மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள் பானல்வாயொரு பாலனீங்கிவ னென்றுநீபரி வெய்திடேல் ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர் ஈனர்கட்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.
|
1
|
ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப் பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமா மாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர் ஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயர னிற்கவே.
|
2
|
அத்தகுபொரு ளுண்டுமில்லையு மென்றுநின்றவர்க் கச்சமா ஒத்தொவ்வாமை மொழிந்துவாதி லழிந்தெழுந்த கவிப்பெயர்ச் சத்திரத்தின் மடிந்தொடிந்து சனங்கள் வெட்குற நக்கமே சித்திரர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
|
3
|
சந்துசேனனு மிந்துசேனனுந் தருமசேனனுங் கருமைசேர் கந்துசேனனுங் கனகசேனனு முதலதாகிய பெயர்கொளா மந்திபோற்றிரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பய னறிகிலா அந்தகர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
|
4
|
கூட்டினார்கிளி யின்விருத்த முரைத்ததோரொலி யின்றொழிற் பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு மெக்கர்தங்களைப் பல்லறம் காட்டியேவரு மாடெலாங்கவர் கையரைக்கசி வொன்றிலாச் சேட்டைகட்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
|
5
|
| Go to top |
கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியுங் குமணமா சுனகநந்தியுங் குனகநந்தியுந் திவணநந்தியு மொழிகொளா அனகநந்தியர் மதுவொழிந்தவ மேதவம்புரி வோமெனும் சினகருக்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
|
6
|
பந்தணம்மவை யொன்றிலம்பரி வொன்றிலம்மென வாசக மந்தணம்பல பேசிமாசறு சீர்மையின்றிய நாயமே அந்தணம்மரு கந்தணம்மது புத்தணம்மது சித்தணச் சிந்தணர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயரனிற்கவே.
|
7
|
மேலெனக்கெதி ரில்லையென்ற வரக்கனார் மிகை செற்றதீப் போலியைப்பணி யக்கிலாதொரு பொய்த்தவங்கொடு குண்டிகை பீலிகைக்கொடு பாயிடுக்கி நடுக்கியேபிறர் பின்செலும் சீலிகட்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
|
8
|
பூமகற்கு மரிக்குமோர்வரு புண்ணியன்னடி போற்றிலார் சாமவத்தையி னார்கள்போறலை யைப்பறித்தொரு பொய்த்தவம் வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி யட்டிவாய்சக திக்குநேர் ஆமவர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
|
9
|
தங்களுக்குமச் சாக்கியர்க்குந் தரிப்பொணாதநற் சேவடி எங்கணாயக னேத்தொழிந்திடுக் கேமடுத்தொரு பொய்த்தவம் பொங்குநூல்வழி யன்றியேபுல வோர்களைப்பழிக் கும்பொலா அங்கதர்க்கெளி யேனலேன்றிரு வாலவாயர னிற்கவே.
|
10
|
| Go to top |
எக்கராமமண் கையருக்கெளி யேனலேன்றிரு வாலவாய்ச் சொக்கனென்னு ளிருக்கவேதுளங் கும்முடித்தென்னன் முன்னிவை தக்கசீர்ப்புக லிக்குமன்றமிழ் நாதன்ஞானசம் பந்தன்வாய் ஒக்கவேயுரை செய்தபத்து முரைப்பவர்க்கிட ரில்லையே.
|
11
|
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.066
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.070
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) )
|
3.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) )
|
3.087
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி
(திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
|
3.108
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.115
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
4.062
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
6.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|