அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும் உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம தாமே.
|
1
|
ஆதாரம் ஆதேயம் ஆகின்ற தெய்வமும் மேதாதி நாதமும் மீதே விரிந்தன ஆதார விந்து அதிபீடம் நாதமே போதா இலிங்கப் புணர்ச்சிய தாமே.
|
2
|
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் சத்தி சிவமாகும் தாபரந் தானே.
|
3
|
தான்நேர் எழுகின்ற சோதியைக் காணலாம் வான்நேர் எழுகின்ற ஐம்ப தமர்ந்திடம் பூநேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன் தான்நேர் எழுந்த அகாரம தாமே.
|
4
|
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் விந்துவதே பீடம் நாதம் இலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்த கருஐந்தும் செய்யும்அவ் வைந்தே.
|
5
|
Go to top |
சத்திநற் பீடம் தகும்நல்ல ஆன்மா சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும் சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம் சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே.
|
6
|
மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்க்கை மனம்புகுந் தின்பம் பொகின்ற போது நலம்புகுந் தென்னொடு நாதனை நாடும் இலம்புகுந் தாதியும் எற்கொண்ட வாறே.
|
7
|
பராபரன் எந்தை பனிமதி சூடி தராபரன் தன்அடி யார்மனக் கோயில் சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும் மராமரன் மன்னி மனத்துறைந் தானே.
|
8
|
பிரான் அல்லன் ஆம்எனில் பேதை உலகம் குரால் என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன் அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும் பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.
|
9
|
அன்றுநின் றான்கிடந் தான்அவன் என்றென்று சென்றுநின் றெண்டிசை ஏத்துவர் தேவர்கள் என்றுநின் றேத்துவன் எம்பெரு மான்றன்னை ஒன்றிஎன் உள்ளத்தி னுள்இருந் தானே. 6,
|
10
|
Go to top |