| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://www.youtube.com/watch?v=x1lONy39N7g Add audio link
1.035
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருவீழிமிழலை - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி ராகத்தில் திருமுறை அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி
அரை ஆர் விரி கோவண ஆடை,
நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான்,
விரை ஆர் பொழில், வீழி மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.
1
இடையிற் கட்டிய விரிந்த கோவண ஆடையையும் வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியையும் விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபிரான் உறைவதும் மணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருவீழிமிழலையின் புகழை நூல்களால் உணர்வார் உயர்வடைவர்.
புனைதல் புரி புன்சடை தன் மேல்
கனைதல் ஒரு கங்கை கரந்தான்,
வினை இல்லவர், வீழி மிழலை
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே?
2
மலரால் அலங்கரிக்கப்பட்ட முறுக்குக்களை உடைய சிவந்த சடைமுடி மீது ஆரவாரித்து வந்த ஒப்பற்ற கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபிரான் உறையும் தீவினை இல்லாத மக்கள் வாழும் திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சமும் ஒரு நெஞ்சமோ?
அழ வல்லவர், ஆடியும் பாடி
எழ வல்லவர், எந்தை அடிமேல்
விழ வல்லவர், வீழி மிழலை
தொழ வல்லவர், நல்லவர்; தொண்டே!
3
அழவல்லவரும் ஆடியும் பாடியும் எழவல்லவரும் எந்தையாகிய இறைவன் திருவடிமேல் விழ வல்லவருமாய் அடியவர் நிறைந்துள்ள திருவீழிமிழலையைத் தொழவல்லவரே நல்லவர். அவர் தொண்டே நற்றொண்டாம்.
உரவம் புரி புன் சடை தன்மேல்
அரவம் அரை ஆர்த்த அழகன்,
விரவும் பொழில், வீழி மிழலை
பரவும்(ம்) அடியார் அடியாரே!
4
வலிமையை வெளிப்படுத்தி நிற்கும் சிவந்த சடைமுடி மீதும் இடையிலும் பாம்பை அணிந்தும் கட்டியும் உள்ள அழகனாகிய சிவபிரான் எழுந்தருளியதும் பொழில்கள் விரவிச்சூழ்ந்ததுமான திருவீழிமிழலையைப் பரவித் துதிக்கும் அடியவரே அடியவராவர்.
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன்,
வரிது ஆகிய வண்டு அறை கொன்றை
விரி தார் பொழில், வீழி மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே.
5
கரியதாகிய நஞ்சினை உண்டு அதனை அணியாக நிறுத்திய நீலகண்டன் எழுந்தருளியதும் வரிகளை உடைய வண்டுகள் ஒலி செய்யும் கொன்றை மரங்கள் விரிந்த மாலைபோலக் கொத்தாக மலரும் சோலைகளால் சூழப்பெற்றதும் ஆகிய திருவீழிமிழலையைத் தமக்கு உரியதலமாகக் கருதுவோர் சிறந்த அடியவராவர்.
Go to top
சடை ஆர் பிறையான், சரி பூதப்
படையான், கொடி மேலது ஒரு பைங்கண்
விடையான், உறை வீழி மிழலை
அடைவார் அடியார் அவர் தாமே.
6
சடைமிசைச்சூடிய பிறைமதியை உடையவனும் இயங்கும் பூதப்படைகளை உடையவனும் கொடிமேல் பசிய கண்களை உடைய ஒற்றை விடையேற்றை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் திருவீழிமிழலையை அடைபவர்கள் சிறந்த அடியவர்கள் ஆவர். தாம் ஏ அசைநிலை.
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க
நெறி ஆர் குழலாளொடு நின்றான்,
வெறி ஆர் பொழில், வீழி மிழலை
அறிவார் அவலம் அறியாரே.
7
கால்களிற் செறிந்த கழல் சிலம்பு ஆகிய அணிகள் ஆர்க்கச் சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு நின்றருளும் சிவபிரான் எழுந்தருளியதும் மணம் கமழும் பொழில்களால் சூழப் பெற்றதுமான திருவீழிமிழலையைத் தியானிப்பவர் அவலம் அறியார்.
