| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
- Hide Meaning https://www.youtube.com/watch?v=-I3U494sOPI Add audio link
4.104
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவதிகை வீரட்டானம் - திருவிருத்தம் அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி
மாசு இல் ஒள்வாள் போல் மறியும் மணி நீர்த் திரைத் தொகுதி
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கல் உற்றால்,
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு,
வீசும் கெடில வடகரைத்தே-எந்தை வீரட்டமே.
1
குற்றமற்ற ஒளிபொருந்திய வாள்போல ஏறி மடங்கும் , பளிங்கு போன்ற நீர் அலைகளின் தொகுதியாகிய ஊசலை ஆடி அங்கு ஒளி பொருந்திய சிறகுகளை உடைய அன்னம் உறங்கத் தொடங்கினால் பசிய இலைகளை உடைய கொடிகளில் உள்ள நீலமலர்களில் தேனைப் பருகி வண்டுகள் பண்ணினைப் பாடுதலைக் கேட்டுக் கெடிலநதி பரிசுப்பொருளாக மணி முதலியவற்றை அவற்றை நோக்கி வீசும் வடகரைக்கண் எம்பிரானுடைய அதிக வீரட்டம் உள்ளது .
பைங்கால்-தவளை பறை கொட்ட, பாசிலை நீர்ப் படுகர்
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப, அருகு உலவும்
செங்கால் குருகு இவை சேரும் செறி கெடிலக் கரைத்தே-
வெங் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே.
2
விரும்பத்தக்க அடிப்பகுதியை உடைய பொன்நிறமான மேருமலையாகிய வில்லினை உடைய வீரனாகிய சிவபெருமான் திரிபுரத்தை அழித்துத் தன் அருளை நிலைநாட்டிய அதிகை வீரட்டம் , பசிய கால்களை உடைய தவளைகள் பறை போல ஒலி செய்யப் பசிய இலைகளை உடைய நீர்தங்கும் பள்ளத்தில் அழகிய தண்டினை உடைய குவளை மலர்கள் மணம் வீச , அருகில் உலவும் சிவந்த கால்களை உடைய குருகுகள் குவளைமலர்களை அடையும் நீர் செறிந்த கெடிலநதியின் வடகரையில் உள்ளது .
அம் மலர்க் கண்ணியர் அஞ்சனம்,- செந்துவர்வாய் இளையார்-
வெம் முலைச் சாந்தம், விலை பெறு மாலை, எடுத்தவர்கள்,
தம் மருங்கிற்கு இரங்கார், தடந் தோள் மெலியக் குடைவார்
விம்மு புனல் கெடிலக் கரைத்தே-எந்தை வீரட்டமே.
3
அழகிய மலர் போன்ற மை எழுதிய கண்ணினராய்ச் சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய மகளிர் விரும்பத்தக்க முலைகளுக்குச் சந்தனமும் விலை மதிப்புடைய மாலைகளும் அணிந்தவராய் , தம் இடைக்கு இவை பாரமாகுமே என்ற இரக்கம் இல்லாதவராய்த் தம் பெரிய தோள்கள் நீந்துதலால் மெலிவு அடையும்படி நீராடுதலால் ஒலிக்கும் நீரை உடைய கெடிலநதியின் வடகரையில் உள்ளது எம்பிரானுடைய அதிகை வீரட்டம் .
மீன் உடைத் தண்புனல் வீரட்டரே! நும்மை வேண்டுகின்றது
யான் உடைச் சில்குறை ஒன்று உளதால்; நறுந்தண் எருக்கின்
தேன் உடைக் கொன்றைச் சடை உடைக் கங்கைத் திரை தவழும்
கூன் உடைத் திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்மினே!
4
மீன்களை உடைய குளிர்ந்த புனல் பாயும் அதிகையிலுள்ள வீரட்டரே ! உம்மை அடியேன் வேண்டுகின்ற சிறிய தேவை ஒன்று உள்ளது . குளிர்ந்த எருக்கம் பூ வொடு தேனை உடைய கொன்றைப் பூவை அணிந்த சடைக்கண் தேக்கி வைத்துள்ள கங்கையின் அலைகளில் தவழும் பிறைச் சந்திரனை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவேண்டும் . அப்பிறை கங்கைவெள்ளத்தில் முழுகிப் போகாதபடி கவனிக்கவேண்டும் .
ஆர் அட்டதேனும் இரந்து, உண்டு, அகம் அகவன் திரிந்து,
வேர் அட்ட, நிற்பித்திடுகின்றதால்-விரிநீர்ப் பரவைச்
சூர் அட்ட வேலவன் தாதையை, சூழ் வயல் ஆர் அதிகை-
வீரட்டத்தானை, விரும்பா அரும்பாவவேதனையே.
