![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
9.010
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் பண் - (திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் ) Audio: https://www.youtube.com/watch?v=ILbJm35Oup8 Audio: https://www.youtube.com/watch?v=TtbOf6ybRpU Audio: https://www.youtube.com/watch?v=lfcHFrSu3QA |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.010  
கருவூர்த் தேவர் - திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
பண் - (திருத்தலம் திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச் சடைவிரித்(து) அலையெறி கங்கைத் தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித் திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக் கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வளரொளி மணியம் பலத்துள்நின்றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே. | [1] |
துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல கண்டமும் குழையும் பவளவாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக் கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வண்டறை மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே. | [2] |
திருநுதல் விழியும் பவளவாய் இதழும் திலகமும் உடையவன் சடைமேல் புரிதரு மலரின் தாதுநின்(று) ஊதப் போய்வருந் தும்பிகாள் ! இங்கே கிரிதவழ் முகலின் கீழ்த்தவழ் மாடம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வருதிறல் மணியம் பலவனைக் கண்(டு)என் மனத்தையும் கொண்டுபோ துமினே. | [3] |
தெள்ளுநீ றவன்நீ(று) என்னுடல் விரும்பும் செவியவன் அறிவுநூல் கேட்கும் மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள் விமானமேநோக்கி வெவ் வுயிர்க்கும் கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வள்ளலே மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தனே !என்னும்என் மனனே. | [4] |
தோழி !யாம்செய்த தொழில்என் எம்பெருமான் துணைமலர்ச் சேவடி காண்பான் ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து நெக்குநைந்(து) உளங்கரைந்(து) உருகும் கேழலும் புள்ளும் ஆகிநின்றி ருவர் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வாழிய மணியம் பலவனைக் காண்பான் மயங்கவும் மாலொழி யோமே. | [5] |
என்செய்கோம் தோழி ! தோழிநீ துணையாய் இரவுபோம் பகல்வரு மாகில் அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமரு மாறுகண்(டு) அயர்வன் கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவில் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மஞ்சணி மணியம் பலவஓ என்று மயங்குவன் மாலையம் பொழுதே. | [6] |
தழைதவழ் மொழுப்பும் தவளநீற்(று) ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் கிழைதவழ் கனகம் பொழியநீர்ப் பழனம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மழைதவழ் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தர்தம் வாழ்வுபோன் றனவே. | [7] |
தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு இன்னகை மழலை கங்கைகோங்(கு) இதழி இளம்பிறை குழைவளர் இளமான் கின்னரம் முழவம் மழலையாழ் வீணை கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மன்னவன் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனத்துள்வைத் தனனே. | [8] |
யாதுநீ நினைவ(து) எவரையாம் உடையது எவர்களும் யாவையும் தானாய்ப் பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென் பனிமலர்க் கண்ணுள்நின் றகலான் கேதகை நிழலைக் குருகென மருவிக் கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர் மாதவன் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனம்புகுந் தானே. | [9] |
அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர் அழகிய சடையும்வெண் ணீறும் சிந்தையால் நினையிற் சிந்தையும் காணேன்; செய்வதென் தெளிபுனல் அலங்கல் கெந்தியா வுகளும் கொண்டைபுண் டரீகம் கிழிக்கும்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர் வந்தநாள் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தனே அறியும்என் மனமே. | [10] |
கித்திநின் றாடும் அரிவையர் தெருவில் கெழுவுகம் பலைசெய்க்கீழ்க் கோட்டூர் மத்தனை மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை பெரியவர்க்(கு) அகலிரு விசும்பில் முத்தியாம் என்றே உலகர்ஏத்து வரேல் முகமலர்ந்(து) எதிர்கொளும் திருவே. | [11] |