கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய் தங்கி யலறி யுலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடந்திரு ஆலங் காடே.
|
1
|
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை விள்ள எழுதி வெடுவெ டென்ன நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத் துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச் சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங்காடே.
|
2
|
வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே கூகையொ டாண்டலை பாட ஆந்தை கோடதன் மேற்குதித் தோட வீசி ஈகை படர்தொடர் கள்ளி நீழல் ஈமம் இடுசுடு காட்ட கத்தே ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடம் திரு ஆலங் காடே.
|
3
|
குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக் குறுநரி தின்ன அதனை முன்னே கண்டிலோம் என்று கனன்று பேய்கள் கையடித் தொ டிடு காட ரங்கா மண்டலம் நின்றங் குளாளம் இட்டு, வாதித்து, வீசி எடுத்த பாதம் அண்டம் உறநிமிர்ந் தாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
|
4
|
விழுது நிணத்தை விழுங்கி யிட்டு, வெண்தலை மாலை விரவப் பூட்டிக் கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப் புழதி துடைத்து, முலைகொ டுத்துப் போயின தாயை வரவு காணா தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும் அப்ப னிடம்திரு ஆலங் கா டே
|
5
|
Go to top |
பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய் பருந்தொடு, கூகை, பகண்டை , ஆந்தை குட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள் குறுநரி சென்றணங் காடு காட்டில் பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே அட்டமே பாயநின் றாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
|
6
|
கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித் தழலுள் எரியும் பிணத்தை வாங்கித் தான் தடி தின்றணங் காடு காட்டில் கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக் காலுயர் வட்டணை யிட்டு நட்டம் அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
|
7
|
நாடும், நகரும் திரிந்து சென்று, நன்னெறி நாடி நயந்தவரை மூடி முதுபிணத் திட்ட மாடே, முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக் காடும், கடலும், மலையும், மண்ணும், விண்ணும் சுழல அனல்கையேந்தி ஆடும் அரவப் புயங்கன் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
|
8
|
துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச் சச்சரி, கொக்கரை, தக்கை யோடு, தகுணிதம் துந்துபி தாளம் வீணை மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் தமருகம், குடமுழா, மொந்தை வாசித் தத்தனை விரவினோ டாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
|
9
|
புந்தி கலங்கி, மதிம யங்கி இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச் சந்தியில் வைத்துக் கடமை செய்து தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா முந்தி அமரர் முழவி னோசை திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க, அந்தியின் மாநடம் ஆடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே.
|
10
|
Go to top |
ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி, ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து, பப்பினை யிட்டுப் பகண்டை ஆட, பாடிருந் தந்நரி யாழ மைப்ப, அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம் அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே.
|
11
|
எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும் சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கௌவப் பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய் கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே.
|
12
|
நிணந்தான் உருகி நிலந்தான் நனைப்ப நெடும்பற் குழிகட்பேய் துணங்கை யெறிந்து சூழும் நோக்கிச்சுடலை நவிழ்த் தெங்கும் கணங்கள் கூடிப் பிணங்கள் மாந்திக் களித்த மனத்தவாய் அணங்கு காட்டில் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே.
|
13
|
புட்கள் பொதுத்த புலால்வெண் தலையைப் புறமே நரிகவ்வ அட்கென் றழைப்ப ஆந்தை வீச அருகே சிறுகூகை உட்க விழிக்க ஊமன் வெருட்ட ஓரி கதித்தெங்கும் பிட்க நட்டம் பேணும் இறைவன் பெயரும் பெருங்காடே.
|
14
|
செத்த பிணத்தைத் தெளியா தொருபேய் சென்று விரல்சுட்டிக் கத்தி உறுமிக் கனல்விட் டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப் பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப் பித்த வேடங் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே.
|
15
|
Go to top |
முள்ளி தீந்து முளரி கருகி மூளை சொரிந்துக்குக் கள்ளி வற்றி வெள்ளில் பிறங்கு கடுவெங் காட்டுள்ளே புள்ளி உழைமான் தோலொன் றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப் பள்ளி யிடமும் அதுவே ஆகப் பரமன் ஆடுமே.
|
16
|
வாளைக் கிளர வளைவாள் எயிற்று வண்ணச் சிறுகூகை மூளைத் தலையும் பிணமும் விழுங்கி முரலும் முதுகாட்டில் தாளிப் பனையின் இலைபோல் மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய் கூளிக் கணங்கள் குழலோ டியம்பக் குழகன் ஆடுமே.
|
17
|
நொந்திக் கிடந்த சுடலை தடவி நுகரும் புழுக்கின்றிச் சிந்தித் திருந்தங் குறங்குஞ் சிறுபேய் சிரமப் படுகாட்டின் முந்தி அமரர் முழவின் ஒசை முறைமை வழுவாமே அந்தி நிருத்தம் அனல்கை யேந்தி அழகன் ஆடுமே.
|
18
|
வேய்கள் ஓங்கி வெண்முத் துதிர வெடிகொள் சுடலையுள் ஒயும் உருவில் உலறு கூந்தல் அலறு பகுவாய பேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டில் மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே.
|
19
|
கடுவன் உகளுங் கழைசூழ் பொதும்பிற் கழுகும் பேயுமாய் இடுவெண் டலையும் ஈமப் புகையும் எழுந்த பெருங்காட்டில் கொடுவெண் மழுவும் பிறையுந் ததும்பக் கொள்ளென் றிசைபாடப் படுவெண் துடியும் பறையுங் கறங்கப் பரமன் ஆடுமே.
|
20
|
Go to top |
குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய் இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய் கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென் றிசைபாட மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே.
|
21
|
சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம் ஆடும் அரவம் அரையில் ஆர்த்த அடிகள் அருளாலே காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன் பாடல் பத்தும் பாடி யாடப் பாவம் நாசமே.
|
22
|