செய் அசுரர்கள்மு றிந்து தூளெழ
     எழுகடல்ப யந்து கோவென ...... அதிகோப
எமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடு
     இரணமுக சண்ட மாருத ...... மயிலோனே
வடிவுடைய அம்பி காபதி கணபதிசி றந்து வாழ்தட
     வயலிநகர் குன்ற மாநக ...... ருறைவோனே
வகைவகைபு கழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர சூரியர்
     வழிபடுதல் கண்டு வாழ்வருள் ...... பெருமாளே.
Back to Top

# 791 குவளை பொருதிரு   (பாகை)  
தனன தனதன தனன தனதன
     தான தானன ...... தனதான

குவளை பொருதிரு குழையை முடுகிய
     கோல வேல்விழி ...... மடவார்தங்
கொடிய ம்ருகமத புளக தனகிரி
     கூடி நாடொறு ...... மயலாகித்
துவள வுருகிய சரச விதமது
     சோர வாரிதி ...... யலையூடே
சுழலு மெனதுயிர் மவுன பரமசு
     கோம கோததி ...... படியாதோ
கவள கரதல கரட விகடக
     போல பூதர ...... முகமான
கடவுள் கணபதி பிறகு வருமொரு
     கார ணாகதிர் ...... வடிவேலா
பவள மரகத கநக வயிரக
     பாட கோபுர ...... அரிதேரின்
பரியு மிடறிய புரிசை தழுவிய
     பாகை மேவிய ...... பெருமாளே.
Back to Top

# 821 கரமு முளரியின்   (திருவாரூர்)  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
     கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
          கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே
கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
     கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
          களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும்
இரவு பகலற இகலற மலமற
     இயலு மயலற விழியினி ரிழிவர
          இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடே
யெழுத அரியவள் குறமக ளிருதன
     கிரியில் முழுகின இளையவ னெனுமுரை
          யினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளே
சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
     மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
          துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது
துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
     உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
          சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்
பரவி யதனது துயர்கொடு நடவிய
     பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
          படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப்
படியு லறுமுக சிவசுத கணபதி
     யிளைய குமரநி ருபபதி சரவண
          பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே.
Back to Top

# 906 கமலத்தே குலாவும்   (வயலூர்)  
தனனத் தான தான தனதன
     தனனத் தான தான தனதன
          தனனத் தான தான தனதன ...... தனதான

கமலத் தேகு லாவு மரிவையை
     நிகர்பொற் கோல மாதர் மருள்தரு
          கலகக் காம நூலை முழுதுண ...... ரிளைஞோர்கள்
கலவிக் காசை கூர வளர்பரி
     மளகற் பூர தூம கனதன
          கலகத் தாலும் வானி னசையுமி ...... னிடையாலும்
விமலச் சோதி ரூப இமகர
     வதனத் தாலு நாத முதலிய
          விரவுற் றாறு கால்கள் சுழலிருள் ...... குழலாலும்
வெயிலெப் போதும் வீசு மணிவளை
     அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர்
          விழியிற் பார்வை யாலு மினியிடர் ...... படுவேனோ
சமரிற் பூதம் யாளி பரிபிணி
     கனகத் தேர்கள் யானை யவுணர்கள்
          தகரக் கூர்கொள் வேலை விடுதிற ...... லுருவோனே
சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர்
     புகழக் கானி லாடு பரிபுர
          சரணத் தேக வீர அமைமன ...... மகிழ்வீரா
அமரர்க் கீச னான சசிபதி
     மகள்மெய்த் தோயு நாத குறமகள்
          அணையச் சூழ நீத கரமிசை ...... யுறுவேலா
அருளிற் சீர்பொ யாத கணபதி
     திருவக் கீசன் வாழும் வயலியின்
          அழகுக் கோயில் மீதில் மருவிய ...... பெருமாளே.
Back to Top

