சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்) மரம்,
உந்தும் மா முகலியின் கரையினில், உமையொடும்,
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
எந்தையார் இணை அடி, என் மனத்து உள்ளவே.
|
1
|
சந்தனம், அகில், சாதிக்காய், தேக்கு ஆகிய மரங்களை அலைகளால் உந்தித் தள்ளிவரும் சிறப்பான பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில், தென்றல் காற்று வீசும் சோலைகள் வளர்ந்து பெருக, வள்ளல் தன்மையுடைய எம் தந்தையாகிய காளத்தி நாதர் உமாதேவியோடு, அவருடைய திருவடிகள் எம் மனத்தில் பதியுமாறு வீற்றிருந்தருளுகின்றார். | |
ஆலம், மா, மரவமோடு, அமைந்த சீர்ச் சந்தனம்,
சாலம், மா பீலியும், சண்பகம், உந்தியே,
காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி,
நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே!
|
2
|
ஆல், மா, குங்கும மரம், சந்தனம் ஆகிய மரங்களும், மிகுதியான மயிற்பீலியும், சண்பகமும் அலைகளால் தள்ளப்பட்டுப் பருவக்காலங்களில் நிறைகின்ற பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் நீலகண்டனான இறைவனை எவ்வகையில் நினைந்து வழிபடுதல் பொருந்துமோ அத்தன்மையில் நினைந்து வழிபடுதல் நம் கடமையாகும். | |
கோங்கமே, குரவமே, கொன்றை, அம் பாதிர்
மூங்கில், வந்து அணைதரு முகலியின் கரையினில்,
ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ,
வீங்கு வெந்துயர் கெடும்; வீடு எளிது ஆகுமே.
|
3
|
கோங்கு, குரவம், கொன்றை, பாதிரி, மூங்கில் ஆகிய மரங்களைத் தள்ளிக் கொண்டுவரும் பொன்முகலி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் காளத்திநாதரின் திருவடிகளைத் தொழுது போற்ற, பெருகிவரும் கொடிய துன்பம் கெடும். முத்திப்பேறு எளிதாகக் கைகூடும். | |
கரும்பு, தேன், கட்டியும், கதலியின் கனிகளும்,
அரும்பு நீர் முகலியின் கரையினில், அணி மதி
ஒருங்கு வார் சடையினன், காளத்தி ஒருவனை,
விரும்புவார் அவர்கள் தாம் விண்ணுலகு ஆள்வரே.
|
4
|
கரும்பு, தேன் கட்டி, வாழைக்கனி ஆகியவற்றை விளைவிக்கும் நீர்வளமுடைய பொன்முகலி ஆற்றின் கரையில், அழகிய பிறைச்சந்திரனை நீண்ட சடையில் சூடி வீற்றிருந்தருளும் ஒப்பற்ற காளத்திநாதரை விரும்பிப் பணிபவர்கள் விண்ணுலகை ஆள்வார்கள். | |
வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே,
திரை தரு முகலியின் கரையினில், தேமலர்
விரை தரு சடை முடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழல் இணை நித்தலும் நினைமினே!
|
5
|
மலையில் வளரும் அகிலும் முத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில், தேன் துளிக்கின்ற நறுமண மலர்களைச் சடைமுடியில் அணிந்து விளங்கும், காளத்தியிலுள்ள தேவாதி தேவனாகிய சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைத் தினந்தோறும் நினைந்து போற்றி வழிபடுவீர்களாக. | |
| Go to top |
முத்தும், மா மணிகளும், முழுமலர்த்திரள்களும்,
எத்து மா முகலியின் கரையினில், எழில் பெற,
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன் தன் காளத்தி அணைவது கருமமே.
|
8
|
பருத்த உடலுடைய சமணர்களும், புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்களைக் கை விடுக. இறைவனுடைய திருவடிகளை வணங்கிப் போற்றுங்கள். வளமுடன் ஓங்கும் வள்ளலாகிய திருக்காளத்திநாதனை உள்ளத்தால் உணர்ந்து மனம் ஒன்றி வழிபட்டால் தேவர்களுக்கெல்லாம் தலைவனான அச்சிவபெருமான், வழிபடும் உயிர்களின் வினைகளைத் தீர்த்து நன்மை செய்வான். | |
மண்ணும், மா வேங்கையும், மருதுகள், பீழ்ந்து உந்தி
நண்ணு மா முகலியின் கரையினில், நன்மை சேர்
வண்ண மா மலரவன், மால் அவன், காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்மினே!
|
9
|
அட்டமா சித்திகளைத் தரும் திருக்காளத்தியில் வீற்றிருந்தருளும் நீண்ட சடைமுடியுடைய சிவபெருமானைப் போற்றி, வயல் வளமிக்க அழகிய சீகாழியில் அவதரித்த நான்கு வேதங்களை யும் நன்கு கற்றுவல்ல ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை. | |
வீங்கிய உடலினர், விரிதரு துவர் உடைப்
பாங்கு இலார், சொலை விடும்! பரன் அடி பணியுமின்!
ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர,
வாங்கிடும், வினைகளை, வானவர்க்கு ஒருவனே.
|
10
|
| Go to top |
அட்ட மாசித்திகள் அணை தரு காளத்தி
வட்ட வார் சடையனை, வயல் அணி காழியான்-
சிட்ட நால்மறை வல ஞானசம்பந்தன்-சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.
|
11
|