மடல் மலி கொன்றை, துன்று வாள் எருக்கும், வன்னியும்,
மத்தமும், சடைமேல்
படல் ஒலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார்தம் இடம் பகரில்,
விடல் ஒலி பரந்த வெண்திரை முத்தம் இப்பிகள்
கொணர்ந்து, வெள் அருவிக்
கடல் ஒலி ஓதம் மோத, வந்து அலைக்கும் கழுமலநகர் எனல் ஆமே.
|
1
|
இதழ்கள் நிறைந்த கொன்றை மாலையும் , நெருங்கிய ஒளியுடைய வெள்ளெருக்க மாலையும் , ஊமத்தம் பூ மாலையும் அணிந்த சடையின்மேல் , ஒலி அடங்கிய அலை மோதும்படியான கங்கைக்குத் தலைவரான சிவபெருமான் வீற்றிருந் தருளும் இடம் எது என்றால் , ஒலி மிகுந்த வெள்ளிய அலைகள் முத்துக்களையும் , சிப்பிகளையும் அடித்துக் கொணர்ந்து ஒதுக்கும் கடலினொலி தன் வெள்ளப் பெருக்கைக் கரைமோதச் செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம் . | |
மின்னிய அரவும், வெறிமலர்பலவும், விரும்பிய திங்களும், தங்கு
சென்னி அது உடையான், தேவர்தம் பெருமான்,
சேயிழையொடும் உறைவு இடம் ஆம்
பொன் இயல் மணியும், முரி கரிமருப்பும், சந்தமும், உந்து வன் திரைகள்
கன்னியர் ஆட, கடல் ஒலி மலியும் கழுமலநகர் எனல் ஆமே.
|
2
|
மின்னும் பாம்பும் , நறுமணம் கமழும் மலர்களும் , இறைவனின் திருவடியைச் சரணடைந்த பிறைச்சந்திரனும் தங்கிய தலையுடையவர் சிவபெருமான் . அவர் தேவர்கட்கெல்லாம் தலைவர் . அப்பெருமான் செம்மையான ஆபரணமணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் , பொன் , மணி , யானையின் வளைந்த தந்தம் , சந்தனக்கட்டை இவற்றை உந்தித் தள்ளுகின்ற வலிய அலைகளையுடையதும் , கன்னிப்பெண்கள் கடற்கரையில் விளையாடுதலையுடையதும் , கடலொலி மிகுதலையுடையதுமான திருக்கழுமலநகர் எனலாம் . | |
சீர் உறு தொண்டர், கொண்டு அடி போற்ற, செழு மலர்
புனலொடு தூபம்;
தார் உறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும்
ஊர் உறு பதிகள் உலகு உடன் பொங்கி ஒலிபுனல்
கொள, உடன்மிதந்த,
கார் உறு செம்மை நன்மையால் மிக்க கழுமலநகர் எனல்
ஆமே.
|
3
|
பெருமை மிக்க சிவதொண்டர்கள் நறுமலரும் , நீரும் , தூபமுங் கொண்டு திருவடிகளைப் பூசிக்கும்படி , கொன்றை மாலையினைத் தமது திருமுடிமேல் வைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பலவூர்களைத் தம்பாற் கொண்டுள்ள பதிகளை உலகுடன் கொள்ளும்படி கடல் பொங்கி எழுந்தபோது திருவருளால் தோணிபோல் மிதந்து மழையினாற் பெறும் நன்மைகள் குறைவறச் சிறந்துள்ள திருக்கழுமலநகர் எனலாம் . | |
மண்ணினார் ஏத்த, வான் உளார் பரச, அந்தரத்து அமரர்கள் போற்ற,
பண்ணினார் எல்லாம்; பலபல வேடம் உடையவர்; பயில்வு இடம் எங்கும்
எண்ணினால் மிக்கார், இயல்பினால் நிறைந்தார்,
ஏந்திழையவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பம் கண்டு, ஒளி பரக்கும் கழுமலநகர்
எனல் ஆமே.
