சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பந்தணைநல்லூர் - புறநீர்மை ஹரிகாம்போஜி பூபாளம் காமாஜ் ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=X4yCT_uyCfI   Add audio link Add Audio

இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்
கடறினா ராவர் காற்றுளா ராவர் காதலித் துறைதரு கோயில்
கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க் கோவணங் கொண்டுகூத் தாடும்
படிறனார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

1

கழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங் காட்டுளார் நாட்டுளா ரெனவும்
வழியுளா ரெனவு மலையுளா ரெனவு மண்ணுளார் விண்ணுளா ரெனவும்
சுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார் தொண்டர்வாய் வந்தன சொல்லும்
பழியுளார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

2

காட்டினா ரெனவு நாட்டினா ரெனவுங் கடுந்தொழிற் காலனைக் காலால்
வீட்டினா ரெனவுஞ் சாந்த வெண்ணீறு பூசியோர் வெண்மதி சடைமேல்
சூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார் சொல்லுள சொல்லுநால் வேதப்
பாட்டினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

3

முருகினார் பொழில்சூ ழுலகினா ரேத்த மொய்த்தபல் கணங்களின் துயர்கண்
டுருகினா ராகி யுறுதிபோந் துள்ள மொண்மையா லொளிதிகழ் மேனி
கருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக் கடலுணஞ் சமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

4

பொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து பொறிகிளர் பூணநூல் புரள
மின்னினா ருருவின் மிளிர்வதோ ரரவ மேவுவெண் ணீறுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க் கறமமர்ந் தருளித் தொன்மையார் தோற்றமுங் கேடும்
பன்னினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

5
Go to top

ஒண்பொனா ரனைய வண்ணல்வாழ் கெனவு முமையவள் கணவன்வாழ் கெனவும்
அண்பினார் பிரியா ரல்லுநன் பகலு மடியவ ரடியிணை தொழவே
நண்பினா ரெல்லா நல்லரென் றேத்த அல்லவர் தீயரென் றேத்தும்
பண்பினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

6

எற்றினா ரேது மிடைகொள்வா ரில்லை யிருநிலம் வானுல கெல்லை
தெற்றினார் தங்கள் காரண மாகச் செருமலைந் தடியிணை சேர்வான்
முற்றினார் வாழு மும்மதில் வேவ மூவிலைச் சூலமு மழுவும்
பற்றினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

7

ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப வோசையா லாடல றாத
கலிசெய்த பூதங் கையினா லிடவே காலினாற் பாய்தலு மரக்கன்
வலிகொள்வர் புலியி னுரிகொள்வ ரேனை வாழ்வுநன் றானுமோர் தலையில்
பலிகொள்வர் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

8

சேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ் செங்கண்மா லிவரிரு கூறாத்
தோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார் துணைமையும் பெருமையுந் தம்மில்
சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச் சரண்கொடுத் தவர்செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தணை நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே.

9

கல்லிசை பூணக் கலையொலி யோவாக் கழுமல முதுபதி தன்னில்
நல்லிசை யாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம் பந்தன்
பல்லிசை பகுவாய்ப் படுதலை யேந்தி மேவிய பந்தணை நல்லூர்
சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல் தொல்வினை சூழகி லாவே. 

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பந்தணைநல்லூர்
3.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;
Tune - புறநீர்மை   (திருப்பந்தணைநல்லூர் )
6.010   திருநாவுக்கரசர்   தேவாரம்   நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல்  பூண்டார்;நூல்
Tune - திருத்தாண்டகம்   (திருப்பந்தணைநல்லூர் பசுபதீசுவரர் காம்பன்னதோளியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000