பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத் துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில் பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.
|
1
|
தன்னை வணங்கும் அடியவர்களின் நீக்குதற்கரிய வினைகளை அடியோடு அழித்து அவர்கட்கு அருள் வழங்கத் துணிந்திருப்பவனும் மார்பின்கண் மான்தோலோடு விளங்கும் முப்புரிநூல் அணிந்தவனும் பாம்போடு பெரிய அழகிய ஆமை ஓட்டைப் பூண்டவனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும். | |
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அடப் பார்த்தவன்; பனிமதி படர் சடை வைத்து, போர்த்தவன் கரி உரி; புலி அதள், அரவு, அரை ஆர்த்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.
|
2
|
புகழ்மிக்கவனும் பகைவர்களாகிய அவுணர்களின் முப்புரங்களைப் பேரொளி தோன்ற எரியுமாறு அழிந்தொழிய நெற்றி விழியால் பார்த்தவனும் குளிர்ந்த திங்களை விரிந்த சடைமுடிமீது வைத்துள்ளவனும் யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும் புலித்தோலைப் பாம்போடு இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும். | |
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அவுணர்தம் வள நகர் எரிந்து அற எய்தவன்; எழில் திகழ் மலர்மேல் இருந்தவன் சிரம் அது, இமையவர் குறை கொள, அரிந்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.
|
3
|
இருமுனைகளும் இழுத்துக் கட்டப்பட்ட கொடிய வில்லைப் பிடித்து அசுரர்களின் வளமையான முப்புரங்கள் எரிந்து அழியுமாறு கணை எய்தவனும் தேவர்கள் வேண்ட அழகிய தாமரை மலர்மேல் எழுந்தருளிய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்த வனுமாகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும். | |
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை மாய்ந்து அற எய்தவன், வளர்பிறை விரிபுனல் தோய்ந்து எழு சடையினன், தொல்மறை ஆறு அங்கம் ஆய்ந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.
|
4
|
வலிமை வாய்ந்த அவுணர்களின் வளமையான முப்புரங்களும் தீயிடை அழிந்தொழியுமாறு கணை எய்தவனும் வளரத்தக்க பிறை பரந்து விரிந்து வந்த கங்கை ஆகியன தோய்ந்தெழும் சடையினனும் பழமையான நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்தருளியவனும் ஆகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும். | |
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு தேன் அமர் கொன்றையன், திகழ்தரு மார்பினன், மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும் ஆனவன், வள நகர் அம் தண் ஐயாறே.
|
5
|
வானின்கண் விளங்கும் பிறைமதி பொருந்திய சடையின்மேல் பாம்பையும் தேன் நிறைந்த கொன்றையையும் அணிந்தவனும் விளங்கும் மார்பினை உடையவனும் மான்போன்ற மென்மையான விழிகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும். | |
| Go to top |
முன்பனை, முனிவரொடு அமரர்கள் தொழுது எழும் இன்பனை, இணை இல இறைவனை, எழில் திகழ் என் பொனை, ஏதம் இல் வேதியர் தாம் தொழும் அன்பன வள நகர் அம் தண் ஐயாறே.
|
6
|
வலிமையுடையவனும் முனிவர்களும் அமரர்களும் தொழும் திருவடிகளை உடைய இன்ப வடிவினனும் ஒப்பற்ற முதல்வனும் அழகு விளங்கும் என் பொன்னாக இருப்பவனும் குற்றமற்ற வேதியர்களால் தொழப்பெறும் அன்பனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும். | |
வன்திறல் அவுணர்தம் வள நகர் எரி இடை வெந்து அற எய்தவன், விளங்கிய மார்பினில் பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி, தன் அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே.
|
7
|
பெருவலி படைத்த அவுணர்களின் வளமையான முப்புர நகர்களும் தீயிடையே வெந்தழியுமாறு கணை எய்தவனும் விளங்கிய மார்பகத்தே பந்தணை மெல் விரலியாகிய உமையம்மையைப் பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது அழிவற்ற வளநகர் அழகும் தண்மையுமுடைய ஐயாறாகும். | |
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும், அடித்தலத்தால் இறை ஊன்றி, மற்று அவனது முடித்தலை தோள் அவை நெரிதர, முறைமுறை அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே.
