ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழம் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.
|
1
|
அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி உகாரம் முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி நகார முதலாகும் நந்திதன் நாமமே.
|
2
|
அகாராதி யீரெட் டலர்ந்த பரையாம் உகராதி சத்தி உள்ளொளி ஈசன் சிகாராதி தான்சிவம் ஏதமே கோணம் நகாராதி தான்மூல மந்திரம் நண்ணுமே.
|
3
|
வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி ஆய இலிங்கம் அவற்றின்மே லேஅவ்வாய்த் தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல் ஆயதீ ரும்ஐந்தோ டாம்எழுத் தஞ்சுமே.
|
4
|
கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக் கரணங்கள் விட்டுயிர் தான்எழும் போதும் மரணங்கை வந்துயிர் மாற்றிடும் போதும் அரணங்கை கூட்டுவ தஞ்செழுத்தாமே.
|
5
|
Go to top |
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில் ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர் சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும் வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.
|
6
|
குருவழி யாய குணங்களில் நின்று கருவழி யாய கணக்கை அறுக்க வருவழி மாள மறுக்கவல் லார்கட் கருள்வழி காட்டுவ தஞ்செழுத் தாமே.
|
7
|
வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதும் குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும் குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.
|
8
|
நெஞ்சு நினைந்து தம் வாயாற் பிரான்என்று துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று மஞ்சு தவழும் வடவரை மீதுறை அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.
|
9
|
பிரான் வைத்தஐந்தின் பெருமை உணராது இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர் பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும் அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே. 6,
|
10
|
Go to top |