பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப் பாலே சேர்வு ஆய் ஏனோர், கான்பயில் கணமுனிவர்களும், சிந்தித்தே வந்திப்ப, சிலம்பின் மங்கை தன்னொடும் சேர்வார், நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசு அது எலாம் சந்தித்தே, இந்தப் பார்சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அத் தகவு செய்தவனது இடம் கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக் காடு ஆர், பூவார், சீர் மேவும் கழுமல வள நகரே.
|
1
|
பிச்சைக்கே இச்சித்து, பிசைந்து அணிந்த வெண்பொடிப் பீடு ஆர் நீடு ஆர் மாடுஆரும்பிறைநுதல் அரிவையொடும், உச்சத்தான் நச்சிப் போல் தொடர்ந்து அடர்ந்த வெங் கண் ஏறு ஊராஊரா, நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய் இசை வச்சத்தால் நச்சுச் சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா, நேரே மால் ஆகும் வசி வல அவனது இடம் கச்சத்தான் மெச்சிப் பூக் கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலைக் கழுமல வள நகரே.
|
2
|
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து-இலங்கு மத்தையின் சேரேசேரே, நீர் ஆகச் செறிதரு சுர நதியோடு, அங்கைச் சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண்தலைப் பாலே மேலே மால் ஏயப் படர்வு உறும் அவன் இறகும், பொங்கப் பேர் நஞ்சைச் சேர் புயங்கமங்கள், கொன்றையின் போது ஆர் தாரேதாம், மேவிப் புரிதரு சடையன் இடம் கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே.
|
3
|
அண்டத்தால் எண்திக்கும் அமைந்து அடங்கும் மண்தலத்து ஆறே, வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம் மண்டிப் போய் வென்றிப் போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய, முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் கண்டிட்டே செஞ்சொல் சேர் கவின் சிறந்த மந்திரக் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.
|
4
|
திக்கில்-தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டலச் சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே புக்கிட்டே வெட்டிட்டே, புகைந்து எழுந்த சண்டத்தீப் போலே, பூ,நீர், தீ, கால், மீ, , புணர்தரும் உயிர்கள் திறம் சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத் தோடு ஏயாமே, மா லோகத் துயர் களைபவனது இடம் கைக்கப் போய் உக்கத்தே கனன்று மிண்டு தண்டலைக் காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே.
|
5
|
Go to top |
செற்றிட்டே வெற்றிச் சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா, நீள் கோதைத் தெரியிழை பிடி அது ஆய், ஒற்றைச் சேர் முற்றல்கொம்பு உடைத் தடக்கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர்முக இறையைப் பெற்றிட்டே, மற்று இப் பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமைப் பிரிவு செய்தவனது இடம் கற்றிட்டே எட்டு-எட்டுக்கலைத்துறைக் கரைச் செலக் காணாதாரே சேரா மெய்க் கழுமல வள நகரே.
|
6
|
பத்திப் பேர் வித்திட்டே, பரந்த ஐம்புலன்கள்வாய்ப் பாலே போகாமே காவா, பகை அறும் வகை நினையா, முத்திக்கு ஏவி, கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா, ஊடா, நால் அந்தக்கரணமும் ஒரு நெறி ஆய், சித்திக்கே உய்த்திட்டு, திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையும் இடம் கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல்பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.
|
7
|
செம்பைச் சேர் இஞ்சிச் சூழ் செறிந்து இலங்கு பைம்பொழில் சேரே வாரா வாரீசத்திரை எறி நகர் இறைவன், இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து, அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர், நேர் ஓர்பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு அம் பொன் பூண் வென்றித் தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம் கம்பத்து ஆர் தும்பித் திண் கவுள் சொரிந்த மும்மதக் கார் ஆர், சேறு ஆர், மா வீதிக் கழுமல வள நகரே.
|
8
|
பன்றிக்கோலம் கொண்டு இப் படித்தடம் பயின்று இடப் பான் ஆம் ஆறு ஆனாமே, அப் பறவையின் உருவு கொள ஒன்றிட்டே அம்புச் சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான், அஃது உணராது, உருவினது அடிமுடியும் சென்றிட்டே வந்திப்ப, திருக்களம் கொள் பைங்கணின் தேசால், வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம் கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும், காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.
|
9
|
தட்டு இட்டே முட்டிக்கைத் தடுக்கு இடுக்கி, நின்று உணா, தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும்; இட்டத்தால், அத்தம்தான் இது அன்று; அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏதுச்சொல், இலை மலி மருதம்பூப் புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க் கொள் புத்தரும்; போல்வார்தாம் ஓராமே போய்ப் புணர்வு செய்தவனது இடம் கட்டிக் கால் வெட்டித் தீம்கரும்பு தந்த பைம்புனல் காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.
|
10
|
Go to top |
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்து வண்டு, சண்பகக் கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையைத் தஞ்சைச் சார் சண்பைக் கோன் சமைத்த நல் கலைத் துறை, தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள், எஞ்சத் தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு, ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா, வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொளப் பயிற்றுவோர் மார்பே சேர்வாள், வானோர் சீர் மதிநுதல் மடவரலே.
|
11
|
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|