5
விரிந்த நீரை உடைய கடலில் சூரபதுமனை அழித்த வேலை ஏந்திய முருகனுடைய தந்தையாய் வயலால் சூழப்பட்ட அதிகை வீரட்டப் பெருமானைப் பண்டைப் பிறப்பில் வழிபட்டு உய்ய விரும்பாத கொடிய தீவினைப் பயனாகிய வேதனை இப்பிறப்பில் , வியர்வை சொட்டச் சொட்ட வீடு வீடாகத் திரிந்து யாவர் சமைத்த பொருளாயிருப்பினும் அதனைப் பிச்சை யேற்று உண்ணுமாறு செய்துள்ளது .
Go to top
படர் பொன்சடையும், பகுவாய் அரவும், பனிமதியும்,
சுடலைப் பொடியும், எல்லாம் உளவே; அவர் தூய தெண் நீர்க்
கெடிலக் கரைத் திரு வீரட்டர் ஆவர்; கெட்டேன்! அடைந்தார்
நடலைக்கு நல்-துணை ஆகும்கண்டீர், அவர் நாமங்களே.
6
அவர் தூய தெளிந்த நீரை உடைய கெடில நதியின் வடகரையில் அமைந்த அதிகைப் பதியின் வீரட்டராவர் . பரவின பொன் போன்ற ஒலியுடைய சடையும் , பிளந்த வாயை உடைய பாம்பும் , குளிர்ந்த பிறையும் சுடுகாட்டுச் சாம்பலும் எல்லாம் அவருக்கு அடையாளங்களாக உள்ளன . அவருடைய திருநாமங்கள் அவரை அடைக்கலமாக அடைந்தவர்களுடைய துன்பத்தைத் தீர்க்கும் பெரிய துணையாகும் . அவ்வாறாகவும் அறிவுகெட்ட அடியேன் அவரைத் தொடர்ந்து பற்றிக் கொள்ள முயலாமல் விட்டு ஒழிந்தேனே .
காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகிக் கண் ஆர் கெடில
நாள் அங்கடிக்கு ஓர் நகரமும், மாதிற்கு நன்கு இசைந்த
தாளங்கள் கொண்டும், குழல் கொண்டும், யாழ் கொண்டும், தாம் அங்ஙனே
வேடங்கள் கொண்டும், விசும்பு செல்வார் அவர்-வீரட்டரே.
7
பார்வதியின் பொருட்டு விடத்தை இருத்திய நீலகண்டராகி , வானத்திலே உலவிச் செல்லும் திரிபுர அசுரரைத் திரிபுரத்தோடு அழித்த வீரத்தானத்தை உடைய பெருமானார் , நன்கு பொருந்திய தாளங்கள் , குழல் , யாழ் இவற்றைக் கொண்டு பாம்புகளைச் சூடி , காலையிலே விளக்கமாக உறைவதற்கு அதிகையாகிய ஒரு நகரமும் உடையராய் அவ்வாறே பாய்கால்களை உடைய கெடிலநதிக்கும் உரியவராவர் .
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவதிகை வீரட்டானம்
1.046
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குண்டைக் குறள் பூதம் குழும,
Tune - தக்கராகம்
(திருவதிகை வீரட்டானம் அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.001
திருநாவுக்கரசர்
தேவாரம்
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல
Tune - கொல்லி
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.002
திருநாவுக்கரசர்
தேவாரம்
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்
Tune - காந்தாரம்
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.010
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,
Tune - காந்தாரம்
(திருவதிகை வீரட்டானம் )
4.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
இரும்பு கொப்பளித்த யானை ஈர்
Tune - கொப்பளித்ததிருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண் நிலா மதியம் தன்னை
Tune - திருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.026
திருநாவுக்கரசர்
தேவாரம்
நம்பனே! எங்கள் கோவே! நாதனே!
Tune - திருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.027
திருநாவுக்கரசர்
தேவாரம்
மடக்கினார்; புலியின்தோலை; மா மணி
Tune - திருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.028
திருநாவுக்கரசர்
தேவாரம்
முன்பு எலாம் இளைய காலம்
Tune - திருநேரிசை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.104
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாசு இல் ஒள்வாள் போல்
Tune - திருவிருத்தம்
(திருவதிகை வீரட்டானம் காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
5.053
திருநாவுக்கரசர்
தேவாரம்
கோணல் மா மதி சூடி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.054
திருநாவுக்கரசர்
தேவாரம்
எட்டு நாள்மலர் கொண்டு, அவன்
Tune - திருக்குறுந்தொகை
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை,
Tune - ஏழைத்திருத்தாண்டகம்
(திருவதிகை வீரட்டானம் )
6.004
திருநாவுக்கரசர்
தேவாரம்
சந்திரனை மா கங்கைத் திரையால்
Tune - அடையாளத்திருத்தாண்டகம்
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.005
திருநாவுக்கரசர்
தேவாரம்
எல்லாம் சிவன் என்ன நின்றாய்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்
(திருவதிகை வீரட்டானம் )
6.006
திருநாவுக்கரசர்
தேவாரம்
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)
Tune - குறிஞ்சி
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
6.007
திருநாவுக்கரசர்
தேவாரம்
செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
Tune - காப்புத்திருத்தாண்டகம்
(திருவதிகை வீரட்டானம் )
7.038
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தம்மானை அறியாத சாதியார் உளரே?
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)