உளையா வலி ஒல்க, அரக்கன்,
வளையா விரல் ஊன்றிய மைந்தன்,
விளை ஆர் வயல், வீழி மிழலை
அளையா வருவார் அடியாரே.
8
மிகவருந்திக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனது வலிமை கெடுமாறு தன் காலை வளைத்து விரலால் ஊன்றிய வலிமை வாய்ந்த சிவபிரான் எழுந்தருளியதும் விளைவு மிகுந்த வயல்களை உடையதுமான திருவீழிமிழலையை நினைந்து வருபவர் சிறந்த அடியவராவர்.
மருள் செய்து இருவர் மயல் ஆக
அருள் செய்தவன், ஆர் அழல் ஆகி
வெருள் செய்தவன், வீழி மிழலை
தெருள் செய்தவர் தீவினை தேய்வே.
9
திருமால் பிரமன் ஆகிய இருவரும் அஞ்ஞானத் தினால் அடிமுடிகாணாது மயங்க அரிய அழலுருவாய் வெளிப்பட்டு நின்று வெருட்டியவனும் பின் அவர்க்கு அருள் செய்தவனுமான சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையைச் சிறந்த தலம் என்று தெளிந்தவர்கள் தீவினைகள் தேய்தல் உறும்.
துளங்கும் நெறியார் அவர் தொன்மை
வளம் கொள்ளன்மின், புல் அமண் தேரை!
விளங்கும் பொழில் வீழி மிழலை
உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே.
10
தடுமாற்றமுறும் கொள்கைகளை மேற்கொண்டுள்ள அற்பமானவராய அமணர் தேரர் ஆகியோரின் சமயத் தொன்மைச் சிறப்பைக் கருதாதீர். விளங்கும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையை நினைபவர்களின் வினைகள் ஓய்தலுறும்.
Go to top
நளிர் காழியுள் ஞானசம்பந்தன்
குளிர் ஆர் சடையான் அடி கூற,
மிளிர் ஆர் பொழில், வீழி மிழலை
கிளர் பாடல் வல்லார்க்கு இலை, கேடே.
11
குளிர்ந்த காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தண்மையான சடைமுடியை உடைய சிவபிரானுடைய திருவடிப் பெருமைகளைக் கூறத் தொடங்கி விளக்கமான பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலைப் பெருமான் புகழ்கூறும் இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கட்குக் கேடு இல்லை.
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவீழிமிழலை
1.004
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மைம் மரு பூங்குழல் கற்றை
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)
1.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சடை ஆர் புனல் உடையான்,
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.020
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தட நிலவிய மலை நிறுவி,
Tune - நட்டபாடை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.035
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அரை ஆர் விரி கோவண
Tune - தக்கராகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.082
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இரும் பொன்மலை வில்லா, எரி
Tune - குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.092
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
Tune - குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.124
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
1.132
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.009
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.080
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சீர் மருவு தேசினொடு தேசம்
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.085
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மட்டு ஒளி விரிதரு மலர்
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.098
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண்மதி தவழ் மதில் மிழலை
Tune - சாதாரி
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.111
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
Tune - பழம்பஞ்சுரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.116
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், துன்று கொன்றை நம் சடையதே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
3.119
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
Tune - புறநீர்மை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.064
திருநாவுக்கரசர்
தேவாரம்
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
Tune - திருநேரிசை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
4.095
திருநாவுக்கரசர்
தேவாரம்
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும்
Tune - திருவிருத்தம்
(திருவீழிமிழலை தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)
5.012
திருநாவுக்கரசர்
தேவாரம்
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
Tune - திருக்குறுந்தொகை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
5.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
என் பொனே! இமையோர் தொழு
Tune - திருக்குறுந்தொகை
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.050
திருநாவுக்கரசர்
தேவாரம்
போர் ஆனை ஈர் உரிவைப்
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.051
திருநாவுக்கரசர்
தேவாரம்
கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்;
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.052
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் அவன் காண்; கண்
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
6.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
மான் ஏறு கரம் உடைய
Tune - திருத்தாண்டகம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
7.088
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர்
Tune - சீகாமரம்
(திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகையம்மை)
9.005
சேந்தனார்
திருவிசைப்பா
சேந்தனார் - திருவீழிமிழலை
Tune -
(திருவீழிமிழலை )