கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார் கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக் கண்காணி கண்டார் களவொழிந் தாரே.
|
1
|
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே.
|
2
|
பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும் மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும் பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.
|
3
|
வடக்கு வடக்கென்பர் வைத்ததொன் றில்லை நடக்க உறுவரே ஞானம் இலாதார் வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.
|
4
|
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக் காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவார்கள் காயத்துள் நின்ற கருத்தறி யாரே.
|
5
|
Go to top |
கண்காணி யாகவே கையகத்தே எழும் கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும் கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும் கண்காணி யாகிய காதலன் றானே.
|
6
|
கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை மன்னிய மாதவம் செய்தோர் ஒருசிறை தன்னியல் புன்னி யுணர்ந்தோர் ஒருசிறை என்னிது ஈசன் இயல்பறி யாரே.
|
7
|
காணா தவர்கண்ணில் படலமே கண்ணொளி காணா தவர்கட்குக் காணாத தவ்வொளி காணா தவர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக் காணாது கண்டார் களவொழிந் தாரே.
|
8
|
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி உய்த்தொன்று மாபோல் விழியுந்தன்கண்ணொளி அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச் சித்தம் தெளிந்தேன் செயலொழிந் தேனே.
|
9
|
பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும் பராமய மென்றெண்ணிப் பள்ளி உணரார் சுராமய முன்னிய சூழ்வினை யாளர் நிராமய மாக நினைப் பொழிந் தாரே.
|
10
|
Go to top |
ஒன்றிரண் டாகிநின் றொன்றிஒன் றாயினோர்க்(கு) ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா ஒன்றிரண் டென்றே உரைதரு வோர்க்கெலாம் ஒன்றிரண் டாய்நிற்கும் ஒன்றோடொன் றானதே.
|
11
|
உயிரது நின்றால் உணர்வெங்கு மாகும் அயரறி வில்லையால் ஆருடல் வீழும் உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும் பயிரும் கிடந்துள்ளப் பாங்கறி யாரே.
|
12
|
உயிரது வேறாய் உணர்வெங்கு மாகும் உயிரை அறியின் உணர்வறி வாகும் உயிரன் றுடலை விழுங்கும் உணர்வை அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.
|
13
|
உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன் நில ஆணி ஐந்தனுள் நேருற நிற்கும் சிலஆணி யாகிய தேவர் பிரானைத் தலைவாணி செய்வது தன்னை யறிவதே.
|
14
|
தானந்த மாமென நின்ற தனிச் சுடர் ஊனந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர் தேனந்த மாய்நின்ற சிற்றின்பம் நீஒழி கோனந்த மில்லாக் குணத்தரு ளாமே.
|
15
|
Go to top |
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும் கன்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை நன்முதல் ஏறிய நாமம் அறநின்றால் தன்முத லாகிய தத்துவம் ஆமே. 37,
|
16
|