சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய வேல் மாறல்

... வேலும் மயிலும் துணை ...

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.


1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ( திரு )

2. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன்எனது உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
( திரு )

3. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ( திரு )

4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ( திரு )

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்திடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ( திரு )

6. சினத்த அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு
கடித்துவிழி விழித்தலற மோதும் ( திரு )

7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ( திரு )

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ( திரு )

9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ( திரு )

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டின்இடை
பறக்கஅற விசைத்ததிர ஓடும் ( திரு )

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ( திரு )

12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்திரவு பகற்றுணைய(து) ஆகும் ( திரு )

13. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ( திரு )

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய
அடைத்துதிரம் நிறைத்துவிளை யாடும் ( திரு )

15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ( திரு )

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ( திரு )

17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ( திரு )

18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ( திரு )

19. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ( திரு )

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய
அடைத்துதிரம் நிறைத்துவிளை யாடும் ( திரு )

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ( திரு )

22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்திரவு பகற்றுணைய(து) ஆகும் ( திரு )

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ( திரு )

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டின்இடை
பறக்கஅற விசைத்ததிர ஓடும் ( திரு )

25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ( திரு )

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ( திரு )

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்திடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ( திரு )

28. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு
கடித்துவிழி விழித்தலற மோதும் ( திரு )

29. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ( திரு )

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ( திரு )

31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ( திரு )

32. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ( திரு )

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ( திரு )

34. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ( திரு )

35. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ( திரு )

36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ( திரு )

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ( திரு )

38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ( திரு )

39. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு
கடித்துவிழி விழித்தலற மோதும் ( திரு )

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்திடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ( திரு )

41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்திரவு பகற்றுணைய(து) ஆகும் ( திரு )

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ( திரு )

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டின்இடை
பறக்கஅற விசைத்ததிர ஓடும் ( திரு )

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ( திரு )

45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ( திரு )

46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ( திரு )

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய
அடைத்துதிரம் நிறைத்துவிளை யாடும் ( திரு )

48. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ( திரு )

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய
அடைத்துதிரம் நிறைத்துவிளை யாடும் ( திரு )

50. பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ( திரு )

51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ( திரு )

52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ( திரு )

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டின்இடை
பறக்கஅற விசைத்ததிர ஓடும் ( திரு )

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ( திரு )

55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்திரவு பகற்றுணைய(து) ஆகும் ( திரு )

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ( திரு )

57. சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு
கடித்துவிழி விழித்தலற மோதும் ( திரு )

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்திடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ( திரு )

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ( திரு )

60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ( திரு )

61. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ( திரு )

62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ( திரு )

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ( திரு )

64. சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ( திரு )

65. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ( திரு )


தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 05:30:51 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

vel maaral