சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஅன்பில் ஆலந்துறை - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்திவாகீசர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=H3fxoFq9P1A   Add audio link Add Audio

கணைநீ டெரிமா லரவம் வரைவில்லா
இணையா வெயின்மூன் றுமெரித் தவிறைவர்
பிணைமா மயிலுங் குயில்சேர் மடவன்னம்
அணையும் பொழிலன் பிலாலந் துறையாரே.

1

சடையார் சதுரன் முதிரா மதிசூடி
விடையார் கொடியொன் றுடையெந் தைவிமலன்
கிடையா ரொலியோத் தரவத் திசைகிள்ளை
அடையார் பொழிலன் பிலாலந் துறையாரே.

2

ஊரும் மரவஞ் சடைமே லுறவைத்துப்
பாரும் பலிகொண் டொலிபா டும்பரமர்
நீருண் கயலும் வயல்வா ளைவராலோ
டாரும் புனலன் பிலாலந் துறையாரே.

3

பிறையும் மரவும் முறவைத் தமுடிமேல்
நறையுண் டெழுவன் னியுமன் னுசடையார்
மறையும் பலவே தியரோ தவொலிசென்
றறையும் புனலன் பிலாலந் துறையாரே.

4

நீடும் புனற்கங் கையுந்தங் கமுடிமேல்
கூடும் மலையா ளொருபா கமமர்ந்தார்
மாடும் முழவ மதிர மடமாதர்
ஆடும் பதியன் பிலாலந் துறையாரே.

5
Go to top

நீறார் திருமே னியரூ னமிலார்பால்
ஊறார் சுவையா கியவும் பர்பெருமான்
வேறா ரகிலும் மிகுசந் தனமுந்தி
ஆறார் வயலன் பிலாலந் துறையாரே.

6

செடியார் தலையிற் பலிகொண் டினிதுண்ட
படியார் பரமன் பரமேட் டிதன்சீரைக்
கடியார் மலரும் புனல்தூ விநின்றேத்தும்
அடியார் தொழுமன் பிலாலந் துறையாரே.

7

விடத்தார் திகழும் மிடறன் னடமாடி
படத்தா ரரவம் விரவுஞ் சடையாதி
கொடித்தே ரிலங்கைக் குலக்கோன் வரையார
அடர்த்தா ரருளன் பிலாலந் துறையாரே.

8

வணங்கிம் மலர்மே லயனுந் நெடுமாலும்
பிணங்கி யறிகின் றிலர்மற் றும்பெருமை
சுணங்கும் முகத்தம் முலையா ளொருபாகம்
அணங்குந் நிகழன் பிலாலந் துறையாரே.

9

தறியார் துகில்போர்த் துழல்வார் சமண்கையர்
நெறியா வுணரா நிலைக்கே டினர்நித்தல்
வெறியார் மலர்கொண் டடிவீ ழுமவரை
அறிவா ரவரன் பிலாலந் துறையாரே.

10
Go to top

அரவார் புனலன் பிலாலந் துறைதன்மேல்
கரவா தவர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
பரவார் தமிழ்பத் திசைபா டவல்லார்போய்
விரவா குவர்வா னிடைவீ டெளிதாமே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஅன்பில் ஆலந்துறை
1.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கணை நீடு எரி, மால்,
Tune - தக்கராகம்   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
5.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானம் சேர் மதி சூடிய
Tune - திருக்குறுந்தொகை   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000