|
4
|
மண்ணுலக மெய்யன்பர்கள் போற்றி வணங்கவும் , வானத்திலுள்ள தேவர்கள் துதிக்கவும் , பிரமன் , திருமால் முதலியோர்கள் போற்றவும் விளங்கி , எல்லாவற்றையும் ஆக்கியருளியவரும் , பலபல சிவமூர்த்தங்களாக விளங்குபவருமான சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இறைவனின் திருவடி மறவா நினைவால் சிறந்த உள்ளம் உடையவர்களும் , செவ்விய அணிகலன்கள் அணிந்துள்ள மகளிரும் அவரொடு நீங்காது ஒன்றித்து வாழும் ஆண்மை மிக்க ஆடவர்களும் , காணுந்தோறும் இன்பம் நுகரத் திருவருள் ஒளியைப் பரப்புகின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம் . | |
சுருதியான் தலையும், நாமகள் மூக்கும், சுடரவன் கரமும், முன் இயங்கு
பருதியான் பல்லும், இறுத்து அவர்க்கு அருளும் பரமனார்
பயின்று இனிது இருக்கை
விருதின் நால்மறையும், அங்கம் ஓர் ஆறும், வேள்வியும்
வேட்டவர், ஞானம்
கருதினார், உலகில் கருத்து உடையார், சேர் கழுமலநகர்
எனல் ஆமே.
|
5
|
பிரமனது தலையையும் , சரஸ்வதியின் மூக்கையும் , தீக்கடவுளின் கையையும் , காலம் காட்டி முன் செல்லும் சூரியனின் பல்லையும் இறுத்து , பின் உமாதேவி வேண்ட அவர்கட்கு அருளும் புரிந்த சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடமாவது , வழிவழிக் கேட்கும் தொழிலாகப் பயின்று வரும் புகழுடைய நான்கு வேதங்களையும் , ஆறு அங்கங்களையும் அறிந்து , அவற்றின்படி வேத வேள்விகளைச் செய்பவர்களும் , ஞான வேட்கை உடையவர்களும் , உலகில் பிறந்ததன் பெரும்பயனை அடைய விரும்பும் கருத்துடையவர்களும் வசிக்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம் . | |
| Go to top |
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார்,
பனிமலர்க்கொன்றை
பற்றி வான்மதியம் சடை இடை வைத்த படிறனார், பயின்று இனிது இருக்கை
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடிச் செயிர்த்து,
வண் சங்கொடு வங்கம்
கல்-துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும்
கழுமலநகர் எனல் ஆமே.
|
6
|
புற்றில் வாழுந் தன்மையுடைய ஒளிமிக்க பாம்பையும் , ஆமையோட்டையும் ஆபரணமாகப் பூண்ட புனிதரும் , குளிர்ச்சி பொருந்திய கொன்றை மலருடன் , வானத்திலுள்ள சந்திரனையும் சடையில் வைத்த எம் உள்ளம் கவர் கள்வருமான சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடம் , வலிய அலைகள் ஒன்றோடொன்று மோதிப் பொரும் கடலானது வளமையான சங்குகளோடு , கப்பல்களையும் கொண்டு வந்து மலைகள் போலக் கரை வந்து சாரச் செய்யும் திருக்கழுமலநகர் எனக் கூறலாம் . | |
அலை புனல் கங்கை தங்கிய சடையார், அடல் நெடுமதில் ஒருமூன்றும்
கொலை இடைச் செந்தீ வெந்து அறக் கண்ட குழகனார், கோயிலது என்பர்
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடை இடை எங்கும்
கலை களித்து ஏறிக் கானலில் வாழும் கழுமலநகர் எனல் ஆமே.
|
7
|
அலைகளோடு கூடிய கங்கையைத் தாங்கிய சடையை உடையவர் சிவபெருமான் . நீண்ட மூன்று மதில்களும் கொலை நிகழ்வதாகிய போரினிடையே செந்தீயினால் வெந்தழியும்படி செய்தவர் , இளமையும் , அழகுமுடைய சிவபெருமான் ஆவார் . அவர் வீற்றிருந்தருளும் கோயிலையுடைய திருத்தலமாவது , மலைகளை விட மிக்குயர்ந்த சரக்கு மரக்கலங்கள் கடற்கரையில் நிற்க , கடற்கரைச் சோலைகளில் மான்கள் மகிழ்ந்து ஓடி வாழ்தலுடைய திருக்கழுமலநகர் எனக் கூறலாம் . | |
ஒருக்க முன் நினையாத் தக்கன்தன் வேள்வி உடைதர
உழறிய படையர்
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார்,
அமர்ந்து உறை கோயில்
பரக்கும் வண்புகழார் பழி அவை பார்த்துப் பலபல
அறங்களே பயிற்றி,
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமலநகர்
எனல் ஆமே.
