9.021 வேணாட்டடிகள் - கோயில் (கோயில் (சிதம்பரம்) ) |
Back to Top
வேணாட்டடிகள் திருவிசைப்பா
9.021  
வேணாட்டடிகள் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=5jdnKon4PlU
Audio: https://www.youtube.com/watch?v=9JFKojIrJTI
Audio: https://www.youtube.com/watch?v=iAsUU0dNmS4
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார் கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார் எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! | [1] |
தம்பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும் எம்போல்வார்க்(கு) இல்லாமை என்னளவே அறிந்தொழிந்தேன் வம்பானார் பணிஉகத்தி வழியடியேன் தொழிலிறையும் நம்பாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே ! | [2] |
பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என் றதுபோலத் திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும் இசையானால் என்திறத்தும் எனையுடையாள் உரையாடாள் நசையானேன் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே ! | [3] |
ஆயாத சமயங்கள் அவரவர்கள் முன்பென்னை நோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலே பேயாஇத் தொழும்பனைத்தம் பிரான்இகழும் என்பித்தாய் நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. | [4] |
நின்றுநினைந்(து) இருந்துகிடந்து எழுந்துதொழும் தொழும்பனேன் ஒன்றிஒரு கால்நினையா(து) இருந்தாலும் இருக்கவொட்டாய் கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி வரவுநில்லாய் நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. | [5] |
படுமதமும் மிடவயிறும் உடையகளி றுடையபிரான் அடியறிய உணர்த்துவதும் அகத்தியனுக்(கு) ஓத்தன்றே இடுவதுபுல் ஓர்எருதுக்(கு) ஒன்றினுக்கு வையிடுதல் நடுஇதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. | [6] |
மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும் கண்ணாவாய் கண்ணாகா(து) ஒழிதலும்நான் மிகக்கலங்கி அண்ணாவோ என்றண்ணாந்(து) அலமந்து விளித்தாலும் நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. | [7] |
வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி வீடாஞ்செய் குற்றேவல் எற்றேமற் றிதுபொய்யில் கூடாமே கைவந்து குறுகுமா(று) யான்உன்னை நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. | [8] |
வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய மாண்பிதனைத் தோளாரக் கையாரத் துணையாரத் தொழுதாலும் ஆளோநீ உடையதுவும் அடியேன்உன் தாள்சேரும் நாளேதோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. | [9] |
பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித் தொண்டனெடுத்(து) ஓவாதே அழைக்கின்றான் என்றருளின் நன்றுமிகத் தேவேதென் திருத்தில்லைக் கூத்தாடீ நாயடியேன் சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்குத் தடுப்பரிதே. | [10] |