விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே!
உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!
திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும்
அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
|
1
|
நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே. விடமுண்ட கறுத்த கண்டத்தினனே. அடியவர்களால் பலவாகப் புகழ்ந்துரைக்கப் படுபவனே. உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவனே. அலைவீசும் அழகிய கடல் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் அரசனே! உன்னைத்தவிர என்மனம் ஆதரவாக வேறெதையும் அடையாது. | |
இடி ஆர் ஏறு உடையாய்! இமையோர்தம் மணி முடியாய்!
கொடி ஆர் மா மதியோடு, அரவம், மலர்க்கொன்றையினாய்!
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும்
அடிகேள்!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
|
2
|
இடிபோல் முழங்கும் இடபத்தை வாகனமாக உடையவனே! தேவர்கள் தங்கள் மணிமுடி உன் திருப்பாதத்தில் படும்படி வணங்க அவர்கட்கு வாழ்வளிக்கும் முதற்பொருளே! இடபக்கொடியும், சந்திரனும், பாம்பும், கொன்றைமலரும் உடைய இறைவனே! செடிகளோடு கூடிய மாதவி மலரின் மணம் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தலைவனான சிவபெருமானே! உன்னைத் தவிர என் மனம், ஆதரவாக வேறெதையும் அடையாது. | |
கை ஆர் வெண்மழுவா! கனல் போல்-திருமேனியனே!
மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே!
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும்
ஐயா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
|
3
|
கையின்கண் பொருந்திய வெண்மையான மழு வாயுதத்தை உடையவனே! கனல் போன்ற சிவந்த திருமேனியனே! மை பூசப் பெற்ற, ஒளி பொருந்திய கண்களை உடைய நல்லவளாகிய உமையம்மை கண்வளரும் மார்பினனே! வயல்களில் செங்கயல்கள் பாயும் வளம் பொருந்திய திருவான்மியூரில் உறையும் ஐயனே! உன்னையல்லால் எனது அன்பு பிறிதொருவரைச் சென்றடையாது. | |
பொன் போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே!
மின் போலும் புரிநூல், விடை ஏறிய வேதியனே!
தென்பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி தன்னில்
அன்பா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
|
4
|
பொன்போல் ஒளிரும் சடைமேல் கங்கையைத் தாங்கிய புண்ணியமூர்த்தியே! மின்போல் ஒளிரும் முப்புரிநூல் அணிந்து, இடப வாகனத்திலேறி, வேதங்களை அருளிச் செய்தவனாய், வேதப் பொருளாகவும் விளங்குபவனே! உலகெலாம் இன்புறத் திருவான்மியூர் என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் அன்புருவான உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. | |
கண் ஆரும் நுதலாய்! கதிர் சூழ் ஒளி மேனியின்மேல்
எண் ஆர் வெண்பொடி-நீறு அணிவாய்! எழில் ஆர் பொழில் சூழ்
திண் ஆர் வண் புரிசைத் திரு வான்மியூர் உறையும்
அண்ணா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
|
5
|
நெற்றிக்கண்ணை உடையவனே! கதிர்போல் ஒளிரும் திருமேனி மீது திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவனே! அழகிய சோலைகள் சூழ்ந்த உறுதியான மதில்களை உடைய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தந்தையே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. | |
| Go to top |
நீதீ! நின்னை அல்லால், நெறியாதும் நினைந்து அறியேன்;
ஓதீ, நால்மறைகள்! மறையோன் தலை ஒன்றினையும்
சேதீ! சேதம் இல்லாத் திரு வான்மியூர் உறையும்
ஆதீ! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
|
6
|
நீதிவடிவாயுள்ளவனே! உன்னையே நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுதற்குரிய நெறி வேறொன்றை அறிந்திலேன். நால்வேதங்களை அருளிச் செய்தவனே! பிரமன் தலை ஒன்றை நகத்தால் கிள்ளியவனே! எத்தகைய குறைவுமின்றி வளம் பொருந்திய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. | |
வான் ஆர் மா மதி சேர் சடையாய்! வரை போல வரும்
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய்! கறை மா மிடற்றாய்!
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும்
ஆனாய்! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
|
7
|
வானில் விளங்கும் சந்திரனைச் சடையில் தரித்தவனே! மலைபோல வரும் காட்டிலுள்ள யானையின் தோலை உரித்தவனே! நஞ்சுண்டு கறுத்த கண்டத்தையுடையவனே! தேன் துளிக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரில் இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் இறைவனே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது. | |
பொறி வாய் நாக(அ)ணையானொடு, பூமிசை மேயவனும்,
நெறி ஆர் நீள் கழல், மேல்முடி, காண்பு அரிது ஆயவனே!
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும்
அறிவே! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
|
9
|
விதண்டாவாதம் செய்கின்ற சமணர்களும், முரட்டுத் தன்மையுடைய புத்தர்களும் காரணம் அறியாதவராய் உன்னைப்பேச வீற்றிருந்தாய். வலிமை வாய்ந்த தேரோடும் வீதிகளையுடைய திருவான்மீயூரில் வீற்றிருந்தருளும் தேவனே! உன்னையல்லால் என் மனமானது ஆதரவாக வேறெதையும் நாடாது. | |
குண்டாடும் சமணர், கொடுஞ் சாக்கியர், என்று இவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்!
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும்
அண்டா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
|
10
|
பாக்குமரக் கன்றுகள் வயல்களைச் சூழ்ந்து விளங்குகின்ற சீகாழியில் அவதரித்து, நல்ல புகழ் மிகுந்த ஞானசம்பந்தன், இடர்தீர்க்கும் திருவான்மியூரின் மேல் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குக் கொடிய தீவினையானது நீங்கும். | |
| Go to top |
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை,
சென்றார் தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல்,
குன்றாது ஏத்த வல்லார் கொடுவல் வினை போய் அறுமே.
|
11
|