|
8
|
இறைவனை நினையாது முற்காலத்தில் தக்கன் செய்த யாகமாவது ஒருங்கே அழியும்படி கலக்கிய பூதப்படைகளை உடையவரும் , அரக்கனான இராவணனது ஆற்றலை மலையைச் சற்றே கால்விரலால் ஊன்றி நெருக்குதலால் அழித்த அழகருமான சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயிலுள்ள திருத்தலமாவது பரவுதலையுடைய மெய்ம்மையான புகழையுடையவரும் , குற்றங்கள் வாராவண்ணம் நன்கு ஆராய்ந்து ஒல்லும் வகையான் ஓவாது அறம்புரியும் மிக்க பயிற்சியுடையாரும் , கனவிலும் கரக்கும் எண்ணம் இல்லாத வள்ளன்மையுடையாரும் ஆகிய செந்நெறிச் செல்வர்கள் வாழும் கழுமலநகரெனக் கூறலாம் . | |
அரு வரை பொறுத்த ஆற்றலினானும், அணி கிளர் தாமரையானும்,
இருவரும் ஏத்த, எரிஉரு ஆன இறைவனார் உறைவு இடம் வினவில்,
ஒருவர் இவ் உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல்
வெள்ளம் முன் பரப்ப,
கருவரை சூழ்ந்த கடல் இடை மிதக்கும் கழுமலநகர் எனல் ஆமே.
|
9
|
கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கிய ஆற்றலுடைய திருமாலும் , அழகிய செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் ஏத்தித் துதிக்கும்படியாகத் தீப்பிழம்பின் உருவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , ஒருவரும் இவ்வுலகில் வாழ இயலா வண்ணம் , பேரூழிக் காலத்தில் பெருவெள்ளம் பெருக்கெடுக்க , அப்பரப்பில் கருவரை போன்ற திருமால் கிடந்து அறிதுயில் கொள்ளும் கடலிடைத் திருத்தோணி போன்று மிதந்த சிறப்பு வாய்ந்த திருக்கழுமலநகர் எனக் கூறலாம் . | |
உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும், அத் துகில்
போர்த்து உழல்வாரும்,
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளாச் செம்மையார்
நன்மையால் உறைவு ஆம்
குருந்து, உயர் கோங்கு, கொடிவிடு முல்லை, மல்லிகை, சண்பகம், வேங்கை,
கருந்தடங்கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமலநகர்
எனல் ஆமே.
|
10
|
உயர்ந்த தமது உடலின்றும் உடையினை நீக்கிய சமணர்களும் , மிக்க ஆடையினை உடல் முழுவதும் போர்த்துத் திரியும் புத்தர்களும் ஆராய்ந்துணரும் அறிவிலாது ஏனைச் செந்நெறியாளர்களை இழிமொழிகளால் இகழ்ந்துரைப்பர் . அப்புன் மொழிகளைப் ` புறம் கேளோம் ` என்ற மறையின்படி ஒரு பொருளாகக் கொள்ளாத செம்மையாளர்கட்கு நன்மைபுரியும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , குருந்து , கோங்கு , முல்லை , மல்லிகை , சண்பகம் , வேங்கை ஆகிய மலர்களைக் கரிய அகன்ற கண்களையுடைய மங்கையர்கள் கொய்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம் . | |
| Go to top |
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார்மேல்
ஞானசம்பந்தன் நல்-தமிழ்மாலை நன்மையால் உரை செய்து நவில்வார்
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி, உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வான் இடை வாழ்வர்; மண்மிசைப் பிறவார்; மற்று இதற்கு
ஆணையும் நமதே.
|
11
|
கடற்கரைச் சோலைகளை அடுத்த வயல்களில் கடல்நீர் வந்து பாய்தலையுடைய திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனைப் போற்றிப் பாடிய ஞான சம்பந்தனுடைய நல்ல தமிழ்மாலைகளைப் பத்தியோடு பொருள் உணர்ந்து பாடித் துதிப்பவர்கள் உடலுடன் தொடர்பு கொண்டதான பிறவிப் பிணி நீங்கி , உள்ளம் ஒருமைப்பாட்டினையுடைய சிவலோகத்தில் வாழ்வர் . மீண்டும் நிலவுலகில் வந்து பிறவார் . இதற்கு ஆணையும் நம்முடையதே ஆகும் . | |
Other song(s) from this location: சீர்காழி
1.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.024
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.079
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.081
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.126
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத்தாளச்சதி பதிகம், பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.129
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.011
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்
(சீர்காழி )
|
2.049
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.075
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.096
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.097
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.022
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்
(சீர்காழி )
|
3.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி
(சீர்காழி )
|
3.043
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.118
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.082
திருநாவுக்கரசர்
தேவாரம்
பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
4.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்
(சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
5.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை
(சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
|
7.058
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி
(சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
|
8.137
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை
(சீர்காழி )
|
11.027
பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -
(சீர்காழி )
|