|
8
|
செருக்கோடு வந்த வலிய இராவணன் நல்ல கயிலை மலையைப் பெயர்த்த அளவில் தனது அடித்தலத்தால் சிறிது ஊன்றி அவ்விராவணனின் முடிகள் அணிந்த தலைகள் தோள்கள் ஆகியவற்றை முறையே நெரித்தருளிய சிவபிரானது வளநகர் அழகும் தன்மையும் உடைய ஐயாறாகும். | |
விண்ணவர் தம்மொடு, வெங்கதிரோன், அனல், எண் இலி தேவர்கள், இந்திரன், வழிபட, கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே.
|
9
|
வானகத்தே வாழ்வார் தம்மோடு சூரியன் அக்கினி எண்ணற்ற தேவர்கள் இந்திரன் முதலானோர் வழிபட திருமால் பிரமர்கள் காணுதற்கு அரியவனாய் நின்ற தலைவனாகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும். வெங்கதிரோன் அனல் என்று பாடம் ஓதுவாரும் உளர். | |
மருள் உடை மனத்து வன் சமணர்கள், மாசு அறா இருள் உடை இணைத்துவர்ப் போர்வையினார்களும், தெருள் உடை மனத்தவர்; தேறுமின், திண்ணமா அருள் உடை அடிகள் தம் அம் தண் ஐயாறே!
|
10
|
தெளிந்த மனத்தினை உடையவர்களே! மருட்சியை உடைய மனத்தவர்களாகிய வலிய சமணர்களும் குற்றம் நீங்காத இரண்டு துவர்நிறஆடைகளைப் பூண்ட புத்தர்களும் கூறுவனவற்றைத் தெளியாது சிவபிரானை உறுதியாகத் தெளிவீர்களாக. கருணையாளனாக விளங்கும் சிவபிரானது இடம் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும். | |
| Go to top |
நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ் அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக் கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே.
|
11
|
அலைகள் வீசும் ஆறு குளம் முதலிய நீர் நிலைகளால் சூழப்பட்ட ஐயாற்று இறைவனை நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இன்தமிழால் இயன்ற கலைநலம் நிறைந்த இத்திருப்பதிகத்தைக் கற்று வல்லவராயினார் நன்மை மிக்க புகழாகிய நலத்தைப் பெறுவர். | |
Other song(s) from this location: திருவையாறு
1.036
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கலை ஆர் மதியோடு உர
Tune - தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
Tune - வியாழக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
1.130
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
Tune - மேகராகக்குறிஞ்சி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.006
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
2.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு
Tune - இந்தளம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
Tune - காந்தாரம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.013
திருநாவுக்கரசர்
தேவாரம்
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
Tune - பழந்தக்கராகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப்
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.039
திருநாவுக்கரசர்
தேவாரம்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.040
திருநாவுக்கரசர்
தேவாரம்
தான் அலாது உலகம் இல்லை;
Tune - திருநேரிசை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
குறுவித்தவா, குற்றம் நோய் வினை
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.092
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்திப்பு அரியன; சிந்திப்பவர்க்குச் சிறந்து
Tune - திருவிருத்தம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
4.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன்,
Tune - திருவிருத்தம்
(திருவையாறு பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
|
5.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வாய்தல் உளான், வந்து;
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
5.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
Tune - திருக்குறுந்தொகை
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.037
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
6.038
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓசை ஒலி எலாம் ஆனாய்,
Tune - திருத்தாண்டகம்
(திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
|
7.077
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பரவும் பரிசு ஒன்று அறியேன்
Tune - காந்தாரபஞ்சமம்
(திருவையாறு செம்பொற்சோதியீசுவரர் அறம் வளர்த்த நாயகியம்மை)
|