| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=k0dLDNxuICw Add audio link
7.094
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திருச்சோற்றுத்துறை - கௌசிகம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி
சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
அழல்நீர் ஒழுகி யனைய சடையும்
உழையீர் உரியும் முடையான் இடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையும்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே
1
பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் னிடமாம்
இண்டை கொண்டன் பிடைஅ றாத
தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே
2
கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே
3
பளிக்குத் தாரை பவள வெற்பில்
குளிக்கும் போல்நூற் கோமாற் கிடமாம்
அளிக்கும் ஆர்த்தி அல்லால் மதுவம்
துளிக்கும் சோலைச் சோற்றுத் துறையே
4
உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு
வதையுஞ் செய்த மைந்தன் இடமாம்
திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறும்
துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே
5
Go to top
ஓதக் கடல்நஞ் சினைஉண் டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனல்உண் டெரியைக் காலும்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே
6
இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்
புறங்காட் டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன
துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே
7
காமன் பொடியாக் கண்ஒன் றிமைத்த
ஓமக் கடலார் உகந்த இடமாம்
தேமென் குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பார் சோற்றுத் துறையே
8
இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையால் தாழுந் தவத்தோர்க் கென்றும்
தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே
9
சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள்
முற்றா மதிசேர் முதல்வன் பாதத்
தற்றார் அடியார் அடிநாய் ஊரன்
சொற்றான் இவைகற் றார்துன் பிலரே
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருச்சோற்றுத்துறை
1.028
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செப்பம் நெஞ்சே, நெறி கொள்!
Tune - தக்கராகம்
(திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகையம்மை)
4.041
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொய் விராம் மேனி தன்னைப்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
4.085
திருநாவுக்கரசர்
தேவாரம்
காலை எழுந்து, கடிமலர் தூயன
Tune - திருவிருத்தம்
(திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
5.033
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
Tune - நாட்டைக்குறிஞ்சி
(திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
6.044
திருநாவுக்கரசர்
தேவாரம்
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்
Tune - திருத்தாண்டகம்
(திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
7.094
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
Tune - கௌசிகம்
(திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)