# 913 நெய்த்த சுரி   (வயலூர்)  
தத்த தனதன தனனா தனனா
     தத்த தனதன தனனா தனனா
          தத்த தனதன தனனா தனனா ...... தனதான

நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ
     பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ
          நெட்டை யிணைவிழி கணையோ பிணையோ ...... இனிதூறும்
நெக்க அமுதிதழ் கனியோ துவரோ
     சுத்த மிடறது வளையோ கமுகோ
          நிற்கு மிளமுலை குடமோ மலையோ ...... அறவேதேய்ந்
தெய்த்த இடையது கொடியோ துடியோ
     மிக்க திருவரை அரவோ ரதமோ
          இப்பொ னடியிணை மலரோ தளிரோ ...... எனமாலாய்
இச்சை விரகுடன் மடவா ருடனே
     செப்ப மருளுட னவமே திரிவேன்
          ரத்ந பரிபுர இருகா லொருகால் ...... மறவேனே
புத்த ரமணர்கள் மிகவே கெடவே
     தெற்கு நரபதி திருநீ றிடவே
          புக்க அனல்வய மிகஏ டுயவே ...... உமையாள்தன்
புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்
     கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்
          பொற்ப கவுணியர் பெருமா னுருவாய் ...... வருவோனே
சத்த முடையஷண் முகனே குகனே
     வெற்பி லெறிசுட ரயிலா மயிலா
          சத்தி கணபதி யிளையா யுளையா ...... யொளிகூருஞ்
சக்ர தரஅரி மருகா முருகா
     உக்ர இறையவர் புதல்வா முதல்வா
          தட்ப முளதட வயலூ ரியலூர் ...... பெருமாளே.
Back to Top

# 934 பரிவுறு நாரற்று   (சேலம்)  
தனதன தானத் தனதன தானத்
     தனதன தானத் ...... தனதான

பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
     சிலைபொரு காலுற் ...... றதனாலே
பனிபடு சோலைக் குயிலது கூவக்
     குழல்தனி யோசைத் ...... தரலாலே
மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
     தனிமிக வாடித் ...... தளராதே
மனமுற வாழத் திருமணி மார்பத்
     தருள்முரு காவுற் ...... றணைவாயே
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
     தொடுகும ராமுத் ...... தமிழோனே
கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
     திருவளர் சேலத் ...... தமர்வோனே
பொருகிரி சூரக் கிளையது மாளத்
     தனிமயி லேறித் ...... திரிவோனே
புகர்முக வேழக் கணபதி யாருக்
     கிளையவி நோதப் ...... பெருமாளே.
Back to Top

# 1158 சுற்றத்தவர்களும்   (பொதுப்பாடல்கள்)  
தத்தத் தனதன தத்தன தனதன
     தத்தத் தனதன தத்தன தனதன
          தத்தத் தனதன தத்தன தனதன ...... தனதானத்

சுற்றத் தவர்களு மக்களு மிதமுள
     சொற்குற் றரிவையும் விட்டது சலமிது
          சுத்தச் சலமினி சற்றிது கிடைபடு ...... மெனமாழ்கித்
துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல்
     சுட்டக் குடமொடு சுட்டெரி கனலொடு
          தொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை ...... பிணமூடச்
சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல்
     சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது
          தப்பிற் றவறுறு மத்திப நடையென ...... உரையாடிச்
சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசை
     தப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழி
          தத்தச் சடம்விடு மப்பொழு திருசர ...... ணருள்வாயே
சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல்
     சித்ரப் ப்ரபைபுனை பொற்பின ளிளமயில்
          செற்கட் சிவகதி யுத்தமி களிதர ...... முதுபேய்கள்
திக்குச் செககெண தித்தரி திகுதிகு
     செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத
          டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென ...... நடமாடுங்
கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள்
     குட்டிக் கரிமுக னிக்கவ லமுதுசெய்
          கொச்சைக் கணபதி முக்கண னிளையவ ...... களமீதே
குப்புற் றுடனெழு சச்சரி முழவியல்
     கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர்
          கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்த ...... பெருமாளே.
Back to Top


This page was last modified on Sun, 24 Mar 2024 22:08:30 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

vinayagar thiruppugazh